ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-6–

லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் அதீனம் என்றார் கீழ் –
அவற்றினுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் அதீநம் என்கின்றார் இதில்.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமோர் இயல்வினர் எனநினைவு அரியவர்
என்றுமோர் இயல்வொடு நின்றஎம் திடரே–1-1-6-

நின்றனர்.-இத்யாதி-
நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்றும்,
நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்றும் சொல்லக் கடவது இறே பிரவ்ருத்திகளையும் நிவ்ருத்திகளையும் .
பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களுடையவும் பிறவிருத்தி நிவ்ருத்திகளையும் சொல்லுகிறது –
இப் பன்மையாலே ஆகிருதி வாசக சப்தம் வியக்தியிலே பர்யவசித்து நிற்குமா போலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு
வாசகமான அபர்யவசான விருத்தியால் அவனளவும் சென்று அல்லது நில்லா.
அருணாய பிங்காஷ்ய ஸோமங்க்ரீணாதி (‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும்
கொடியினை வாங்கக் கடவன்’) என்ற இடத்தில். குண விசிஷ்ட வஸ்து தோன்றா நிற்கவும்
ஆருண்யா அம்சத்தில் தாத்பர்யம் ஆவது போலே (செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, )
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி களுக்கு ஆஸ்ரயமான வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் என்று முன் சொல்லுகையாலே,
இங்கு பிரவிருத்தி நிவ்ருத்திகளிலே நோக்கு என்று கூறுவாரும் உளர்.
அங்ஙனம் கூறின்,சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம்
அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப்
ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன. ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –
ஆயின், பிரவ்ருத்திக்கு அவன் அதீனையாகிறது வானுமாகில் நிவ்ருத்திக்கும் அவன் வேண்டுமோ?’ என்று எம்பாரைச்  சிலர் கேட்க,
‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே!
அப்படியே,நிவர்த்திக்கும் அவன் வேண்டுங்காண்,’ என்று அருளிச்செய்தார்.

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் –
இப்படி அநேக பிரகாரகராய் பல வகையினராக இருக்கையாலே காலதத்வம் உள்ள வரையிலும் ஆராய்ந்தாலும்
இன்னபடிப்பட்ட ஸ்வபாவத்தை யினையுடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர்.
என்றும் ஓர் இயல்வொடு நின்ற
விருஷல விவாக மந்திரம்போலே என்றும் ஒருபடிப்பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று நினைக்க
அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டிருக்கும் என்கை.
எம் திடர் –
அபவ் ருஷேயமான ( மனிதர்களால் செய்யப்படாத ) வேத ப்ரதிபாத்யன் ஆகையால்,
வந்த தார்ட்யத்தை -திடத்தின் தன்மையைச் சொல்லுகிறார்.
இப்படி ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற்சொல்லப் பட்டவரான நிலை தம்முடைய இலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்

‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலரான இவை எல்லாம் என்றும் ,
‘ஓரியல்வினர் என நினைவு அரியராய்’ என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடர்,ஆனவர் என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: