ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-11–

நிகமத்தில்
பாட்டு தோறும் அருளியதை தொகுத்து சொல்கிறார்
முதல் பாட்டிலே — கல்யாண குணயோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரக வைலஷண்யத்தையும் -என்றும்
இரண்டாம் பாட்டிலே -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலக்ஷணம் என்றும்
மூன்றாம் பாட்டில் -நித்ய விபூதியோபாதி ததீயத்வ ஆகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாய்த் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டிலே அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் ஆதீனம்-என்றார் –
ஐந்தாம் பாட்டிலே அதனுடைய ஸ்திதியும் அவன் ஆதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் ஆதீனம் என்றார்
ஏழாம் பாட்டிலே சரீர சரீரிகளுக்கு உண்டான லக்ஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார் சரீர சரீரி
எட்டாம் பாட்டிலே குதிர்ஷ்டிகளை மிராசுதார்
ஒன்பதாம் பாட்டிலே சூன்ய வாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டிலே வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்
இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-

கரமான விசும்பு -திடமான விசும்பு என்றபடி
அன்றிக்கே -அச்சமான விசும்பு -என்னுதல்
அத்ர க்ருத்த்ர பததி ( ‘இங்குக் கழுகு பறக்கிறது,’)என்று நிரூபிக்கவேண்டும்படியாய் இருக்கும் இறே
எரி – தேஜஸ் தத்வம் / வளி – காற்று,/ நீர் – தண்ணீர்,/ நிலம் – பூமி,/
இவை மிசை – இவற்றின் மேலே உண்டான,/ வரன் – வரனான -ஸ்ரேஷ்டமான-சிறந்த,/
நவில் – வரிஷ்டமான சப்தம் -ஒலி,/ திறல் – அக்னியினுடைய தாஹத்வ சக்தி -தீயினுடைய தெறுதல், /
வலி – காற்றினுடைய மிடுக்கு, /அளி – தண்ணீரினுடைய தண்ணளி,/ பொறை – பூமியினுடைய பொறுத்தல்./
ஆக, இப்படி, இவற்றைத் தன்மைகளாகவுடைய -ச ஸ்வபாவமான -ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்த அதனால்,
லீலா விபூதியைச் சொல்லினார் ஆவர்.
ரஜஸ் தமஸ் களைக் கழித்து,நிஷ்கிருஷ்ட சத்துவமேயாய் இருப்பது நித்திய விபூதியாகையால்,
இங்கே அதனையும் உபலக்ஷணத்தாற் கொள்க.
ஆக,-உபய விபூதி உக்தனாய் இருக்கிற சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளின்மேல்.

இவை பத்தும் பரன் அடி மேல் வீடு
அவன் திருவடிகளில் விடப்பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன –
குருகூர்ச் சடகோபன் சொல்- 
வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.
நிரல் நிறை –
சொற்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாய் நிறைந்திருத்தல்.
இனி, ‘நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை.
பிரமானைஸ்த்ரிபிர் அன்விதம் -என்றும் -பாதபத்தோஷரசமஸ் தந்த்ரீலய சமன்வித என்கிறபடியே
லக்ஷணங்களிலே குறையாமல் -எழுத்தும் சொல்லும் பொருளும் -அந்தாதியும் கிராமத்திலே நிறுத்தப்படுகை

ஆயிரம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருஸை கரவா ண்யகம் -(இப்படிப்பட்ட சுலோகங்கள்
நிறைந்த இராமாயணத்தை நான் செய்யக்கடவேன்,’)என்று பிரமனது திருவருளைப் பெற்றுக் கூறிய வால்மீகி போன்று,
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மேலுள்ள அனைத்தும் இவர்க்கும் தோன்றாநின்றது.
இனி தம் அனுபவங்கள் அனைத்தையும் ஒருசேரக் கூற முடியாது ஆதலானும்,
சொல்வனவற்றை ஒன்றன் பின் ஒன்றாகவே கூறல்வேண்டும் ஆதலானும்,
அம்முறையில் ஆயிரம்’ என்கிறார் எனலுமாம்.
அன்றி,
ஆயிரமும் சொல்லியல்லது நிற்க ஒண்ணாத பொருளின் தன்மையாலே அருளிச்செய்கிறார் என்றலும் ஒன்று.

இவை பத்தும் வீடே – 
இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன.
இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று,
‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, 
பகவத் பிரசாதத்தாலே தமக்குப் பரத்து ஞானம் பிறந்தபடியையும்,
அந்த ஞானத்துக்குப் பலம் மோக்ஷம் என்னுமிடத்தையும்,
இப்பதிகத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்குப் பலம் தம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்தார்

———————-

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வு ஏதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு –திருவாய்மொழி நூற்றந்தாதி -1-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: