ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் –ஈடு -1-4-7-

தம்தாமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ
வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக,
‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது?
தம்முடைய அபராதஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-
எலும்பினைத் தொளைத்து அதிலே -மூர்த்தமாய்- கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று
நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது.
எலும்பும் நரம்புமேயாம்படி-சரீரம் தான் – போர க்ருசமாய் மிகவும் இளைத்தது ஆதலின், சரீரம் என்னாது ‘என்பு’ என்கிறாள்.
பாம்போ பவன மாருதம் -‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று,
இருக்கிறது காணும் இவ்வாடை இவளுக்கு.

பத்ம ஸுகந்திக வஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே தாமரையோடை செங்கழுநீரோடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை தட்டும் என்று மேல் எழ நின்று அரிமிதியன பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
சிவம் -கலப்பற்றுப் பசும் தென்றலாய் இருந்தது -அதாவது புறம்பே சிலருக்கு உடம்பு கொடுத்துச்
சுணங்கு அழியாதே தாய்த் தென்றலாய் இருக்கை
சோக விநாசனம் -நம்மை இனி பிராணனோடு வைத்து நலியாதது போலே இருந்தது
தன்யா -காற்று வாரா நின்றது என்றால் ஏகாந்த ஸ்தலம் தேடிப் படுக்கை படுகிறவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போதோ வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிலந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே இப்படி.
அந்தரத்தில் ஜாதமானது -அந்தர ஜாதி -ஆகாசாத் வாயு இறே -கால் காற்று
‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை நீக்குதற்கு,
அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில்,

என் பிழையே நினைந்தருளி-
நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச் சிகை வாசியா நின்றார்.
அதாவது,-அவ்விஞ்ஞாதா வாகை – அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை- தவிர்ந்து,
சஹஸ்ராம்ஸூ -‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே,
இப்போது குற்றங்களை அறிவதில் -சர்வஞ்ஞராய் -முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி,
அருளாத திருமாலார்க்கு-
இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,
எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின்,
உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –
‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,
‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலேயன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்
முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –

தகவினுக்கு
ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே
என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு
என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜபுத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து
ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது,
அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்
உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –
அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி
மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு
நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –

ஒரு வாய் சொல் –
ஒரு வாய் -ஒரு வார்த்தை/ சொல் – சொல்லு.-ஒரு வார்த்தை சொல்லு -என்றபடி

என்பு இழைக்கும் இளங்கிளியே –
முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும்,
வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டுபண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம்.

யான் வளர்த்த நீ அலையே –
திருமகள் கேள்வனாய்த் தான் தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ?
இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம்.
இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ?
என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்?
அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்லவேண்டுமோ?’ என்பாள்,
‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்று கூறலுமாம்.
இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’
உன்மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: