ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-11-

நிகமத்தில் , இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட நித்தியசூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர்தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழ அலைகடல் கடைந்தவன் தன்னை –
கவிழ்ந்து ‘உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவஜாதியானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,
தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்தபடி.
குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய்விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.
அமர் பொழில் –
சேர்ந்த பொழில்.
வளங்குருகூர் –
வளப்பத்தையுடைத்தான திருநகரி. சடகோபன் குற்றேவல்கள் –
இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை-வாசிக கைங்கர்யம் – செய்தபடியாயிற்று இவைதாம்.
ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின்,
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு
மேற்படச் செய்யலாவன இல்லையே!
தத் விப்ராசோ விபன்யவ- (‘அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ )என்கிறபடியே,
நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

அமர் சுவை ஆயிரம் –
ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.
‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்யவேண்டா என்றபடி.
அவற்றினுள் இவை பத்தும் – ‘விண்ணவர் அமுது உண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட’ என்னுமாறு போன்று,
அவ்வாயிரத்துள் இத்திருவாய்மொழி-ரசகனமாயிற்று – சுவை நிறைந்ததாயிருக்கும்.

வல்லார் அமரரோடு உயர்விற்சென்று தம் பிறவி அம் சிறை அறுவர்-
இவற்றைக் கற்க வல்லவர்கள் நித்தியசூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த் தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப்பெறுவர்கள்.
‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின்,
இப்பத்தைக் கற்ற போதே இவனை நித்தியசூரிகளில் ஒருவனாக நினைப்பன்;
பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை.
அதாவது, சிறையிலே இராஜகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டிவிடுவாரைப் போன்று,
நித்தியசூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி.
‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது;
அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று,
இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.
இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு,
ஆதிவாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் -நீங்கப்பெறுவர்,’ என்று கூறலுமாம்.
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச்சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப்பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச்செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக்கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச்செய்தார்.

——————————–

‘பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்;
முத்தி தரும் மா நிலத்தீர்! மூண்டு அவன் பால்-பத்தி செயும்’
என்று ரைத்த மாறன் றன் இன் சொல்லாற் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ் சிறை–3–

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: