ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-8-

அவனுக்கு விபூதியாய் அந்வயித்தால் (‘இறைவனுக்கு உரிய செல்வங்களுள் ஒன்றாகச்சேரின்,) பின்னை,
தானும், தனக்கு என்னச் சில கரணங்களும் – உண்டாய் பஜித்தானாகை அரிதாக இருந்ததே என்ன –
(வேறாகக் காணப்படுவன இலவே? வேறாக இருப்பின் அன்றோ வணங்குதல் முடியும்?’ என்ன,)
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச்செய்கிறார்.

உள்ளம் உரைசெயல், உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்துஇறை, உள்ளில் ஒடுங்கே.-1-2-8-

உள்ளம் உரை செயல் –
பாஹ்ய விஷயங்களில் -வெளிப்பொருள்களில் -பிரவணமாகிற மனசை -விருப்பத்தைச் செலுத்தும் மனத்தை-
ப்ரத்யக் ஆக்கியவாறே – உட்பொருளை நோக்கும்படி செய்தால்,
அது-பகவத் அனுசந்தானத்துக்கு உடலாமே ( இறைவனை நினைத்தற்குக் காரணமாகும்; )
அவ்வனுசந்தானம் வழிந்து (அந்நினைவு முதிர்ந்து வழிந்து,)
‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய்’ என்கிறபடியே, சொல்லாகப் புறப்படுகைக்குக் காரணமாகும் வாக்கு;
குணைர் தாஸ்யம் உபாகத ( ‘குணங்களால் அடிமை பூண்டு இருக்கிறேன்,’ )என்கிறபடியே,
திருவடிகளிலே விழுந்து எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்குக் காரணமாகும் உடல்.

உள்ள இம்மூன்றையும் –
இவைதாம் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே சேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தான்;
இவையும் வேறு சிலவும் தேடவேண்டா; இங்கே
‘தாம் உளரே,’
‘நா வாயில் உண்டே’ என்பனவற்றை நினைவு கூர்க.

உள்ளி –
உள்ள இம்மூன்றையும் ஆராய்ந்து;
‘இவற்றை எதற்காகப் படைத்தான்? இவைதாம் இப்போது இருக்கிறபடி என்?’ என்று ஆராய்ந்து பார்த்தால்,
அவை-அப்ராப்த விஷயங்களில் – அடையத்தகாத பொருள்களில் அன்புடன் கூடியிருத்தல் விளங்கும்.

கெடுத்து –
கெடுப்பது -அவற்றினின்றும் மீட்பது – மீட்டு.

இறை உள்ளில் ஒடுங்கு –
பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று,
ப்ராப்த விஷயத்தில் -அடையத்தக்க பொருளில் ஆக்கப் பார்.
அதாவது, கரணங்களை அவன் விஷயத்தில் அன்புடன் இருக்கச் செய் என்றபடி.
ஒடுங்க என்னுதல்
ஒடுக்கு என்னுதல் –

தாம் உளரே
தம்தாமைத் தேட வேண்டாவே
தம் உள்ளம் உள் உளதே
எனக்கு சற்றுப்போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தர வேண்டும் என்று தனிசு வாங்க வேண்டாவே –
தாம் உளரானால் உண்டான நெஞ்சும் உண்டே
தாமரையின் பூ உளதே
கைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே –
கள்ளார் துழாய் என்று அங்குத்தைக்கு அசாதாரணமான திருத்துழாயைச் சொல்லி
அத்தோடு ஓக்க கணவலர் என்று காக்கணத்தையும் ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாதது இல்லை என்ற படி –
ஆகையால் தாமரையின் பூ உளதே என்றது எல்லா புஷ் பங்களுக்கும் உப லக்ஷணமாம் அத்தனை –
ஏத்தும் பொழுதுண்டே -காலத்தை உண்டாக்கி வைத்தானே அது தனிசு வாங்க வேண்டாவே
வாமனன் -இது எல்லாம் வேண்டுவது அவன் அவனல்லவாகில் அன்றோ –
தன் உடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாவான் ஒருவனாய் இருந்தானே –
திருமருவு தாள் -அவனுடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகள் என்னுதல்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்னுதல் –
மருவு சென்னியரே -மருவுகை -சேருகை -இப்படிப்பட்ட திருவடிகளில் சேருகைக்குத் தலை யாக்கி வைத்தானே –
வாமனன் -அமரர் சென்னிப்பூவான திருவடிகளை நித்ய சம்சாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே –
இப்படி இருக்கச் செய்தே செவ்வே அருநரகம் சேர்வது அரிது -இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடி தேடிக்கொண்டு போகிறபடி எங்கனேயோ –

நா வாயில் உண்டே -இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே –
நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -சஹஸ்ர அக்ஷரமாலா மந்த்ரம் போல் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தாய் நடுவே விச்சியாதே சொல்லலாம் திரு நாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதி கண் செல்லும் வகை உண்டே -புநரா வ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை யுண்டாக்கி வைத்தானே
என் ஒருவர் தீக்கதி கண் செல்லும் திறம் -இங்கனே இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிறது எங்கனேயோ –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: