ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-4-9-

‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்’ என்று இருக்கிற சமயத்தில் வாடைக்காற்று வந்து உடம்பிலே பட்டது;
அதனுடைய தோற்றரவு இருந்தபடியால் வெறுமனே அன்று -இத்தைக் கண்ட தலைவி
மகாராசருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, சிறிது நேரத்திற்கு முன் வாலி கையில் நெருக்குண்டு போனவர்
இப்போது இப்படித் தெளிந்துவந்து அறைகூவுகிற இது வெறுமன் அன்று; இதற்கு ஓர் அடி உண்டு, என்றது போல
இவ்வாடைக்கு ஓர் அடி உண்டாக வேண்டும் என்று நினைத்தாள்;
நினைந்து, ‘இராசாக்கள் இராசத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று,
நம்மை நலிகைக்காகச் சர்வேஸ்வரன் இவ்வாடையை வரவிட்டானாகவேண்டும்’ என்று பார்த்து,
வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத்தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

நாடாத மலர் நாடி –
‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர் நஞ்சீயர்,
‘எண்திசையும் உள்ள பூக்கொண்டு’ என்கிறபடியே, ‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச்செய்வர்.

நாடோறும்-
இதுதான் ஒரு நாள் தேடி விடுதல் அன்றி இடைவிடாமல் என்றபடி.
கிஞ்சித்கரித்துச் ஸ்வரூபத்தைப் பெறுகின்ற இவ்வாத்துமாவிற்கு, -விச்சேதம் -இடைவிடுதல் ஸ்வரூபத்திற்கு இழுக்கு ஆதலின்,
‘நாடோறும்’ என்கிறாள்.

நாரணன் தன்-
நித்ய பரிசர்யை -இடைவிடாமல் தொண்டுகளைச் செய்யத் தக்கவாறு எல்லாப்பொருள்கட்கும் ஸ்வாமியானவன்.

வாடாத மலர் அடிக் கீழ்-
செவ்வி மாறாத பூப்போன்று இருக்கிற திருவடிகளின் கீழே.
ஸ்வரூபத்திற்கு ஹானி -இழுக்கு ஆனாலும் விட ஒண்ணாதபடி எல்லையற்ற இனிய பொருளாகவுமிருக்கிற திருவடிகள் ஆதலின்,
வாடாத மலரடி’ என்கிறாள்.

வைக்கவே-
சேர்ப்பதற்காகவே.

வகுக்கின்று-
உண்டாக்கிற்று.
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய -‘நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளைய பெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி
கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள்.
ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே-
சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லாவகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி.
‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் ஸ்வரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத்தொண்டுகளால் பயன் இல்லையாதலின்,
அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின்,
அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வ ரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?
இப்படியிருக்க,

வீடு ஆடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ-
வீடு-விடுகை; அதாவது-விஸ்லேஷிக்கை -, பிரிதல், ஆடுகை-அவகாஹிக்கை -மூழ்கியிருத்தல்.
வீற்றிருக்கையாவது,-விஸ்லேஷத்தில் மூர்த்தா அபிஷிக்தையாய் இருக்கை – பிரிவிலே முடி சூடியிருத்தல்.
வினையறுகை-நல்வினை அறுகை
-இப்படி பாஹ்ய ஹானியாலே -நல்வினை இல்லாத காரணத்தால் -விஸ்லேஷத்தில் அபிஷேகம் பண்ணி –
பிரிவிலே மூழ்கித் தம்மைப் பிரிந்திருக்கிற இப்பொல்லாத இருப்பு உண்டு; இது என் செய்யக் கடவதோ!
அன்றிக்கே இத்தொடர்மொழிக்கு, ‘தம்மையும் பிரிந்து, தம்மோடு ஒரு சம்பந்தத்தை இட்டுச் சுற்றத்தார்களும் கைவிட,
அவர்களையும் விட்டு, வேறுபட்டிருக்கிற இவ்வஸ்து – இவ்வுயிர் என் செய்யக் கடவதோ!’ என்று பொருள் கூறலுமாம்.
‘எமராலும் பழிப்புண்டு இங்கு என்? தம்மால் இழிப்புண்டு, தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே,’ என்பர் மேல்.

ஊடு ஆடு பனி வாடாய்-
வேற்காரர் அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித் திரியுமாறு போன்று,
அங்கோடு இங்கோடாய்த் திரிகின்றதாயிற்று.
இனி, ‘ஊடு’ என்பதற்கு ‘உள்’ என்றும், ‘ஆடுகை’ என்பதற்குச் ‘சஞ்சரிக்கை’ என்றும் பொருள் கொண்டு,
‘அங்கே அந்தரங்கமாகச் சஞ்சரிக்கின்ற நீ’ என்றும்,
சம்ச்லேஷ – புணர்ச்சிக்காலத்தில் என்பால் கிட்டிச் சஞ்சரித்துப் போந்த நீ’ என்றும் பொருள் கோடலுமாம்.

உரைத்து ஈராய் எனது உடலே-
நித்ய கைங்கர்யத்துக்கு -‘நித்தியமான தொண்டினைச் செய்வதற்கு இட்டுப் பிறந்த இவ்வாத்துமா இப்படியிருக்கக்கடவதோ?’
என்று அறிவித்தால், அத்தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில்,
‘அவசியம் வந்து அவனுடைய பிரிவிற்குச் சிளையாத என் உடலை முடித்துவிட வேண்டும்,’ என்று
காலைப் பிடித்து வேண்டிக்கொள்ளுகிறாள்-
கால் -சாடு -வாடை அன்றோ

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: