ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –228–

ஆர்த்தி ஹரத்வம் -காலம் முடிந்ததும் அர்ச்சிராதி கதிக்கு துணை-
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார்-218 –

பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –நெஞ்சுக்கு மருள் ஒழி-10-6
அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –சார்வே தவ நெறி -10-4-
முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –
ஆச்ரயணம் உபதேசம் கண்ணன் கழல் இணை -10-5-

சங்கதி –
நாள் இட்டுப் பெற்றுக் கொண்டார் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று –
வழித் துணை ப் பெருமாள் -காளமேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே -திரு மோகூர் ஆத்தன்–தாபத்ரயம் தீர்க்கும் –
மார்க்க பந்து சைத்யம் மோஹநத்தே மடு விடும் -தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –
பிறந்தவீடு –ஒரு நல் சுற்றும் போலே -கெடும் இடராய எல்லாம் -10-2-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாதிய சித்த பூ ஸூரர் அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும்
சாம்யம் அனந்த சயனத்தில் வியக்தம் –
பர உபதேசமாகவும் இந்த பதிகம் -சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாம்- நடமினோ –
பாஹ்ய சம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமல் மகள் பாசுரம் 10-3-காலைப் பூசல் -கூட இருக்கும் பொழுதே உடம்பு மெலிய –
ஆ நிரை மேய்க்கப் போனான் என்ற நினைவில் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அதுவே புருஷார்த்தம்–
என்னைக் கொள்ள வேண்டும் அதுக்கு மேலே உகக்கும் நல்லவரோடும் என் கண் முகப்பே -என்கிறார் –

சார்வே தவ நெறி -10-4-பக்தி மார்க்கம் -முற்ற சரணாகதிக்குக் கொண்டு செல்லும்
உயர்வற -பரத்வம் –வீடு முன் பஜனீயத்வம் பத்துடை ஸுவ்லப்யம்–மூன்றிலும் சொன்னதை முற்று வரிகளால் சொல்லி
இது வரை ஆழ்வார் த்வரை -மேலே ஈஸ்வர த்வரை —கிளம்பும் பொழுது சுருக்கமான சார உபதேசம் கண்ணன் கழலிணை -10-5-
எளிமையான பதிகம் உபநிஷத் அர்த்தம் -நாரணம் -சுருக்கி சொன்னாலும் பலன் –
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -16-சூரணை-பார்த்தோம் –
பழுதிலா ஒழுகல் ஆறு வேதம் பற்றுவாருக்கு வேணும்
மாதவன் என்று ஓத வல்லீரேல் -தீது ஒன்றும் சாரா ஏதம் சாராவே -த்வயார்த்தம் –
காரணந்து த்யேயா –காரணம் நாரணம் –

பெருமாள் ஆழ்வாரை தொடர்ந்து இனி –ஏகாந்த தேசம் ஸ்ரீ வைகுண்டமா திரு வாட்டாறா -பிரணவ பாரதந்தர்யம் காட்ட
அருள் தருவான் அமைகின்றன -அது நமது விதி வகையே -ஆழ்வார் விருப்பம் படி
சொல்லிக் கொள்ள யாரும் இல்லை -நெஞ்சுக்கு -பர உபதேசம் இல்லை -இது மருள் ஒழி நீ மட நெஞ்சே —
முந்துற்ற நெஞ்சுக்கு பேற்றின் கனத்தை சொல்லி ஆதரவு -தரிக்கிறார்-
பாகவத தொண்டர் -அடியாருக்கு அடியார் என்ற நிலை வந்ததும் அவன் பின் தொடர்ந்து பிடித்துக் கொள்வான்
ஆழ்வார் திருமேனியில் அத்யந்த ஆசை கொண்டு -வ்யாமோஹம் -விபரீத ஆசை –
மங்க ஒட்டு உன் மா மாயை -செஞ்சொற் கவிகாள் –திருமாலிருஞ்சோலை –10-7-
சீலம் -ஆழ்வார் சொன்னபடி செய்வதாக ஒத்துக் கொண்டு -ஆழங்கால் அறிவித்து -உபதேசம் –

அப்பால ரெங்கன்–10-8- -ஸ்வாமித்வம் காட்டி -திருமாலிருஞ்சோலை மழை என்றேன் என்ன -மனஸ் சகாயம் இல்லாமல்-
திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தான் –
இன்று வந்து இருப்பேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
திருப்பேர் நகரான்- திரு மாலிருஞ்சோலை பொருப்பே மலையில் உறைகின்ற பிரான் –
அயோத்யா நகர் -சித்ரகூடம் -பஞ்சவடி ஜடாயு மனஸ் -ஸ்தான த்ரயம்
இன்று என்னைப் பொருளாக்கி –அன்று புறம்-அமந்த்ரக உத்சவ கோஷம் போலே -அடுத்த பதிகம் 10-9-

அர்ச்சிராதி மார்க்கம் –அனைத்தையும் காட்டி –12-லோகங்கள் –சதம் மாலா ஹஸ்தா –ப்ரஹ்ம அலங்காரம் –
அவன் காட்டக் கண்டவர் –அந்யாப தேசம் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -வாயில் வைத்து இந்த பதிகம் –
நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -மானஸ அனுபவம் மாத்திரம் அல்லாமல் ப்ரத்யக்ஷ அனுபவம் கிட்டும் பலம்
முனியே -10-10–இனி இனி பலகாலமும் -இனி நான் போல் ஓட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல்-
ஆர்த்த த்வனி -நின் ஆணை திருவாணை–தத்வ த்ரயம் விழுங்கும் பேர் அவா -அவா அறச் சூழ்ந்து கூட்டிப் போக –
பிறந்தார் உயர்ந்தே –அந்தமில் பேரின்பத்து அடியாரோடும் சேர்ந்தார்
பிரமாணம் அவாவில் அந்தாதி
பிரமேயம் சர்வேஸ்வரன்
பிரமாதா ஆழ்வார்
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார்-218 –

பத்தாம் பத்தில் –

இப்படி ஆபத் சகன் ஆகையாலே –
அவ் ஆபத் ரஷண அனுரூபமாக -பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் மூல பூதமாய் –
நிரதிசய வைலஷ்ணய யுக்தமான –திவ்ய விக்ரகத்தோடே வந்து தோன்றி -தன் பக்கல் ந்யஸ்த பரரானவர்கள்
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
தன் திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலும்
படும் ஆர்த்தியை ஹரிக்கும் ஸ்வாபம் ஆனவன் –
கீழில் பத்தில் –
தம்முடைய த்வரை அனுகுணமாக நாள் இட்டுக் கொடுத்ததுக்குப் பலம் –
அர்ச்சிராதி கதியாலே-தேச விசேஷத்தில் ஏறப் போகையாலே –
அதுக்கு ஆப்த தமனானவன் தன்னை வழித் துணையாக பற்றி –
இனி பிராப்தியில் கண் அழிவு இல்லை என்று தமக்கு ஏற நிச்சயித்த இவர் –
மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளி இட வேண்டும் தசை யானவாறே –
பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –
அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –
முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –
(முதலில் -பிணக்கற அறுவகைச் சமயமும் -என்ற திருப்பாசுரத்தில் தொடங்கின பக்தி யோகத்தை –
சார்வே தவ நெறி -திருவாய்மொழியிலே முடித்தார் -என்றவாறு )
சம்சாரிகளுக்கு ஸூகரமான ஆஸ்ரயணத்தை உபதேசித்து –
அனுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு சீல குணமாகிற ஆழம் காலையும் காட்டி –10-7-
தம் பக்கல் விருப்பத்தாலே -தம் திரு மேனியிலே -அதி வியாமோகம் பண்ணுகிற ஈஸ்வரனுக்கு-அதின் தோஷத்தை உணர்த்தி –
இப்போது தமக்கு பரதந்தரனாய் -தம்மை பரம பதத்தில் கொண்டு போவதாக அத்யாதரம் பண்ணுகிறவனை
அநாதி காலம் தம்மை சம்சரிக்க விட்டு -உபேஷித்து இருந்ததற்கு ஹேது என்ன என்று கேட்க –
அவனும் இந்திரிய அவஸ்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி –
அதுவும் மதா யத்தம் என்று அறியும் சர்வஜ்ஞ்ஞரான இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று நிருத்தரனாய் –
அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உள்ளாருடைய சத்காரத்தையும்
அவ் வழியாலே போய் பெரும் -ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமாகக் காட்டிக் கொடுக்க
அத்தை சாஷாத் கரித்து-அது மானச அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
அத்தை எதாவாகப் பிராபிக்க வேணும் என்று பதறி
அவனுக்கு மறுக்க ஒண்ணாத திரு ஆணை இட்டுத் தடுத்து
அது பெறா ஆணை அல்லாமைக்கு ஹேதுகளையும் சொல்லும் படியான
தம்முடைய பரம பக்தியெல்லாம் –குளப் படியாம் படியான -அபிநிவேசத்தோடே-வந்து
தம்முடைய தாபங்களைப் போக்கின பிரகாரத்தை வெளி இடுகிறார் என்கிறார்–

—————————————————

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற
பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற்
கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே
பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்

2-அருள் பெறும் போது அணுக விட்டதுக்கு
பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும்
முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி
அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர்
தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர்
அவன் மகன் அவன்தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன்
ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல்
போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று
நிச்சித்திருந்தவர் சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு
கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து
நெஞ்சு போல்வாரைத் தொண்டீர் என்று அழைத்து

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின்
காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம்
வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின்
சப்தார்தங்களை சுருக்கி மாதவன் என்று த்வயமாக்கி
கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு
கையோலை செய்து கொடுத்து செஞ் சொல்
கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய்
நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர
விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம்
புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை
அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட
சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து

9-மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின்
கண் பெரியனாவனை இன்று அஹேதுகமாக வாதரித்த நீ
அநாதய நாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து
அகன்றீர் என்னில் – அவை யாவரையும் அகற்ற நீ
வைத்தவை என்பர் –அது தேக யோகத்தாலே என்னில் –
அந்நாள் நீ தந்த சுமடு என்பர் –முன் செய்த முழு வினை யாலே
என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில் ஆங்காரமாய் புக்கு
செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய
நீ கர்த்தா போக்தா என்பர்

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்
அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை
உன் தொழில் என்பர் –ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும்
வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம் ஸௌ ஹார்தம்
எஞ்ஞான்றும் நிற்கும் ,பிணக்கி பேதியாதே ஜ்ஞானாதி
வைகல்யமில்லை –ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன
பலித்வங்கள் நம்மது

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே
என்னும் சர்வஜ்ஞர் இவர்

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும்
நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க

16-அமந்த்ர ஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற
எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே
சாஷாத் கருத்த பர பிராப்திக்கு

17-தலை மிசையாய் வந்த தாள்களை பூண்டு போகாமல்
தடுத்து திருவாணை இட்டு கூசம் செய்யாதே செய்திப் பிழை

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு -போர விட்ட பெரும் பழி

19-புறம் போனால் வரும் இழவு

20-உண்டிட்ட முற்றீம்பு -அன்பு வளர்ந்த அடி வுரம் உயிர் உறவு

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல
வாக்கின பேரவா குளப் படியாம் படி கடல் போன்ற ஆதாரத்தோடு
சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார்
பத்தாம் பத்தில் ..

——————————————————

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற்
கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்-
அதாவது –
சுரி குழல் கமலக் கண் கனி வாய் –10-1-1-
அஞ்சன மேனி-10-3-3-
புனல் மைந் நின்ற வரை போலும் திரு உருவம் –10-6-8-
பொல்லாக் கனி வாய் தாமரைக் கண் கரு மாணிக்கம்-10-10-1-
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் -10-10-6–என்று-

அந்யோந்ய விலஷணமாய்–அதி மனோகரமாய் -அனுபவித்தாக்களைத் தனித் தனியே
ஆழம் கால் படுத்த வல்ல அவயவ சோபையும் – –அதுக்கு பரபாகமாய் -அத் உஜ்ஜ்வலமாய் –
விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போல் -சகல ஸ்ரமங்களும் மாறும் படி இருக்கும்
திரு நிறத்தை உடைத்தாய் சொல்லப் படுமதாய் –

காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -10-1-10–என்று
ஆஸ்ரிதருடைய ஆபத் ரஷண அனுரூபமாக வேண்டினபடி பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு
எல்லாம் கந்தமாய் இருக்கும் திவ்ய விக்ரகத்தை கொண்டு -தன் பக்கல் -நிஷிப்த பரர் ஆனவர்கள்
அநிஷ்டமான சம்சாரத்தில் இருப்பாலும் –
அபீஷ்டமான தன் திருவடிகளை கிட்டாமையாலும்
படும் ஆர்த்தியை தீர்க்கும் ஸ்வபாவனானவன்–

————————————————

2-அருள் பெறும் போது அணுக விட்டதுக்கு
பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும்
முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி
அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர்
தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர்
அவன் மகன் அவன்தம்பி ஆணை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன்
ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழி துணையாக்கி-
அதாவது —
அவனுடைய அருள் பெறும் போது அரிதால்–9-9-6–என்றும்
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது -9-9-6–என்றும்
கீழில் பத்தில் ஷண காலம் விளம்பம் பொறாத படி ஆர்த்தரான தமக்கு –

மரணமானால்–9-10-5-என்று
ஆரப்த சரீர அவசானத்திலே மோஷம் தருகிறோம் என்று அணித்தாக
நாள் இட்டு கொடுத்ததுக்கு பலம் –

வானேற வழி தந்த வாட்டாற்றான் -10-6-5–என்று
பிராப்ய பூமியான பரம பதத்தில் சென்று புகுருகைக்கு வழியாக அவன் காட்டிக்
கொடுத்த அர்ச்சிராதி கதியில் போகப் பெறுகையாலே –

அவ் அர்ச்சிராதி கதிக்கு -ராஜ குமாரன் வழி போம் போது வழிக்கு கடவார் –
முன்னோடி நிலம் சோதித்து -நிழலும் தடாகமும் பண்ணி -பின்னைக் கொண்டு போம் போலே –
அண்ட மூ உலகு அளந்தவன் -10-1-5–என்று
திரு உலகு அளக்க என்ற ஒரு வியாஜத்தாலே முன்னோடி நிலம் சோதித்து –

அவனடி நிழல் தடம்-10-1-2- -என்று
காள மேகமான தன் கால் விழுந்த இடத்தே -நிழலும் தடாகமாகவும் படி பண்ணி –

அமுதம் அளித்த பெருமான் ஆகையாலே –
அதாவது-
பாதேயம் புண்டரீகாஷர் நாம சங்கீர்த்தன அமிர்தம்-காருடம்–என்கிறபடியே
பாதேயமாக தன் திவ்ய குண அம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் —

தயரதன் பெற்றவன் ஆகையாலே-
அதாவது-
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10-1-8–என்றும்

கோவலன் ஆகையாலே
அதாவது-
கூத்தன் கோவலன் -10-1-6–என்றும் –
சக்கரவர்த்தி திருமகனாயும் கிருஷ்ணனாயும் வந்து அவதரித்தவன் ஆகையாலே –

வேடன்
அதாவது
குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் -பால-1-29–என்னும்படி
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி–பெரிய திருமொழி-5-8-1- -என்று
பிராட்டியையும் இளைய பெருமாளையும் முன்னிட்டு –
உகந்த தோழன் நீ -என்று விஷயீ கரிக்க பெற்ற -ஸ்ரீ குகப் பெருமாள் —

வேடுவிச்சி-
அதாவது-
சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்–பால-1-58–என்கிறபடி
தானே சென்று -கிட்டி -விருந்துண்டு –
சஷூஷா தவ ஸௌ மயேன பூதாஸ்மி ரகுநந்தன-ஆரண்ய -74-14 -என்னும்படி
தன் விசேஷ கடாஷத்தாலே பூதை ஆக்கின சபரி —

பஷி-
அதாவது-
ஸ்ரீ கார்யார்த்தமாக தேஹத்தை அழிய மாறினவர் என்னும் உகப்பாலே –
யா கதிர் யஜ்ஞ சீலானாம் ஆஹிதாக் நேஸ்ச யா கதி -என்றும்
அபாரவர்த்தினாம் யாச யாச பூமி பிரதாயினாம்
மயா த்வம் சமநுஞ்சாதோ கச்ச லோகன் அனுத்தமான்-ஆரண்ய-68-29/30 -என்று
விஷயீகரிக்க பட்ட ஸ்ரீ ஜடாயு மகா ராஜர்

குரங்கு-
அதாவது-
குரங்கு என்ற இது -ஜாத்ய ஏக வசனம் ஆகையாலே -சுக்ரீவம் நாதமிச்சதி-கிஷ்கிந்தா-4-18 -என்று
அத்தலை இத்தலையாய் சென்று அங்கீகரிக்கப் பெற்ற வானர அதிபதியான மகா ராஜரும் –
பரிகரமான வானர வர்க்கமும் –

சராசரம் –
அதாவது-
ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன்–7-5-1- -என்று
ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்க செய்தே – ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக
சுக துக்க ராம்படியாக விஷயீ கரிக்க பெற்ற -அயோத்தியில் வாழும் -சராசரம்-

(ஆவும் பயமும் அமுதும் ஒப்பான அரங்கருக்கு மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ
அவர் மெய் அருளால் தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சராசரங்கள் யாவும்
கிளையுடன் வைகுண்ட லோகத்தில் ஆர்ந்திட்டவே –திருவரங்கத்து மாலை- )

இடைச்சி-
அதாவது-
சிந்தயந்தி ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச்வாசதயா முக்திம்
கதான்யா கோப கன்யகா -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-10-22-– என்று
விக்ரக வைலஷண்யமே உபாயமாக வீடு கொடுக்கப் பெற்ற சிந்தயந்தி –

(உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-சிந்தையந்தியும் போலே இருக்க வேண்டும்-
பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேக்ஷித்தார்கள் -சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போய்த்து-
மதியிலேன் வல்வினையே மாளாதோ-1-4-3-என்பதால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டதே —
அதாவது சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினை யுடையாளாய் மாமியார் முதலாயினருடைய முன்னிலையிலேயே
இரு வினைகளையும் நீக்கி மோக்ஷம் அடைந்தாள்-ஈட்டு ஸ்ரீ ஸூக்தி )

இடையர்
அதாவது-
வெண்ணெய் களவு காண புக்க விடத்தே தொடுப்புண்டு வந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து
மோஷம் தராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோஷம் பெற்ற ததிபாண்டர்

தயிர் தாழி
அதாவது-
நாம ரூபங்கள் உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே
இதுக்கு மோஷம் கொடுக்க வேண்டும் என்கிறவன் நிர்பந்தத்துக்காக மோஷம் கொடுக்கப் பெற்ற- தயிர்த் தாழி –

(சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப
நின்னை வந்திக்க மெய்யில்லை வந்திருபோதும் மொய்ம் மா மலர்ப் பூம்
பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நாள் முக்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே–திருவரங்கத்து மாலை )

கூனி
அதாவது-
ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே
ஆவயோர் காத்ர சத்ரு சம் தீயதா மனுலேபனம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-20-6–என்று
பூசும் சாந்து அபேஷிக்க-அநந்ய பிரயோஜனமமாக கொடுத்த ப்ரீதியாலே
விசேஷ கடாஷ விஷய பூதையான கூனி

மாலாகாரர்-
அதாவது-
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி இத்யாஹ
மால்ய உப ஜீவன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21- -என்று
அநந்ய பிரயோஜனமாக பூவைக் கொடுத்த உகப்பாலே
தர்மே மனச்ச தே பத்ரே சர்வ காலம் பவிஷ்யதி -யுஷ்மத் சந்ததி ஜாதானாம்
தீர்க்க மாயுர்ப்பவிஷ்யதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-9-26-என்று விசேஷ கடாஷம் பெற்ற ஸ்ரீ மாலா காரர்-

பிணவிருந்து இட்டவர்-
அதாவது-
நவம் சவமிதம் புண்யம் வேத பார கமச்யுத -யஜ்ச சீல மகா பிராஞ்ஜா ப்ரஹ்மணம் ஸ்வ உத்தமம் -ஹரி வம்சம் -என்று
எதன்ன புருஷ பவதிப்படியே-அயோத்யா-102-30- பிண விருந்திட்ட கண்டா கர்ணன்-

(ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை–
நஞ்சிருக்கும் தானக் கண்டா கனற்ஜோதி என்று ஏத்தும்
வன் தாலமுடன் வானக் கண் தா கன வண்ணா என்று ஒது வலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கும் ஈந்தான் பரகதி என்னப்பனே–திரு வேங்கடத்தந்தாதி )

வேண்டடிசில் இட்டவர்-
அதாவது-
வேண்டு அடிசில் உண்ணும்போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும்
பக்த விலோசனத்தில் பக்தி புரசஸ்சரமாக அடிசில் கொண்டு வந்து இட்ட ருஷி பத்னிகள் –நாச்சியார்-12-6-

அவன் மகன்-
அதாவது-
மீள அவன் மகனை -பெரியாழ்வார்-1-5-2–என்று ஹிரண்ய புத்ரனாய் வைத்து –
தன் அருளுக்கு விஷயமாம் படி பக்தனான ஸ்ரீ பிரகலாதன்

அவன் தம்பி-
அதாவது
அவன் தம்பிக்கு –பெருமாள் திருமொழி -10-6-என்னும்படி ராவண அனுஜனாய் –
அனுஜோ ராவணஸ்யாஹம் தேனஸா அஸ்மி அவமானித–யுத்த-19-4- -இத்யாதிபடியே
ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு -ராகவம் சரணம் கத -யுத்த-17-14–என்று
திரு அடிகளை அடைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –

ஆனை
அதாவது
பரமாபதமா பன்னோ மனசா சிந்த யத்தரிம் -சது நாகவர -ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்று
ஸ்வ யத்னத்தை விட்டு -பிரபன்னனாய் -ஸ்வாபிலஷித கைங்கர்யம் பெற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-

அரவம்
அதாவது
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெறுவி வந்து நின் சரண் என-பெரிய திருமொழி-5-8-4- -என்கிறபடியே
பெரிய திருவடிக்கு அஞ்சி வந்து திருவடிகளை சரணாக அடைந்த சுமுகன் –

மறையாளன்
அதாவது
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன் -பெரிய திருமொழி-5-8-5-என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் பால்ய சேஷ்டாதிகளை சாஷாத் கரித்து காமனாய்
தபஸூ பண்ணி-அப்படியே காட்டி அருளக் கண்டு -அனுபவித்த அநந்தரம் -நித்ய
அனுபவத்தை அபேஷித்த கோவிந்த ஸ்வாமி-

பெற்ற மைந்தன்-
அதாவது
மா முனி பெற்ற மைந்தன் -பெரிய திருமொழி-5-8-6-என்று மிருகண்டு புத்ரனாய் -மோஷார்தமாக தன்னை வந்து
அடைந்த மார்கண்டேயன் –

ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி
அதாவது-
இவர்கள் ஆகிற நாநா ஜாதிதையாலும் -இப்படி பதினெட்டாக எண்ணலாம் படி இருக்கையாலும் –
பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் போலே இருந்துள்ள இத் திரளை -அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
தானே துணையாகக் கொண்டு நடத்துமவனாய் –

திருமோகூர் ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரண்-10-1-6–என்றும் –
காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதி -10-1-1–என்னும்படி
திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தனான காள மேகத்தை வழித் துணையாக கொண்டு –

( இவர்களுக்கு -க்ரமேண-அர்ச்சிராதி கதிக்குக் கூட்டிப் போகிறவன் என்றவாறு
சக்கரவர்த்தி திருமகன் விஷயம் ஐந்தும் -கோவலன் விஷயமாக எழும் -தனியாக ஆறும் -சொல்லி -18-நாடான் –
அவன் தம்பி -விபீஷணன் -தனியாக அருளிச் செய்தது-அவன் மகன் சொல்லிய பின்பு -பந்தி பேதம் வந்ததே -அதனால் –
ஸாந்தானிக லோகம் -சராசரங்கள் -தங்கி பின்பு ஸ்ரீ வைகுண்டம் –
கோவிந்த ஸ்வாமி -பால கிருஷ்ண சேஷ்டிதங்களைக் கேட்டு இங்கு இருந்து அனுபவித்து பின்பு ஸ்ரீ வைகுண்டம் சென்ற ஐதிக்யம் -)

————————————————-

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல் போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று நிச்சித்திருந்தவர்-
அதாவது-
நாமுமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான -10-2-9–என்றும் –
நாளேல் அறியேன் -9-8-4–என்றும் –
மரணமானால்-9-10-5- என்றும் –
நான் உங்களுக்குச் சொன்ன நாள் ஆசன்னமாய்த்து என்று பிறர்க்கும் பேசும்படியாய் –
ஸூப்ரபாதாச மே நிசா-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-17-3- -என்றும் –
ஸூப்ரபாதாத்ய ராஜநீ மதுரவாசா யோஷிதாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-18-24 -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிராப்தி அணித்தான வாறே நல் விடிவான நாளிலே –

துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை-10-3-4-
பசு மேய்க்க போகல் –10-3-9-
என் கை கழி யேல் –10-3-8-
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –10-3-11-என்று
தமக்கு துணையான அவனை பசு மேய்க்கையாகிற அபிமதத்தை பற்றவும் போகாதபடி பண்ணி –

மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்–10-4-3-
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேன்-10-4-4- -என்று
சம்சார துரிதம் மருவல் இடாது என்று -நபிபேதி குதச்சநேதி -என்கிற படி
ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிச்சயித்து இருந்தவர்-

சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே-
அதாவது-
மரண தசையான அளவிலே சஞ்சிதமாக புதைத்து கிடக்கும் மகா நிதிகளை
புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே -தமக்கு பகவத் பிராப்தி அணித்தானவாறே –
ஒருவரும் இழக்க ஒண்ணாது -எல்லாருக்கும் ஹித அஹிதங்கள் அறிவிக்க வேணும் என்று பார்த்து-

——————————————–

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து-
அதாவது-
தொழுது எழு என் மனனே-1-1-1- -என்று பிரதமத்தில் உபதேசிக்கும் படி –
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி-1–என்கிற படி தம்மிலும் பகவத் விஷயத்தில் முற்பட்டு நிற்கும் தம் திரு உள்ளத்துக்கு –
பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை–10-4-7–என்றும் –
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8- -என்றும் –
மருள் ஒழி நீ மட நெஞ்சே-10-6-1- -என்றும் –
நரகத்தை நகு நெஞ்சே-10-6-5- -என்றும் –
வாழி மனமே கை விடேல்-10-7-9- -என்று நம் பிரதி பந்தங்களை எல்லாம் தானே போக்கி அடிமை
கொள்ளும் சர்வ ஸ்மாத் பரனை அனுபவிக்க பார் –உனக்கு இஸ் சம்ருதி மாறாதே சென்றிடுக –
கை புகுந்தது என்னா இதர விஷயங்களில் செய்யும் அத்தை இவ் விஷயத்திலும் செய்யாதே கொள் –

திரு வாறன் விளை யதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்–7-10-9- -என்று –
பிராப்ய வஸ்து கிட்டிற்று ஆகில் -இங்கு அடிமை செய்ய அமையாதோ என்று -உகந்து அருளின நிலங்களில் நசையாலே
பிரமிப்பது ஓன்று உண்டு உனக்கு -அத்தை தவிரப் பார் –

உத்தேச்ய வஸ்து சந்நிஹிதமாய்த்து என்று இத்தையே – பார்க்கும் இத்தனையோ –நம்மையும் பார்க்க வேண்டாவோ –
நான் பரமபதத்து ஏறப் போகா நின்றேன் –
நெடு நாள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின சம்சாரத்தை புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய் –
நமக்கு இச் சம்பத்து எல்லாம் திரு மலையால் வந்தது ஆய்த்து -அத் திரு மலையை கை விடாதே கொள் –
என்று கிருத்தய அக்ருத்யங்களை அவஸ்ய கரணியமாம்படி விதித்து-

நெஞ்சு போல்வாரை தொண்டீர் என்று அழைத்து-
அதாவது-
தம் திரு உள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
தொண்டீர் வம்மின்-10-1-4-/5–என்று பகவத் விஷயத்தில் சபலரானார் வாருங்கோள் என்று அழைத்து –

(ஒரு தனி முதல்வன்-10-1 5-சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -வேர் முதல் வித்து)

———————————————–

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு-
அதாவது-
கொண்ட கோவிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே -10-1-5–என்று
அவன் எழுந்து அருளி நிற்கும் தேசத்தை குறித்து அனுகூல வ்ருத்தியை பண்ணி –
ஹ்ருஷ்டராவோம் வாருங்கோள் என்கையாலே கர்த்தவ்யமும் –

எண்ணுமின் எந்தை நாமம் 10-2-5–என்று ஸ்வாமி உடைய திரு நாமத்தை
அனுசந்தியுங்கோள் என்கையாலே -ஸ்மர்த்தவ்யமும் –

பேசுமின் கூசமின்றி -10-2-4–என்று உங்கள் யோக்யதை பார்த்து கூசாதே திருவனந்த புரத்திலே
சிநேகத்தை பண்ணி வர்த்திக்கிறவனை பேசுங்கோள் என்கையாலே –வக்தவ்யமும் –
( திரு நாம சங்கீர்த்தனமே யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்கும் )

நமர்களோ சொல்லக் கேண்மின் -10-2-8–என்று நம்மோடு சம்பந்தம் உடையீர் நாம்
சொல்லுகிறதை கேளுங்கோள் என்கையாலே – ஸ்ரோதவ்யமும் –

படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ -10-2-1–என்று திரு வனந்த புரத்திலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை காணப் போருங்கோள்
என்கையாலே -த்ரஷ்டவ்ய கந்தவ்யங்களும்

அனந்த புர நகர் புகுதும் இன்றே -10-2-1–என்று இச்சை பிறந்த இன்றே திருவனந்த புரத்திலே
போய்ப் புக வாருங்கோள் என்கையாலே -வஸ்தவ்யமும் –
ஆகிய இவைகள் எல்லாம் அவர்களுக்கு வெளி இட்டு–

(த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசிதத்வ –நான்கும் உபநிஷத்
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரமம் தன்னால் –திருக் கூறும் தாண்டகம் -4-)

———————————————–

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து-
அதாவது
உபக்ரமித்த அர்த்தத்தை -உப சம்ஹரிக்கை-சாஸ்திர க்ரமம் ஆகையால் –
பிணக்கற -1-3-5–என்ற பாட்டில்-வணக்குடை தவ நெறி -என்று உபக்ரமித்த பக்தி யோகத்தை –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-10-4-1- -என்ற ஸ்வ சாத்யத்தோடே பொருந்தின படியை சொல்லி நிகமித்து –

இதின் பட்டோலையான க்ரந்தத்தில் (ஈட்டில் )-வீடுமுன் முற்றவும் -1-2–பத்துடை அடியவரிலே-1-3-
உபதேசிக்கத் தொடங்கின -சாத்திய ஸித்த ரூபமான சாதன த்வயதையும் –
தவ நெறிக்கு பரமன் பணித்த -10-4–என்று நிகமித்து என்றவர் இதில் இப்படி அருளிச் செய்வான் என் என்னில் –
அது வீடுமுன் முற்றவும் -பிரபத்தி பரமாகவும்
பத்துடை அடியவர் -பக்தி பரமாகவும் – பூர்வர்கள் நிர்வகித்த கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார் –

இது -வீடுமுன் முற்றத்தையும் பக்தி பரமாக்கி யோசித்து அருளின எம்பெருமானார் நிர்வாக
கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார்
இதிறே சகல வியாக்யான சித்தமுமாய் -ஈட்டிலும்-பிரதான யோஜனையுமாய் -இருக்குமது .
இந்த க்ரமத்திலே இறே இவர் தாம் முதல் பத்தில் பக்தியை உபதேசிக்கிறார் என்று அருளிச் செய்ததும் –
(பரத்வம் பஜனீயத்வம் ஸுலப்யம் –இரண்டாவதும் மூன்றாவதும் பக்தி பரமாகவே
முன்பு வீடு முன் முற்றவும் பிரபத்தி பத்துடை பக்தி -அ முக்யமான யோஜனை )

ஆகையால் அது முன்புள்ளார் அருளிச் செய்த படியை பற்றி அருளிச் செய்தார்-
இது எம்பெருமானார் யோஜனையாய் பின்பு உள்ளார் எல்லாரும் அருளிச் செய்து கொண்டு போந்த
மரியாதையை பற்ற அருளிச் செய்தார் என்று கொள்ளும் இத்தனை –

வணக்குடை தவ நெறி -என்கிற இது பிரபத்தி பரமாகவும் ஈட்டில் ஒரு யோஜனை தோன்றி இருக்கையாலே
பிணக்கறவை-என்கிற இதிலே –
பக்தி பிரபத்தி -இரண்டையும் கூட்டிக் கொண்டு –
சார்வே தவ நெறியிலே –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும் –
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் -என்றும்
இரண்டையும் நியமிக்கிறார் என்றாலோ என்னில் -அதுக்கும் அனுபபத்தி உண்டு –

பிணக்கற -என்ற பாட்டிலே -பிரபத்தி பரமான யோஜனை உண்டானாலும் -விகல்பம் ஒழிய –சமுச்சயம் கூடாமையாலே –
ஆகையால் சகல வியாக்யானங்களுக்கும் சேர -பிணக்கற வில் -உபக்ரமித்த பக்தியை நியமிக்கிறார் -என்ன அமையும் –

ஆனால் பக்தி உபதேச உபக்கிரமம் -வீடுமின் முற்றத்திலே -யாயிருக்க -பிணக்கறவை-என்பான் என் என்னில் –
வீடுமின் -என்று த்யாஜ்ய உபாதேய -தோஷ குண -பரித்யாக -சமர்பண க்ரமத்தை-சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து –
அத்தையும் இதுக்கு சேஷமாக ஒருங்க விட்டுக் கொண்டு வந்து –
அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலம் செய்வது (முதல் பத்து சாரத்தில் )-என்று
தாம் யோஜித்த க்ரமத்தை பிடித்து முதல் பத்திலே தொடங்கின பக்தி யோகத்தை என்றபடி —

பிணக்கற தொடங்கி வேத புனித இறுதி சொன்ன -என்று இறே கீழும் ( ஆறாம் பத்து சாரத்தில் ) அருளிச் செய்தது –
ஆக இப்படி முதல் பத்தில் உபக்ரமித்த பக்தியை நிகமித்துக் கொண்டு –

——————————————

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி-
அதாவது-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
முதல் பத்தில் பஜன ஆலம்பனமாக சொல்லப் பட்டதாய்-
எண்ணும் திரு நாமம் -10-5-1–என்று பஜன தசையில் அனுசந்திக்க படும் திருநாமமான திரு மந்த்ரத்தினுடைய
சப்தத்தையும் -அர்த்தத்தையும் –
நாரணம் -10-5-1–என்றும் –
நாரணன் எம்மான் ( பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே )-10-5-2–என்றும் -இத்யாதியாலும்
ஸூக்ரஹமாம் படி சுருங்க உபதேசித்தும்-

மாதவன் என்று த்வயமாக்கி-
அதாவது-
பூர்வ உத்தர வாக்யங்களில் -ஸ்ரீ மத் -பத அர்த்தங்களை திரு உள்ளத்தில் கொண்டு –
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -10-5-7–என்று
கீழ் சொன்ன நாராயண சப்தத்தோடு -மாதவன் -என்கிற இத்தை இரண்டு பர்யாயம் சேர்த்து சொல்லீர்கள் என்கையாலே –
அந்த திரு மந்த்ரத்தை அதனுடைய விசத அனுசந்தானமான த்வய ரூபேண வெளி இட்டு –

கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து
அதாவது-
ஈஸ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிற படியாலும் –
கேட்கிறவர்களுக்கு பிரபத்தி விஷயமாம்படி யாகவும் சுருங்கக் கொண்டு –
தாள் வாய் மலரிட்டு நாள் வாய் நாடீர் -10-5-4–என்றும்
பாடீர் அவன் நாமம்–10-5-5- -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே-10-5-10-–என்று
இப்படி கரண த்ரயத்தாலும் பிரயோகிக்கப் படும் பகவத் ஆச்ரயண வ்ருத்தியை –
பரந்த சடங்குகளை சுருங்க அனுஷ்டேயார்த்த பிரகாசமான பிரயோக வ்ருத்தியாக்கி
கையோலை செய்து கொடுக்குமா போலே -சம்சாரிகளுக்கு தர்சிப்பித்து-

செஞ் சொல் கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு-
அதாவது-
செஞ் சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின்-10-7-1- -என்று
அவனுக்கு அடிமை செய்வீர் ! அவனுடைய சீலாதிகளிலே அகப்பட்டு அழுந்திப் போகாமல்
உங்கள் உயிரை நோக்கிக் கொண்டு அடிமை செய்யப் பாருங்கோள் என்று -உபதேசிக்கையாலே –
அனுபவ கைங்கர்யங்களோடு நடக்கிற ச கோத்ரிகளுக்கு-அரண் அழியாமல் -கள்ள வழி காவல் இடுவாரைப் போலே –
சீல குணமாகிற ஆழம் காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்று –
வஞ்சக் கள்வன் உள் கலந்து அழிக்கும் வழிக்குக் காவல் இட்டு–

————————————————–

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர
விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம் புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை
அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து
அதாவது
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -1-5-10–என்று
வள ஏழ் உலகிலே -1-5-1–அயோக்யர் என்று அகன்ற தம்மை தன் சீலவத்யைக் காட்டி
மனசைத் திருத்தி சேர்த்துக் கொண்டு –

இன்னமும் இவர் இங்கே இருக்கில் அயோக்யர் என்று அகல்வர் –
அகல ஒண்ணாத தேசத்து ஏறக் கொண்டு போக வேணும் -என்று –
வீடு திருத்துவான் -1-5-10–என்கிறபடியே -பரமபதத்தை கோடிப்பதாய் போய் –

அது செய்து மீளுவதற்கு முன்பே –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-6-7-2- -என்கிறபடியே
தன் உபதேசத்தாலே நாடெல்லாம் திருந்தி –தான் இங்கே தம்மை வைத்துக் கொள்ள
நினைத்த காரியமும் தலைக் கட்டின வாறே –

இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-10-6-3- -என்று
மீள வந்து பரம பதத்தில் ஏறக் கொண்டு போகையிலே -த்வரித்து-

சரம சரீரம் ஆகையாலே
தம்முடைய திருமேனியில் தனக்கு உண்டான வ்யாமோகத்தாலே கொண்டு போக
விரைந்து -அத்தையும் கூட மறந்து –

கோவிந்தன் குடி கொண்டான் -10-6-7–என்கிறபடியே சபரிகரனாய் கொண்டு –
எண் மாய ஆக்கை இதனுள் புக்கு -10-7-3–என்று
த்யாஜ்யம் என்று குந்தி யடி இட்டு தாம் சரக்கு கட்டிப் புறப் பட்டு நிற்கிற தேஹத்துக்கு உள்ளே தான் புகுந்து-

திரு மால் இரும் சோலை மலையே -10-7-8–என்கிற பாட்டின் படியே -தான நகர்கள் -என்று
தனக்கு வாசஸ்தானமான திவ்ய நகரங்களில் பண்ணும் விருப்பத்தை எல்லாம் -ஓரோர் அவயவங்களிலே பண்ணி
எல்லாம் இதுக்கு உள்ளேயாக வகுத்து –

அங்கனாம் அங்கனாம் அந்த்தரே மாதவோ மாதரஞ்ச அந்தரேன் அங்கனா–கர்ணாம்ருதம்-என்கிறபடியே
திருக் குரவையிலே பெண்களோடே அநேக விக்ரக பரிக்ரஹம் பண்ணி அனுபவித்தாப் போலேயும் –

ஏகஸ்மின்னேவ கோவிந்த காலே தாசாம் மகா முனே
ஜக்ரகா விதிவத் பாணீன் ப்ருதக் கேஹெஷூ தர்மத–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-என்றும்
உவாச விப்ர சர்வாசாம் விச்வரூப தரோ ஹரி-ஸ்ரீ விஷ்ணு புராணம்-3-31-20- -என்கிறபடியே
ஸ்ரீமத் த்வாரகையில் தேவிமாருடனே பதினாறாயிரம் விக்ரகம் கொண்டு அனுபவித்தாப் போலேயும் –

அநேக விக்ரகம் கொண்டு தம்முடைய அவயவங்கள் தோறும்
அனுபவிக்கும் படி தம் திருமேனியிலே அதி சபலன் ஆனவனுக்கு –

பொங் ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மா மாயை மங்க ஒட்டு-10-7-10–என்று
ஸ்வ தேக தோஷத்தை அறிவித்து -இத்தை விடுவிக்க வேணும் என்று கால் கட்டி –

—————————————

9-மாயையை மடித்து-
அதாவது –
அவனும் இத்தை விடுவிப்பதாக அனுமதி பண்ண -ப்ரீதராய் –
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -10-8-3–என்று சம்சாரத்தில் நிற்கைக்கு
அடியான மாயை யுண்டு மூலப் பிரகிருதி -அத்தை திரிய விடுவித்தேன் என்று செருக்கி –

வானே தரக் கருதி கருத்தின் கண் பெரியனாவனை-
அதாவது –
வானே தருவான் எனக்காய்-10-8-5- -என்று
தனக்குப் பரம பதத்தைத் தருவானாய் ஒருப்பட்டு –

கருத்தின் கண் பெரியவன்-10-8-8–என்று
உபய விபூதி யோகத்தால் வரும் அந்ய பரதையை அடையத் தீர்ந்து -தம்மை அவ் அருகே கொடு போகையாலும்–
ஆதி வாஹிகரை நியமிக்கையாலும் -தான் முற்பாடனாகக் கொண்டு போகையாலும் –
பெருக்க பாரியா நிற்கிறவனை –

அன்றிக்கே
மாயையை மடித்து-என்கிறதை மேலோடு சேர்த்து –
மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை மடித்தேன் -என்று
தாம் பேசும் படி அசித் சம்பத்ததை அறுத்து –

வானே தருவான் -என்று தமக்கு பரம பதத்தைத் தருவானாக உத்யோகித்த –
கருத்தின் கண் பெரியன் -என்று
தம்மால் எண்ணி முடிக்க ஒண்ணாதபடி -தம் கார்யத்தில் த்வரிகிறவனை என்றுமாம் –

ஆக இப்படி தாம் சொன்னபடி செய்யக் கடவனாய் -தம்மை கொண்டு போகையிலே மிகவும் பாரிக்கிறவனை-

இன்று அஹேதுகமாக வாதரித்த நீ அநாதயநாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க
அதாவது –
இன்று என்னை பொருளாக்கி-10-8-9- -என்று தொடங்கி இன்று இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ
அநாதி காலம் என்னை உபேஷித்து இருந்ததற்கு ஹேதுவை அருளிச் செய்ய வேணும் என்று
மடியைப் பிடித்து கேட்க –
இதுக்கு சொல்லலாம் உத்தரம் என்ன என்று தன்னிலே நிரூபித்து –
இவை ஒன்றும் இவர்க்கு சொல்லத் தகாதன என்று அவன் நிருத்தரனாய் நின்றமையை நெடுக உபபாதிகிறார் மேல் –
ஈஸ்வரன் நிரூபித்த க்ரமம் தான் இருக்கும் படி–

(ஸ்வாமித்வம் -காட்டும் அப்பக்குடத்தான்
ஆழ்வாரை கூட்டிச் செல்ல வந்த கார்யம் மறந்து த்யாஜ்ய தேக வ்யாமோஹம் -காட்டும் திருமாலிருஞ்சோலைப் பெருமாள் )

———————————————

(ஐந்து விஷயம் உரையாடல் போலவே இருக்கும் -ஒவ் ஒன்றுக்கும் ஆழ்வார் சமாதானம்
இன்னும் வேறே ஐந்தும் -அவன் திரு உள்ள நினைவை அறிந்து ஆழ்வார் நமக்கு சஞ்சிதம் காட்ட –
சேர்த்து வைத்த சொத்தை -பரிமாற்றத்தையும் பாசுரமாக நமக்காக வெளியிட்டு அருளுகிறார்
தன்னுடைய பொறுப்புக்களை கடமைகளை தானே சொல்லிக் கொள்கிறான் சர்வேஸ்வரன்
அவன் நினைவையும் அறிந்து பாடுகிறார் ஆழ்வார் -யானும் தானாய் ஒழிந்தானே-அன்றோ
ஆக மொத்தம் –பத்து விஷயங்கள் -இதில் உண்டே )

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து அகன்றீர் என்னில் –
அவை யாவரையும் அகற்ற நீவைத்தவை என்பர் –
அதாவது –
யூயம் இந்திரிய கிங்கரா -வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை–என்கிறபடி -அநாதி காலம் இந்திரிய வச்யராய் –
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்-5-8-6- -என்றும் –
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-3-2-6- -என்று துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை இட்டு
எத்தனை காலம் உன்னை அகன்று இருக்கக் கடவேன் –
அல்ப ரசங்களாய் -அநேக விதங்களாய் இருக்கிற –
சப்தாதி விஷயங்களைப் பசை உண்டதாக பிரமித்து -எதிர் பசை கொடுத்து புசித்து -சர்வ சக்தியான உனக்கு எட்டாதபடி –
சம்சாரத்தில் கை கழியப் போனேன் என்று நீர் தானே பேசும்படியான சப்தாதி விஷய பிராவண்யம் அன்றோ -நீர்
அநேக காலம் சம்சரிக்கைக்கு ஹேது என்னில் –

ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -7-1-8–என்றும்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்-5-7-8- -என்று -விஷயங்களும்–அவற்றில் பிராவண்ய
ஹேதுவான இந்திரியங்களும் -எத்தனை ஏலும் அளவுடையாரே ஆகிலும் -கலங்கப் பண்ணி நீ
வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை அன்றோ என்பர்-

அது தேக யோகத்தாலே என்னில் –அந்நாள் நீ தந்த சுமடு என்பர் —
அதாவது –
அந்த இந்திரிய வஸ்தைக்கு அடி -குண த்ரையாத் மகமான சரீர சம்பந்தம் அன்றோ என்னில்-

அந்நாள் நீ தந்த ஆக்கை –3-2-1-
அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10–என்று
அதுவும் தந்தாய் நீ என்பர்-

முன் செய்த முழு வினை யாலே
என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்
அதாவது-
அந்த தேக சம்பந்தத்துக்கு அடி -முன் செய்த முழு வினை-1-4-2- -என்று
நீர் சொன்ன அநாதிகால ஆர்ஜித புண்ய பாப ரூப கர்மம் அன்றோ -என்று சொல்லுவோம் ஆகில்

துயரமே தரு துன்ப இன்ப விளைகளாய்–3-6-8-என்றும்
உற்ற விறு வினையாய் –10-10-8- என்று அசேதனுமாய் -அசக்தமுமாய் -நச்வரமுமாய் இருந்துள்ள
புண்ய பாப ரூப கர்மங்கள் -உன்னுடைய நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண பலிக்கும் அவை ஆகையாலே
கர்மமும் நீ இட்ட வழக்கு என்பர்-

——————————————————

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில்-
ஆங்காரமாய் புக்கு செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்-
அதாவது-
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-4-7-3- -என்று
முடிவு இன்றிக்கே இருக்கிற கொடிய பாபங்களிலே எத்தனை பண்ணினேன் என்றும் –
மதியிலேன் வல்வினையே மாளாதோ –1-4-3- என்று
நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாது என்றும் -நீரே சொல்லுகையாலே –
கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று சொல்லுவோம் ஆகில் –

தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானான் -10-7-11-என்று
தான் அபிமானியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து
தானே அபிமானி ஆனான் என்றும் –
செய்கை பயன் உண்பேனும் யானே -5-6-4–என்று
நம்முடைய படியை அனுகரித்து சொல்லுகிற இடத்தில் –சகல கர்மங்களுடைய பல போக்தாவும் நானே என்றும் –
கருமமும் கரும பலனுமாகிய-3-5-10- என்று
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களுக்கும் நியாமகனாய் -என்றும் சொன்னவர் ஆகையாலே –
கர்ம கர்த்தாவும் -தத் பல போக்தாவும் -நீ இட்ட வழக்கு ஆகையாலே- கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர்-

கருமமும் கரும பலனுமாகிய -இத்தால் – கர்ம கர்த்தரு -தத் பல போக்த்ரு -ததநீயம்
விவஷிதம் ஆகையாலே யாய்த்து இவ் இடத்தில் இவர் இச் சந்தையை எடுத்தது–

———————————————-

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்
அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழில் என்பர்
அதாவது-
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்-2-9-9- -என்றும் –
எஞ்ஞான்று நாம் -என்று தொடங்கி-மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி -3-2-7–என்றும் நீர் சொன்ன –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளாலே காணும் உமக்கு அந்த கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
உண்டாய்த்து என்று சொன்னோம் ஆகில் –

அயர்ப்பாய் தேற்றமுமாய் –7-8-6-
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் –3-1-4-
உள்ளம் பேதம் செய்திட்டு ஒர் உண்ட உபாயங்களும் -5-10-4–என்று
ஞான அஞ்ஞானங்கள் இரண்டும் நீ இட்ட வழக்கு ஆகையாலே –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளை விளைக்கையும் உன் கிருத்யம் என்பர்-

(அஞ்ஞானம் -தொடங்கி-பொல்லா ஒழுக்கம் -அழுக்கு உடம்பு -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் கர்த்தா -இந்திரிய வசியத்தை இப்படி ஐந்தும்-
மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி-மூன்று பதங்களால் மூன்றையும் சுருக்கமாக காட்டி அருளுகிறார்-
இந்திரிய வஸ்யத்தை முதலில்–தேக யோகம் -அடுத்து -கர்மத்தால் அடுத்து –கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் -அடுத்து-
அஞ்ஞானம் அந்யதா ஞானங்கள் இறுதியில் –
மேலே ஐந்து விஷயங்கள்-அவன் தனது கடமையை -பொறுப்பை நினைக்க -அத்தை அறிந்து ஆழ்வார் நமக்காக காட்டி அருளுகிறார் )

ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது- அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்
அதாவது
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம்-95–இத்யாதிபடியே –
ஸூஷ்ம பிரகிருதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்வ கர்ம அனுகுணமாக நானா வித சரீரங்களிலே ஒன்றுபட்டு
ஒன்றைப் பற்றி தடுமாறி திரியும் -ஜீவனுக்கு -தேக இந்த்ரியத்வேன-போக்யத்வேன -அவஸ்தையான
பிரக்ருதியைப் பற்றி கிடக்கிற சைதன்யம் –
யாதேனும் பற்றி நீங்கும் விரதம்-திருவிருத்தம்-95 -என்கிறபடியே
பிரகிருதி பிராக்ருதங்களிலே-ஏதேனும் ஒன்றை அவலம்பித்து -நம்மை
விட்டு அகலும் விரதத்துக்கு ஹேதுவாய் இருப்பது ஓன்று –

அகமேனி ஒழியாமே -9-7-10–என்று
நமக்கு அந்தரங்க சரீரமான -இவ் ஆத்மாவை பற்றிக் கிடக்கிற பிரகிருதி
சம்பந்த ரூப மாலின்யத்தைப் போக்குகை –
இவ் ஆத்மாவுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது
(அகமேனி- ஆத்மா– ப்ரஹ்ம சரீரம் தானே )

(ஜீவன் சரீரத்தில் இருக்கிற -முதல் அர்த்தம்
ஜீவனாகிய ப்ரக்ருதி -பராக் பிரகிருதி ஜீவாத்மா -இது உயர்ந்த ப்ரக்ருதி -இப்படி இரண்டு நிர்வாகங்கள் )

அன்றிக்கே –
ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்-
அதாவது-
இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவ பூதாம்-ஸ்ரீ கீதை-7-5-என்று சொல்லப் பட்ட
ஜீவனாகிய பிரக்ருதியில் கிடக்கிற சைதன்யம் -ஏதேனும் பற்றி நீங்கும் -என்கிறபடியே –
பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை பற்றி -நம்மை விட்டு அகலும் விரத ஹேதுவாய் இருப்ப தொன்று –
அசித் சரீரமாய் இருக்க செய்தே –
அப்படி அன்றிக்கே –
அக மேனி -என்று நமக்கு அந்தரங்க சரீரமாய் இருக்கிற இவ் ஆத்ம வஸ்துவில்
கிடக்கிற பிரகிருதி சம்பந்தமான மாலின்யத்தை போக்குகை இதுக்கு அபிமானியான
நம்முடைய க்ருத்யமாய் இருந்தது என்னவுமாம்–

————————————————————-

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்-
அதாவது
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினை யேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால் -1-4-5- -என்னும்படி (நல்கும் -ரஷிக்கும்)
நாம் ஸ்நேஹ பூர்வகமாக ரஷிக்கைக்கு அடியான நாராயணத்வ பிரயுக்தமான சம்பந்தம் நிருபாதிகமாய் இருந்தது-

ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்-
அதாவது
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாகத் தான் தோன்றி-8-10-7- -என்று
நாம ரூபங்களை இழந்து -தமோ பூதமான சமயத்திலே –
இவற்றை உண்டாக்க நினைத்த அத்வீதியமான மகா குணம் என்கிற சௌஹார்த்தம்-
கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே என்று -அத்தையே அனுசந்திப்பார் -ஹ்ருதயத்தில்
நிற்கும் படியாக என்கையாலே —
அந்த சம்பந்தம் அடியாக – சர்வருக்கும் நன்மையை -ஆசாசிக்கைக்கு அடியான –
சௌஹார்த்த குணத்திலும் கண் அழிவு சொல்லப் போகாது-

பிணக்கிப் பேதியாதே ஜ்ஞானாதி வைகல்யமில்லை-(வைகல்யம் -வேறுபாடு )
அதாவது
பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -6-2-8- -என்னும்படி
சம்ஹ்ருதி சமயத்திலே -சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விவேக ரஹிதமாம்படி கலசி–
சிருஷ்டி தசையிலே ஒருவர் கர்மம் ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டித்தும் –
தனக்கு ஒரு பேதம் இன்றிக்கே இருக்கும் ஜ்ஞானாதிகளை உடைய
நமக்கு ஞானாதி சக்திகளில் குறைவு சொல்ல இடம் இல்லை-

ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள் நம்மது-
அதாவது
ஏக மூர்த்தி-4-3-3- -என்கிற பாட்டில் காரணங்களோடு கார்யங்களோடு வாசியற சகலத்தையும் சிருஷ்டித்து –
அவற்றினுடைய தாரண அர்த்தமாக அந்தராத்மாவாய் ஸ்ருஷ்டமான பதார்தங்களுடைய
ரஷணத்துக்காக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளி –
இப்படி சர்வ காலமும் ஒருபடிப் பட்ட அனுக்ரஹ சீலனாகைக்கு அடியான பிராப்தியை உடையையான நீ உன் திருமேனிக்கு வேண்டும்
போக உபகரணங்கள் எல்லாம் -பூசும் சாந்திர் -படியே -என் பக்கலிலே உண்டாக்கி -நிர் துக்கனானாய் என்று –
இவர் பேசினபடியே இவரைப் பெருகைக்கு எத்தனம் பண்ணுகையும் – பெற்றால் உகக்கும் பலித்வமும் –
நமக்கே உள்ளது ஒன்றாய் இருந்தது —

——————————————–

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே என்னும் சர்வஜ்ஞர் இவர்-
அதாவது
தனி நின்ற சார்விலா மூர்த்தி -என்று
கார்ய வர்க்கம் அழிந்த அன்று -சச் சப்த வாச்யனாய் -நின்று
ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித ப்ரஹ்மா மமாஸ்ரிதோ ராஜன் நாஹம் கம்சிது பாஸ்ரித -பாரதம்
இத்யாதி பிரக்ரியையாலே -உனக்கோர் அபாஸ்ரயமில்லாதபடி இருக்கிறவனே -என்கையாலே
நாம் வேண்டிற்றை செய்யும் படி
நிரந்குச ஸ்வதந்த்ரன் என்று அறுதி இட்டு –
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-9-3-2- -என்று தொடங்கி –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்று சகல கார்யங்களிலும் சஹகாரி
நிரபேஷனாய் -ஸ்வாதீன சகல சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதிகனாய் இருக்கும்
அவன் என்று அறிந்தோம் என்று சொல்லும்படியான சர்வஜ்ஞராய் இருப்பார் ஒருவர் இவர்-

——————————-

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-
அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது
அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-
முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –
இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க –

—————————————————

16-அமந்த்ரஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே சாஷாத்க்ருத பர பிராப்திக்கு-
அதாவது-
உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயர் மந்த்ரம் தோன்றாவிடில் –
கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே -அத்தை மறைத்து விடுமா போலே –
தான் நிருத்தரானமை தோற்றாதபடி மறைக்கைக்காக –
இவனாலே பிரவ்ர்த்திதமாய் –
நான் ஏறப் பெறுகின்றேன் -10-6-5–என்று தாம் கீழே சொன்னபடியே பரம பதத்தில் ஏறப் பெறுகிற
எழுச்சியை ஸூசிப்பியா நின்றுள்ள –

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-10-9-1- -என்று
ராஜ குமாரர் போம் போது -தூர்யாதி மங்கள கோஷம் பண்ணுவாரைப் போலே –
பரம பதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியால் முழங்குவது -கோஷிப்பதாக நிற்கும் –
மேக சமுத்ரங்கள் ஆகிற பேரிகள் உடையவும் –
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்–10-9-5–என்கிற கீதங்களினுடையவும் –
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -10-9-6–என்கிற காஹள சங்கங்களினுடையவும் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர்–10-9-6-என்கிற ஆசீசினுடையவும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்-10-9-7- -என்று
ஸ்தோத்ரிதனுடைய சம்மிசர கோஷமாகிற கோலாகலம் செவிப் பட்டவாறே –
அர்ச்சிராதி கதியையும் – ஆதி வாஹிக சத்காரத்தையும் -திவ்ய தேச பிராப்தியையும் –
அங்கு உள்ளாருடைய பஹுமானத்தையும் -ஆனந்த மயமான ஆஸ்த்தானத்தில் இருப்பையும் –
ஸ்வ சரண கமல பிராப்தியையும் -பெற்றாராகப் பேசும்படி சாஷாத் கரித்த பர பிராப்திக்கு –

————————————————-

17-தலை மிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்து திருவாணை இட்டு-
அதாவது-
அப்படி சாஷாத் கரித்த பர பிராப்தி -மானச அனுபவ மாத்ரமாய் -பாக்ய
சம்ச்லேஷ யோக்யை அல்லாமையாலே -அத்தைப் பெறுகைக்காக –
தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன்-10-10-1- -என்றும் –
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் 10-4-4-– என்றும் –
தலை மேல் தாள் இணைகள்-10-6-6–என்றும் –
என்கிறபடி மானச அனுபவ வைசத்யத்தாலே -தம் தலைமேல் ஆகும்படி வந்த
திரு வடிகளைக் கட்டிக் கொண்டு -போகாமல் தடுத்து –

திரு ஆணை நின் ஆணை கண்டாய் -10-10-2–என்று
அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி ஆணை இட்டு -இப்படி ஆணை இட்டவாறே
சேஷ பூதரான நீர் சேஷியான நாம் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை ஒழிய –
நம்மை ஆணை இட்டுத் தடுக்கை உம்முடைய ஸ்வரூபத்தோடு விருத்த மாகையால்
இது பெறா ஆணை காணும் என-

(இது பெறா ஆணை இல்லை — பெறும் ஆணை தான் என்பதுக்கு மேலே எட்டு விஷயங்கள் )

கூசம் செய்யாதே செய்திப் பிழை
அதாவது
கூசும் செய்யாது கொண்டாய் -10-10-2–என்று
சர்வஜ்ஞ்ஞானான நீ என் பூர்வ விருத்தத்தால் வந்த அயோக்யதை பார்த்து
கூசி வாசி வையாதே -உன்னோடு ஆத்ம பேதம் இல்லாதபடி -என்னை
பரிகிரஹித்தாய் -ஆன பின்பு உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்

———————————————

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு
அதாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்-10-10-3–என்று
கொடி கொள் கொம்பை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே -என் ஆத்மாவுக்கு ஜீவன
ஹேதுவாய் இருப்பது -உன்னை ஒழிய வேறு காண்கிறிலேன் -ஆதலால் நான்-அநந்ய கதி -என்றும் –

போர விட்ட பெரும் பழி
அதாவது
எம் பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாய்–10-10-4- -என்று
என் கார்யம் நீ செய்ததாக ஏறிட்டுக் கொண்டு-உன் பக்கல் நின்றும் பிரித்து –
உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே தள்ளி உபேஷித்தாய் -இது
உனக்கு பரிகிரஹிக்க ஒண்ணாத பெரும் பழி அன்றோ என்றும் –

—————————————-

19-புறம் போனால் வரும் இழவு
அதாவது
போர விட்டு இட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின் யான்
யாரைக் கொண்டு எத்தை யந்தோ எனது என்பது என் யான் எனபது என் -10-10-5-என்று
உன் பக்கல் நின்றும் பிரித்து -அநந்ய கதி யான என்னை -சிருஷ்டியே தொடங்கி –
இவ்வளவும் புகுர நிறுத்தின நீ என் கார்யம் நான் செய்வானாகப் பார்த்து என்னை உபேஷித்தால்-
சர்வ சக்தியான நீ அநாதாரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு
என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –
எனக்கு பரிகிரமாய் இருப்பது உண்டு என்பதோர் அர்த்தமுண்டோ –
பிருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதொரு நானுண்டோ -ஐயோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால்
இழவே அன்றோ உள்ளது என்றும்-

————————————————-

20-உண்டிட்ட முற்றீம்பு
அதாவது
எனது ஆவியை இன் உயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
என்னுடைய ஹேயமான சரீரத்தையும் ஆத்மாவையும்
மனசுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கினதை குறை
கிடக்க விடாதே -விஷயீ கரித்து விடாய் – புக்த சேஷமான உன்னதன்றோ முதல் தீம்பு என்றும்

அன்பு வளர்ந்த அடி வுரம்
அதாவது
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-என்று
பெரிய பிராட்டியார் பக்கல் -ஸ்நேஹ அதிசயத்தால் -அவள் பரிக்ரமான –
என் பக்கல் அதி பிரவணன் ஆனவனே -நான் அந்தப் புர பரிக்ரம் அன்றோ –
என் பக்கல் உனக்கு உண்டான அன்புக்கு அடி இல்லையோ -ஆகையால்
அவள் பரிக்ரகம் என்கிற -அடி உரம்-என்றும்

உயிர் உறவு
அதாவது
பெற்று இனிப் போக்குவனோ -உன்னை என் தனி பேர் உயிரை-10-10-8- -என்று
அத்யந்த விசஜாதீயனாய் இருந்து வைத்து -எனக்கு தாரகனான உன்னைப்
பெற்று வைத்து இனி விடுவேனோ -உயிரை விட்டு உடல் தரிக்க வற்றோ என்கிற
சரீர சரீர பாவ சம்பந்தம் என்றும் —

—————————————–

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல வாக்கின பேரவா குளப் படியாம் படி
அதாவது
இப்படி -முதல் தனி வித்து -10-10-9-என்கிற பாட்டு அளவாக உத்தரோத்தரம் புகலற –
துரக் கைகளினால் தாம் இட்ட ஆணை பெறா ஆணை அல்லாமையை சாதித்த –
அதனில் பெரிய என் அவா 10-10-10-–என்ற தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு –
அவை குளப் படியாம் படி பெரிதான தம்முடைய பரம பக்தி குளப் படி யாம் படி

கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார் பத்தாம் பத்தில் ..
அதாவது –
என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-என்று கீழ் சொன்ன அபரிசேத்யமான தம்முடைய அபிநிவேசத்தையும்
தன் அபிநிவேசத்தையும் பார்த்தால் இது ஒரு குளப் படியும் -அது ஒரு சமுத்ரம் என்னும் படியான
அபிநிவேவேசத்தோடே வந்து சம்ச்லேஷித்து –
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -யுத்த-134-39-என்று மீண்டு எழுந்து அருளி ஸ்ரீ பரத ஆழ்வானை
மடியிலே வைத்து அணைத்து உச்சி மோந்து முகந்தாப் போலே தம்முடைய விடாய் கெடும் படி
அனுபவித்து -அலாப நிபந்தன பரிதாபத்தாலே கூப்ப்பிட்ட வாயாலே –
அவா அற்று வீடு பெற்ற  குருகூர் சடகோபன் -10-10-11-என்று பேசும்படி –
அவா அற சூழ் அரியை -10-10-11–என்று ஹரி என்கிற திரு நாமத்துக்கு அனுகுணமாக
தம்முடைய சகல தாபங்களையும் ஹரித்தமையை சர்வரும் அறியும்படி
பிரகாசிப்பிக்கிறார்  பத்தாம் பத்தில் என்கை –

(அவா அற–ஆர்த்தி ஹரத்வம் -அவா தானே ஆர்த்தி -இதுவே பத்தாம் பத்தில் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய கல்யாண குணம் )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: