ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-7-

அப்படியே செய்கிறோம்,’ என்று ஆறியிருந்தார்கள்; ‘ஐயோ! நீங்கள் உங்களுடைய ஆயுளின்-ஸ்தியையும் – நிலையும்,
இழக்கிற விஷயத்தின் நன்மையும் அறியாமையால் அன்றோ ஆறியிருக்கின்றீர்கள்?
நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப்பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளையுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்துகொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;

‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப்பாசுரத்தில் விசேடம்-கீழில் பாட்டில் காட்டில் –

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

ஒன்று என பல என அறிவு அருவடிவினுள் நின்ற –
‘மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே-
அதிஷ்டித்துக் கொண்டு – நிலைபெற்றுநிற்கிறானோ,
அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலைபெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளையுடையராய் நிற்கிற.
இனி,ஏகாத்ம அதிஷ்டிதமோ – ‘ஓர் ஆத்துமாவின் நிலைபேறோ,-அநேகாத்மா அதிஷ்டிதமோ – பல ஆத்துமாக்களின் நிலைபேறோ? என்று
அறிய அரிதான தன்மையினையுடையராய் நின்ற என்னுதல்.

நன்று எழில் நாரணன் –
‘நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.
‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களையுடையவனும்
மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூபஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே,
சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம்.
திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான்
ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.
நான்முகன் –
ஒருவன், படைக்குங் காலம் வந்தால் நான்கு வேதங்களையும் சொல்லுதற்கு நாலுமுகத்தை யுடையனாய்ப்
படைக்குந் தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன்.
அரன் – ஒருவன் அழிக்குந்தொழில் ஒன்றில் மட்டும் சேர்ந்தவன் என்று தோன்ற நிற்பவன்.

என்னும் இவரை –
இப்படி வேறுபட்ட தன்மையராய் இருக்கும் இவர்களை. ஸ்ருஷ்டி ஸ்திதித் அந்தக்கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்
ச சம்ஞ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன ( ‘படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன்
என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’) என்கிறபடியே,
சமஜ்ஜைகளில் -பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன சப்தத்தை இட்டுத்
தலைக்கட்டுகையாலே, தானே முதல்வன் என்று தோன்றும்படி இருப்பவன்.
இப்படி-வி சத்ருச ஸ்வ பாவராய் – வேறுபட்ட தன்மையராய் இருக்கிற இவர்களை;

ஒன்ற நும் மனத்து வைத்து –
அவனை ஒழிந்த இருவரிலே ஒருவனுக்கு உத்கர்ஷம் – உயர்வு வேண்டும் என்றாதல், உறுதிப் படுத்துவதற்கு முன்
இவனுக்கு உயர்வு வேண்டும் என்றாதல் பாராதே ஒரு படிப்பட உங்கள் மனத்திலே வைத்து.
உள்ளி-
சுருதி நியாயங்களால் ஆராய்ந்து அவர்கள் ஸ்வரூப ஸ்வபாவங்களை இப்படி ஆராய்ந்தவாறே ஒருபொருள் பிரதானமாய்
ஏனைய இரண்டும் உயர்வு இல்லாதனவாய்த் தோன்றும். தோன்றினவாறே,

நும் இருபசை அறுத்து –
அவ்விரு பொருள்களிலும் நீங்கள் செய்யும் நசையைத் தவிர்ந்து. அவ்விரு பொருள்களுக்கும்-வஸ்துகதமாய் – இயற்கையாக வருவது
ஓர் உயர்வு இல்லை; நீங்கள் ஏறிடுகின்ற இவையே என்பார், ‘நும் இருபசை’ என்கிறார்.

நன்று என நலம் செய்வது அவனிடை –
இப்படி உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே ‘இவன் நமக்குக் கைப்புகுந்தான்,’ என்று உங்களுக்கு ஏறத் தேற்றம் பிறக்கும்படி
வேறு பலனைக் கருதாத பத்தியைப் பண்ணப் பாருங்கள்.
‘காலக் கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறி இருந்தார்கள்;
நம்முடை நாளே –
கெடுகின்றவர்களே! நம்முடைய வாழ்நாளின் நிலையை அறிவீர்கள் அன்றோ! விரைவில் அடைவதற்குப் பாருங்கள்.
‘நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில்,
முன்னர், ‘மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே?
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்யஸ்மிதே ரவவ் ஆத்மனோ நாவ புத்த்யந்தே மனுஷா ஜீவிதா ஷயம்
( ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம்
மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று
தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ )என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும்.
இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால்,
‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: