ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-7–

கீழே சாமா நாதி கரண்யம் சொன்னது -பாவி ப்ரதிஸந்தான நியாயத்தாலேயாய் –
அத்தால் பலித்த சம்பந்தம் சரீராத்மா சம்பந்தம் என்கிறீராதல்
அன்றியே -கீழே சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொன்னார் –
அப்படிச் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்னுதல் –
அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி ( ‘இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு
இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,) என்கிறபடியே –
த்ரிவ்ருத் க்ருதமான அசைத்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாக்கும் படி பண்ணி ,
எல்லாம் தான் என்னலாம்படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -, (‘மண்ணே குடம்’)என்பது போன்று இராமல். –
அந்தப்ரவிஷ்டச் சாஸ்த்தா ஜெநா நாம் சர்வாத்மா -என்கிறபடியே ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில்
இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 
யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு
இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும் என்று என்று
கீழ்ச் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.
ஆயின், வ்ருஷத்தில் தேவதத்தன் நின்றான்,’ என்றால், அங்குச் சரீர ஆத்துமபாவம் இல்லை.
‘ஜாதி குணங்கள் வ்யக்தியில் கிடந்தன,’ என்றால், அங்குச் சரீர ஆத்துமபாவம் இல்லை.
விசிஷ்டத்திலே இறே சரீராத்மா பாவம் கொள்ளலாவது

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7-

திட விசும்பு
இது தான் அல்லாதவற்றிலும் ஏறி -த்ருடமான எரி த்ருடமான காற்று என்று கிடக்கிறது ஆகவுமாம்
அன்றிக்கே -ஆத்மந ஆகாசஸ் ஸம்பூத (‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ )என்கிறபடியே,
ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது
ஆகையாலே திடமான விசும்பு என்னவுமாம் –
அன்றிக்கே -சத்வார்யேவ பூதாநி -(காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,)
என்கிறவனை நிராகரிக்கிறார் ஆகவுமாம்
ஆக பஞ்ச பூதங்களையும் சொல்லுகிறது

இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் –
இவற்றை அடியாகக்கொண்டு மேலே விஸ்திருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி.
‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. ஆய் என்பான் என் என்னில்
பஹு ஸ்யாம் ( பொருள்களாக விரிகின்றேன்) என்கிற தனது விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி.
அவை அவைதொறும்-
அவ்வோ பதார்த்தங்கள் தோறும். அவற்றிலே வியாபிக்கும் இடத்திலே –
பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி -ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போலே
(ஒவ்வொரு பொருளிலும் அவ்வச்சாதித்தன்மை நிறைந்திருத்தல் போன்று )
எல்லாப்பொருள்களிலும் தனித்தனியே குறைவு அற வியாபித்து நிற்கும்
இப்படி வியாபித்து நிற்கும் இடத்தில்
உடல் மிசை உயிர் என –
இப்படி நிறைந்து நிற்குமிடத்தில், இச்சரீரத்துக்கு ஆன்மா தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பதுபோன்று,
இச்சரீர ஆத்துமாக்களுக்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருக்கும் கரந்து –
இப்படி இருக்கச் செய்தே யமாத்மா ந வேத ( ‘எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ )என்கிறபடியே,
அன்யைரத்ருஸ்யனாய் ( பிறர்களால் காண முடியாதவனாய் ) இருக்கும் –
எங்கும் பரந்து
அந்தர் பாஹிச்ச வியாபித்து -இதுக்கு பிரமாணம் என் என்னில்
உளன் சுடர்மிகு ஸ்ருதியுள்  
அபவ்ருஷேயமாய் நிர்த்தோஷமாய் இருக்கிற வேதத்தாலே ப்ரதிபாதிக்கப்பட்டு இருக்கும்
ப்ரத்யக்ஷ யாதி பிரமாணங்கள் போலே ஹேத்வாந்தரங்களால் கழிக்க ஒண்ணாத ஒளியை யுடைத்தாய் இருக்கை
சுருதி
பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்றி உத்தர உத்தர உச்சாரணத்தைப் பற்றச் சொல்கிறது
இத்தால், முதல் பாசுரம் தொடங்கிச் சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணம் நிர்த்தோஷ சுருதி என்கிறார்.

இவை உண்ட சுரன் –
இவற்றை சம்ஹரித்த தேவன்
முன்னரே ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகள் அவன் அதீநம் என்று அருளிச் செய்தார்; சம்ஹாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில்
அது தன்னது அல்லாமையால் வரும் ஐசுவரியம் குறையும் அன்றே?
ஆதலால், ‘சம்ஹாரமும் அவன் இட்ட வழக்கு,’ என்கிறார். 
இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்
திடவிசும்பு-என்கிற இத்தால் -அவைதிக மரியாதையில் நடக்கிற -வேதநெறிக்குப் புறம்பாக நடக்கிற உலோகாயதிகரை நிரசிக்கிறார்
‘உடல்மிசை உயிர்’– என்கிற இத்தால் -ஸ்வரூபேண தாதாம்யம் -சொரூபத்தோடு ஐக்கியம் சொல்லுகிறவர்களை நிரசிக்கிறார்
‘சுடர்மிகுசுருதியுள்’ என்கையாலே நாராயண அநுவாகம் முதலியவற்றின் சொல்லுகிற பரத்வம் -ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: