ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-1–

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இ றே மோக்ஷசாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய் மொழி-

இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத்திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி
நிர்வகித்துக்கொண்டு போந்து -எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து,
ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச்செய்துகொண்டு போந்தார்,
பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச்செய்தார்.
இவருடைய பத்தியும் பிரபத்தியும்  விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ,
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பத்தி ரூபா பன்ன ஞானமாய் இருந்தது;
தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே ஆவரே.
ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும்.
ஆயின், பத்தி என்பது உபய கர்மிதஸ் வாந்தஸ்ய (‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’)
என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும்-சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு- தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு
உண்டாவது அன்றோ? பர பக்தி –
அந்த ஞான கர்மங்களினுடைய-ஸ்தாநேந – இடத்தில் பகவத் பிரசாதமாய் நிற்க,
அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே!இவருடைய பக்தி தான் –
‘இதுதான் வேதாந்த விஹிதையான பத்திதானே ஆனாலோ?’ என்னில், 
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்; 
அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்;
ஆனபின்பு தான் பெற்றத்தையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்துவத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்து –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே?
தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ,
அன்றி, தாம் அப்பொருளில் விரக்தராகியோ?’ என்னில், விஷயமோ என்றால், 
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –
‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே?

இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், 
‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், 
‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் அபிநிவேசம் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் -காலாந்தரத்தில் –
விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;
அப்படியே, சில காலம் அனுபவித்துப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது;
‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’
என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்-

இனி, ஆசாரிய பதம் -நிர்வஹிக்கைக்காக மேற்கொள்ளுகைக்காக அன்று; க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று; 
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பரதந்த்ரராய் அன்று (‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன்
அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.)
‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில்,
ஸ்வ அனுபவ பிரகர்ஷம்-இன்பப் பெருக்கு- இருக்கிறபடி –
தாம் அனுபவித்த விஷயம் தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது;
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு
ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று  பலகாலும் அருளிச்செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில்,
இவர்கள்-சேதனராய் – அறிவு உள்ளவர்களாய்- இருக்கிறார்கள்; சப்தாதி விஷயங்களில் வாசியறிந்து,
தீயவை கழித்து, நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
ஆதலால், அவற்றினுடைய ஹேயதையையும் சர்வேஸ்வரனுடைய உபாதேயதையையும் இவர்களுக்கு அறிவித்தால்,
அவற்றை விட்டு இறைவனைப் பற்ற அடுக்கும் என்று பார்த்து, சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

—————————-

இதர விஷயங்களை விட்டு உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கள்,’ என்கிறார்.

வீடு மின் முற்றவும், வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடு செய் மி(ன்)னே–1-2-1-

வீடுமின்
‘வீடுமின்’ என்றதனை ஒரு சொல்லாகக் கோடலுமாம்;
அன்றி, நீட்டல் விகாரமாகக் கோடலுமாம். ‘முதலிலே ‘வீடுமின்’ என்கிறது என்னை?’
சிறுகுழந்தை கையிலே சர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு கிடந்தால், பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி,
பின்னர், சர்ப்பம்  என்பாரைப் போலேயும்,
ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘புறப்பட்டுக் கொள் கிடாய் ,’
என்று சொல்லி, பின்னர், நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார்.,
பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவைதாம் நோவுபடுகின்றன? 
த்யக்த்வா புத்ராம்ச் ச தாராம்ச் ச (‘புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ )என்றும், 
பரித்யக்தா மயா லங்கா (‘என்னால் விடப்பட்டது இலங்கை’ )என்றும்
விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும் பற்றினார்கள்? ‘

ஆயின்,‘வீடுமின்’ என்ற பன்மைக்குக் கருத்து யாது?’ எனின்,
பொறிவாயில் ஐந்தையும் அவித்த ஒருவன் வந்து முன்னே நின்று கேட்க, அவனுக்கு உபதேசிக்கிறார் அல்லர்;
சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து
பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.
எத்தை விடுவது என்னில்

முற்றவும் –
சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும்
சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று,-அகங்கார மமகாரங்களால் – யான் எனது என்னுஞ் செருக்கால்
கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில்- சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே!
ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார்.

வீடு செய்து-
‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில்,
அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும்
சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று,
மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே
விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி.

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ )
என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்

வீடுடையான்
பரமபத நிலையான பக்கலிலே என்னுதல் உம உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’
உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார்.
உடையானிடை
பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.
வீடு செய்மின் –
அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக்கொண்டிருக்கிறான்;
ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்;

யம-ப்ராதேசிகமான (குறித்த ஒரு சிலரை மட்டும்) நியமிக்கின்ற யமனைஅன்று சொல்லுகிறது
பிரபவதி சம்ய மநே மமாபி விஷ்ணு -என்று அவன் தன்னையும் நியமிப்பவனாயிற்று இவன்
வை வஸ்வத -விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவன் என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பச-என்கை அன்றிக்கே எல்லாருக்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
யா -அந்தர் ப்ராஹ்மணாதிகளில் பிரசித்தி
தவைஷ ஹ்ருதி ஹ்ருதி – அவன் எங்குற்றான் என்ன -கண்டிலையோ –
உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் –
ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் –
தேந சேத விவாதஸ்தே -உடையவனாய் இருக்கிறவன் உடன் உனக்கு அவிவாதம் உண்டாகில் -இத்தால் பேறு என் என்பாயோ –
மா கங்காம் மா குரூன் கம-ஒரு தீர்த்தம் தேடித் போதல் -புண்ய க்ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா

அதாவது, அவன் உடையவனான பின்பு அவ்விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம்.
அவ்விவாதம் இல்லாமையையே ஈண்டு வீடு செய்மின்’ என்கிறார்.
‘இதனால் பேறு என்?’ என்னில், வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம்.
‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது,
மிகத்தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம்.
மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப்பொருள்.
மற்றும், பொகடுகிற பொருள்தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே?
ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடுசெய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: