ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-7-

சங்க ஸ்வபாவன் -அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் -என்றார் கீழ் –
அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும்,-அபரிச்சின்ன அளவிட முடியாத-
உபய – இரண்டு விதமான மஹா விபூதியையுடையவனாய் இருந்தான்;
இவன்-அதி ஷூத் ரனாய் – மிகச் சிறியனாய்,-ஷூத்ர- மிகச் சிறிய உபகரணத்தையுடையவனாய் இருந்தான்;
ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ?
மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும்,
திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?
‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய-தரங்கமானது – அலையானது- இவனைத் தள்ளாதோ?’ என்னில்,
இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே –
நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!
ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால்
வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய
வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி
விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,
கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,
அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய்
அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால்
ஒருவன் இரு வினைப்பயன்களை -புஜியா நிற்கும் -நுகராநிற்பன்; ஒருவன் -புஜிப்பித்து -நுகர்வித்து விளங்காநிற்பன்;
அவன் நியாமகன் – ஏவுகின்றவன்; நாம்-நியாம்யம் – ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

ஓர் அரசகுமாரன்-உத்யானத்தை – பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனதுகாண்,’ என்னவே,
நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ!
ஆன பின்னர்,ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;
தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்.

அடங்கெழில் சம்பத்து, அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதுஎன்று, அடங்குக உள்ளே-1-2-7-

அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி –
கர்மா நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ்விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்மா நிபந்தமான ஆகாரம் தோற்றாதே -ததீய ஆகாரத்துவமே இறே தோற்றுவது-

அடங்கு எழில் அஃது என்று –
கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று
அனுசந்தித்து – நினைந்து, அவ்விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக்கடவன்;
‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்;
‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ்வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின்,
அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ்வாத்துமாவினுடைய ஸ்வரூப சித்தி, சேஷிபக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே?
அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி.

அடங்குக உள்ளே –
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த ஞானம் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்-அந்வயிக்கலாம் இறே
சமுத்திரம் அபரிச்சின்னமானாலும் அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் -சத்தவங்களுக்கு –
மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்தஞானம் அடியாகக் கிட்டலாம்;
சம்பந்தஞானம் இல்லாத த்ருணத்தை துரும்பையன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது?
ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின்,
அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: