ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-3–

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித்த அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார்
அவற்றோடு சேர ஒரு கோவையாகத் தோற்றும் இ றே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவருக்கு
நோ பஜனம் ஸ்மரத் இதம் சரீரம் (‘மனிதர்களின் நடுவில் இருக்கும் இந்தச் சரீரத்தை நினையாமல்
அந்த ஈஸ்வரனிடத்து நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான் முத்தன்’ )என்னா நிற்கச் செய்தே
‘முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது முத்தனுக்கு. ‘ஆயின், இவர் முத்தரோ?’ எனின்,
இவர்க்கும் கர்மம் நிபந்தமான ஆகாரமும் -சரீரம் கிடக்கச்செய்தே- மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே,
ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.
(‘ஆயின், இவ்வுலகங்கள் இறைவன் உடைமை என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், )அரசர்கட்கு நாடு எங்கும்
தமது ஆணை செல்லுமாயினும், தங்கள்தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக்
குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் -லீலா ரசம் -அனுபவிக்குமா போலே
‘திருவிண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே,
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார் –

இலன்அது உடையன்இது எனநினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்தஅந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே—1-1-3-

இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் –
‘அது இலன்; இது உடையன்,’ என நினைத்தற்கும் அரியவன்.
அநு பூதமாய் இருப்பது ஒன்றைச் சொல்லி – ‘அஃது இலன்’ என்று சொன்னால்,
அஃது ஒழிய மற்றைப் பொருள்களையுடையவன் என்று தோன்றும்;
ஒரு பொருளைக் காட்டி ‘இதனை உடையவன்’ என்று கூறின், இப்பொருளைத் தவிர
மற்றைப் பொருள்கள் எல்லாம் இல்லாதவன் என்று தோன்றும் :
‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,
‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –
ஆகவே, இரண்டுவழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;
என -இப்படி இருக்கும் என -என்றவாறு
ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்
அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )
ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன்மேலே சால் இருக்கிறதாகவும்,
அதன்மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;
அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்
மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச்செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்-
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;
விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.
அருவினான் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்
காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -என்றபடி என்றபடி.
இதனால்,ப்ராதேசிகமான (‘ஒவ்வோர் இடப்பகுதியின் செல்வங்களை உடையவர்களது)
ஐஸ்வர்யம் யுடையவர்களது அன்று லீலாவிபூதி; சர்வாதிகன் என்கை –
(எல்லாக்கடவுளர்கட்கும் மேம்பட்ட இறைவனுடைய,’ என்பதனைத் தெரிவித்தபடி.)

ஆயின், இப்படி சர்வத்தையும் யுடையவனாய் –
போகத்தில் அந்ய பரனாய்க் கோயில் சாந்து பூசி நித்ய விபூதியில் இருக்குமோ என்னில்
புலனொடு –
இவை பட்டனவற்றைத் தானும் பட்டு, -உடன் கேடனாய் நின்று நோக்குவான் என்கிறார்.
புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –
த்ருச்யதே ஸ்ருயதே அபி வா (‘பார்க்கப்படுகின்றவை, கேட்கவும் படுகின்றவை’ )என்கிறபடி பிராமண கோசரங்களான பதார்த்தங்களை –
ஓடு
தத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்
இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி
அந்தப்ரவிஷ்டாச் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா (‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய் )
சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது
ஆனால் பின்னை தான் சர்வாத்மாவாய் நின்றால்,
அசித்தினுடைய பரிணாமாதிகள் ( சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ)
சேதனருடைய ஸூகித்வ துக்கத்வங்கள் ஆதல் தனக்கு ஸ்பர்சிக்கும்படி இருக்குமோ என்னில் ,
புலன் அலன் –
தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்–
த்வா ஸூபர்ணா சயூஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்தி
அநஸ்நந் நந்யோ அபி சாக தீதி – (‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான
சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,‘உடையவன், உடைமை’ என்ற உறவையுடையவர்களாய்,
சரீரமான ஒரே மரத்தினைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்;
அவர்களுள் ஒருவனான சீவான்மா, இருவினைப் பயன்களை நுகர்ந்துகொண்டிருக்கின்றான்;
மற்றொருவனாகிய பரமான்மா, அப்பயனை நுகராதவனாய் விளங்கிக்கொண்டிருக்கின்றான்,’ )என்று
தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்கும்  

ஒழிவிலன் பரந்த –
ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –
அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்

அந்நலனுடை ஒருவனை –
கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.

நணுகினம் –
‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம்.
நாமே –
இது, பொய்யோ? கின்னு ஸ்யாச் சித்த மோஹா அயம் (‘இது ஏதேனும் பிரமம் ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ )என்று
பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும்‘நணுகினம் நாமே’ என்கிறார்.
இவர் ‘ஈஸ்வரோஹம்’ என்றால் அவனுக்கும் குடிவாங்க வேண்டும்படியாய் அன்றோ இருப்பது? 
அஹம் என்றால் அவன் அளவிலே பர்யவசிக்க வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ முன்பு போந்தது?
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம் தேசம் பரத்வஜோ யமப்ரவீத் – கைகேயி,-ராஜன் என்று சம்போதிக்கும் படியாகப் பிறந்து,
ஸ்ரீ பரத்வாஜ பகவான் -அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில்
நின்ற நான் அவன் சொன்ன ஆஸ்ரமத்தில் புகுந்தேனோ-என்று சங்கியா நின்றேன் என்றான் இறே . 
வானராணாம் நராணாஞ்ச கதாமாஷீத் சமாகம– ‘காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும்
நாகரிகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ –என்று பிராட்டி கேட்க, 
ராம ஸூக்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம ஜாயத ‘பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி,
பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க, அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ?
நானும் இங்ஙனே கூடிக் கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி.
நாமே
இவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே
பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் )
நாமே
இது பொய்யோ –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: