ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிகா தினசர்யா –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –

———————————————-

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -சாண்டில்ய ஸ்ம்ருதி -இவற்றில் பஞ்சகால பராயணர்கள் –
அபிகமனம்-உபாதானம் -இஜ்யை -ஸ்வாத்யாயம் -யோகம் -ஆகிய அனுஷ்டானங்களை –
23-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் – புத்ரராயும் சிஷ்யராயும் அந்தரங்க அடிமை செய்த ஸ்வாமி

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்துப் போக்கினேன் போது -திருமழிசைப்பிரான்-

காஞ்சீ புரி யஸ்ய ஜென்ம பூமி விஹார பூ வேங்கட பூதரேந்த்ர
வாஸஸ் தலீ ரங்கபுரீ தமீட்யம் ஸ்ரீ வேங்கடேசம் குரும் ஆஸ்ரயம–1-

பெருமாள் கோயிலில் அவதரித்து திருமலையிலே விளையாடி
கோயிலிலே நித்யவாஸம் செய்யும் குருவை வணங்குகிறேன் –

சம்பாவனா யஸ்ய ஹி கால கூட சபா புஜங்கீ குணபம் தருண்ய
ஸ்யாத் ரௌரவம் ராஜக்ருஹம் ச ஜீயாத் சிரம் குரு வேங்கடநாத நாமா -2-

புகழ்ச்சியே விஷம் -வீண் வாதிகளே பாம்பு -யுவதிகள் பிணம் -அரண்மனை ரௌரவ நரகம் -என்று
வைராக்யம் விஞ்சிய ஆச்சார்யருக்கு பல்லாண்டு –

ய ப்ராதரப் யேத்ய ஹரிம் ஸூசீனி த்ரவ்யாண் யுபாதாய ஸூசி க்ருதேஜ்ய
ஸ்வாத்யாய யுக்தோ நிசி யோக ரூபாம் நித்ராம் ஸ்மாரோஹதி தம் நதா ஸ்ம -3-

அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத்யாயம்-யோகம் -பஞ்சகால பராயணராக ஸ்வாமி அனுஷ்டித்து
ஆத்மகுணங்களை வளர்த்து -ஷோடச ஆராதனங்கள் நித்யம் செய்து -சாத்வீக புராணங்களை அனுசந்தானம் பண்ணி –
பகவத் தியானமே காலக்ஷேபமாக செய்பவர் -என்றதாயிற்று –

யாமே துரீயே யதவாக் ரஜன்யா விஹாய சயாம் விஹிதாங்க்ரி ஸூத்தி
யோ அத்யாதரேண ஆஸ்தித யோக சேஷ தம் வேங்கடேசம் குரும் ஆஸ்ரயாம-4-

இரவில் நான்காவது யாமத்தில் படுக்கையை விட்டு எழுந்து திருவடிகளைச்
சோதித்துக் கொண்டு உள்ளன்புடன் யோகத்தை முடிக்கும் ஸ்வாமி –

ததோ அனுசந்தாய ததிம் குருணாம் தம் சாபி தேவம் ரமணம் ரமாயா
தத்கால யோக்யானி ததா விதானி ஹ்ருத்யானி பத்யானி படந்தம் ஈடே -5-

பின்பு குருபரம்பரை பூர்வகமாக ஸ்ரீயப்பத்தி சம்பந்தமான அருளிச் செயல்கள்-
உஷ காலத்துக்கு ஏற்றபடி அனுசந்திக்கும் ஸ்வாமியை வணங்குகிறேன்

உத்தாய கேஹாத் உபகம்ய ரம்யாம் கவேர கன்யாம் கலி தாங்க்ரி சுத்தி
ததோ விஸூத்யாப்ஸூ நிமஜ்ய ஸூப்ரம் வஸ்த்ரம் வசானம் தமஹம் ஸ்மராமி–6-

காவேரி நீராடி வெள்ளை வஸ்த்ரம் தரிக்கும் ஸ்வாமியை நினைக்கிறேன்

த்ருத்வ ஊர்த்வ புண்ட்ராணி ஸரோஜ பீஜ மாலாம வந்த்யாம் சமுபாஸ்ய ஸந்த்யாம்
சாவித்ரம் ஈசம் ஸவிது த்வ தர்சா ஸ்து வந்தம் ஏகாந்ததியா ஸ்துவே தம் –7-

திருமண் காப்பு -துளஸீ மணி மாலைகள் சாத்தி சந்தியாவந்தனம் -காயத்ரி மந்திரத்தால்
சூர்யமண்டல மத்யவர்த்தி பரப்ரஹ்மத்தை ஸ்துதிக்கும் ஸ்வாமியை நான் ஸ்துதிக்கிறேன்

ததஸ் ச பவ்ர்வாண்ஹிக நித்ய கர்ம நிர்வர்த்ய நித்யேஷ்ட நிவ்ருத்தி மார்க்கம்
ஸ்ரீ ரெங்க தாமோபச மேத்ய சேவா க்ரமேண ரங்கேஸ்வர பாத மூலம் –8-

முற்பகலில் செய்ய வேண்டிய நித்ய கர்மங்களை செய்து முடித்து பெரிய கோயில் சென்று
பெரிய பெருமாள் திருவடிகளில் வணங்கி நிற்பார் நம் தேசிக உத்தமர் –

ப்ராபோதி கீபி பிரதிபோத்ய கீர்பிர் ப்ரஸாத்ய தத் கத்யமுகை பிரபந்தை
ஆசாஸ்ய தன் மங்களம் ஆப்த வாக்யை ஆபாத சூடம் கலயந்தம் ஈடே –9-

திருப்பள்ளி எழுச்சி பாடி கத்யத்ரயாதி பிரபந்தங்கள் முக்கென பெருமாளை
மங்களாசாசனம் செய்து ஆபாதசூடம் சேவிக்கும் ஸ்வாமியை சேவிக்கிறேன்

தீர்த்த ப்ரசாதாதிகம் அத்ர லப்த்வா விஜ்ஞாப்ய தேவாய ததோ விஸ்ருஷ்டம்
சனை உபேத்ய ஆஸ்ரம கல்பம் ஆத்ம கேஹம் ஸூகா ஸீநம் அஹம் ஸ்மராமி –10-

தீர்த்த பிரசாதங்களை ஸ்வீ கரித்த பின்பு திருமாளிகைக்கு மீண்டும் எழுந்து அருளி
வீற்று இருக்கும் ஸ்வாமியை நினைக்கிறேன் –

வ்யாக்யான ஸாலாம் உபகம்ய சாதோ சிஷ்யான் அநன்யான் ஸ்ரவண அபி முக்யான்
ஸங்க்ராஹ யந்தம் சகலானி தந்த்ராணி அதந்த்ரிதம் தம் குரும் ஆஸ்ரயே அஹம் –11-

பின்பு காலக்ஷேப கூடத்தில் எழுந்து அருளி அநந்ய சிஷ்யர்களுக்கு சகல சாஸ்த்ரார்த்த
தாத்பர்யங்களை உபதேசித்து அருளும் ஸார்வ பவ்மரை வணங்குகிறேன் –

தா சம்ஸ்க்ருத திராவிட திவ்ய ஸூக்தீ பிரசன்ன கம்பீரதயா பிரசித்தா
தத் தத் ருசிப்ய தனயா விசேஷம் ப்ரணவ்மி தாந்தம் ப்ரதிபாத யந்தம் –12-

ருசிக்குத் தக்கபடி உபய வேதாந்த தாத்பர்யங்களை வாத்சல்யத்துடன் வழங்கும் ஸ்வாமியை வணங்குகிறேன் –

சிஷ்யை உபாதான பரை அனன்யை சமர்ப்பிதம் பக்தி புரஸ் சரம் யத்
தேநைவ ஸூத் தேன யாத உசிதேன துஷ்யந்தம் ஈடே துஷ துல்ய ருக்மம் –13-

சிஷ்யர்கள் பக்தியுடன் சமர்ப்பிக்கும் உபாதானங்களை அன்புடன் ஸ்வீ கரிக்கும் -ஸ்வாமி
உமியையும் தங்கத்தையும் ஒன்றாக கருதும் வைராக்ய நிதி அன்றோ ஸ்வாமி –

இத்தம் ஹ்யு பாதாயா ச ஸாஸ்த்ர சிஷாம் தாம் சாம்யுபாதா நாபதே நிவேஸ்ய
மாத்யாஹ்னிகம் கர்ம சமாப்ய பஸ்ஸாத் வந்தே யஜந்தம் வரதம் சதாரம்–14-

ஸாஸ்த்ர பிரவசனம் செய்த பின்பு மாத்யாஹ்னிகம் முடித்து இஜ்யையிலே
பெரும் தேவி மணாளனான பேர் அருளாளானை ஆராதிக்கும் ஸ்வாமியை வணங்குகிறேன்

அதஸ்கர க்ராஹ்ய பவித்ர பாத்ரை அநிந்த்ரிய அந்மாதகரை ஹவிர்பி
ஆராத்ய தேவம் கமலா ஸஹாயம் ஆராதயே தம் விஹித அநுயாகம் –15-

திருடர்கள் கொண்டு செல்லாத எளிய பவித்ர பாத்ரங்களாலும் இந்திரியங்களை தூண்டாத ஹவிஸ்ஸூக்களாலும்
ஸ்ரீயப்பதியைப் பூசித்து -அநு யாளம் -தான் உண்ணும் -ஸ்வாமியை பூஜிக்கிறேன் –

யாமே சதுர்த்தே நிஹதாரிவர்கம் ப்ரபந்ந நிர்மாண விலோக நாத்யை
ததா புராணாத்யவ லோகனைஸ் ச காலம் ஷி பந்தம் கலயே குரும் தம் –16-

பகலில் நான்காவது யாமத்தில் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளை அனுசந்தித்தும்
தாமே பிரபந்தங்களை நிர்மாணித்தும்
புராணங்கள் இத்யாதிகளிலே பொழுது போக்கும் ஸ்வாமியை வணங்குகிறேன்

சாயந்தனம் கர்ம சாமாப்ய பசசாத் சமேத்ய ச ஸ்ரீ வராதஹ் வயஸ்ய
சஹாந்தரங்கை குலதைவதஸ்ய சமீபம் ஆராத் ப்ரணதம் ஸ்மராமி –17-

சாயங்காலம் நித்ய கர்மாக்களை செய்து தேவப்பெருமாளை சிஷ்யர்களுடன் மங்களா சாசனம்
செய்யும் ஸ்வாமியை நினைக்கிறேன் –

ஆசாஸ்ய தன் மங்களம் அச் யுதஸ்ய தத் தத் ப்ரபந்தைஸ் ச ததீய பங்க்திம்
ஸ்துத்வை கதானம் ப்ரதிக்ருஹ்ய தீர்த்த பிரசாதம் ஏனம் க்ருதக்ருத்யம் ஈடே –18-

அந்தந்த எம்பெருமான் விஷயங்களான பிரபந்தங்களால் மங்களாசாசனம் செய்து ஆழ்வார் ஆச்சார்யர்களை
ஸ்துதித்து தீர்த்த பிரசாதங்களை ஸ்வீ கரித்து க்ருதக்ருத்யரான ஸ்வாமியை வணங்குகிறேன்

அதாந்தரங்கை உபதேவ கேஹம் அத்யாஸ்ய பீடம் சரஸை வசோபி
தேஷாம் ஸூ ஸூஷ்மார்த்த விசேஷ சிஷாம் குர்வாணம் ஈடீ மஹி வேங்கடேசம் -19-

விசேஷ ரஹஸ்யார்த்த தாத்பர்யங்களை உபதேசித்து அருளும் ஸ்வாமியை வணங்குகிறோம்

சிஷ்யான் அநுஜ்ஞாப்ய ஸூஸூஷ்ம புத்தீன் க்ருத பிரணாமான் க்ருபயா க்ருஹேப்ய
அத்யாஸ்ய ஸூத்தம் சயநீயம் அத்ர யோகாய சன்னத்தம் அஹம் ஸ்மராமி –20-

படுக்கையில் அமர்ந்து யோகம் செய்யப்புகும் ஸ்வாமியை நினைக்கிறேன்

ஹ்ருத் புண்டரீகே வரதம் சதாரம் நிவேஸ்ய தத்பாத சரோஜயுக்மே
ஆபத்த சித்தம் ஸூ ஸூ கம் சயானம் ஆராதயே தேசிகம் அஸ்மதீயம்–21-

ஹ்ருத்புண்டரீக ஸ்ரீயப்பதியை தியானம் செய்து இருக்கும் ஸ்வாமியை வணங்குகிறேன்

யோக ஸ்வரூபாம் அனுபூய நித்ராம் யாமே துரீயே பிரதிபுத்ய பூய
ஸ்வ ஸ்வாமி பாவா கலனாத்ம யோகம் பஜே பஜந்தம் குரு வேங்கடேசம் –22-

யோகரூபமான நித்திரையை அனுபவித்து நான்காவது யாமத்தில் விழித்து –
பர ப்ரஹ்ம பாரதந்த்ரரான ஸ்வாமியை வணங்குகிறேன் –

இத்யேவம் ஏதாம் இஹ ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ர வேதாந்த குரூத்தமஸ்ய
நித்ய அபிஜப்யாம் ஸூப நித்ய சர்யாம் ஜபந்தி யே தே துரிதம் தரந்தி-

பலஸ்ருதி–திரு மந்த்ரம் போலே ஜெபிப்பவர்கள் பாபங்களைக் கடக்கிறார்கள் –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: