ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-9–

சர்வ சூன்ய வாந்தியை நிரசிக்கிறார் -நிரசிக்கிற படி தான் என் என்னில் -பாஷ்யத்தில் சூன்யவாதியை நிரசித்த கிரமத்தில்-
இவ்வாழ்வார் தாம் அடியாக பாஷ்யகாரர்க்கு அவனை நிரசிக்கலாம்
இவர் தாம் அவனை நிரசிகைக்கு அடி என் என்னில் அதுவும் இவ்வாழ்வார் தம் பக்கலில் உண்டு –
புறம்பே சிலர் ப்ரஹ்மாதிகள் பக்கலிலே ஈஸ்வர பிரதிபத்தியைப் பண்ணி பிரமாணங்களையும்
அதுக்கு ஈடாக நியமித்துக் கொண்டு வந்து தோற்ற –
தாம் அங்கீ கரித்தவனே சர்வ ஸ்மாத் பரன் என்றும் -ஜகத்து அவனுக்கு சரீரதயா சேஷம் என்றும் –
தத் ப்ரதிபாதக பிரமாணம் வேதம் என்றும் தம்முடைய மதத்தை உபந்யஸித்து நின்றார் கீழ் –

இவை இத்தனையும் இல்லை என்னும் போது பூர்வ பக்ஷமாக இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்துக் கழிக்க வேணும் இறே –
அதில் இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்து அவனால் இல்லை என்னப் போகாது
முதலிலே சூன்யம் என்னில் சர்வ சூன்ய வாதம் சித்தியாது -இனி உன்னைக் கேட்போம்
நீ தான் ஈஸ்வரன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயோ
இல்லை என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயோ -என்ன
இங்கன் விலம்பிக்கைக்கு கருத்து என் என்ன
உளன் என்கிற சொல்லால் சொன்னால் உனக்கு அபிமதமான அ பாவம் சித்தியாதவோபாதி
இல்லை என்கிற சொல்லாலும் உனக்கு அநபிமதார்த்தமே சித்திப்பது –
ஆனபின்பு நீ இல்லை என்கிற சொல் கொண்டே அவன் உண்மையை சாதிப்பன் –
லோகத்தில் பாவ அ பாவ சப்தங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம் –
அப்படிக் கொள்ளில் நீ நினைக்கிற அர்த்தம் உன்னால் சாதிக்கப் போகாது —
அங்கனே கொள்ளாயாகில் வாதம் தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே–1-1-9-

உளன் எனில் உளன்
ஈஸ்வர ஸத்பாவம் முதலிலே இல்லை என்கிற நீ அவன் உண்மைக்கு இசையாய் இறே –
நான் உளன் என்கிறாப் போலே சொல்லில் தானே உளன் –
அவன் உருவம் இவ்வுருவுகள்
ஈஸித்வய நிரபேஷமாக அன்று இ றே ஈஸ்வரன் உளனாவது -அவன் உளனாம் இடத்தில்
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -என்கிறபடி ஜகத்து அவனுக்கு சரீரதயா சேஷமாய் உண்டாம் –
உளன் அலன் எனில்
உளன் அலன் என்பாயோ -அப்போது அபாவ தர்மியாய்த் தோற்றும் –
அவன் அருவம் இவ்வருவுகள்
அப்போது நாஸ்தி சப்த வாஸ்யமாய் அவஸ்தானத்ர பாக்காய்க் கொண்டு இவற்றின் உண்மை தோற்றும்
கடோ அஸ்தி என்றால் வாயும் வயிறுமான ஆகாரம் தோற்றும்
கடோ நாஸ்தி என்றால் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமாய்த் தோற்றும்
இப்போது இல்லை என்றதாகில் -வேறொரு கால விசேஷத்திலே உண்டாம் எங்கும் எப்போதும் ஒரு பிரகாரத்தாலும்
கடம் இல்லை என்னக் கூடாமையாலே நிருபாதிக நிஷேதவம் இல்லை இறே
உளன் என இலன் என இவை குணமுடைமையில்
உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்
இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று –
உளன் இரு தகைமையொடு
உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்
ஒழிவிலன் பரந்தே
நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிறவ சொல்லாலே சாதித்தாய் –
ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: