ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக பிரபத்தி –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –

———————————————-

பத்து ஸ்லோகங்கள் கொண்ட -ஸ்வாமியின் திருவடிகளின் பெருமையை சொல்லும் பிரபந்தம் –

வித்வந் மதங்க ஜஸிகா பரணாய மானவ் விஸ்வாதி சாயி மஹி மாம்பு நிதான பூமவ்
வித்வேஷி வாதி மகுடீக்ருத குட்டநவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -1-

வித்வான்களுக்கு சிரோபூஷணம் -ஓத்தார் மிக்கார் இலையாய பெருமைக்கடல் –
பரமதவாதிகள் தலைகளை குட்டும்-ஸ்வாமி திருவடிகளை சரணம் அடைகிறேன் –

விஸ்வம்பராம் அதிதராம் அபி பாசயந்தவ் வின்யாசதோ விவித ஸஜ்ஜன தானுபாவ்யவ்
விஸ்தார ஸம்ஸ்ருதி மஹார்ணவ கர்ண தாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -2-

திருவடி ஸ்பர்சத்தாலே பூமிப்பரப்பு அனைத்தையும் புனிதமாயும் -நல்லோர்க்கு அனைத்து சுற்றமாயும் –
பிறவிக்கடல் கடத்தும் ஓடகாரன் போன்ற ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன் –

விஸ்வ அந்தராந்த தமஸ ஷபண ப்ரவீணவ் வித்யோதமான நகரேந்து மயூகா ஜாலை
விக்யாத தாமரச சங்க ரதாங்க சின்கவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே –3-

திரு நகங்களில் தேஜஸ் அந்தகாரங்களைப் போக்குமதாய்-புருஷோத்தம லக்ஷணங்களான –
தாமரை சங்கு சக்கர லஞ்சனைகள் பொருந்திய திருவடிகளை சரணம் அடைகிறேன் –

வித்வேஷமான மத மத்சர வித்விஷவ் யவ் விஷ்ண்வாலயா அநுக மனோத்தம நித்ய க்ருத்யவ்
வேதாந்த வ்ருத்த விஹித அஞ்சலி கோசரவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -4-

த்வேஷம் அஹங்காரம் குலப்பிறப்பால் வரும் கர்வம் அசூயை அனைத்தையும் போக்குமதாய் –
உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு போவதே கர்தவ்யமாக கொண்ட திருவடிகளை –
ஞானிகள் அனைவரும் வணங்கும் திருவடிகளை -அடியேன் சரணம் புகுகிறேன் –

விஷ்ண்வர் பிதாத் மஜன பாக்ய விபாக பூதவ் விப்ராஜமான நவகோக நாதனுகல்பவ்
வேஷாந்தரோ பகத பல்லவ தல்லஜவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –5-

பர ந்யாஸம் பண்ணின பாக்யவான்களின் புண்யபலமாயும் -விளங்கும் செவ்விய ஆம்பலைப் போன்றதும் –
சிறந்த தளிர் வேற்று உருவம் கொண்டதாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளைத் தஞ்சம் என்று அடைகின்றேன் –

வேதோ முகைரபி ஸூரைஸ் விஹித பிராணாமவ் வேலாதி லங்கி ஸூஷூமா ஸூ குமார பாவவ்
விஸ்மேரே கேஸரே ல சந்ம்ருது ளாங்குலீ வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –6-

பிரம்மாதி தேவர்களும் தொழுமவையாய் -ஒப்பற்ற அழகு மார்த்வம் யுடையவையாய் –
அழகிய கேசரங்கள் போன்ற மெல்லிய விரல்களை யுடையவையாய் யுள்ள ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன்

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணவ் தவ் விக்யாத பூரி விபவேன ரஜஸ் கணேன
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –7-

திருவடித்த துகளாலே ரஜஸ் போக்கி ஜகாத் அனைத்தும் உய்யும்படி தோன்றிய
ஸ்வாமி திருவடிகளில் அடைக்கலம் புகுகிறேன் –

விஷ்ண்வங்க்ரி நிர்கத சரித் ப்ரவரானுபாவ்யவ் வித்யா வினீத ஜனிதைர் விமலைர் ஸ்வ தீர்த்தைர்
வ்யா நம்ர சிஷ்ய ஜன ரக்ஷண ஜாக ரூகவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –8-

முக்குணம் அற்ற சிஷ்யர்களாலே சேர்க்கப்பட்ட ஸ்ரீ பாத தீர்த்தத்தால் -கங்கையில் புனிதமானவையும்
சிஷ்ய ரக்ஷணத்தில் கண்ணும் கருத்தமாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளே சரணம் –

வீதீ ஷு ரங்க நகரே க்ருத சங்க்ர மவ் தவ் விஷ்ணு உத்ஸவேஷூ விதி வாசவ ஸேவிதேஷூ
வித்யா வினீத ஜனதா விஹித அநு சாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே-9-

பிரம்மாதி தொழும் ஸ்ரீ ரெங்க நாதன் திரு வீதிகளில் எழுந்து அருளும் பொழுது அநு யாத்திரையாக எழுந்து அருளுவனவாயும்
முக்குறும்பு அறுத்த பாகவதர்களால் பின் தொடரப்படுமவையாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளை சரண் அடைகிறேன் –

விஸ்வாச விஷ்ணு பத பக்தி விரக்தி சூன்யம் விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு சக்தம்
வித்வத் சபா அநு கதி யோக்ய மிஹா ததானவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -10-

மஹா விஸ்வாசம் பூர்வகமாக பக்தி வைராக்யம் இல்லாமல் -ஸாஸ்த்ர விஹத கர்மாக்களை செய்யாமல்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட அடியேனையும் வித்வத் சபைக்கு யோக்யனாக ஆக்கி அருளும்
ஸ்வாமி திருவடிகளைச் சரணம் அடைகிறேன் –

——————————–

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: