ஸ்ரீ தேசிகர் திரு உள்ளம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் –

ஸ்ரீ நாத உபஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபிருபசிதம் யாமுனிய ப்ரபந்தைஸ் த்ராயம் சம்யக்
யதீந்த்ரை ரிதமகிலதம கர்சனம் தர்சனம் ந -என்கிறபடியே
நம்மாழ்வார் திருவருளால் சகலார்த்த விசேஷங்களையும் நிதி பெற்றால் போலே பெற்று வாழ்ந்த ஸ்ரீ மன் நாத முனிகள்
அனுசந்தித்துக் கொண்டு இருந்த சத் சம்பிரதாய அர்த்தங்களை மணக்கால் நம்பி வழியாக லபிக்கப் பெற்ற ஆளவந்தார் –
அவ்வர்த்த விசேஷங்களைத் தம்முடைய திவ்ய கடாக்ஷம் மூலமாகவும்
பெரிய நம்பி திருமலை நம்பி திருக் கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டான் முதலான
ஸ்வ சிஷ்ய வர்க்க மூலமாகவும் எம்பெருமானார் பக்கலிலே தேக்கி அருள-

அவை எம்பார் ஆழ்வான் -பட்டர் –நஞ்சீயர் நம்பிள்ளை முதலான ஆச்சார்யர்கள் வழியாகவும்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -கிடாம்பி ஆச்சான் -எங்கள் ஆழ்வான் -நடாதூர் அம்மாள் -முதலான ஆச்சார்யர்கள் வழியாகவும்
பிரவஹித்து அஸ்மதாதி சம்சார சேதன சமுஜ்ஜீவன சாதனங்களாக விளங்கி வாரா நின்றன –

இவர்கள் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் ஆகையால் இவர்கள் திவ்ய ஸூக்தி காலிலே அர்த்த பேதம் காண அவகாசம் இல்லை
ஸ்வல்ப யோஜனா பேதம் கண்டால் காணலாம் அத்தனை -நற்கதி பெற நசை இரு கலையாருக்கும் துல்யம்
முக்கிய சாதனம் ஈஸ்வர ப்ரவ்ருத்தி அல்லது ஸ்வ ப்ரவ்ருத்தி அன்று என்பது தென்னாச்சார்யர்களது கொள்கை
நம்முடைய பிரவிருத்தியினால் தான் நாம் பேறு பெற முடியும் என்பது மற்றையோர்களின் கொள்கை -இதுவே தலையான பேதம்

மற்ற பேதங்கள்
1-பகவத் கிருபை நிர்ஹேதுகம் -என்றும் -அவர்கள் சஹேதுகம் என்றும்
2-சேதனனைப் பெறுவது பகவல்லாபம் -ஈஸ்வரனைப் பெறுவது சேதனனது பேறு
3-பரகத ஸ்வீ காரமே ஸ்ரேஷ்டம் -ஸ்வகத ஸ்வீகாரமே தான் உள்ளது
4-பிரபத்தி அநு பாயம் -பிரபத்தி உபாயமே

5-பிராட்டிக்கு புருகாரத்வம் மாத்திரமே உள்ளது உபாயத்வம் இல்லை -பிராட்டிக்கு புருஷகாரத்தோடு மோக்ஷ உபாயத்வமும் உண்டு
6-பிராட்டிக்கு அணுத்துவமே உள்ளது -பிராட்டிக்கு விபுத்வமே உள்ளது
7-பிராட்டிக்கு ஜகத் காரணத்வம் இல்லை -பிராட்டிக்கு ஜகத் காரணத்வம் உண்டு

8-தயை என்பது பர துக்க அஸஹிஷ்ணுத்வம் -தயை என்பது பர துக்க நிவாகரத்வம்
9-வாத்சல்யம் தோஷ போக்யத்வம் -வாத்சல்யம் தோஷ நிவாகரத்வம்
10-பிரபன்னனுக்கு விகித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் -விகித விஷய நிவ்ருத்தி அவர்ஜனீயம்
11-எம்பெருமானுடைய வியாப்தி பரிசமாப்ய வர்த்தித்தவம் -எம்பெருமானுக்கு பரி சமாப்ய வர்த்தித்தவம் கிடையாது
12-ஜாதி நசிக்கும்-ஜாதி நசிக்க மாட்டாது
13-உபயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம் -உபயாந்தரங்கள் ஸ்வரூப அநு ரூபமே
14-கைவல்ய மோக்ஷம் புநரா வ்ருத்தி அற்றது -கைவல்ய மோஷத்துக்கு புநரா வ்ருத்தி உண்டு
15-நமஸ்காரத்தில் ஸக்ருதா வ்ருத்தி -அஸக்ருன் நமஸ்காரம் வேண்டும் போதும்
16-அத்ருஷ்டார்த்த அனுஷ்டானம் என்று தனியே இல்லை -அத்ருஷ்டார்த்த அனுஷ்டானம் தனிப்பட ஆவஸ்யகம்

———-

1-நிர்ஹேதுக பகவத் கிருபை –
சர்வமுக்தி பிரசங்கம் வரும் என்று ஆஷேபம் -அதிகாரி விசேஷங்கள் இடத்திலே தானே செய்து அருளுகிறார் –
ஸ்ரீ தேசிகரும் -பரமபத சோபானத்தில் -அஞ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ராசங்கிக சாமான்ய புத்தி மூல
ஸூக்ருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி -என்று அருளிச்ச செய்தார்
இதில் வியாஜமாகக் கொண்டு என்றதையும் சகியாமல் அவ்யாஜ கிருபையையும் அருளிச் செய்து போந்தார்
பொருமா நீள் படை -1-10-ஆறாயிரத்தில் இல்லாத நிர்ஹேதுக கிருபா பிரபாவம் -பட்டர் நிர்வாகம் –
இத்தையே ஸ்ரீ தேசிகரும் திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே அருளிச் செய்கிறார்

த்ரிபாத் விபூதியில் பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க –என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய்
என் அடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமா போலே
சிலவற்றை ஏறிட்டு மடி மாங்காய் இட்டு –ஜென்ம பரம்பரைகள் தோறும் யாதருச்சிகம் ப்ராசங்கிகம் ஆநு ஷங்கிகம் என்கிற
ஸூஹ்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு இன்றைப் பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும்-என்ற
ஆச்சர்ய சூர்ணிகையை அநவரதம் ஸ்ரீ தேசிகரும் சிந்தை செய்து போந்தவர் என்று அறியும் படி அன்றோ இவர் ஸ்ரீ ஸூக்தி கள்

—————

2-சேதனனைப் பெறுவது ஈஸ்வரனுக்கு பேறு –
சாஸ்திரங்கள் மேல் எழ பார்க்கு பொழுது ஈஸ்வரனை-ப்ராப்யன் என்றும் -சேதனனை ப்ராப்தா என்றும் சொல்வதாகத் தோன்றும் –
தேசிகருக்கும் சேதன லாபம் ஈஸ்வரனுக்கு பேறு என்பதே திரு உள்ளம்
ஸ்ரீ கீதா பாஷ்ய தாத்பர்ய சந்திரிகையில் -மன் மனா பவ -விவரணத்தில் –
ஆஸ்ரித சம்ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே -என்று அருளிச் செய்கிறார்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -மூன்று தடவை -அவனது பசி முக்தாத்மாவால் தீரும் என்பது ஸ்பஷ்டம் –
மஹாத்மா ஸூ துர்லபம் -என்று அன்றோ அவனது வார்த்தையும் –
ப்ரஹர்ஷயாமி -ஆனந்திக்கப் போவது எப்போது என்கிறார் ஆளவந்தாரும்
தன்னுடைய அனுபவத்தால் ஈஸ்வரனுக்கு பிறக்கும் ஹர்ஷமே இறே சேதனனுக்கு பிராப்யம் –
ஞானினம் லப்த்வா -ஸ்ரீ தேசிகரும் இதற்கு வியாக்யானம் –
ரஹஸ்யார்த்தங்களை அதிகரித்து ஆழ்ந்த அர்த்தம் அறிபவர்களே ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தேசிகர் -குருபரம்பரா சாரத்தில் எம்பெருமானார் திருக் கோஷ்டியூர் நம்பி பக்கலிலே
ரஹஸ்யார்த்தங்களை அதிகரித்தனர் என்னால் சிஷித்தார் -என்கிறார்
ஆழி சூழ் உலகை எல்லாம் பரதன் ஆழ நீ போய்த் தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய புனல்கள் ஆடி ஏழு இரண்டின் ஆண்டு வா என்று பேச இழிந்து
இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ என்று வெறுத்து எழுத்தாணியை யம் ஏடுகளையும் கட்டி வைத்து கண் உறங்க கனவில் –
காகுத்தன் காட்டவே கண்ட கம்பர் -ஒப்பதே முன்பு பின்பு வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா –
அப்படிப்பட்ட தேசிகர் உருகி உள் கனிந்து வெளியிட்ட அர்த்த விசேஷங்கள் ஆச்சார்ய பரம்பரை
இடையறாமல் தொடர்ந்து வந்தர்களுக்கு அன்றோ தோற்றும் -நவீனருக்குத் தோற்றாதே
இடையறாதத் தொடர்பு வந்து இருந்தால் அன்றோ இத்தகைய அர்த்தச் சுவைகளில் அபி நிவேசம் உண்டாகும்

———————————-

3-பரகத ஸ்வீகாரமே ஸ்ரேஷ்டம்
மர்க்கடகி சோர நியாயம் -மார்ஜாரகி சோர பியாயம் –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அரிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
ஸ்ரீ கீதையில் -8-14- அநந்ய சேதாஸ் சததம் யோ மாம் ஸ்மரதி நித்யச -தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந —
ஞானீ து ஆத்மய்வ மே மதம் -அறிவார் உயிரானாய் -அவனுக்கு நான் ஸூலபன்-என்பதற்கு
ஸ்ரீ பாஷ்யம் -என்னோடு எப்போதும் கூடி இருக்க விருப்பமுடையவனுக்கு எளிதாக அடையத் தகுந்தவன் நான் –
அவன் பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் -அவனைப்பிரிந்து தரித்து இருக்க மாட்டாதவனாய் -நானே அவனை வரிக்கிறேன் –
ததாமி புத்தி யோகம் -என்னை அடைய உபாசனத்தின் பரிபக்குவ நிலையையும் –அதற்குள்ள பிரதிபந்தகங்களை போக்கியும் –
என்னிடத்தில் அதீத ப்ரீதி -முதலியவற்றையும் நானே அளிக்கிறேன்
இது பரகத ஸ்வீ காரத்தை தெளிவாக்க காட்டி ஸ்வ கத ஸ்வீ கார பற்றாசை நன்றாக கழிக்கிறது –
இத்தலையில் விளைவது எல்லாம் அவனது கிருஷீ பலம் அடியாகவே தானே –
தாத்பர்ய சந்திரிகையிலும் சேதனன் தலையிலே ஒன்றையும் நினையாமல் அனைத்தும் பரமாத்மா தலையிலே வைத்து
இது அதிவாதம் அன்று -உபநிஷத் ஸித்தமான அர்த்தம் -நாயமான-இத்யாதி ஸ்ருதி -வாக்கியம் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -பற்றும் பற்று அன்று -எம்பெருமான் தானே பற்றுவித்தான் –
அவன் கிருஷி பலம் தானே –

—————————————–

4-பிரபத்தியும் உபாயம் அன்று –
ந்யாஸ சாதக ஸ்லோகம் -ஸ்வ சப்தம் ஒன்பதில் கால் அருளிச் செய்து தேசிகர் சேதனனுடைய பிரயத்தனம்
நாற்றம் வேர் அற அறுக்கப்பட்டமை ஸ்பஷ்டம் –
எம்பெருமானையே உபாயமாக அத்யவசிக்குமதுவே பிரபத்தி -இது எங்கனம் தன்னிடத்தில் உபாயத்வ புத்தியை ஸஹிக்கும் –
பிரபத்தி என்னும் வாஸ்து சித்திக்கும் பொழுதே அதனது அநுபாயத்வமும் தெரிய தீரும் என்பதை
நியாய சித்தாஞ்சனத்தில் ஜீவ பரிச்சேதத்தில் காட்டி அருளுகிறார் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -பிரபத்தி விதிக்கப்பட்டு இருப்பதால் உபாயம் என்று சொல்லலாமோ என்னில் –
இதில் இதர அபேக்ஷ உபாயத்வம் -அன்றோ விதிக்கிறான்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –
ஸ்வீ காரம் தானும் அவனாலே வந்தது -ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணின கிருஷி பலம் -என்ற ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யருடைய
ஸ்ரீ ஸூ க்திகளுக்குச் சேர ஸ்ரீ தேசிகரும் -நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண —
சேதனன் தலையிலே சிறு நாற்றத்தையும் சஹியாத அறவே துடைத்து ஒழிக்கும் ஸ்ரீ ஸூ க்திகள் அன்றோ இவை
புழு குறித்தது எழுத்து ஆமாபோலே -அது வளைந்து செல்லும் பொழுது ஏதோ எழுதினால் போலே தோன்றுமே
அதே போலே -உப நிபாதிந=தன்னிடம் யாதிருச்சிகமாக வந்து சேருமவர்களான-ந =நம்மை /
பாதி = இயற்கையான இன்னருளாலே குளிரக் கடாக்ஷித்து ரஷித்து அருளுகிறார்
ரஹஸ்ய த்ரய சாரத்துக்கு அடுத்து சாதித்த சாரசாரம் -19-ரஹஸ்ய கிரந்தம் –
இதில் -இப்படி விதேயமான பிரபதனத்தை சிலர் அதிகாரி விசேஷணம் -சம்பந்த ஞான மாத்திரம் -அசித் வியாவ்ருத்தி மாத்திரம் –
சைதன்ய க்ருத்யம் -சித்த சமாதானம் -என்றால் போலே சொல்லுமதுவும் -இவ்விதிக்கும் இத்தை விஸ்தரிக்கும் சாஸ்திரங்களும்
இவற்றுக்குச் சேர்ந்த உபபத்திகளுக்கும்-நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண -இத்யாதி வாக்யங்களுக்கும்
அநு குணமாக வேண்டுகையாலே
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் என்று நிற்கிற நம்மை சர்வேஸ்வரன் ரஷிக்கிற இடத்தில்
வந்து அடைந்தேன் என்று நாம் பண்ணுகிற அற்பமான வசீகரண யத்னம்-அதுவும் அவனது இன்னருளே –
இசைவித்து என்னை -இத்யாதிகளில் படியே அவன் தானே காட்டி ப்ரவ்ருத்திப்பித்ததொரு வியாஜ்யம் மாத்திரம் யன்றோ
என்று சித்த உபாய பிரதான அனுசந்தானத்தில் தாத்பர்யம் –

——————————————

5/6/7-ஜகத் காரணத்தவம் மோக்ஷ பிரதத்வம் விபுத்வம் -பிராட்டி விஷயம்
ஸ்ரீ யாதவாப்யுதயம் -3-ஸ்லோகத்தில் -சி கண்டகம் நிஷ்ப்ரதிமம் ஸ்ருதீ நாம் ஸ்ருங்கார லீலோபம விஸ்வ க்ருத்யம்
அதீயதே தன் மிதுனம் ஸ்வ பாவாத் அந்யோன்ய ஜீவாதும் அநந்ய போக்யம் –என்பதில்
ஸ்ருங்கார லீலோபம விஸ்வ க்ருத்யம்-ஸ்ருங்கார லீலாவத் அநாயாச ஸாத்ய-விநோத ரூப -ஜகத் ஸ்ருஷ்ட்டி சம்ஹார க்ருத்யம் –
இந்த ஸ்லோகத்தில் மட்டும் மிதுனம் சப்தம் -முன்னும் பின்னும் பிராட்டியை மட்டுமே குறித்து ஸ்லோகங்கள் –
ஸ்ரீ ஸ்துதியிலும் -யத் சங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்ய மீஷாம் ஜென்ம ஸ்தேம ப்ரலய ரஸநா ஜங்கமா ஜங்கமா நாம்
தத் கல்யாணம் கிமபி யமினாம் ஏக லஷ்யம் சமாதவ் பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீ பாத லாஷார சங்கம் -என்று
ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலான பூர்வர்கள்
ஆப வர்க்கிக பதம் சரவஞ்ச குர்வன் ஹரி –
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே –இத்யாதிகளை பின்பற்றியே அருளிச் செய்தமை ஸ்பஷ்டம்
ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரத்திலும் -பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரத்தில் –
ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன -ஜகத் காரணத்வ -மோக்ஷ பிரதத்வ -சர்வ ஆதாரத்வ –
சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ -சர்வ சப்த வாச்யத்வ -சர்வ வேத வேத் யத்வ -சர்வ லோக சரண்யத்வ –
சர்வ பல பிரதத்வ -லஷ்மீ ஸஹாயத்வாதிகள் -பிரதி நியதங்கள் என்று அருளிச் செய்யப்பட்டது –
இதில் ஜகத் காரணத்தவம் முந்துறச் சொல்லி லஷ்மீ ஸஹாயத்வத்தைச் சொல்லி இருக்கையாலே
இவை ஸ்ரீ லஷ்மீயினிடத்தில் அசம்பாவிதம் என்றதாயிற்று –
இவை -விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே -என்ற இடத்து ஸ்ருத பிரகாசிகையிலே –
ஜகத் காரணத்வ மோக்ஷ பிரதத்வே ஹி ராஜ்ஞ சத்ர சாமரவத் ப்ரஹ்மண அசாதாரண சிஹ்னம்-என்று அருளிச் செய்து இருப்பதைப் பின்பற்றியதே
முனி வாஹன போகத்தில் ஆதி -என்னும் இடத்துக்கும் இப்படியே –
நியாய சித்தாஞ்ச ஜீவ பரிச்சேதத்திலும் -சில்லரை ரஹஸ்யங்களிலும் இப்படியே –
அவற்றில் ரஹஸ்ய ரத்னாவளியில் –ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனும் சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம் –
சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வாலப்ய அதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சம் ஆகிறாள்
இப்படி நிஸ் சந்தேகம் இல்லாமல் பல இடங்களிலும் இவர் தாமே அருளிச் செய்துள்ளார்
சதுஸ் ஸ்லோகி மூன்றாவது ஸ்லோக பாஷ்யத்தில் -மோக்ஷ பிரதே பகவதி முமுஷானாம்-கடக தயா ஏஷ திஷ்ட தீதி சர்வ சம்மதம் என்று
எம்பெருமான் தான் மோக்ஷம் அளிப்பவன் -அத்தைப் பெறுவிப்பவளாக மாத்திரம் பிராட்டி இரா நின்றாள்
பிராட்டிக்கு புருஷகாரத்வம் உண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வம் உண்டு என்று வாய் திறக்க வழியே இல்லையே
இவளோடு கூடிய வஸ்துவினுடைய உண்மை -ஸஹ ஸ்ரீ லஷ்மீகனான சர்வேஸ்வரனுக்கே சாம்ராஜ்யம் சம்மதமான பின்பு
தனித்து பிராட்டியைப் பிடித்துக் கொண்டு மன்றாட இடம் இல்லையே
நியாய சித்தாஞ்ச வியாக்யானத்தில் -ஸ்ரீ ரெங்கராமாநுஜ ஸ்வாமி -பிராட்டியை
ஜீவ கோடியில் சேர்ந்தவளாகக் கொள்ளில் விரோதம் இல்லை –
ஆக பிராட்டிக்கு அணுத்துவம் ஒழிய விபுத்வம் இல்லை என்பதே தேசிகர் பக்ஷமும் –

———————————–

8-தயை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் -பர துக்க துக்கித்வம் –
எம்பெருமானுக்கு பர துக்க நிராகரண இச்சை இல்லை என்று யாருமே சொல்லார் -அது சாமான்ய குணம் ஒழிய விசேஷ குணம் இல்லையே
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க -கரைந்து ஏங்குவதே நல்ல குணம்
குண பரிவாஹ ஆத்மாநாம் ஜன்மானாம்–திருக்குணங்களை வெளியிட்டு அருளவே திருவவதாரங்கள் –
தயா சதகத்தில் -சம்சாரிகளை நோக்கி எம்பெருமான் ஜாத நிர்வேதன் ஆகிறான் -என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –

————————-

9-வாத்சல்யம் தோஷ போக்யதா ரூபம்
வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை யுடையாய் —அழுக்கு உடம்பை போக்யதா புத்தி கொண்டமையை
செஞ்சொற் கவிகாள் -காட்டி அருளியது ஸ்வ ஜன தனு க்ருத அத்யாதரம் -என்று
ஆழ்வார் விஷயத்தில் மட்டும் நில்லாமல் ஆழ்வார் அடியார்கள் அளவிலும் அவனது விருப்பம் செல்வதை தேசிகன் அருளிச் செய்கிறார்
என்னுடைய ஹேயமான சரீரத்தில் நீ எப்படி வஸிக்கிறாய் என்று கேளாமல்
பலாப்பழத்தை மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும்
வண்டுகள் தண் தாமரையின் தேனை மொய்த்து கொண்டு கிடக்குமா போலேயும்
பரம ஆதாரம் காட்டிக் கொண்டு கிடக்கிறாயே இது என்னே என்று வியந்து தேசிகரும் தம் அளவில் காட்டியத்தை அருளிச் செய்கிறார்-
கட உபநிஷத் -2-4-12–ந விஜூ குப்சதே -மூலத்துக்கு -வெறுப்பு இல்லாதே இருக்கிறான் -என்று மட்டும் சொல்லாமல்
வாத்சல்யாதிசயாத் -என்று அதற்கு காரணம் வியாக்யானம்
எற்றே தன் கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ —
ஸஹஸ்ரநாம வத்ஸல -திரு நாமத்துக்கு பட்டர் பாஷ்யம் இத்தையே விவரிக்கும்

——————————-

10-விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்
உத்தம அதிகாரி லக்ஷணமாக ஸ்ரீ வசன பூஷணத்தில் மூன்று சூரணைகள் உண்டே
ஸ்ரீ கீதை -7-29—தே ப்ரஹ்ம தத் விது க்ருத்ஸ்ன மத்யாத்மம் கர்மசாகிலம் -என்றதும்
கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம –என்று -8-1-/2-ஸ்லோகங்களில் அர்ஜுனன் கேட்க
பூத பாவோத் பவ கரோ விஸர்க்க கர்ம ஸம்ஜ்ஜித–தெரிந்து கொள்ளப்பட வேண்டியும் நல்லது அன்று கேட்டது விடத்தக்கது –
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி -இத்தை ஸ்த்ரீ புருஷ சம்யோகம் -க்ருஹஸ்தா தர்ம கர்மமே யாகிலும் விசிஷ்ட அதிகாரிக்கு
ஜுகுப்ஸநீயமே -சதசம்ப்ரதாய சித்தாந்தம் -தாத்பர்ய சந்திரிகையும் இத்தையே விவரிக்கும்

—————————

11-எம்பெருமானுடைய வியாப்தி பர்சமாப்ய வர்த்தித்தவம் –
உள்ளும் புறமும் அனைத்திலும் -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதி –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் –
அதி ஸூஷ்மமாய் இருந்த அசித் வஸ்துக்களிலும் வியாபித்து அவற்றின் உள்ளே பிரகாசிக்கிற சித் வஸ்துக்களிலும்
ஸ்தூலமான அண்டத்தில் வியாபித்தால் போலே அநாயாசத்தாலே அங்குசிதனாய்–ஆறாயிரப்படி –
வியக்திகளில் ஜாதியானது பரிசமாப்யமாக வர்த்திப்பது போலே ஜல பரம அணுவிலும் அதி விசாலமான
ப்ரஹ்மாண்டத்திலே இருப்பது போலே நெருக்குண்ணாமல் நிறைந்து இருக்கிறான் –
நியாய சித்தாஞ்சனத்திலே -ஸர்வத்ர பூர்ண ஏவ-
அணுவில் உள் இல்லையே -பூர்வ பக்ஷம் -ஒன்றிலே பரிசமாப்தமாக வர்த்தித்தால் மற்று ஒன்றில் இருக்காதே என்பதும் பூர்வ பக்ஷம்
க்ருஸ்த்ன ப்ரஸக்திரித்யாதி -பூர்வ பக்ஷ சூத்ரம் /
ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத்–சித்தாந்த சூத்ரம் மூலமாகக் கொண்டே விவாத விஷயம் உபஸம்ஹாரம் –
அகடிதகடநா சமர்த்தனால் முடியாதது ஒன்றுமே இல்லையே

—————————————————

12-ஜாதி நசிக்கும் –
மோஷார்த்தமாக ப்ரஹ்ம விதியையே வித்யை ஆகும் -மற்றவை செருப்பு குத்த கற்ற கல்வி போன்றதே
ஜாதி -ஆஸ்ரமம் -கல்வி -ஒழுக்கத்தால் -உதகர்ஷம் -பக்தி என்னும் பெரும் செல்வம் இல்லாத போது பயன் இல்லையே –
பாகவத உத்தமர்கள் க்வசித் க்வசித் என்று ஆரோ இடங்களில் தோன்றுகை அசம்பாவிதம் இல்லையே –
அன்னவர் திறத்தில் நாம் பிரதிபத்தி குன்றாமல் இருக்க வேணுமே –
இத்தை சிஷிக்கவே பல இடங்களிலும்–அருளிச் செயல்களிலும்-ஸ்ரீ வசன பூஷணம் –ஆச்சர்ய ஹிருதயம் -ரஹஸ்ய த்ரய சாரம்
இத்தை அருளிச் செய்து போயினர் நம் முன்னோர்

————————————————

13-உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம்
அத்யந்த பரதந்த்ரராக இருக்கவே நம் பூர்வர்கள் ஞான சக்தாதிகளால் பூர்ணராக இருந்தாலும் உபசானாதிகளை
அப்ராப்தம் என்று விட்டார்கள் -ஸ்வரூப விரோதம் என்று விட்டால் தானே மறுவலிடாது ஒழியும்
இத்தை ஸ்வாமி தேசிகரும் -யாவதாத்ம நியத த்வத் பரதந்தர்ய உசித -என்று காட்டி அருளுகிறார்
பக்தி முதலாம் அவற்றில் பதி எனக்கு கூடாமல் -அடைக்கலப்பத்துச் செய்யுள் –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கும் அதிகாரிக்கு அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு சேராதே –

—————————————

14-கைவல்ய மோக்ஷம் பற்றி –
மீட்சி இல்லாத ஒன்றே என்பது தான் சம்ப்ரதாயம் -ஸ்தோத்ர ரத்னம் –போகாபவர்க்க ததுபாயகதீ-என்பதற்கு
பெரியவாச்சான் பிள்ளை கைவல்யம் அபவர்க்க பதமாகவும் தேசிகர் போக பதமாகவும் கொண்டு வியாக்யானம்
கீதா பாஷ்யத்தில் பஞ்சாக்கினி வித்யா நிஷ்ட கேவலனுக்கு -ப்ரஹ்மாத்மக ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூப உபாசனத்தையும் –
ப்ரக்ருதி வியுக்த ஆத்மஸ்வரூப அவாப்தி ரூப பலத்தையும் அர்ச்சிராதி கத்தியினால் பரமபத பிராப்தியையும்
புநரா வ்ருத்தி இல்லாமையையும் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ பாஷ்யத்திலோ கேவலனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்றது தத் க்ரது நியாயத்தைப் பற்றி –
ப்ரஹ்மாத்ம ஸ்வ ஆத்ம உபாசனத்துக்கு ஏற்ப பலனாக விசேஷண தயா ப்ரஹ்மத்துக்கு ப்ராப்யத்வம் தேறுகையாலே
ப்ரஹ்ம பிராப்தி சொன்னது பொருந்தும் –
பிரதானமாய் இருக்க வேண்டிய ப்ரஹ்ம அனுபவம் அப்ரதானமாய் ஆத்ம அனுபவமே பிரதானமாய் இருக்கையாலே
அன்றோ கைவல்யம் ஆகிறது

———————————————–

15-ஸக்ருத் பிரணாமத்தைப் பற்றி
ஒரு கால் நமஸ்காரத்தாலே ஸ்வ நிகர்க்ஷமும் பர உத்கர்ஷமும் தேறும்
சாஸ்திரத்தில் ஒற்றைக்கையால் நமஸ்கரிப்பது அபசாரம் என்று சொல்லி இருப்பது போலே
ஒரு கால் மட்டும் நமஸ்காரம் அபசாரம் என்று சொல்லப்பட வில்லை –
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் -ப்ரணம்ய உத்தாய உத்தாய புந புந ப்ரணம்ய –தொழுது எழுந்து எழுந்து மீண்டும் தொழுது என்பது
ஒரே இடத்தில் இருந்து செய்பவற்றை சொல்ல வில்லை
எம்பெருமானைக் கிட்டும் அளவும் காலால் நடந்து செல்லாமல் தெண்டன் இட்டுக் கொண்டே வழியைக் கடந்து அணுக வேண்டும்
நித்ய கிரந்தத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸக்ருத் நமஸ்காரம் அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னம் -21-நமோ நமோ -என்பதை சாசன அலங்காரம் என்றே வியாக்யானம்

————————————————-

16-அத்ருஷ்டார்த்தம் என்னும் சரணாகதி அனுஷ்டானத்தைப் பற்றி –
சமாஸ்ரயணம்–ஆச்சார்யரால் பெரும் பேறுகளுக்கு எல்லாம் ஸூசகம்
ஆச்சார்யனால் க்ருதக்ருத்யனாய் செருவிக்கப் பெருக்கையே சமாஸ்ரயணம் -பகவத் ஆஸ்ரயணித்தில் பர்யவசிக்கும்
தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம அமீ பரம ஸம்ஸ்காரா பாரமைகாந்த்ய ஹேதவே
ஸ்ரீ மத் ரஹஸ்யத்ரய சாரம் -க்ருதக்ருத்யாதிகாரத்தில்-அநாதி காலம் ஆஞ்ஞாதி லங்கனம் அடியாக யுண்டான
பகவத் நிக்ரஹத்தாலே சம்சரித்துப் போந்த நமக்கு அவசர பிரதீக்ஷையான பகவத் கிருபை அடியாக யுண்டான
சதாசார்ய கடாக்ஷ விஷயீ காரத்தாலே வந்த த்வய உச்சாரண அநுச்சாரணதாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்த பின்பு
சரண்ய பிரசாதங்களிலே இதுக்கு மேல் ஓன்று இல்லாமையால் நிக்ரஹ ஹேதுக்களை எல்லாம் க்ஷமித்துத்
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல சர்வ சேஷியான ஸ்ரீயப்பதி தன் பேறாகத் தானே ரஷிக்கும் என்று
தேறி நிர்ப்பரனாய் இரு என்கை -இது மாஸூச என்கிற சரண்யா வாக்யத்திலும் தீர்ந்த பொருள் அன்றோ –
நியாஸ திலகத்திலும் ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதா வலிப்தே-என்று அருளிச் செய்கிறார்
ஞான ஹீன சிஷ்யன் குருடன் போலே -ஆச்சார ஹீன சிஷ்யன் நொண்டி போலே
இப்படிப்பட்ட சிஷ்யன் ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடைய குருவை அடைந்தே புருஷார்த்த சித்தி பெற வேண்டும்
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்ய -என்று ராஜசேவை பண்ணின அமாத்யன் சந்ததியார் பலனை அனுபவிக்கும் பொழுது
ராஜாவின் முகத்தை பார்த்து இருக்க வேண்டியது இல்லை அன்றோ –
தாம் அமாத்யனுடைய சந்ததியே என்னும் இடத்தை மூதலிக்க வேண்டியது ஓன்று தவிர வேறு ஒரு கிருத்யமும் இல்லை யன்றோ சந்ததியாருக்கு

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: