ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-3-

‘எளியவன்’ என்றார்; எளிமையை -ச பிரகாரமாக -வகைப்படுத்தி அருளிச் செய்தார்;
இவனுடைய அவதாரத்தின் ரஹஸ்யம் – மறைபொருள் அறிதல் ஒருவர்க்கும் நிலம் அன்று என்கிறார் இப்பாசுரத்தில்

அமை வுடை அற நெறி முழுவதும் உயர் வற உயர்ந்து
அமை வுடை முதல் கெடல் ஒடி விடை அற நிலம் அதுவாம்
அமை வுடை அமரரும் யாவையும் யாவருந் தானாம்
அமை வுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?–1-3-3-

அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து-
ஒரு தருமத்தைச் செய்தால் தொடங்கும்போதே பயன் இன்றிக் கழியினும் கழியும்; இடையில் சிற்சில தடைகள் நேரினும் நேரும்;
அங்ஙனம் அன்றி, சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று,
பலத்தோடே சேர்ப்பிக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றாலும்
‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்திருக்குமாறு போன்று,
‘இவ்வறத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இலர்,’ என்னும்படி சமைந்திருக்கை.

அமைவுடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்-
பிரமன் உலகத்தைப் படைத்தால், ‘சர்வேஸ்வரனோ!’ என்று ஐயப்படும்படி இருக்கை.
இப்படிச் சமைவையுடைத்தான முதல்- படைத்தல் என்ன, கெடல் -அப்படி இருந்துள்ள அழித்தல் என்ன,
இடை ஒடிவு -நடுவிலே சம்ஹாரம் -அவாந்தர சம்ஹாரம் என்ன, என்னும் இவற்றைத் தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த
அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்-
சர்வேஸ்வரனையும் மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதவாறு மிகவும் விதேயமாம்படி சமைந்த பிரமன் முதலிய தேவர்களும்.

யாவையும்-
அசேதனங்களும் -அறிவில் பொருள்களும்.
யாவரும்-
சேதனங்களும் -அறிவுடைப் பொருள்களும்.
தானாம் அமைவுடை நாரணன்-
அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் எல்லாம் தான் என்ற சொல்லுக்குள்ளே பிரகாரங்களாய் அந்வயிக்கும் படியான —
விசேஷணங்களாய்ச் சேரும்படியான சமைவையுடையன் ஆகையாலே நாராயணன் என்னுந் திருநாமத்தையுடையவன்.
இனி, ‘தானாம் அமைவுடை நாரணன்’ என்பதற்கு,
ஒருவன் ஒருவனை ‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன வேண்டும்?’ என்றால், தன் மனைவி மக்களையுங் கூட்டிக்கொண்டு
‘எனக்குக் கலநெல் வேண்டும்’ என்கிறான் அன்றே? அப்படியே, இவை அடங்கலும் தன் ‘அஹம்’ சொல்லுக்குள்ளே அடங்க,
தான் இவற்றுக்கு அபிமாநியாய் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் என்று பொருள் கோடலுமாம்.

மாயையை அறிபவர் யாரே –
இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த
இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியசூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தத்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: