திரௌபதி -திருநாம வைபவம் -சரணாகதி வைபவம் -ஸ்ரீ உ வே கார்ப்பங்காடு ஸ்வாமிகள் விளக்கம் —

வாஸ்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -அவன் தூரஸ்தானாலும் இது கிட்டி நின்று உதவும்
திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது -திருநாமம் இறே – முமுஷுப்படி –

திரௌபதி ஸ்நாதை யாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று
திரௌபதிக்கு பலம் வஸ்திரம் -தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம்-
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம்-என்றும்–ஸ்ரீ வசன பூஷணம் — இருப்பதனால்
பிரபத்தியினால் அடையப்பெற்ற பயன் என்று கொள்ள வேண்டி வரும் –
சித்தித்த பலம் என்று கொள்ள முடியாதே -இதனால்
அடைய விரும்பிய பலம் -என்றும் இதற்கு கொள்ளலாமோ என்னில் –
மா முனிகள் அடைய விரும்பிய பலம் என்றே கொண்டு வியாக்யானம் –

திருநாமத்தின் பலனா -பிரபத்தியின் பலனா -விரோதி பரிஹாரம் பண்ண வேண்டுமே
கண்ணனைப் பற்றும் பொழுது அவள் சங்கு சக்கர கதா பாணி -பிராட்டி முன்னாக பற்றவில்லையே –
துவரைப் பிரானை நோக்கி சங்க சக்ர கதா பாணே துவாரகா நிலயாச்யுத-கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம்-
சங்க சக்ர கதா பாணி என்னும் இடத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை -தனி ஸ்லோக வியாக்யானத்தில்-
-மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –
அப்படியே கூராழி வெண்சங்கு ஏந்தி வந்து அருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து -என்று அருளிச் செய்கிறார் –
தொழும் காதல் -போன்ற அபேக்ஷை திரௌபதிக்கு இல்லை –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய சமஜ சமாகமத்தை விரும்பி இருந்தாள் என்று கல்பிக்கலாகாது என்பர்

மீண்டும் மீண்டும் கதறி ப்ரஹ்மாஸ்திரம் கண்டா சணல் கயிறு போன்ற குற்றமும் உண்டே என்பாரும் உண்டு
அத்யந்த பக்தி யுக்தானாம் நைவ சாஸ்திரம் ந ச க்ரம-
பக்தி தன்னில் அவஸ்தா பேதம் பிறந்தவாறே மஹா விச்வாஸம் தானே குலையக் கடவதாய் இருக்கும் -என்று சமாதானம் –
கண்ணன் நேராக எழுந்து அருளி இருந்தால் பீஷ்மாதிகள் தர்ம புத்ராதிகள் போல்வாரை
நிரசிக்க வேண்டி இருக்குமே என்பாரும் உண்டு –
வஸ்த்ரார்த்தமாகவும் -என்பர் மா முனிகள்
பிரபத்தியின் அங்கமான திருநாம சங்கீர்த்தம் என்றால் விரோதி பரிஹாரம் உண்டே என்பாரும் உண்டு
துச்சாசன வதமும்-வஸ்திர வர்த்தனமும் அபேக்ஷிதம் –
ஓன்று கீதோபதேசம் முதலானவற்றை கருதி நாளடைவில் பலிக்க ஓன்று உடனே பலித்தது –
திரௌபதி ரஜஸ்வலை யாய் இருந்ததால் நேராக சேவை சாதிக்க வில்லை
எம்பெருமானை பற்றும் பற்றுதல் பிரபத்தி-என்று கொண்டு –
பிரபத்தியில் திரு நாமத்தை ஒரு அங்கமாக கூற முடியாதே என்பாரும் உண்டே –

ஆதி மூலமே என்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முன் வந்து இடர் தொலைத்து நீல மேகம் நின்றானே
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் -என்று வருந்தினானே-

ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ர வாயுந –ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்று கலங்கச் சங்கம் வாய் வைத்ததும்
ஆழி கொண்டு அன்று இரவி மறைத்ததும் -கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப்போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்ததும்-எல்லாம் இவளுக்காக இறே

இவளுக்கு வஸ்திர வர்த்தனமும் சத்ரு சம்ஹாரமும் அபேக்ஷிதம் –
அந்த க்ஷணம் தன்னிலே நேர வேணும் என்று அபேக்ஷித்தது அன்று –
கால க்ரமேண கிடைக்கக் கூடியவற்றையே பிரார்த்தித்தாள்–
கனைத்து உதாரர் கொடுக்கப் பெறாமல் படுமா போலே —
ஆஸ்ரிதர் கார்யம் செய்யப்பெறா விட்டால் -ருணம் ப்ரவர்த்த மிவ -என்னுமா போலே ஈஸ்வரன் –
திரௌபதியின் பொருட்டு தூது சென்று-தேருமூர்ந்து -கீதோபதேசம் செய்து -துர்யோதனாதியரை அழித்து –
பாண்டவர்களுக்கு இராஜ்யப்பிராப்தியைப் பண்ணிக் கொடுத்ததும் ஒன்றும் செய்ததாகத் தோன்றவில்லையே
அவன் திரு உள்ளத்திலே -நேரில் சென்று ஆபத்துக்காலத்தில் உதவப் பெறவில்லையே என்ற
குறையே குடி கொண்டு இருந்தது –

அலமன்னு மடல் சுரிசங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணியாருருவில்
புலமன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடு வாளமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே —
ரக்ஷமாம் -என்ற இடத்தில் இந்த பெரிய திருமொழி பாசுரத்தை எடுத்துக் காட்டி க்ரமேண நேர வேண்டும் என்று
அபேக்ஷித்தத்தையே காட்டும் என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்

ரக்ஷமாம் சரணா கதாம் -என்பதால் சரணாகதி செய்தமை ஸ்பஷ்டம்
ரஷித்தவன் எம்பெருமான் அல்லன் திரு நாம சங்கீர்த்தனம் தான் என்பது சமத்காராதிசயம் தோன்றவே ஒழிய
அர்த்தத்தில் விசேஷம் ஒன்றும் காணலாகாதே –
எம்பெருமானைப் பற்றும் பற்றுதலுக்கும் உபாயத்தன்மை இல்லையே
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருள் –
திருநாம சங்கீர்த்தனோடே சேர்ந்த பற்றுதலாகிற பிரபத்தி முக்கியமான சாதனமும் அன்று -பயனை அளிப்பதும் அன்று –

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்/ நல்ல நெஞ்சே உன்னைப்பெற்றால் என் செய்யோம் -இத்யாதிகளில்
அசேதனமான நெஞ்சு அன்றோ -நெஞ்சு ஞானப்ரசுர துவாரம் -என்பதால் அன்றோ –

பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த –என்கிற இடத்தில்
நாஹம் களே பரஸ் யாஸ்ய த்ராணார்த்தம் மது ஸூதந கரஸ்த கமல அந்யேவ பாதயோர் அர்பிதும் தவ
பூவில் செவ்வி அழியாமல் திருவடிகளில் இடக்கருதி அது பெறாமையால் வந்த இடர் ஒன்றும்
முதலையால் இடப்பட்டதும் உண்டே
ஆபத்சகன் என்று இருந்தோம் நிர்குணனாய் இருந்தானே என்று நாட்டார் பழிக்கும் படி-என்று
அத்தாலே வரும் இடர் என்றும் உண்டே
ஹ்ரீ ரேஷாஹி மமாதுலா-என்று பெருமாள் தண்டகாரண்ய ரிஷிகளுக்கு முற்பாடானாக வந்து ரஷிக்க வில்லையே என்று
வருந்தினால் போலே ருணம் ப்ரவர்த்தமிவ -என்று கிருஷ்ணனும் –
அவள் தனக்கு அடுக்கும் படி செய்தாள்-நான் அவதரித்தே அவதார பிரயோஜனம் பெற்றிலேன் –
நம் பேர் இக் காரியம் செய்தது இத்தனை போக்கி இவளுக்கு நான் ஒன்றும் செய்யப் பெற்றிலேன்-என்று திரு உள்ளம் புண் பட்டான்

வேங்கடங்கள் தாங்கள் தங்கட்க்கு –வேங்கடத்து உறைவார்க்கு நாம எண்ணலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
இதர விஷயங்களில் விரக்தராய் கைங்கர்ய ருசி யுடையராய் இருக்குமவர்கள் —
இப்படிப்பட்ட ருசி யுடையார் இருக்கும் தங்கட்க்கு தங்கள் ஸ்வரூபத்தோடே சேந்த
கைங்கர்யத்தையே பண்ணுவார் -ரஹஸ்யார்த்த புஷ்டியான பங்க்திகள்
திரௌபதியை இவ்வகை அதிகாரிகளுடன் ஒருங்கப் பிடித்து அன்றோ வியாக்கியானங்கள்

ஸ்ரீ வசன பூஷண திரு நாம சூரணையில்–சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை
ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் என்னில் -நாம் அன்று -ஈஸ்வர என்று கேட்டு இருக்கையாய் இருக்கும் –

அந்யஸ்யாபி தீர்த்தாதே பவித்ரத்வம் தத் சம்ஸ்லேஷா யத்தம் தர்சயதி -பரமம் மஹத் -இதி விசேஷணாப்யாம் –
நகலு ஸ்வபாவ மலிநாநாம் சேதநா நாம் தது பஹுதா நாம் தேவாதீ நாம் -ஸ்வ சத்ருச வஸ்த்வந்த்ர சோதகத்வம் யுக்திமத் –
அத ஏவ பராசர சவ்நகாதிபி சுபாஸ்ரய பிரகரணாதிஷு தத் சம்சீலநம் நிஷித்யதே -அசுத்தாஸ்தே சமஸ்தாஸ்து தேவாத்யா கர்மயோ நய-
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்த ஜகதந்தர் வ்யவஸ்திதா பிராணிந கர்ம ஜெனித சம்சார வசவர்த்தின
இத்யாதிஷு தத்ர தேவதா நாம் பாவானத்வம் தத் உபாசன அர்ச்சனை பாதோதக சேவாதி நா பிரசித்தம் –
தீர்த்தாயதநாதே தத் சமீப்யாத் யதா கங்காயா வைஷ்ணவே-விஷ்ணு வாம பதாங்குஷ்ட விநிஸ்ருதஸ்ய ஜலஸ்யை தன் மஹாத்ம்யம் –
இதி விஷ்ணோர் ஆயதனம் ஹ்யாப ச ஹ்யபாம் பதிருஸ்யதே-
இதி ஜலமாத் ரஸ்ய ச காலஸ்யச ததவதார தத்தைவஸ்ய தச்சயனோத்தான வத்வாத் த்வாதசீ ஜயந்தீ ஸ்ரவணாதி வத் தத் சம்பந்தாத்
ஆத்ம குணாநாம் ஸமாதீ நாம் தஜ் ஞான அநு குண்யாத் கிரியாணாம் ச யஞ்ஞா தான தப ஸ்ராத்த ப்ரப்ருத்தினாம்
ததாராத நத்வாத் ப்ராஹ்மணாதி ஜாதி தத் பரவே தாத்யய நாதவ் சாஷா ததிகாராத் யதா
விஷ்ணும் க்ராந்தம் வாஸூ தேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வ மாப் நுயாத் தத்வ தர்சீ –
இதி ஸ்ருதி ஸ்ம்ருத்யாதே தத் பரத்வாத் தச்சாச நத்வாச்ச
நாராயண பரா தேவா
ஸ்ருதி ஸ்ம்ருதீ மமை வாஜ்ஞா
இதி ஆரண்யகே தீர்த்த யாத்ராயாம்
புண்யா த்வாரவதீ இத்யுபக்ரம்ய
ஆஸ்தே ஹரீர சிந்த்யாத்மா தத்ரைவ மது ஸூதந
தத் புண்யம் தத் பரம் ப்ரஹ்ம தத் தீர்த்தம் தத் தபோவனம் இதி தத் சம்பந்த ஹேதுகம் தேசஸ்ய பாவ நத்வம் அபிதாய
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே புண்யானாம் அபி புண்யோ சவ் –
இத்யேவமேவ ஸ்பஷ்டம் நிகம்யதே –ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்

பரம் மஹத் பவித்ரம் அன்றோ இவன் -இடது திருவடி கட்டை விரலில் இருந்து புறப்பட்ட கங்கை மஹாத்ம்யம் –
அபாம் பதி/ நீருக்கு ஸ்வாமி என்றபடி /
காலத்துக்கும் அவனாலே பவித்ரத்தன்மை -சிரவணம் த்வாதசீ ஸ்ரீ ஜயந்தீ -இத்யாதி /
அவன் சம்பந்தத்தால் சமதமதாதி ஆத்மகுணங்கள் பெறுவோம் –
யாகம் தானம் தவம் அவன் முக விகாசத்துக்கு உறுப்பாவதாலேயே பாவானத்வம் –
எங்கும் பரந்துளன் -வேதாத்மா ஞானத்தால் ப்ராஹ்மண்யம் சித்திக்கும் /
வேதங்களும் அவனைச் சொல்வதாலேயே பவித்ரமாகும் /
கோயில் திருமலை பெருமாள் கோயில் உகந்து அருளின நிலங்களும் அவன் சம்பந்தத்தால் பாவானத்வம் பெறுகின்றன –
ஸ்வயமேவ பவித்ரன் கோவிந்தன் ஒருவனே -என்றவாறு

பல பிரதத்வம் -பல காரணத்வம் இவனுக்கு இரண்டு ஆகாரங்கள் –
வர்ணாஸ்ரம த்ரய அனுரூப உபாயாந்தரங்களுக்கும் -ஸ்வரூப அனுரூப பிரபத்திக்கும் -இவனே பலன் தர வேண்டும்
தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் சரணமாகும் அன்றோ -உபாயமாகப் பற்றும் பற்றுதலும் உபாயம் அன்று-
பிரபத்தியின் பயனாகவே வஸ்திரம் பெற்றாள்-என்பது தெளிவாகும் –
பற்றுதல் அதிகாரி விசேஷணம் என்பதை -தனக்கு அடிமைப்பட்டது தான் அறியா னேலும் மனத்தடைய வைப்பதாம் மாலை –
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரியார் பெய்கிற்பார் மற்று -என்று பூதத்தாழ்வார் அருளிச் செய்கிறார்-
நாம் செய்யும் நல்ல செயல்கள் அவனது ஸ்வ பாவிக இன்னருளைத் தாங்கிக் கொள்ள உறுப்பாவதற்கே என்றவாறு

கோலின பலம் வஸ்திரம் என்றே கொள்ள வேண்டும் –
பிராட்டி சக்தியை விட்டாள் -திரௌபதி லஜ்ஜையை விட்டாள்
இரு கையையும் விட்டேனோ திரௌபதியைப் போலே -என்னக் கடவது இ றே
பேர் அளவு உடையளாகையாலே-பிராட்டிக்கு பெருமாளே ரக்ஷகர் என்று விஸ்வஸித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம்
அத்தனை அளவு அன்றி இருக்கச் செய்தே மஹா ஆபத்து தசையில் இவ்வளவிலே கிருஷ்ணனே ரக்ஷகன் என்று
மஹா விச்வாஸம் பண்ணி மஹா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இ றே அரிது
ஸ்வ யத்தனத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கிக் கொள்ளப் பார்த்தாலும் நோக்கிக் கொள்ளுகைக்கு
ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் இவளுக்கு உண்டே
கற்பு உடையவளாகவும் தெய்வத்தன்மையும் இருந்தாள் சுட்டு எரித்து இருக்கலாம்
கர்ணன் இடம் உள்ள விருப்பத்தை -ஷஷ்டோபி மம ரோஸதே -என்றும் அர்ஜுனன் இடம் உள்ள பக்ஷபாத காதலை –
பக்ஷபாதோ மஹா நஸ்யா விசேஷேண தனஞ்சய -என்றும் உண்டே
ஆகவே சக்தி இல்லை என்றது -இச்சை இருந்தமையை சொல்லும் –

திரௌபதியைப் போலே இரு கையையும் விட்டேனோ என்று விலக்ஷணர்களான பிரபன்னர்களும்
நைச்சிய அனுசந்தானம் பண்ணிப் போம்படி யன்றோ அவளுடைய சரணாகதியின் பூர்த்தி இருப்பது –
அதிகாரி விசேஷ்யம்–ஆத்மஞானமும் அப்ரதிசேஷதமும் –
ததேக சேஷத்வம் -ததேக ரஷ்யத்வம் -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய நிவ்ருத்தி –
பகவத் பிரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி
தனக்கு அடிமைப்பட்டது -ஆத்ம ஞானம்
அப்ரதிஷேதம் -பிரதிபந்தக அபாவம்
பலத்துக்கு ஆத்மஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது -ஸ்ரீ வசன பூஷணம் -60-
இருக்கையையும் விட்டதே அப்ரதிஷேதம்
ச சால சாபம்ச முமோச வீர -வெறும்கை வீரன் போலே
செயல் அற்ற நிலையே சரணாகதி ஆகுமோ –
ஆத்மஞானம் உண்டோ திரௌபதிக்கு என்னில் –
ததேக சேஷத்வம் -பர சேஷ அதிசய ஆதேன-
ததேக ரஷ்யத்வ ஞானம் -இருந்தால் தானே பூர்ண சரணாகதி ஆகும் –
இவளுடைய பரிபவம் கண்டு இருந்தது கூட சரண்யனுடைய அபிப்ராயத்தாலே நஷாமிக்கு இலக்கான தோஷம் என்றும்
அதுக்கு இலக்காமை அன்றிக்கே அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -என்னும்படி அன்றோ இவளுடைய சரணாகதியின் பூர்த்தி –

இதன் உண்மைக்கருத்து பூர்ண சரணாகதி பலனாக அவன் செய்த கார்யம் என்பது இல்லை –
சரணாகதியைச் செய்த திரௌபதி தான் கோரின பயனைப் பெறவில்லை —
அந்த ஆபத்துக் காலத்தில் கோரின பயனைத் தான் அளிக்கப் பெறாமையால் வருத்தமுற்ற கண்ணன்
பிற்காலத்தில் அவளுக்காக தூது போதல் தேரோட்டுதல் ஆகிய இழி தொழில்களைச் செய்தான் –
பிரபத்தியை உபதேசம் செய்தான் -என்பதே உண்மைக் கருத்தாம் –
இவளுக்காக இ றே -கலங்கச் சங்கம் வைத்ததும் -ஆழி கொண்டு அன்று இரவி மறைத்ததும் —
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்ததுவும் –
ரக்ஷமாம் -ரஷிக்கை யாவது -விரோதியைப் போக்குகையும் -அபேக்ஷித்ங்களைக் கொடுக்கையும்
சரணா கதாம் -இவளுக்கு வஸ்தர வர்த்தனமும் -சத்ரு சம்ஹாரமும் அபேக்ஷிதம் –
ரஷிக்கை -விரோதியைப் போக்குகையும் அபேக்ஷிதத்தைக் கொடுக்கையும் –
இவை இரண்டும் சேதனர் நின்ற நின்ற அளவுக்கு ஈடாக இருக்கும்
அவள் குழலை விரித்து இருந்த வரலாறு துச்சாதன வதம் அந்த ஆபத்து காலத்தில்
அவள் விரும்பிய முக்கிய பலம் என்பதை காட்டிற்றே –

அத்தை பிள்ளை சம்பந்தம் -அக்னி குண்டலத்தில் இருந்து உண்டான கௌரவம் -ஸ்நேஹம்-பிரபுத்தன்மை–
நான்கு காரணங்களாலும் உன்னால் ரக்ஷிக்கத்தக்கவள் நான் என்றாள்
எல்லிப்பகல் என்னாது -எப்போதும் -உறக்கம் இல்லாமல் பாண்டவர்கள் கார்யம் செய்து திரிந்து –
அது தலைக்கட்டின பின்பும் -ருணம் பிரவர்த்தம் -என்று புண் பட்ட பின்பும் -தான் உறங்காதவன் அன்றோ –
கோவிந்தா என்ற சொல்லோடே அவள் முன்னே நிற்கப் பெற்றிலோம் அவதார பிரயோஜனம் எல்லாம் பெற்றிலோம் -என்று
இருந்த படிகள் எல்லாம் அறிந்தோம் இ றே–அம்பரமே –இத்யாதி பாசுரத்தில்
உறங்காது எழுந்திராய் -பகுதிக்கு -அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம்
ஈட்டிலும்-வைகல் பூங்கழிவாய் பிரவேசத்தில் -திரௌபதி ஆழ்வாருக்கு ஒப்புமை சொல்லி –
இதர தர்ம ஆபாசம் இல்லாதவள் என்று காட்டி அருளுகிறார்
வசிஷ்டர் உபதேசம் மூலமே இவள் சரண் அடைந்தது என்றும் ஈட்டில் உள்ளதே –
மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –
இங்கு மஹதி ஆபத் -தன்னாலும் பாண்டவர்களாலும் போக்க முடியாத ஆபத்து –
பகவான் பூர்ணன் புருஷாத்தமன் நாராயணனே ரஷிப்பான்-என்பதைக் காட்டவே பகவான் ஹரி —
ஹரதீதி ஹரி -ஸ்வா பாவிகமாக துன்பம் தீர்க்கும் ஆற்றல் –

நானும் நிறையும் கவர்ந்து –ஈடு வியாக்யானத்தில் -அங்கு கோணைகள் செய்து -கோணை -மிறுக்கு-
நானும் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்க்க கடவன் —
அவன் காலிலே குனியக் கடவேன்
ருணம் பிரவர்த்தமிவ என்னும்படி தொட்டு விடக் கடவேன்
சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா -என்று புண்படும்படி பண்ணக் கடவேன்-
பிள்ளை தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்றார் இறே
திரௌபதி பரதன் போன்ற நிலை ஆழ்வாருக்கு இங்கு என்றவாறு –
ஆகவே இவள் சரணாகதியும் ஸ்ரீ பரத்தாழ்வான் சரணாகதி போன்று உடனே பலிக்க வில்லை என்றதை காட்டியதே
அத்யைவ அபி ஷஞ்சஸ்வ-இப்போதே திரு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும் -என்று அன்றோ பரதன் அபேக்ஷிதம்
ஆகவே முன்பு சொன்ன சமாதானம் பலித்த படி
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்துக் காண மாட்டான் இ றே –
இத்தால் ஆஸ்ரிதரைப் பரிபவித்தரோ பாதி அது கணு இருந்தாரும் நிரசநீயார் யாவார் என்னும் இடமும்
அவர்கள் தாங்களே ஆஸ்ரிதற்கு விட ஒண்ணாத பந்தம் உடையாராகில்
அவர்களுக்காக ரக்ஷிக்கப்படுபவர் என்னும் இடமும் பிரகடிதமாயிற்று
ந யோத்ஸ்யாமி -என்று இருந்தவனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி யுத்த ப்ரவர்த்தன் ஆக்குகைக்காக
இவை எல்லாம் செய்தது -சரணா கதையான இவள் சங்கல்பத்தின் படியே
துர்யோத நாதிகளை அழியச் செய்தது-இவள் குழலை முடிப்பிக்கைக்காக இ றே
ஆக இவளுடைய பரிபவம் கண்டு இருந்தது கூட சரண்யனுடைய அபிப்ராயத்தாலே
நஷாமிக்கு இலக்கான தோஷம் -என்பது தெளிவு

பஷி பெருமாள் திரு உள்ளத்தை புண் படுத்திய விருத்தாந்தம்
கபோதேன
சாஸ்த்ராதிகளாய் விவஷிதரான நாம் விசாரியா நின்றோம் -ஒரு திர்யக் அனுஷ்ட்டித்து நின்றது –
ஏக வசனத்தாலே நம்மைப் போலே விலக்குகைக்கு பரிகரம் இல்லாமையாலும் –
தான் அபிமான அந்தர்பூதையான பேடை சன்னிஹிதையாய் அதிலே மூட்டுகையாலும் இறே
சரணா கத சம் ரக்ஷணம் பண்ணலாயிற்று என்று கருத்து
சத்ரு –
சத்ரு சம்பந்தத்தால் நாம் விசாரியா நின்றோம் -சாஷாத் சத்ரு விறே அவன்
பந்துக்களை அடையவிட்டு ஸ்வ நிகர்ஷ பூர்வகமாகப் புகுந்த இவனை விசாரியா நின்றோம்
தான் இருந்த நிழலிலே வந்ததுவே ஹேது வாக ரஷித்தது
அர்ச்சி தச்ச
நாம் இவனை ஸ்வீ கரிக்கையிலே சந்தேகியா நின்றோம் –
அது பூஜ்யரைப் போலே ஆராதித்தது -அதாகிறது சீதா பரிஹாராதிகளைப் பண்ணுகை
யதா நியாயம்
சத்ருவை ஆராதித்ததும் தனக்கு ஓர் ஏற்றமாக நினைத்து இருக்கை அன்றிக்கே பிராப்தம் என்று இருக்கை
சீதா பரிஹாராதிகள் மாத்ரம் பண்ணுகை அன்றிக்கே
ஸ்வைச்ச மாம்ச
பக்ஷிகளுக்கு தேகாத்ம விபாக ஞானம் இல்லாமையாலே தானான மாம்சங்களாலே
ஸ்வ சப்தம் ஸ்வரூபத்திலும் வர்த்திக்கும் ஸ்வத்திலும் வர்த்திக்கும்
பிரகிருதி ஆத்ம விவேகம் பண்ணி இருக்கிற நாம் இ றே சந்தேகிக்கிறோம்
நிமந்த்ரி தச்ச
தன்னை அழிய மாறி விருந்திட்டது

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் ச குண ஸஹ போஜனமும்
மூன்று விருத்தாந்தங்கள்
பெருமாள் -சபரி / கிருஷ்ணன் -விதுரன் / பெருமாள் -திருவடி /
ஸஹ போஜனம் – கோதில் வாய்மையினாடும் உடனே உண்பான் நான் என்ற ஒண் பொருள் –
பெருமாள் திருமேனி -இனி நாம் ஓக்க ஜீவிக்கக் கடவோம் –
இவ்வர்த்தம் –ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து -என்கிறத்தைப் பற்றச் சொல்கிறது –
ஒரு கலத்திலே உண்பாரைப் போலே சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திவ்ய மங்கள விக்ரஹம்
பரிஷ் வங்கோ ஹநூமத-அம்ருத தாசிக்குப் புல்லை இட ஒண்ணாதே –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும்
எம்பெருமான் தன்னைப் பற்றினார் ஒருவரை ரஷிப்பான் –
அவன் திரு நாமமோ ஓர் உலகு அன்றி உலகு ஏழையும் அளிக்கும்
இச்சேதனன் பண்ணின பாபங்களைப் பார்த்து -ஷிபாமி -கீழே கீழே தள்ளி விடுவேன் -என்பதுவும்
அவ்வெம்பெருமானுக்கு ஒரு போது உண்டு –
அளிக்குமது ஒன்றுமே யாயிற்று இத்திரு நாமங்களுக்கு இயல்பு –
பெரிய பிராட்டி அவன் நீர்மையை கிளப்பி விடுவாள் போன்று பிரபாவம் சொல்ல வந்தே அன்றோ –

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: