ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -ஈடு -1-4-3-

‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பத்தி வாதங்கள் நமக்குத் தெரியா;
அவஸ்யம் அனுபோக்தவ்யம் (‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ )என்கிறபடியே,
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

விதியினால் பெடை மணக்கும்-
‘நீங்கள் சாஸ்திரங்கள் – நூல்கள் சொல்லுகிறபடியே கலக்கையாலே பிரிவின்றி இருந்தீர்கள்;
இவன் அடைவு கெடக் கலக்கையாலே எனக்குப் பிரிவு வந்தது,’ என்கிறாள்.
இனி, விதி-புண்ணியம்;
அதாவது, ‘உங்களுடைய புண்ணியத்தால்’ என்று கூறலுமாம்;
அபிமத சம்ச்லேஷம் புண்ய பலம் -காதலர்களோடு கலந்திருத்தல் புண்ணியத்தின் பலன்; –
அபிமத விஸ்லேஷம் அவர்களைப் பிரிந்திருத்தல் பாவத்தின் பலன்; ஆதலின், ‘விதியினால் மணக்கும்’ என்கிறாள்.
இனி, ‘என்னுடைய புண்ணியத்தால்’ என்றலும் ஒன்று.
‘ஆயின், இவளுடைய புண்ணியத்தால் அவை மணத்தலாமாறு யாங்ஙனம்?’ எனின்,
பெருமாள், பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும்-அரித்திக் கொண்டு – தேடிக்கொண்டு வருகையில்,
இராச்சியம் மனைவி முதலியவைகளை இழந்த மகாராசரைக் கண்டு, அவர் குறை தீர்த்த பின்பே யன்றோ
தம் இழவில் நெஞ்சு சென்றது பெருமாளுக்கு?
ஆதலின், இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் காரியமாக இருக்கும் அன்றே?
ஆயின், மகாராசர் குறையை முற்படத் தீர்ப்பான் என்?’ என்னில்,
நீர்மையுடையார்க்குத் தத்தமது இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப்படுவதாம்.

பெடை மணக்கும்
‘பேடையினுடைய கருத்து அறிந்து அதனை உகப்பிக்கின்றது’ என்பாள், ‘பெடை மணக்கும்’ என்கிறாள்.

மென்னடைய அன்னங்காள்
இவ்வன்ன நடை கொண்டோ என் காரியம் செய்யப்போகிறது!’ என்பதாம்.
இனி, இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர்,
மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு,
‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட,
அவள்,சா ப்ர்ஸ்க்கலந்தீ -கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற் போன்று
இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள்,–பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும்.
ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின்,
இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்ற வேண்டிற்றுக் காணும் இருந்தது.
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகை யுடையவள்
ப்ர்ஸ்க்கலந்தீ-சம்ச்லேஷத்தால் உண்டான துவட்சியாலே தடுமாறி அடிமேல் அடியாக இட்டு வந்தாள்
மதவிஹ்வலாஷி -மதுபானாதிகளால் தழு தழுத்த நோக்கை யுடையவளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா-அரைநூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்தபடியே பேணாதே வந்தாள்
ச லக்ஷணா -சம்போக சிஹ்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண ஸந்நிதானம் ஜகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரையானவள்
நமிதாங்கயஷ்ட்டி -உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதது போலே இத்துவட்சி இவளுக்கு நிரூபகம் என்று தோற்றும்படி இருந்தாள்

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு –
இராவணனைப்போலே தலை அறுத்துவிட ஒண்ணாதபடி கொடை என்ற ஒரு குணத்தை ஏறிட்டுக்கொண்டிருந்தான் மாவலி.
இந்திரன் அரசையிழந்து நின்றான்; இரண்டிற்கும்-அவிருத்தமாக – மாறு இல்லாமல் செய்யலாவது என்?’ என்று,
கோ சஹஸ்ர ப்ரதாதாரம் -‘ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே,
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு.
இதனால், தலைவர் சால தூர தர்சி என்பதனைத் தெரிவிக்கிறாள்.
கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி
சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
‘உண்டு’ என்று இட்டபோதொடு‘இல்லை’ என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி
இரப்பிலே தழும்பு ஏறின வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்
தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று
பொருள் அருளிச் செய்வர் திருமாலையாண்டான்.
எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,
ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

மதியிலேன்-
‘பிரிகிற சமயத்திலே, ‘போகாதேகொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ?
அது செய்திலேன்; ஆதலால், அறிவுகேடியானேன்,’ என்கிறாள்.
வல்வினையே மாளாதோ-
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.
மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது உட்கோள்.
அதாவது, சிந்தயந்தி என்பாள்-எல்லைக் சதிரியாய் குரு தர்சனத்திலே முடியும்படி
அதாவது – சதுரப்பாட்டினையுடையளாய் மாமியார் முதலானாருடைய முன்னிலையிலேயே இருவினைகளையும் நீக்கி
மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல் தகும்.
ஆயின், அவள் இருவினைகளையும் நீக்கியவாறு யாங்ஙனம்?’ எனின்,
தத் சித்த விமலாஹ்லாத இத்யாதி -‘கிருஷ்ணன் பக்கலில் நெஞ்சை வைக்கையாலே புண்ணியத்தின் பலம் அனுபவித்தாள்;
அந்நினைவின் படி அனுபவிக்கப் பெறாமையால் பாப பலம் அனுபவித்தாள்;
ஆகையாலே, நல்வினை தீவினைகள் இரண்டனையும் அரைக்கணத்தில் அனுபவித்தால்,’ என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஒருத்தி-
‘ஒருத்தி எனப் பொதுவிற்கூறின், அறியுமாறு யாங்ஙனம்’ எனின் எய்தவன் கை உணராதோ?
அதாவது,’ இன்ன காட்டிலே மான் பேடை ஏவுடனே கிடந்து உழையாநின்றது’ என்று ஊரில் வார்த்தையானால் எய்தவன் கை உணராதோ?
‘நீயன்றோ எய்தாய்?’ என்று சொல்ல வேண்டா அன்றே?
அவ்வாறே ஒருத்தி என்ற அளவில் பிரிந்த தலைவன் உணர்வான் என்பது
மேலும் சம்சார விபூதியிலுள்ளாள் இவள் ஒருத்தியுமேயாவள். ‘ஏன்?
அவனுடைய பிரிவால் வருந்துமவர் வேறு ஒருவர் இலரோ?’ எனின்,
சம்சாரிகள் -புறம்பே அந்ய பரர் -புறப்பொருள்களில் நோக்குள்ளவர்கள்;
நித்தியசூரிகளுக்குப் பிரிவு-விஸ்லேஷம் – இல்லை;
மற்றைய ஆழ்வார்கள் இவளுக்கு-அவயவமாய் – உறுப்புகளாய் இருப்பவர்கள்.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-
மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின்.
தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்;
அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘
என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி.
மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப் பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்;
அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி.
மேல் எழச் சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?அப்படிக் கலங்குமோ!’ என்பார்;
மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின என்மின்;
அத்தனையோ! நாம் இருந்தோமே! பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று இராமல்,
மயங்குமால் –
முடியுந் தசையாயிற்று என்மின். ‘மயங்கினாள்’ என்னில், ‘இனிப் போனால் செய்வது என்?’ என்று இருப்பர்;
ஆதலால், ‘மயங்குமால் என்மின்’ என்கிறாள்.
‘உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பார்மின்;
அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’ என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்,
இனி, ‘துன்பக் குரல் கேட்பின். பொறுக்க மாட்டான், அறிவிப்பீர்,’ என்பாள், ‘என்னீர்’ என்கிறாள் எனலுமாம்.
அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.
இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள்,
‘என்னீரே’ என்கிறாள்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: