சூரணை-229 –
இனிமேல் இவர் பிரதமத்தில் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-திரு விருத்தம்-1–என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே
விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே வைக்கைக்கு
ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –
உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–
அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை
இனி யாம் உறாமை -திரு விருத்தம் -1-என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய்
திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-10-8-10–என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –
தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —
பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –
தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –
வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –
ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-
1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி வளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13-என்றும்-
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-என்றும்
4-இனி அவர் கண் தங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்றும்
(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)
இப்படி இருபதின் கால் கூப்பிடும் படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..
ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –
————————————
சூரணை -230-
அதில் இவ் ஆர்த்திக்கு அடியான -பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின் தசைகள்
எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை அருளிச் செய்கிறார்
மேல் மூன்று வாக்யத்தாலே –
அது தன்னில் பரபக்த்ய வஸ்தை இன்னது என்கிறார் இதில் –
கமலக் கண்ணன் என்று தொடங்கி
கண்ணுள் நின்று இறுதி கண்டேன்
என்ற பத்தும் உட் கண்ணலேயாய்
காண்பன வாவுதல் அதிலிரட்டி யாகையாலே
கண்டு களிப்ப வளவும் பரஞான கர்ப்ப
9பரபக்தி —
அதாவது –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் -1-9-9–என்று
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –
கண்ணுள் நின்று அகலான்-10-8-8- -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன்
என்னுமதளவாக –
என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10-
நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –4-7-7-
கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –-5-7-5-
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5–8-1
திரு விண்ணகர் கண்டேனே –6-3-1-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –-9-4-8-
கண்டேன் கமல மலர் பாதம் –10-4-9-
என்று இப்பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –
நெஞ்சு என்னும் உட் கண் -பெரிய திருவந்தாதி -28-என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –திருவிருத்தம் -84-
அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –2-4-2-
கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –3-8-8-
கோல மேனி காண வாராய் –4-7-1-
தடவுகின்றேன் எங்குக் காண்பன் –4-7-9-
பாவியேன் காண்கின்றிலேன் –4-7-10-
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-
உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-
என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-
விளங்க ஒருநாள் காண வாராய் –6-9-4-
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –6-9-6-
அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-
ஒரு நாள் காண வாராய் –8-5-1-
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே –8-5-6-
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-
என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட -20-சந்தைகள் –அதில் இரட்டி உண்டாகையாலே –
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -10-8-7–என்று
திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க –
பெற்று அன்று தரியாத -பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே –
பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —
————————————————-
சூரணை -231
அநந்தரம் பரஞான அவஸ்தை ஆகிறது இன்னது என்கிறார்–
இருந்தமை என்றது
பூர்ண பர ஞானம்–
(கீழே பர ஞான கர்ப்ப பர பக்தி தசை இது பூர்ணம் என்றபடி )
அதாவது-
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -10-9-11—என்று –
அடியார்கள் குழாங்களைக் கூடுவது என்று கொலோ -2-3-10—என்று ஆசைப் பட்ட படி –
அர்ச்சிராதி கதியாலே -தேச விசேஷத்திலே -போய் -பகவத் ஸ்வரூபாதிகளை
பரி பூர்ண அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே கூடி இருந்தாராக தரிசித்துப் பேசின –
சூழ் விசும்பணி முகில் -10-9- -பூரணமான பர ஞானம் என்கை —
——————————————-
சூரணை -232-
அநந்தரம் பரம பக்தத்யவஸ்தை இன்னது என்கிறார் —
முடிந்த அவா என்றது பரம பக்தி-
அதாவது
அப்படி தர்சித்த அது தான் மானச அனுபவமாய் -பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே –
பெரு விடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் –
திரு வாணை இட்டுத் தடுத்து -பெறா ஆணை அல்லாமை சாதித்து -பேற்றோடு தலைக் கட்டின –
முடிந்த அவாவில் அந்தாதி இப் பத்து–10-10-11 -என்கிற
முனியே நான் முகன் -10-10–பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி என்கை —
——————————
சூரணை-233-
இந்த பர பக்தியாதிகளின் வேஷத்தை பகவத் வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –
இவை
ஞான
தர்சன
ப்ராப்த்ய
அவஸ்தைகள் –
அதாவது
இந்த
பரபக்தி -பரஞான -பரம பக்தி தசைகள் –
பக்த்யா த்வய அந்ய யா சக்ய அஹமேவம் விதோர்ஜுனா
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேன ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப – ஸ்ரீ கீதை-11-54-என்று
அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் —
பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று
பிரார்த்தித்த ஸ்ரீ பாஷ்யகாரரைக் குறித்து-
மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சம்சயஸ் ஸூகமாஸ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று
சேர பாண்டியனிலும் அவன் அருளிச் செய்த ஞான தர்சன பிராப்த்ய அவஸ்தைகள் என்கை —
இத்தால் -பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராம் படியான
பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத தமமாக சாஷாத் கரிக்கிற
பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் –
அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறா விடில்
முடியும் படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப் படும் என்ற படி —
———————————–
சூரணை -234-
நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் –( 215 )-என்றதில் –
நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து –
ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இனி ஓர் ஆயிரம் என்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
(மயர்வற-அஞ்ஞாதிகள் போக்கி
மதிநலம்-ஞானாதிகள் அருளி –மதி நலம் -ஞானாதி பூர்ணம் -பக்தி ரூபாபன்ன ஞானம்
அருளினன் -பிராப்தி-பகவத் பிரசாதம் –
அதனாலேயே மோக்ஷ லாபம் -வீடு பெற்ற – – மூன்றையும் மூன்று சொற்களால் கீழே சொல்லி -ஐக அர்த்தம் –
இரக்கம் உபாயம் இனிமை ப்ராப்யம்
நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே அஞ்ஞானம் போகும் படி ஞானாதி பூர்த்தி பெற்று வீடு பெறுவோம் )
அவித்யா நிவர்த்தக
ஞான பூர்த்தி ப்ரத
பகவத் பிரசாதாத்
மோஷ லாபம் என்கை
மயர்வற -வீடு பெற்ற
என்ற பிரபந்த ஏக
அர்த்யம் –
அதாவது
சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –
சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி -அவா அற்று வீடு பெற்ற -என்று தலைக் கட்டின
இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –
இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய்
இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து –
ஆக
இப்பிரபந்தத்தால் –
சர்வேஸ்வரன் தன் கிருபையாலே –
அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசர விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-(1-15)
அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் -( 16)-
அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –(17-38-)
அந்த வியாஜத்தாலே
பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –( 39-74)-
அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –( 75-93-)
அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –(94-117)
அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் – அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –( 118-121 )
அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –(122-132-)
அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாபதேசங்களையும் – ( 133-158 )
அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –(159-186 )
அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –(187-188 )
பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –(189 )
தத் வ்யாவிருத்தியையும்-(190-194 )
இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்-
அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –(195-207 )
உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –( 208-212 )
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே
சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் – ( )
பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –
சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –( 217)-
இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –( 218 )
அக்குண விசிஷ்டனானவன் -இப்பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –( 219-228 )
இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –(229 )
இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்திகளாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும் (230-233 )
அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து
அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்-(234 )
ஆஸ்திகராய் ஸ்ரீ ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி –
அவருடைய ஸ்ரீ திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-
அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி –
அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —
நான்காம் பிரகரணம் முற்றிற்று-
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –
————————————————–
தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply