ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-5-

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை உணர்வகொண்டு உணர்ந்தே–1-3-5-

பிணக்கு அற அறுவகைச் சமயமும் – வைதிக சமயத்துக்கும்-பாஹ்ய ஷட் ஆறு புறச்சமயங்களுக்கும்
தம்மில் தாம் உண்டான பிணக்கு அறும்படியாக.
நெறி உள்ளி உரைத்த-
தான் சொல்லிய அனைத்தும்-வேதார்த்தமாக – வேதப் பொருளாக இருக்கவும், பொருளின் உண்மைத் தன்மை தெளியப் பெறாத ஒருவன்
ஆராய்ந்து சொல்லுமாறு போன்று விசாரித்து அருளிச்செய்தான்;
‘அதற்கு நினைவு என்?’ என்னில்,-
அஹ்ருதயமாக- மனத்தொடு படாமற்கூறினும் நன்மை தரத்தக்கனவாக இருப்பினும் மக்களுடைய ஹிதத்தில் உண்டான –
ஆதார அதிசயத்தாலே -அன்பின் பெருக்காலே, சடக்கெனச் சொன்னால்
‘நிரூபியாமல் வாய் வந்தபடி சொன்னான்’ என்பர்கள் என்று ஆராய்ந்து சொன்னானாகச் சொன்னபடி.

கணக்கு அறு நலத்தனன்-
எல்லை இல்லாத குணத்தையுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.
‘யார் இரக்கச் செய்தான்?’ என்னில், தன் வாத்சல்யத்தால் அருளிச்செய்தான் இத்தனையே.
ஆயின், வாத்சல்யத்தால் கூறிய அனைத்தும் உண்மைப் பொருள் ஆகுமோ?’ என்னில்,

அந்தம் இல் ஆதி-
ஆப்த தமன்.
எல்லார்க்கும்-உத்பத்தி விநாசங்களாலே – பிறப்பு இறப்புகளாலேயன்றோ-ஞான சங்கோசம் – ஞானத்திற்குக் குறைவு உண்டாவது?
இவனுக்கு அவை இல்லாமையாலே-அகர்ம வச்யன் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆதலின்,
இவன் யாங்ஙனும் கூறினும் உண்மைப் பொருளேயாம் என்க.
அம் பகவன் –
ஞானம், சத்தி, செல்வம் முதலியவைகளால்-அல்பம் உத்கர்ஷம் – சிறிது மேன்மையுடையவர்களையும் பகவான் என்ற பெயரால் கூறும் வழக்கு உண்டாதலின்,அந்யத்ர ஹ்யுபசாரத (‘பகவான் என்னும் பெயர் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே: அல்லாதார் பக்கல் ஒளபசாரிகம்’ )என்பார், ‘அம் பகவன்’ என்கிறார்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று-
வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று;
பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி,
பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார்.
பத்தியானது -அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்பமயமாக இருக்குமாதலின்
‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலேயாதல்,
இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல்.

புறம் நெறி களை கட்டு –
புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்
பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,
பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் கொள்க

உணக்குமின் பசை அற –
ரஸ வர்ஜம் (‘ருசி வாசனைகளும் நீங்குகின்றன,) என்கிறபடியே, புறம்பான விஷயங்களில் உள்ள ஆசையை
ருசி வாசனையோடே விடுங்கோள். ‘இவை எல்லாம் விடுவது எப்படி?’ என்னில்,

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக்கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச்செய்த ஞானத்தைக்கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச்செய்த ‘சரமஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: