ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-1-2..

யாதோ வா இமானி-ஸ்ருதி பிரகிர்யையாலே ‘எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ,
எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்;
அவன்தான் பரம்பொருள்,’ –
கார்ய ஆகாரமான ஜகத்தைப் பிடித்து ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் என்னுதல்
அன்றிக்கே
ஸ்வ ரூபத்தை முற்படச் சொல்லி பின்னை விபூதியில் போருதல் செய்யாதே
முற்படக் குணங்களில் இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டியாகையாலே, தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார்;
அக்குணங்கள் தாம் ஸ்வரூபத்தைப் பற்றி அல்லது இராமையாலே அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
‘அவன்’- என்று பிரசங்கித்தார் முதல் பாட்டில் –
அங்கு ப்ரஸ்துதமான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் ஹேய ப்ரத்ய நீகதையாலும்-கல்யாண குணைகதாநதையாலும்
சேதன அசேதன விலக்ஷணமாய் இருக்கும் என்று அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப்பாட்டில் –

மனன்அகம் மலம்அற மலர்மிசை எழுதரும்
மனன்உணர் வளவிலன் பொறிஉணர் வவைஇலன்
இனன்உணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனன்இலன் என்னுயிர் மிகுநரை இலனே–1-1-2-

மனனகம் மலம்அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் –
இதனால்,ஜீவாத்ம ஸ்வரூபத்தில் பகவத் ஸ்வரூபம் விலக்ஷணம் என்கிறார் –
‘ஆயின், ‘மனனகம் மலமற மலர்மிசை எழுதரும்’ என்று இத்துணை அடை மொழிகளைச் சேர்த்துக் கூறுங்கருத்து யாது?’ எனில்,
ஸ்வரூப வைலக்ஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி கிரமம் இருக்கிறபடி –
மனன் என்றது, மனம் என்றபடி
அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே,
‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப்பொருள்களிலும் உட்பொருளிலும் )
போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –
மனனகத்தில் உள்ள மலம் உண்டு -அவித்யாதிகள் -அவை அற-
அவை யாவன -காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச்சாஷ்டம ப்ரோக்த இத்யேத மனசா மலா-
ஆத்மஸ்வரூபமும் நித்தியமாய் ஞானமும் நித்யம் ஆகையால் (உயிர்களும் அழிவற்றவை; ஞானமும் அழிவற்றது; ஆகையால்,)
இத்தோஷம் ஸ்வரூப கதமுமல்ல -ஞான கதமும் அல்ல –
ஆத்மாவினுடைய தர்மபூத ஞானத்துக்கு (தோற்றம் மறைவுகளை வழங்குவது-)உதய அஸ்தமய வியவஹாரம் பண்ணுகிறது
ஞானம் ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று –
ஆக,ப்ரஸ்ருதி த்வாரமான மனத்தினைப் பற்றிக் கிடக்கின்ற தோஷமானது – யோக சாஸ்திரங்களில் சொல்லுகிற க்ரமத்திலே
பாஹ்ய விஷய ப்ரவணமான நெஞ்சை ப்ரத்யக் விஷயமாக்கி யமம் நியம மாதி க்ரமத்தாலே அனுசந்திக்கப் புக்கவாறே கழியக்கடவது –
அற -என்றது -அற வற என்றபடி
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை,தியானம், சமாதி என்பன. இவை

அனந்தரம் மலர் —
விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளராநின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள
மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –
மானஸ ஞான கம்யமாய் இருக்கும் ஜீவாத்மா ஸ்வரூபம் -பகவத் ஸ்வரூபம் அங்ஙனம் இராது,’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்
ஏக இந்திரிய க்ராஹ்யத்வமும் இல்லை எங்ஙனம்?’ எனின்,
பொன்னும் கரியும் அத்யந்த வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தே கிரஹிக்கைக்கு ஸாமக்ரி ஒன்றாய் இருக்கும் இறே ,
(இவ்விரண்டனையும் அறியுங் கருவியாகிய கண் ஒன்றாகவே இருக்கின்றது அன்றோ? )
அப்படியே ஏக பிராமண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை –
ஆனால் மனசா து விசுத்தேன,என்று பரிசுத்தமான அந்தக்கரணத்தாலே க்ரஹிக்கலாம் என்னா நின்றதே –
அத்தோடு விரோதியாதோ  என்னில்,-
நேதி நேதி என்று கிரஹிக்கலாம் அத்தனை ஒழிய (இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,)
என்று அறிந்தால் அறியலாமன்றி,)ஈத்ருக்தயா இயத்தயா (இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’)
என்று பரிச்சேதித்து கிரஹிக்கப் போகாது என்கை –
முதலிலே ஞான விஷயம் அன்று என்னில் துச்சத்வம் வருமிறே —
அணுத்துவத்தை கிரஹிக்குமா போலே -(எங்கும் பரந்து )விபுத்வத்தை கிரஹிக்கப் போகாது இறே

பொறி உணர்வு அவை இலன்-‘
பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்
யம் ஆத்மா ந வேத–யம் ப்ருதிவீ ந வேத -(‘எந்த இறைவனை உயிர் அறியாதோ, எந்த இறைவனைப் பூமி அறியாதோ’ )
என்கிறபடியே -இவ்வோபாதி ஜீவாத்மா ஸ்வரூபத்தில் விலக்ஷணன் என்றதுவும் என்கை –
ஜாத் யந்தன்( பிறவிக்குருடன் )பதார்த்த தர்சனம் பண்ணிற்று இலன் என்பதுக்கும்-
கண்ணில் வைசத்யம் கண்டிலேன் என்பதுக்கும் -காணாமை இருவருக்கும் ஒக்கும் இ றே
அப்படியே அசித் விலக்ஷணன் என்றவோபாதி சித்த விலக்ஷணன் என்றதுவும் -என்கைக்காகச் சொல்லுகிறது –

இப்படி உபய விலக்ஷணனனாய் இருக்குமாகில் அவனைப் பிரதிபத்தி பண்ணும் படி என் என்னில்
இனன் –
ஏவம்விதன் என்னும் அத்தனை –
உக்தத்தைச் சொல்லவுமாம் –
வஹ்யமாணத்தைச் சொல்லவுமாம் ‘‘எப்படிப்பட்டவன்?’ என்னில்
உணர் முழுநலம் –
உணர் என்று ஞானம்; நலம் – என்று ‘முழு’ என்பதனை இரண்டோடும் அன்வயித்து –
கட்டடங்க ஞானமுமாய், கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
இத்தால், ஸ்வரூபத்தில் அப்ரகாசமாயாதல் -அநநுகூலமாயாதல் இருக்கும் இடம் இல்லை என்கை –
அன்றிக்கே
ஆனந்தமாவதும் ஞானத்தின் விசேடம் ஆகையால், ஆனந்தத்தைக் கூறிய போதே ஞானத்தையுங் கூறியதாக முடியும்;
ஆதலால் –இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே –
என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடி
யதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் –
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்பத்துன்பக் கழி நேர்மை, ஒடியா இன்பப் பெருமையோன்’ என்பது இவருடைய திருவாக்கு.
கடியும் நாற்றமும் இரண்டும் பரிமளம் -சர்வ கந்தத்துக்கும் உப லக்ஷணம் /ஆலை -மது -சர்வ ரசத்துக்கும் உப லக்ஷணம் /-
பூவில் கந்தத்தையும்-அவை தன்னிலும் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களைக் கழித்து
ஸ்திரமாக்கிச் சேர்த்துப் பார்த்தால் சிறிது ஒப்பாம் என்னுமா போலே சில ஓர் உபமானத்தாலே அறியில் அறியலாமத்தனை;
தன்னையே இழிந்து அறியப் போகாது என்றபடி. முதற்பொருளே சிறப்புடைத்து.-
முழு உணர்வாய் முழு நலமாய் இருக்கும் -கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும் –
அனுகூல ஞானமே யாகிலும் ஆனந்தமாவது பிரித்து விவஹரிக்கக் கடவதாயே இருக்கும் இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்
‘சித்து, அசித்து, ஈஸ்வரன்’ என்னும் தத்வ த்ரயமே யாயிற்று நம் தரிசனத்துக்கு உள்ளது
அதில் சித்த விலக்ஷணன் என்னும் இடம் முன்பே சொல்லிற்று -இங்குச் சொல்லுகிறது என் என்னில்
‘திரள ஒப்பு இல்லையாகில், ஒரு வகையாலேதான் ஒப்பு உண்டோ?’ என்னில் அதுவும் இல்லை என்கிறார்,-என்றுஅருளிச் செய்வாரும் உளர்.
அவ்வாறு அன்றி, பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம இல்லை
என்கிறது இங்கு என்று அருளிச்செய்வார். –
வைதர்மய த்ருஷ்டாந்ததுக்கு உதாஹரணம் -ந பரேஷு மஹவ்ஜச் சலாதப குர்வந்தி மலிம்னுசா இவ –
(சிறந்த போர் வீரர்கள் பகைவர்கள் விஷயத்தில் திருடர்களைப் போன்று வஞ்சனையாகக் காரியங்களைச் செய்யமாட்டார்கள்,) என்பது

எனன் உயிர் –
இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;
இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே
இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும்
சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –
மிக்காரை யுடையான் அல்லன்
தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –
தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே -(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’)
என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்- என்று அருளிச்செய்கிறார்.

‘மனனகம் மலமற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவிலன், பொறியுணர்வு அவையிலன்,
எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன், உணர் முழுநலம், இனன் எனன் உயிர்’ என்று அந்வயம்
அன்றிக்கே
‘எனன்’ உயிரானவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: