ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-11-

நிகமத்தில்
முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச்செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவைதாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப்படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

சேர்த்தடம் இத்யாதி –
சேர்த்தடம் -என்பத்தை சேர் தடமாக்கி பொய்கைகளோடு பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற,
அன்றிக்கே தென் குருகூர் என்று உற் ப்ரஸ்த்துதம் ஆகையால் -பொய்கைகள் சேர்ந்திருக்கின்ற குருகூர் என்று
‘சேர்’ என்பதனை ஊருக்கு அடைமொழி ஆக்கினுமாம்.
அன்றிக்கே ‘சேர்’ என்பதனை-கிரியா பதமாக – வினைமுற்றாகக் கொண்டு,
‘இப்பத்தையும் சேர்’ என்று பயனிலையாகக் கோடலுமாம்.

தென்குருகூர்ச் சடகோபன் சொல் –
ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அ ஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று;
ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

சீர்த்தொடையாயிரம் –
‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;
அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

ஆயிரத்து ஓர்த்த இப்பத்தே –
ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்து, சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;
அன்றிக்கே , சேதனர்க்கு-ஹித தமமாய் – மிக்க நன்மையை அளிக்க வல்லது ஒன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது எனலுமாம்.
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர் -அநுஸந்தி -என்றவாறு
உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால்,
‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

———————

திருவாய்மொழி நூற்றந்தாதி

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து.-2-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: