ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-5–

இறைவனைப்பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை -அருளிச்செய்கிறார்.
(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘
ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், )
இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்;
பிரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்;
கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் நித்ய மங்கள விக்ரஹ உக்தனாய் –
எல்லா நற்குணங்களையுமுடையனாய் திவ்வியமங்கள விக்கிரகத்தையுடையவனாய் –
இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்;
ஆக, இங்ஙனம்,- இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.

அற்றது பற்றுஎனில், உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்றுஇறை பற்றே-1-2-5-

அற்றது பற்று எனில் –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் – உடலும் உடல் சம்பந்தமான பொருள்களும் ஆன இவற்றில்- உண்டான –
பற்றது அற்றும் –
ஆசை நீங்கியது -என்னும் அளவிலே
உற்றது வீடுயிர்
உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது; ‘அடையல் உறும்’ என்றபடி
விலக்ஷண- வேறுபட்ட- ஞானத்தையும் -சொரூபத்தினையுமுடைய உயிர்ப்பொருளுக்கு-அசித் சம்சர்க்கத்தாலே –
உடலின் சேர்க்கையால்-திரோதானத்தைப் பண்ணுகிறது – மறதி உண்டாகிறது;
அம்மறதி-யோக அப்யாஸத்தாலே – யோகத்தின் பயிற்சியால் நீங்கினவாறே சொரூபம் பிரகாசிக்கும்;
அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று
தன் பக்கலிலே கால் தாழப்பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ்வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.
அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.

மன் உறில் –
மன்ன உறில், அதாவது, தன்னைப் பற்றினால் ‘இன்னமும் அதற்கு அவ்வருகே ஓர் அனுபவம் உண்டு’ என்று
இருக்க வேண்டாதபடியான நிலை நின்ற-புருஷார்த்தத்தை – உறுதிப் பொருளைப் பற்றப் பார்க்கில் -.
அற்ற இறை பற்று –
ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யாவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்-
‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு’ என்னுமா போலே

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: