ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-5–

ஸ்வரூபம் அவன் அதீனமானவோபாதி ஸ்திதியும் அவன் அதீனம் என்கிறார்

அவர் அவர் தமதம தறிவறி வகை வகை
அவர் அவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவர் அவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே–1-1-5-

அவர் அவர் -இத்யாதி
ஒருவன் ஒரு கிருஹத்துக்குக் கடவனாய் இருக்கும் ஒருவன் ஒரு கிராமத்துக்கு கடவனாய் இருக்கும் –
ஒருவன் ஒரு ஜனபதத்துக்கு கடவனாய் இருக்கும் ஒருவன் த்ரைலோக்யத்துக்குக் கடவனாய் இருக்கும் –
ஒருவன் சதுர்த்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும்
ஆக,
சதுர்த்தச புவனத்துக்கும் கடவனானவனோடு -கிருஹத்துக்குக் கடவனானவனோடு வாசி அற
அவர்கள் ரக்ஷகராகிறதும் , இவை ரஷ்யமாய் உபகாரம் கொண்டது ஆகிறதும்
சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே;
அவன் இப்படி நடத்திக்கொண்டு போகாத அன்று அவர்கள் ரக்ஷகர் ஆக மாட்டார்கள் என்கிறார்.

ந சம்பதாம் சமா ஹாரே விபதாம் விநிவர்த்தநே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம் – (‘செல்வங்களைச் சேர்க்கின்ற தன்மையிலும்
ஆபத்துகளைப் போக்குந்தன்மையிலும் புருடோத்தமனாகிய இறைவனைத் தவிர, ஆற்றலுடைய வேறு ஒருவன் காணப்படுகின்றான் இலன்,)
எல்லா நன்மைகளையும் பண்ணித் தர வல்லவனாய், பகையையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய
வேறு ஒருவர் பக்கல் இந்த ரக்ஷகத்வம் கிடவாது-என்றும், 
யத் வேதாதவ் ஸ்வர ப்ப்ராக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்ட்டித -‘செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு,
பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று
வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற ஆதி யந்த பீஜாக்ஷரம் யாது ஒன்றோ-
தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய -அது தன்னுடைய பிரக்ருதியிலே லீனமாய் இருக்கிறதாகிறது -அகாரம். அது ரக்ஷகனைக் காட்டுவது ஒன்று இறே ;
ய பரஸ் ச மகேஸ்வர -அதற்கு வாஸ்யதயா பரனாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் அவனே சர்வேஸ்வரன் என்றது இறே

அவர் அவர் –
தம்முடைய அநாதரமும் அவர்களுடைய வைவித்யமும் தோற்றுகிறது.
தம தமது – குணபேதத்தால் வந்த பல பேதத்தைச் சொல்லுகிறது.
அறிவு அறி –
அவற்றிற்கு அடியான ஞானபேதத்தைச் சொல்லுகிறது.
வகை வகை –
மார்க்க பேதங்களாலே,
தமதம தறிவறி வகைவகை’
சேதனோ பேதத்தோபாதியும் போருமாயிற்று ருசி பேதங்களும்
தம்தாமுடைய குண அநு குணமாகப் புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயராய் இருப்பாருமாயிறே இருப்பது –
ரஜோகுண பிரசுரராய் இருப்பாரும் தமோ குண பிரசுரராய் இருப்பாரும்
அளாவனான ( இரண்டும் கலந்த )சத்துவ குணத்தை யுடையராய் இருப்பாரும் ;
அப்படியே குண அநு குணமாகப் பிறந்த ஞானமும்
அறிந்தறிந்த வகைகளால் அறிவறி வகைவகை’ என்கிறார்.

அவர் அவர் இறையவர் என –
அவ்வவர் ஆஸ்ரயணீயர் என்று
அடி அடைவர்கள் –
அவ்வவ தேவதைகள் தான் துராராத தேவதைகளாய் பிரஜையை அறுத்துத்தா’, ‘ஆட்டினை அறுத்துத் தா’ 
என்னா நிற்கச் செய்தேயும்-ஆஸ்ரயணீயமாவது அவற்றின் காலிலே குனியுமதுக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கிறார்
இவர் ஸ்வ கோஷ்டீ ப்ரஸித்தியாலே
ஓர் அஞ்சலி ஸாத்ய வஸ்துவோடு இறே தமக்கு வாசனை
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ பிரஸாதி நீ (‘இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும்
மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,’ )
க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் ஷமம் அந்தரேன அஞ்சலிம் பாத்தவா லஷ்மணஸ்ய பிரசாத நாத் –
இளையபெருமாளுடைய ஜியா கோஷத்தைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து,
காபேயமாய் குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘
இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க,
அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன அல்லோம்; சில செய்வோம்;
தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்றான் இறே

இப்படி, குணாதிகனாய் ப்ராப்தனாய் இருக்கிறவனோட்டை வாசனையால் ‘அடி அடைவர்கள்’ என்கிறார். 
‘மாமலர் நீர் சுடர் தூபங்கொண்டு தொழுது எழுதும்’ என்னும் இதனையும் மிகையாக நினைப்பவன்
இவர் பற்றிய விஷயம் இருப்பது ‘
அவர் அவர் இறையவர் குறைவு இலர் –
ஆஸ்ரயிக்கிறவர்களுடைய இறையவர் என்னுதல்
அவவவ் ஆஸ்ரயணீயர் ஆனவர்கள் என்னுதல்
அவர்களுக்கு ஆஸ்ரயணீயர் ஆனவர்கள் அவர்களுக்கு பல பிரதான சாக்தர் ஆகைக்குக் குறையுடையர்
அல்லர் -அதுக்கு அடி என் என்னில்
இறையவர்
பொதுவில் இறையவர் என்கிறார் -அவர்களோடு – அவர்கள் ஆச்ரயிக்கிற தேவர்களோடு – தம்மோடு -வாசி அற,-
பதிம் விஸ்வஸ்ய (பரமாத்துமாவானவன் உலகிற்கு எல்லாம் இறைவன்,’ )என்கிறபடியே, எல்லார்க்கும் ஒக்க ஸ்வாமி யானவர்

அவர் அவர் விதிவழி அடைய நின்றனர் –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தத்தம் ஆகமங்களிலே விதித்து வைத்த பிரகாரங்களில் அடையும்படியாக
நம் இறைவர் அந்தராத்மாவாய் நின்றார்
அன்றிக்கே சர்வேஸ்வரன் காமான அதிகாரத்தில் அருளிச் செய்த படியே அவர்கள் அடையும்படியாக என்னுதல்
(‘எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு
அவ்வத்தேவர்களை வணங்குதற்குஉரிய பத்தியினை நான் கொடுக்கிறேன்,’ என்றும்,
அவன் அவன் அந்தப் பத்தியோடு அத்தேவர்களை ஆராதனை செய்கின்றான்;
என்னால் கொடுக்கப்பட்ட பலனையும் அடைகின்றான்,’ என்றும் ஸ்ரீ கீதையில் அருளிச்செய்தபடியே,
அவ்விரு திறத்தார்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றனர் என்றுமாம் )
சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;
இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பலபிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: