ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-4-8-

முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது,
இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப் பார்த்து,
‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்;
நானோ, முடியாநின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
பூவை என்பது நாகணை வாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம்

நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நீ அலையே –
‘என் நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது!
என்னாலே என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன,
அறிவித்தால் வாராதிருந்தானாகில் அன்றோ அவனுக்குக் குறையாம்?
நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும்,
ஆததீத யதோ ஞானம் தம் பூர்வம் அபிவாதயேத் ( ‘ஞானத்தை எந்த ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை
முதலில் வணங்கக் கடவன்,’ )என்கிறபடியே, செய்த உபகாரத்தை நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று,
இவளும் பூவையைப்பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.
இதனால், ‘பகவல்லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.

சிறு பூவாய்-
உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது?

நெடு மாலார்க்கு –
அவர்க்குக் காதலை-வ்யாமோஹத்தை – உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே?

என் தூதாய்-
எனக்கு அவர் பக்கல்-வ்யாமோஹம் தான் – காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே!
வயிற்றில் பிறந்த உங்களைக் கொண்டு அபிமதம் சேர்க்க வேண்டும்படி அன்றோ எனக்கு உண்டான ஆசை –

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் –
‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்;
நோய் எனது
‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று,
இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.
ஜடிலம் -நல்ல மாலை வந்தால் பிள்ளை பரதன் மயிருக்காய் இருந்தது -என்றாயிற்று சக்கரவர்த்தி வாய் இடுவது
அவனாயிற்று சடை புனைந்து இருக்கிறான்
சீர வசனம் -நல்ல பரிவட்டம் கண்டால் இது பிள்ளைக்கு ஆகும் என்று வாய் விடுவார்கள் -அவன் அன்றோ மரவுரி உடுத்து இருக்கிறான் –
ப்ராஞ்சலீம் -அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன்-தன் அபிமதத்துக்கு தான் இரப்பாளானாக இருந்தான்
பதிதம் புவி -அங்கே பாரதம் ஆரோப்ய -என்னும் நிலை பெற்றது இல்லை -படுக்கை உறுத்தும் என்று மடியிலே
கண் வளருமவன் ஆயிற்று தரை கிடை கிடக்கிறான் –
ததர்ச ராமோ துர்த்தர்சம்-வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாத படி இருக்கிறவனை
யுகாந்தே பாஸ்கரம் யதா -பெருமாள் ஒருவருக்கும் கண் வைக்க ஒண்ணாமை அன்றிக்கே-
ஜகத் உப சம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ என்னும்படி இருந்தான் –

நுவலாதே இருந்தொழிந்தாய்
நுவலாதே இருந்தாய் -நுவலாதே ஒழிந்தாய்-என்று சொல்லாமல் இரட்டித்து சொல்லுவான் என் என்னில்
‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல்.
இரண்டு தர்மியையும் ஒரு யுக்தி மாத்திரத்தாலே -தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும்,
அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.
‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன,

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
சமுதாய சோபையோடு நிறத்தில்-புஷ்கல்யமும் – நிறைவையும் இழந்தேன்.
‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது;
கதே ஜலே சேது பந்தம் -‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’

இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-
‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: