ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-2-10-

அழகிது; அப்படியே செய்கிறோம்; பஜனத்துக்கு ஆலம்பமான -வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான- மந்திரம் யாது?’ என்ன,
அது இன்னது என்றும், அதனுடைய -அர்த்தம் அனுசந்தேயம் -பொருள் நினைத்தற்கு உரியது -என்றும் அருளிச் செய்கிறார்.
‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின்,

இம் மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளா நிற்பர்;
நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று
தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள்.
மற்றும் வேதங்களுக்கும் இவ் வாழ்வார்க்கும் இம் மந்திரம் பிரஸ்துதமான போதே முன்னர் மந்திரத்தைச் சொல்லி,
பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்;
அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல்
செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்;
அதற்குக் காரணம்,-அர்த்த அனுசந்தானம் – பொருளின் நினைவு இன்றியமையாதது -ஆகையாலே.
‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’என்னுதல்
‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ -என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு –
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதி –
(‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,) என்னுதல்
நாராயண பரஞ்சோதி நாராயண பரமாத்மா
(‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’) என்னுதல் செய்யும் வேதமும்

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப்பணித்து இப்பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆலம்பன மந்த்ரம் எது என்ன -என்றது
சாஸ்த்ராதி ஷு ஸூத் ருஷ்டாபி சாங்கா சக பலோ தயா-ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேச-என்றதைப் பற்ற –
அநந்ய சாத்யத்வ ரூபமான -அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வ – ஸ்வரூபத்துக்குச் சேர
பூர்வர்கள் அர்த்த அனுசந்தானத்திலே நிஷ்டராய் இருந்து உபதேசிப்பர்
அந்தர் பஹிஸ்ஸ -பஹு வ்ரீஹி ஸித்தமான ஸுலப்யம்
ப்ரோ ஜ்யோதி தத் புருஷ ஸித்தமான பரத்வம்
ஸ்ரீ ஆழ்வானுடைய முந்தின வார்த்தை கௌரவ்யத்தையிலே நோக்கு -பிந்தின வார்த்தை போக்யத்தையிலே நோக்கு

————————-

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

எண் பெருக்கு அந் நலத்து,
‘எண் பெருக்கு’ என்கிற இத்தால் ஜீவ அநந்தயத்தைச் சொல்லுகிறது
‘நலத்து’ என்கிற இதனால், இவ்வஸ்துக்கள் தாம் ஞான குண ஆஸ்ரயமாக-இருக்கக் கடவது இறே
பிரணவத்தில்-த்ருதீய பதமான மகாரத்தாலே ஞான குண ஆஸ்ரயமுமாய் ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்று இறே

‘ஒண் பொருள்’
அசைதன்யம் அசித்திக்கு ஸ்வ பாவமாய் நிற்கச் செய்தே வாஸ்து தான் ஜடமுமாயும் அசம்ஞாவத்துமுமாயும் இருக்கும் இறே
அங்கண் அன்றிக்கே வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –
இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்

‘ஈறு இல’
என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும்,
‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்
ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது –

பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு
எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று,
இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –
ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன்
நாராயணன் என்பதாயிற்று. -அவனுடைய

திண் கழல் சேர் –
இப்படி சம்பந்தம் காதா சித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்ற பின்பு ஸ்வரூப ஞானம் உடையாரை அவன் ஒரு நாளும் விடான் இறே
ஆஸ்ரிதரை ஒருகாலும் விட்டுக் கொடாத திண்மையைப் பற்றத் ‘திண் கழல்’ என்கிறார்:
‘இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம் ஒரு காலத்தில் வந்தது அன்று; என்றும் உள்ளது ஒன்று,’ என்னும்
ஞானமுடையாரை ஒரு நாளும் விடான் அன்றே!
சேர் –
ஆஸ்ரயி -அடைவாய். உன்னுடையதாய், உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக உட்கொள்:
ஸ்வீகரி – ‘நம:’ என்றபடி.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எண் பெருக்கு -எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருக்கிற ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான
ஆனந்தாதி குணத்தை – -ஆனந்த்யத்தைச் சொல்லுகிறது-
நலத்து -என்று ஞான குணகத்வம் –
ஒண் பொருள் என்று ஞான ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது –
ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வ பாவ ஞானத்தையும் சொல்லுகிறது
ஸூகித்வம் ஞாத்ருவஞ்ச ஞாயதே -ஸ்ரீ பாஷ்யம் –
ஸ்வஸ்மை பாஸாத இதி பாசந பிரதி சம்பந்தித்வ ரூப ப்ரத்யக்த்வாபி ப்ராயேண ஞாத்ருத்வம் இது யுக்தம்
நது தர்ம பூத ஞான ஸ்புரணாத் -ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர்
நலத்து -ஒண் -பாத த்வயத்தாலும் அசித் வியாவிருத்தி சித்தம்
ஜடமுமாய் என்றதுக்கு பிரதி கோடி ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் -ஓண்மை

நாராயண சப்தத்துக்கு அர்த்தங்கள் அநேகம் உண்டாய் இருக்க
ஆத்மாவுக்கு அனந்தரம் குணங்களை சொன்னது நித்ய வஸ்துக்கும் நித்ய பாரதந்தர்யம்
கூடும் என்பதற்கு த்ருஷ்டாந்தத்வேன –
ஈறு-நாசம்/ இல-இல்லாமை /நித்தியமாய் இருக்கிற என்றவாறு
நாரணன் திண் கழல் -சமபி வ்யாஹார லப்யம் –
அன்றிக்கே -பஹு வ்ரீஹியில் சொல்லுகிற ஸுலப்யத்தையும் –
தத் புருஷனின் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும் சொல்லுகிறது
சேர் நமஸ் சப்தார்த்தம்
பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப்பாட்டு பிரமேயம்
எண் பெருக்கு அந்நலத்து ஈறிலவான ஒண் பொருளையும் ஈறிலவான வண் புகழையுமுடைய
நாரணன் திண் கழல் சேர் -என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: