ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-4-10-

‘அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர்.
அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –
தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது;
நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தூத பிரகரணம் ஆகையால் மனசைச் சொல்லுகிறதுக்கு இரண்டு பிரயோஜனம் அருளிச் செய்கிறார்

———————

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாமளவே–1-4-10-

உயிர் உடல் ஆழிப் பிறப்பு –
ஆத்மாவினுடைய சகஜமான பிறப்பு –
வீடு முதலா முற்றும் ஆய்-
உயிரானது, சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினது வீடு உண்டு மோக்ஷம்; அது முதலான-
மோஷாதி புருஷார்த்தங்களை – உறுதிப் பொருள்களைப் பெறுகைக்காக,
அன்றி, ‘ஆழிப் பிறப்பு’ என்பதற்கு,
ஆழி என்று கடலாய், அத்தால் கம்பீர்யமாய், அஸங்கயேயமான ‘எல்லை அற்ற பிறப்பு’ என்று பொருள் கூறலும் ஒன்று.
‘ஆயின், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள், வீட்டினை முன்னர்க் கூறுவான் என்?’ எனின்,
ஸ்ருஷ்டிக்கு -படைத்தலுக்குப் பயன் -பிரயோஜனம் -மோக்ஷம் ஆகையாலே அதனை முன்னர்க் கூறுகின்றாள்.
இனி, ‘உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்’ என்பதற்கு,
‘உடலினுடைய எல்லை இல்லாத பிறப்புகள் தோறும் உண்டாகின்ற தேவர்கள் முதலான சரீரங்களில் தங்கி யிருக்கின்ற
உயிர்கள் முதலான -காரிய ஜாதத்தை -காரியக் கூட்டத்தை உண்டாக்குகைக்காக’ என்று பொருள் கூறலும் ஆம்.

ஆய்
பஹு ஸ்யாம் ‘எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே,
தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.

கடல் ஆழி நீர் தோற்றி-
ஆழி நீர் கடல் தோற்றி-
ஆழி நீர் -ஆழிய நீர்-அப ஏவ ச சர்ஜாதவ்- ‘அப் பரம் பொருள் முதன் முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே,
மிக்க தண்ணீரை யுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி.

அதனுள்ளே கண் வளரும்-
இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண் வளர்ந்தருளும்.

அடல் ஆழி அம்மானை-
ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக
ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.

கண்டக் கால்-
என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்பட்டு இருக்கிறது?
சந்த்ரே த்ருஷ்ட்டி சமாகம் -சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்;
ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு?

இது சொல்லி-
‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி.
இனி, ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் -விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும்
‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கை கால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச் சரீரமானது
முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே,
‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும்
இதனைச் சொல்லி என்று கூறலும் ஆம்.

ஆழி மடம் நெஞ்சே-
ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.

வினையோம் ஒன்றாம் அளவும் விடல்-
படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க,
பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆத்மாவினுடைய சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினுடைய வீடு உண்டு -மோக்ஷம்
அது முதலான எல்லாப் புருஷார்த்தங்களையும் பெறுகைக்காக என்றபடி –
சரீரத்தினுடைய அஸங்யாதமான பிறப்புக்கள் தோறும் உண்டான சரீரஸ்தாத்மாக்கள் முதலான
தேவாதி கார்ய ஜாதத்தை உண்டாக்குகைக்காக -என்றபடி –
கடலாழி நீர் தோற்றி -என்று சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -அதிலே சங்கல்ப ரூப வீர்யத்தை விட்டு –
அதிலே அண்டத்தை உண்டாக்கி -அதிலே மஹா ஆர்ணவத்தை ஸ்ருஷ்டித்து -அதிலே கண் வளர்ந்து –
சதுர்முகனை உத்பாதித்து–ஷீரார்ணவத்தில் அநிருத்த ரூபியாக கண் வளர்ந்து அருளுகிறார் அன்றோ –
ஆழி என்று ஆழமாய் அத்தாலே அளவுடைமையைச் சொல்லுகிறது -அளவு ஞானம் -மடப்பம் பவ்யதை/
இரண்டாம் அர்த்தத்தில் ஆழி -சுழலுகை -மடப்பம் அறிவிலித்தனம் -சுழன்று வருகிற பேதை நெஞ்சே என்றபடி

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: