ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-6-

அவதாரத்தில் ஆஸ்ரயியுங்கோள் ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்;
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார ( ‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ )என்கிறபடியே,
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்;
இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று
எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது;
ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன,
‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து,
சரீரத்திற்கு -வ்யதிரிக்த -வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது?
வருந்தி அதனை அறிந்தானேயாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக்கொண்டு
தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது;
ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப்பாருங்கள்,’ என்று,
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்,ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-

உணர்ந்து உணர்ந்து-
உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத்தொடரால்,-
சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –
முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்
நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியாகர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;
அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

இழிந்து அகன்று உயர்ந்து-
இச் சேதனன் தான் அணு பரிமாணமாய் அளவினதாய் இருந்தும், ஈஸ்வரன் ஸ்வரூபத்தாலே
எங்கும் வியாபித்து -நிறைந்திருப்பது போன்று, ஞானத்தாலே எங்கும் நிறைந்திருக்கும் என்கிறார்.
இனி,பாதே மே வேதநா சிரஸி மே வேத நா ( ‘எனக்குக் காலில் நோவு; எனக்குத் தலையில் நோவு,’ ) என்று கூறும்படி
இருக்கிற நிலையினைக் கூறுகிறார் எனலுமாம்.

உருவு இயந்த இந்நிலைமை –
உருவிற்காட்டில் வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு – இந்த ஆத்துமாவினுடைய ஸ்வரூபம்.
இனி,உருவு இயந்த என்று பிரிக்கப்படும்போது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னுதல்.
ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக்காட்டிலும் வேறுபட்டிருக்கிற ஆத்துமாவினுடைய ஸ்வரூபம் என்பது பொருளாம்.

உணர்ந்து உணர்ந்து உணரிலும்-
அவ்வாத்துமாவின் சொரூபத்தைக் கேவலம்-ஸ்ரவண மனனாதிகளால் -கேள்வி மனனம் முதலியவைகளால் -சாஷாத் கரிக்கக் கூடிலும்

இறைநிலை உணர்வு அரிது – சர்வேஸ்வரன் பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்துமாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது.

உயிர்காள் – ‘
சைதன்ய யோக்யம் இன்றிக்கே -அறிவற்ற பிறவிகளில் பிறந்ததனால் இழந்து விட்டீர்களோ?
அறிவுடைய பிறவியில் பிறந்தும் அதன் காரியம் பிறக்கவில்லையே?
அறிவு கேடராய் நீங்கள் இருக்கும் நிலைதான் என்னே!’ என்பார், ‘உயிர்காள்’ என விளிக்கிறார்.
‘எங்கள் அறிவும் அறியாமையும் நிற்க; நாங்கள் பற்றுவதற்கு, அறிந்த நீர் அருளிச்செய்யீர்,’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்:
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வ பாவ பரமான பிரமாணங்களையும்
விரோதி நிரசன சீலனாய் -தீயாரை அழித்து -ரக்ஷகனாய் -நல்லாரைக் காக்கின்றவனாதலின்,
அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்;
ஓருவன் திருநாபிக்கமலத்தில்-அவ்யவதாநேந – நேராகத் தோன்றியவனாதலின்,
அயன் என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான்;
ஒருவன் -சம்ஹாரம் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரையுடையவனாய் இருக்கிறான்;
இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவைதம்மைப் பலகாலும் சொல்லிப் பார்த்து,
மனப்பட்டது ஒன்று-‘இலிங்கத்துக்கே-உத்கர்ஷம் – உயர்வு தோற்றும்படியாய் இருப்பது
ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று,-ஒரு வியக்தியிலே பக்ஷபாதிக்கப் பாராதே –
ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் ஸ்வரூபங்களையும் ஸ்வபாவங்களையும் பலகாலும் ஆராய்ந்து பார்த்தால்,
கோல்விழுக்காட்டால் ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும்.
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-
தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,
அவன் திருப்பெயர்களைப் பலகாலும் உச்சரித்து –
கைபுகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள் என்பதாம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: