ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ தினசர்யா -விக்ரஹ த்யானம் –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –

———————————————-

மனஸ் ப்ரஸூன ஸ்தபகம் மதீயம் நாதஸ்த கௌதூஹலம் ஆதனேது
பிபர்த்தி யோ பாகவதேஷூ சர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரேஷூ ந்த்ரோபி ச பாரதந்தர்யம் –1-

தாம் சர்வ தந்த்ர ஸ்வ தந்திரனாய் இருக்கச் செய்தே அடியார்களுக்கு பரந்தரராக இருக்கும் ஸ்வாமி தேசிகனுக்கு
அடியேன் மனமாகிற பூம் கொத்து மகிழ்ச்சியை ஊட்டட்டும்

ஸ்ரீ வாதி ஹம்ஸாம்புத தேசிகேந்த்ர பாதாம் புஜ த்வந்த்வ பராக தைவம்
ஸ்ரீ வேங்கடேசம் குரு ஸார்வ பவ்மம் சேதஸ் சிரம் பாவய சவ்ம்ய ரூபம் -2-

கிடாம்பிக் குலபதி அப்புள்ளார் இணையடித்தாமரைகளையே தைவமாகக் கொண்ட
அழகிய ஸ்ரீ வேங்கடேச வள்ளலை மனமே என்றுமே சிந்தித்து இரு

ஸ்ரீ மத் த்ரயீ சேகர தேசிகஸ்ய ஸ்ரீ வேங்கடேசஸ்ய வபு மனோஜ்ஞம்

ஆதித்ய வர்ணம் விசதம் மமாஷ்ணோ ஆபாத சூடாபதம் ஆவிரஸ்து -3-
ஸ்ரீ வேதாந்த தேசிகனுடைய ஆதித்யன் போன்ற தேஜஸ்ஸூடன் கூடிய அழகிய திருமேனி
திருவடி முதல் திருமுடி வரை தெளிவாக அடியேன் கண்களில் தோன்ற வேண்டும் –

நிர்நித்ர பங்கேருஹ யுக்ம சோபா நிராக்ருதி ப்ரவ்ட பதாப்ஜ யுக்மம்
நீரந்த்ர நிர்யன் நக சந்த்ர சந்த்ரா தப ஸ்புடத் த்யாத்ரு ஹ்ருதந்தகாரம் –4-

குவியாத தாமரை மலர்கள் இரண்டை தோற்பிக்கும் இணைத்திருவடிகள்
இடையின்றி பெருகும் திரு நகங்கள் ஆகிற சந்த்ர ஒளியால் நெஞ்சத்து இருளை போக்கி அருளுபவர் –

நிஜார்த்த சந்த்ரோபமி தால கோத்யன் நிரந்த ரோதபாசி சிதோர்த்வ புண்ட்ரம்
சிதாயத ஸ்வச்ச சரோஜ பந்தம் முனே சடாரிரேவ மூர்த்தி பேதம் -5-

அஷ்டமீ சந்திரன் போன்ற திரு நெற்றியில் -திருமண் காப்பின் அழகும்
நீண்ட திருக்குழல் அழகுடன் ஸ்ரீ நம்மாழ்வார் மீண்டும் அவதரித்தால் போலே அன்றோ தேவரீர் சேவை சாதிக்கிறார் –

முகேந்த்வத பாதி கரோத்கராக்ருதி ஸ்புடச்சவி ஸ்மஸ்ரு பரிஷ்க்ருதோ ரசம்
சிதோபவீதம் துளஸீ ஸரோருஹ அக்ஷமாலி காலங்க்ருத சாரு கந்தரம் -6-

திருமுகச் சந்த்ர காந்தி போன்ற வெண்மையான தாடி -அழகு மிக்க திரு மார்பினர் -வெண்புரி நூலினர்-
திருத் துளஸீ தாமரை மணிமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தினர்

அநங்க சவ் வர்ண நிஷங்க காந்தி பிரசங்க பங்கா வஹ சாரு ஜங்கம்
லஸத் ககுத்மத் ககுதாபிரூப்ய நிதாந்த நிர்பாசித ஜானுயுக்மம்-7-

மன்மதன் அழகை கீழே தள்ளும் அழகிய கணைக்கால்கள் -எருதின் ககுத்தைப் போன்ற முழம் தாள்கள்

ரம்பா வரஸ் தம்ப விஜ்ரும்பண துர்கர்வ சர்வங்கக்ஷ சக்தி த்ருஸ்யம்
கடீ தட ஸ்லிஷ்ட பவித்ர ஸூப்ரா அந்தரீய நிர்பாசி நிதம்ப பிம்பம் -8-

திருத் தொடைகளின் கம்பீரம் -திருவரை பீதாம்பரம் அழகு

ஆவர்த்த கர்தோஜ்வல நாபி சக்ரம் அத்யாயதோ ரஸ்தல தீப்யமானம்
ஆஜாநு லம்ப் யாயத வ்ருத்த பாஹும் அத்யுன்னதாம் சம்ஸ்ரித கூட ஜத்ரும் -9-

நீர் சுழல் போன்ற ஆழமான திரு நாபி -அகன்ற திரு மாப்பு -முழம் கால் வரை நீண்ட உருண்ட திரண்ட திருக்கரங்கள் –
உயர்ந்த திருத்தோள்கள்-மறைந்த கழுத்து எலும்புகள்

சங்க ப்ரதிஸ்பர்தி ஸூ ஜாத கண்டம் சாந்தோப மானாயித கர்ணா பாசம்
ஸூஸ் நிக்த பத்தஸ்மித சூதபோத நவ்ய ப்ரவாளோப மிதா தரோஷ்டம்-10-

அழகிய சங்கையும் தோற்ப்பிக்கும் திருக் கழுத்து / ஒப்பொன்றில்லா திருக்காதுகள் /
ப்ரீதியுடன் கூடி அமைந்த மந்தஹாசம் /மாந்தளிர் போன்ற திருப்பவளம்

ஸூ நிர்மலோ தஞ்சித மௌக்தி காலீ ஐடீ க்ருத ப்ரவ்டிம தந்த பங்க்திம்
விகாஸி நாஸாபுட காந்தி சாந்த ப்ரபுல்ல தில்ய ப்ரஸவா வலேபம்–11-

அழகிய முத்துக்களின் வரிசை தோற்பிக்கும் திருப் பற்கள் –
மலர்ந்த எள்ளுப்பூவின் கர்வத்தைப் போக்கடிக்கும் அழகிய நாசி

நாஸா லஸத் கல்ப லதா ப்ரஸூந யுகாயிதாம் போருஹ சாரு நேத்ரம்
தத் ஸவ்ர பாக்ராண விநிஸ்சலாலி த்வயோபம ப்ரூயகலாபிராமம் –12–

ஸ்ரீ தேசிகனுடைய தளர்ந்த திருமேனியை தாம் நேரிலே கண்டு அனுபவித்தத்தை அருளிச் செய்கிறார் –

ஸூ ஜாத சரணாம் புஜம் ஸூ த்ருட குல்ப சிதாந்தர கடீ தடம் ஸூபக நாபி வஷோ களம்
ஸூ தீர்கயுக பாஹுகம் ஸூபக போல நாஸா ஷிகம் மனோ ருசிர மாலிகம் கலய வேங்கடேசம் குரும் -13-

திருவடி முதல் திருமுடி ஈறாக ஒரே ஸ்லோகத்தில் அனுபவம்

ரதாங்க ஜல ஜாங்கித ஸூ லலித ஊர்த்வ புண்டர உஜ்ஜ்வல ஸரோஜ துளஸீ மணிக்ரதித மாலிகா பூஷண
சிதாம் ஸூக யு காஞ்சித ஸ்மித முகோ தயா சீதல சா காஸ்து ஹ்ருதி மே சதா ச குரு வேங்கடாதீஸ்வர–14-

திரு இலச்சினை -திருமண் காப்பு -திருத் துளஸீ மணி மாலை -திருப் பரிவட்டம் –
மந்த ஹாஸம்-தயா ஸ்வரூபத்துடன் எப்பொழுதும் சேவை சாதிக்கட்டும்

ய இமாம் தினசர்யாம் ச விக்ரஹ த்யான பத்ததிம் வரதார்ய க்ருதாம் பக்த்யா சீலயேத் முக்த ஏவ ச –15-

பல ஸ்ருதி -மோக்ஷ ஆனந்தம் இங்கேயே கிட்டும்

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: