ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-3–

‘தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்; காலம் அநாதி;
அக்காலத்தில் ஈட்டிய வினைகளும்-அநந்தரமாய்- முடிவின்றி இருக்கின்றன;
ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன,
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச்செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச்செய்கிறார்

நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

நீர் நுமது –
அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.
ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை ‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச்செய்கிறார். அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச்சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.
நன்று ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; ‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில்,
இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டு அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப்போருமது தவிரவேணுமே!

இவை வேர் முதல் மாய்த்து –
இவற்றை வேர்முதல் மாய்க்கையாவது என் என்னில்
இதை அ புருஷார்த்தம் – உறுதிப்பொருள் அன்று -என்னும் நினைவு உண்டாதல்.
இரண்டு மரங்கள் சேர நின்றால், ஒன்றிலே தொளைத்துப் பெருங்காயத்தை வைக்கச் சில நாள் ஒன்று போலே நின்று,
பின்னைப் பட்டுப் போகாநின்றது;
அப்படியே,அகங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் – யான் எனது என்னும் செருக்கு விடத்தக்கது- என்னும் நினைவு உண்டாகத்
தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும் என்றபடி.
அநாத்மந் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வ மிதி யா மதி அவித்யா தரு சம்பூதி பீஜ மேதத் த்விதா ஸ்திதம்
(‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும்,
அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, )

என்று சம்சார பீஜமும் –
அச்யுதாஹந் தவாஸ் மீதி சைவ சம்சார பேஷஜம் ( ‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய்
இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’,_)என்று பரிஹாரமும் –
அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஆதலால்,ரக்ஷகனானவன் – அளிக்குமவன்-அவசர பிரதீஷகனாக – ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

இறை சேர்மின் –
அபிராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள். சேர்மின்
சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் –
ஹிதமுமாய்–உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.
சம்சார ஆர்ணவ மக்நாநாம் (‘பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால்
இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு,)
விஷ்ணு போதம் ( எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத்) தவிர, சிறந்த சாதனம் வேறு ஒன்று இல்லை,’
எங்கும் நிறைந்த ஓடம் ஆகையால், இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு கடத்தும் என்பது பெறுதும்.
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவ னடிசேரா தார்,’ என்ற திருக்குறள் நினைத்தல் தகும்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: