ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி
விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்
ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய
முதல் அத்யாயம் –
ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்
—————————–
ஸ்ரீ அதிகரண சாராவளி –562-ஸ்லோகங்கள் –26 ஸ்லோகங்கள்-அவதாரிகை
545 ஸூத்ரங்கள் –156 அதிகரணங்கள் –4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் –
விஷயம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
சித்தாந்தம்
பிரயோஜனம்
செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி,
செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை.
சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ?
प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545.
அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.
——————
ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து-முதல் ஸ்லோகம்
கிமபி- சத் பிரசாதம் -சாசனம் -யதிபதி
ஸ்ரீ ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து -ஸ்ரீ அரங்கனுக்கு மங்களம் -ராஜ தானி அன்றோ –
வேதாந்தாச்சார்யார் -சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் -நீர் கொடுத்த விருதுக்கு ஏற்று அருளச் செய்யப் போகிறேன்
கடைசியிலும் -பாஞ்ச ஜன்யம் கொண்டு என்னை இத்தை செய்யச் செய்ய அருளினான் என்பார்
திவ்ய மங்கள ஸ்வரூபம் வேறு பாடு இல்லையே
சேஷ ஸாயினே –ஸ்ரீ நிவாஸே -பாஷ்ய காரர் அருளிச் செய்தது போல் –
விஸ்வஸ்மின் நாம ரூபாணி அநு விஹித வதா தாவன் தத்தாம் வேதாந்தச்சார்ய சம் ஞானம் அவஹித பஹு வித்
ஸ்ரீ மதி சாசனம் -அவன் ஆஜ்ஜை -அவன் அன்றி ஒரு அணுவும் அசையாதே -த்வத் ப்ரஸாதே
யதிபதி சதிதம்–வாதங்களை வென்று சாதித்த ஸ்ரீ பாஷ்யம் சாரம்
ஸத்யம் -சித் அசித் யம் -தத்வ த்ரயம் -விகாரம் இல்லாத பர ப்ரஹ்மம் –
———
ஸ்வாமி அருளிச் செய்தவற்றையும் -அர்த்தாத் சித்தமானவற்றையும் விவரிக்கப் போகிறேன்
திடம் -கம்பீர ஸ்ரீ ஸூக்திகள் –
ஆச்சார்ய வந்தனம் அடுத்து
ஸ்ரீ மத்யாம் –கைங்கர்ய ஸ்ரீ மிக்க -வாத்ஸ்ய வரதாச்சார்யர் -நடாதூர் அம்மாள் –
எங்கள் ஆழ்வான் -கொல்லங் கொண்டான் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் -தினவடைய சொல்லுவான் சோழியான் –
அப்புள்ளார் ஆர்த்ய ராமானுஜாச்சார்யார் –
அனுபதி -நிருபாதிக கடாக்ஷம் -உபாதி இல்லாமல்
சம்யக் கடாக்ஷம் -ஞானக்கண் -முக்கண் அஷ்ட கண் சஹஸ்ர கண்களும் சத்ருசம் இல்லையே
சர்வம் சஹத்வம் -அனைத்தும் தாங்கும் தன்மை பெற்றேன்
நிசித்யா -புத்தி கூர்மை -கற்பூர புத்தி உடனே -ஆனாலும் திடம் -கரி போல் நிலைத்து –
வேங்கடேச -கண்டாவதாரம் -க்ருத்ய -செய்யப்பட்டது
———–
முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்
1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –
2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை
3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்
4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்
——-
545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்
1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்
1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்
1-1-4-ஸமன்வய அதிகரணம்
1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்
1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்
1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –
1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா
1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-
1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –
1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-
இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –
அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –
சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –
—————–
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—
Leave a Reply