ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-4–

கீழில் பாட்டிலே ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களைப் போன்று உத்தேஸ்யமாகத் தோற்றுகையாலே
லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்;
இனி, மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாகவே இருக்கின்றன.
நித்திய விபூதியில் வந்தால், அவ்வுலகிலுள்ளார் அனைவரும் பாவஞ்ஞாராய்
அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுகிறவர்களாய் இருப்பார்கள்; 
‘ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப’ என்னும்படியாய் இறே இருப்பது –
மேலும், அவ்வுலகத்தில் இறைவனுடைய இருப்புக் கண்டு உகக்கும் அதற்கு அவ்வருகு ஒன்றும் இல்லை.
இவ்வுலகில் உள்ளவர்கள், கர்ம நிபந்தமான அசித் சம்சர்க்கத்தோடே கூடினவர்களாய்
ஈஸ்வர சங்கற்பத்தினைப் பின் செல்லுகின்றவர்களாய் இருப்பார்கள்;
மேலும்,அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் நடையாடுகிறது இவ்வுலகத்திலே ஆகையாலே,
இரண்டனையும் தவிர்த்து பகவத் அதீனமாய் இருக்கும் என்று சொல்ல வேண்டுவது இங்கேயாய் இருந்தது

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறார் –

அதில் ஸ்வரூபம் அவன் ஆதீனம் என்கிறார் இப்பாட்டில் -அது ஆகிறபடி
‘எங்ஙனம்?’ என்னில் , ஸ்ருஷ்ட்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநு பிரவேசித்து –
வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம்படி பண்ணியும் இவை அடங்கவும் அழிந்த அன்று,–
சக்த்யவஸ்தை பிரபை போலே ( நீறு பூத்த நெருப்புப்போன்று )தன் பக்கலிலே ஸூஷ்ம ரூபேண கிடக்கும்படி
இவற்றை ஏறிட்டுக்கொண்டு தரித்தும், காரணநிலையோடு காரிய நிலையோடு வாசி அறத் தன்னைப்பற்றி 
ஸ்வரூய ஸ்திதி முதலியவை ஆகும்படி இருப்பதனால் அவன் அதீநம் என்கிறார்.
அதில் லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித்தனியே சொல்லி
இதினுடைய ஸ்வரூபம் அவனாலே -இதினுடைய ஸ்வரூபம் அவனாலே என்னில் பணிப்படும் இறே ஜீவ அநந்தயத்தாலே
இனி ப்ரயோஜகத்திலே சொல்லி விடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது
ஆகையாலே, தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்துத் தொகுத்து
அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் என்கிறார்

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே–1-1-4-

நாம் அவன் இவன்உவன்
நான் என்றும், நாம் என்றும், யான் என்றும், யாம் என்றும் தந்தாமைச் சொல்லக்கடவது.
சந்நிஹிதம் என்ன–தூரஸ்தம் என்ன -அதூர விப்ரக் ருக்ஷ்டம் என்ன -வினவப் படுகிறது என்ன

அவள் இவள் உவள் எவள் –
ஸ்த்ரீ லிங்க நிர்த்திஷ்ட வஸ்துக்களை சொல்லுகிறது .

தாம் அவர் இவர் என்றது –
பஹு மந்தவ்யரை

அது இது உது எது –
நபும்சக லிங்க நிர்த்திஷ்ட வஸ்துக்களை சொல்லுகிறது

வீமவை இவை உவை –
நச்வர பதார்த்தங்கள்

நலம் அவை தீங்கவை –
நன்மை தீமை என்னுதல்,
நன்றானவை தீதானவை என்னுதல்.

ஆமவை ஆயவை –
கழிந்தவற்றிலும் வருமவற்றிலும் அடைப்புண்ணும் இறே வர்த்தமானம்

ஆய்நின்ற –
ஆகிநின்ற பதார்த்தங்கள் -இவற்றைப் பதார்த்தங்கள் அளவிலே கொண்டபோது,
மேல் ஐக்கியம் சொல்லப்போகாது; 
ஆகையால் -அசித்தும்-அசித் அபிமானியான ஜீவனும் – ஜீவ அந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ் சங்காத்தம்
அத்தனைக்கும் வாசகமாய் இருக்கிறது இச்சப்தம்

‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி. –
இதம் சர்வம் ப்ரஹ்மம் கலு (‘இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா? )
தத் த்வம் அஸி (இது நீயாய் இருக்கிறாய்’ )என்றால் போலே இருக்கிறது –

முதல் பாட்டிலே -கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில், ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் சொல்லி அருளிச்செய்தார்.
தத் சப்தம் பிராகிருத பராமர்சி யாகையாலே
‘அவர்’ என்று கல்யாணகுண விசிஷ்ட வேஷத்தைச் சொல்லி,
‘ஆய் நின்ற’ என்று அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்மாவைச் சொல்லி, சாமாநாதி கரண்யத்தால் ஐக்கியம் சொல்லுகிறது இப்பாட்டால்.

ஆக, ஸ்த்ரீ புந் நபும்சக பேதத்தாலும், பூஜ்ய பதார்த்தங்கள் நச்வர பதார்த்தங்கள் என்னும் பேதத்தாலும்,
விலக்ஷண அவிலக்ஷண என்னும் பேதத்தாலும், பூத பவிஷ்ய வர்த்தமான கால பேதத்தால் வந்த விசேடங்களாலும்,
சகல சேதன அசேதனங்களையும் ஸங்க்ரஹித்து தொகுத்து, அவற்றினுடைய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றாதாய் விட்டது

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: