ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-4-

‘தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் ஸுலப்யம் – எளிமை ஒருவர்க்கும் அறிய நிலம் அன்றோ? என்னில்,-
ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூல பனாய் அநாஸ்ரி தற்கு அத்யந்த துர்லபனாய் என்கிறார்.

யாரும் ஓர் நிலைமையன் என அநி வரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறி வெளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்
பேரு மோர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
எத்துணை வியக்கத்தக்க ஞானத்தினையுடையவர்களேயாகிலும் ஸ்வ யத்னத்தால் – தன்முயற்சியால் காணும் அன்று
‘இன்ன படிப்பட்டு இருப்பது ஒரு ஸ்வபாவத்தை – தன்மையையுடையவன்’ என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமியானவன்.

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-
இந்த யச் யாரும்’ என்ற உம்மை-சப்தம் -தாழ்ச்சியின் எல்லையில் நிற்கிறது
பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளில் ஓர் அளவும் இல்லையேயாகிலும் தானே காட்டக் காணுமவர்களுக்குத்
தன் படிகள் எல்லாம் அறியலாம்படி இருப்பன்.
‘எங்கே கண்டோம்?’ என்னில்,
ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
‘எம்பெருமான்’ என்ற சொல்லால்,
ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரி தற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான
என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார்.
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -நமோ நமோ வாங் மனசைக பூமயே
(‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற
உனக்கு வணக்கம் வணக்கம்’ )என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

பேரும் ஓர் ஆயிரம் –
அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.
தேவோ நாமோ சஹஸ்ரவான் (‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ )எனப் புகலும் பாரதம்.

பிற பல உடைய எம்பெருமான்-
அந் நாம த்வாரா காணும் -அப்பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளையுடையனாய் இருக்கை.
‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.
‘ஆயின், ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின்,
நாம ரூபஞ்ச பூதானாம் (‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ )என்றும்.
நாம ரூபே வியாகரவாணி ( பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ )என்றும்
பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது திருமேனியைக்காட்டுகிறது.
மற்றும், இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –
‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச்செய்தல் காண்க.

பேரும் ஓர் உருவமும் –
இவற்றுள் ஒரு திருப்பெயரும் ஒரு திரு உருவமும்.
உளது இல்லை-
அடியர் அல்லாதார்க்குத் ஸ்தூலமாக நினைப்பதற்கும்-பிரதிபத்தி பண்ணுவதற்கு – அரியனவாய் இருக்கும்.
இலது இல்லை –
அடியார்க்கு எல்லாம் காணலாம் ஆகையாலே இல்லது இல்லை.
பிணக்கே-
இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ்விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

இனி, ‘பேரும் ஓர் உருவமும் உளது, இலது இல்லை, இல்லை பிணக்கே’ என்பதற்கு,
பேரும் ஓர் உருவமும் உளது-
திருப்பெயரும் திருபெயருக்குப் பொருளான திருமேனியும் நித்தியம்;
இல்லது இல்லை; இல்லை பிணக்கே;
ஆதலால், இவ்விடையாட்டத்தில் -இவ்விஷயத்தில் விவாதம் வேண்டா என்கிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: