ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-1-8–

சுருதி சித்தன் அவனே என்றும்,சர்வ சரீரியாய் நிற்கின்றவன் அவனே என்றும் சொல்லா நின்றீர் ;
அல்லாதாரும் ஒவ்வொரு காரியத்திலே அதிகரித்து அவற்றை நடத்தி யன்றோ போருகிறது –
பிரமன் ஸ்ருஷ்ட்டிற்கு கடவனாய் ருத்ரன் சம்ஹாரத்துக்குக் கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு வியக்தியிலே ஏறிட்டால் நீர் பக் ஷபாதத்தால் சொன்னீர் ஆகீரோ?’ என்ன,
‘ஒரு வியக்தியிலே பக்ஷ பாதத்தால் சொல்லுகிறேன் அல்லேன்;
பிரமாணங்களின் போக்குகளை ஆராய்ந்தால்அவை அவர்கள் பக்கல் கிடவாமையாலே சொல்லுகிறேன்,’ என்கிறார்.

————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

வரன் முதலாய் அவை முழதுண்ட பராபரன் என்கிற பதங்களையும் –
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து-என்கிற பாதங்களையும் கடாக்ஷித்து
ப்ரஸ்ன உத்தர ரூபேணே சங்கதி அருளிச் செய்கிறார் –
ஸ்ருதி சித்தன் அவனே என்றது சுருதியுள் உளன் என்றத்தைப் பற்ற –
சரீர பூதாநாம்- ப்ரஹ்ம அதீனம் ஸ்வதந்த்ர தயா கர்த்ருத்வம் நாஸ்தீதி பலிதம்

—————————–

சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே–1-1-9-

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் –
ப்ரஹ்மாதிகளால் அறிய அரிய ஸ்வ பாவத்தை யுடைதாய் இருக்கிற விண் உண்டு – மூலப் பிரகிருதி-
அது தொடக்கமாக உண்டான எல்லாவற்றுக்கும் வரிஷ்டமான காரணமாகி- 
அஷ்ரமம் பராந்தத்ருதே-(,ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று
சொல்லப்படுமவன் பரம்பொருளே என்பது ப்ரஹ்ம சூத்திரம் ) என்று அம்பராந்தம் என்று சொல்லக் கடவது இறே
உபநிடதத்தில் -கார்க்கி வித்தையில் -கஸ்மின் நு கல்வாகாச ஒதாச்ச ப்ரோதச்ச
(‘ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும்
கோத்துக் கொண்டு கிடக்கிறது?’)-என்று ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே
இவரும் -‘விண்’என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறார்.
ஆதலின், மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை
உபசாரத்தால் அருளிச்செய்கிறார் என்பதாம்-

வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன்மேலே ஏறிட்டுக்கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே 
வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –
சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபேபவத ஓதந ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-யாவன் ஒருவனுக்குப் ப்ரஹ்ம க்ஷத்ராத்மகமாக
இது எல்லாம் ஓதனமாய் இருக்கிறது ?
யாவன் ஒருவனுக்கு ம்ருத்யு உபசேஸன கோடியிலே (யமதருமன் ஊறுகாய் நிலையிலே )நிற்கிறான் ?
க இத்தா வேத யத்ரச – அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’ – கடவல்லி உபநிடதம்
என்னா நின்றது இறே-(இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய –
‘உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார்.)

பரபரன் –
ப்ரஹ்மாதிகள் அதிகாரி புருஷர்களாக இருக்கையாலே நம்மைக் குறிக்க அவர்கள் பரராய் இருப்பது ஒன்று உண்டு இறே
பர பரானாம் (‘உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ )என்கிறபடியே,
அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன். ‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்னைக் கடவது இறே

புரம் ஒரு மூன்று எரித்து –
ருத்ரன் திரிபுர தகனம் பண்ணினான் என்றும்,
அமரர்க்கு அறிவியந்து – 
அறிவை ஈந்து;
அன்றிக்கே – வியத்தில் – கடத்தலும், கொடுத்தலும் ஆகையாலே, அறிவைக் கொடுத்து என்னவுமாம்.
‘பிரமன் தேவர்கட்கு ஞானத்தைக் கொடுத்தான் என்றும் ஒரு பிரசித்தி உண்டு அன்றே நாட்டிலே அவர்கட்கு?
அவ்வாறு அன்றோ அவர்கள் ஏற்றங்களும் இருக்கின்றன?’ என்னில்-ஆராய்ந்தால் ,
விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜசை தஸ்மாத் தநுர் ஜ்யாசம்ஸ்பர்சம் சவிஷேஹே மகேஸ்வர
( ‘மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான்
வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ )என்னா நின்றார்கள் இ றே அத்தை அடி அறியும் வியாசமுனிவர். 
‘தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம், விழநனி மலைசிலை வளைவு செய்தங்கு, அழல்நிற அம்பது ஆனவனே’ என்னா
நின்றார்கள் இறே மயர்வற மதிநல மருளப்பெற்றவர். 
ஆதலால், தான் பூட்டின நாணி தன் கழுத்தை அறுத்துக்கொண்டு போகாது ஒழியும்போதும்
திருமால் அந்தராத்மாவாய் நிற்றல் வேண்டும். நிற்க,
இனி, பிரமன் தேவர்கட்கு ஞானத்தினைக் கொடுத்தான் என்பதை ஆராய்ந்தால், 
யோ ப்ராஹ்மணம் விதாதா பூர்வம் -(‘நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்;
அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ )என்கிறபடியே, அதற்கும் அவன் அடியாக இருக்கும்

அரன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் –
‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகை யழித்தும் அமைத்தும் உளன். 
சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
அரன் என புரம் ஒரு மூன்று எரித்து உலகத்தை அழித்து
அயன் என அமரர்க்கும் அறிவியந்து அமைத்து உளனே-என்று அந்வயம்
ஏதவ் த்வவ் விபுத ஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரோதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ்
(‘பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்;
இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்;
இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய்,
படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’) என்கிறபடியே பிரமாண கதிகள் இருந்த படியால்
ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.
ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒரு வ்யக்தியில் பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’
என்று குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்

——————————-

விண் உண்டு-மூல பிரகிருதி –
கீழ்ப்பாட்டில் பூதாந்த்ர சமபிவ்யாஹாரத்தாலே-விசும்பு என்கிறது கார்ய ஆகாச பாரமாகை உசிதம் ஆகையாலும்-
இந்தப்பாட்டில் பூதாந்த்ர சமபி வ்யாஹாரத்தாலும்-கீழே பூத ஸ்ருஷ்ட்டியைச் சொல்லுகையாலே
தம பிரேரணம் முதலான மஹத்தாதி ஸ்ருஷ்ட்டி இந்தப்பாட்டிலே சொல்லுகிறது உசிதம் ஆகையாலும்
சுரர் அறி வருநிலை -என்று ப்ரஹ்மாதிகளுக்கு தாமஸ் பிரேரகத்வம் கூடாது என்று ஸூசிப்பிக்கை உசிதம் ஆகையாலும்
விண் என்று மூலப்பிரக்ருதியைச் சொல்லுகிறது என்று திரு உள்ளம் –
அக்ஷரம் அம்ப்ராந்த த்ருதே -அம்ப்ராந்தம் என்று மூலப்பிரக்ருதி -அம்ப்ராந்த ஆதாரத் வே ந -அம்பர -காரணம் -என்றபடி

பர பரணாம் இத்யாதி -பர பராணம் -பரம பரமாத்ம ஸம்ஸ்தித-ரூபா வர்ணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
தனக்குத் தானே ஆதாரம் -பிராகிருத ரூப வர்ணாதி ரஹிதம் –

அறிவு இயந்து-ஈந்து கொடுத்து / வியந்து -வியத்தல் கடத்தலும் கொடுத்தாலும் இங்கு அறிவைக் கொடுத்து என்றபடி
விண் முதல் முழுவதும் -சர்வ ஸ்ரஷ்ட்ருத்வம்
முழுதுண்ட -சர்வ சம்ஹர்த்ருத்வம்
உளன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உள்ளே அந்தராத்மாவாய் நிற்குமவன் -என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: