ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –225–

திருவரங்க பதிகம் -பத்து குணங்களும் இதில் அமைத்து பாடியுள்ள –
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -காருணிகத்தவம் -சரண்யத்வம்
சக்தித்வம்-சத்யகாமத்வம்-ஆபத் ஸகத்வம்-ஆர்த்தி ஹரத்வம்
வடிவுடை வானோர் தலைவன் -பரத்வம்
முன் செய்து இவ்வுலகம் படைத்தாய் -காரணத்வம்
கட்கிலி–வியாபகத்வம்
கால சக்கரத்தாய் –7-நியந்த்ருத்வம்
காருணிகத்தவம்
பற்றிலார் பற்ற நின்றான் சரண்யத்வம்
கடல் கடைந்தாய் -சக்தித்வம்
என் திருமகள் சேர் மார்பனே என்னும் சத்யகாமத்வம்
இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -ஆபத் ஸகத்வம்
முகில் வண்ண அடியை அருள் சூடி உயந்த ஆர்த்தி ஹரத்வம் –

தத்வ வேதனம் மறப்பற்று
முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோக்ஷபல விருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து–
த்வயார்த்தம் இவற்றால் சாதித்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி -ஏழாம் பத்து
சாதனம் -பகவானைச் சொல்லி–சாதனம் பலமாகக் கொடுத்து அருளிய உபகாரம்
திருவாறன் விளையில்–பாடுவித்துக் கொண்ட உபகாரம் -மிதுனத்தில் கேட்டு அருளி –
இதுக்கு கைம்மாறு -பிரதியுபகாரம் இல்லாமல் –

திருவரங்கம் -திருவாறன் விளை–இரண்டு திவ்ய தேச பதிகங்கள்
மூன்று நாயகி பாவம் -தாய் ஓன்று -மகள் இரண்டு பதிகம்
சரணாகதி -அமர்ந்து புகுந்தேனே என்றவர் -புகுரக்கண்டிலர்–ப்ரஹ்மாஸ்திரமே வாய் மாய்ந்து போக –
ததாமி புத்தி யோகம் சொல்லாமல் ஷிபாமி -சம்சாரத்தில் தள்ளி வைக்கக் கண்டவர் –
இந்திரியங்கள் அவன் மேலே ஈடு பட்டு -முடியானே -பாடியவர் -லோகத்தார் இந்திரிய வருத்தம் கண்டவர்
தமக்கும் வருமே என்று பயப்பட்டு –
நமஸ் சப்தார்த்தம்-கிராமபிராப்தி பொறுக்காமல் தளர்ந்து
இட்டகால் இட்ட கையாகக் கிடக்க–தாயார் -திரு மணத் தூண்களின் நடுவில் பொகட்டு
பேற்றுக்கு அவன் நினைவு -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
கலியனும் திருவிடவெந்தை இதே போலே –
தெய்வ சங்கல்பத்தால் -பற்றிலார் பற்ற நின்றவன் கேட்டு கால்நடையாக தென் திருப்பேரை –
வேத ஒலி பிள்ளைகள் விளையாட்டு ஒலி -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –
நிகரில் முகில் வண்ணன் -மகர நெடும் குழைக்காதர்
நாண் எனக்கு இல்லை தோழிமார்–
விஜய பரம்பரைகளை காட்டி தரிப்பிக்க-ஆழி எழ பதிகம்-7-4-
ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் -ஆஸ்ரித அர்த்தம் -கற்பார் பதிகம் -7-5-பத்தும் ராமாவதாரம் கூரத்தாழ்வான் நிர்வாஹம்-
பழைய ஏக்கம் -நீராய் கூப்பாடு -6-9-நினைவுக்கு வர -பா மாரு மூவுலகும் படைத்த -7-6-பதிகம் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -கல்யாண குணங்களுக்கு தோற்று அனுபவிக்க கூப்பாடு இதில் –
குணங்கள் திரு மேனியில் கூட்டி விட -ரூபத்தில் -உருவ வெளிப்பாடு -அப்ரீதி அதிகம் -7-7-
5-5-எங்கனேயோ நம்பி உரு வெளிப்பாடு-ப்ரீதி அப்ரீதி சமம் அங்கு
இணைக் கூற்றங்கள்-அப்ரீதி தோற்ற அருளிச் செய்கிறார் இதில் –
இவரை சமாதானப்படுத்த -ஜெகதாகாரம் காட்டி போக்குக் காட்ட–மாயா வாமனன் -7-8- ப்ரீதி உடன்-மது சூதா நீ அருளாய் –
எதற்கு என்னை வைத்து
காரணம் –ஆ முதல்வன் -வாய் முதல் அப்பன் யானாய் தன்னைத் தான் பாடி -இதுக்காக வைத்தேன் -8-9-என்ன பாக்யம்
ஆளவந்தார் ராமானுஜரை கடாக்ஷித்து இந்த பாசுரத்தால் ஆ முதல்வன் இவன் என்று -தேவாதிராஜன் இடம் சரணாகதி –
யத் பதாம்போஜம் -தனியன்
பாடுவித்த உபகாரம் -கை தொழக் கூடும் கொலோ –மிதுன கேள்வி -வலம் செய்து கூடும் கொலோ –
ஸ்ரீ வைகுந்தமும் வேண்டாம் -ஸமாஹிதராக தலைக்கட்டுகிறார்
ப்ராப்ய ப்ராபக ஆபாசங்களைச் சொல்லி -திருவேங்கடமுடையான் -ப்ராபகம்-ப்ராப்யம் -நடு நிலை –
அவதி -இங்கு திருவாறன் விளை –எல்லையாக -இங்கு -நடுவில் திருவரங்கம் இருந்தும் –

ஏழாம் பத்தால்

உபாய க்ருத்யதுக்கு அபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –
யதாஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை
( புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3 )
ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –( திருவடி பிரஸ்தாபம் பாசுரம் தோறும் உண்டே எப்போது கூடுவேனோ )
சாங்க பிரபதனம் பண்ணின -( த்யஜிக்க வேண்டியவை விட்டு பண்ணிய பிரபத்தி) -தம்மை-விஷயங்களிலே மூட்டி –
தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –
விஷண்ணராய்க் கூப்பிட்டு -(-6-10-இருந்து -என் உன் பாத பங்கயம் நண்ணிலா வகை 7-1-சங்கதி இதுவே )
தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து-( 7-2-)
பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —( 7-3-)
அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க -( 7-4-)
அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி ( 7-5-)
பழைய வார்த்தியே தலை எடுத்து -( 7-6-)
அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-( 7-7-)
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே-

உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –
எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –
என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –( 7-8-)

அவனும்
நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும்
என்று அருளிச் செய்ய –
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி
பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அதுக்கு பிரதி உபகாரம் தேக் காணாமையாலே –

இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று
திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –
திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –
அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –

கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –
திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று
தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —

——————————————

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க
வல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான்
சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக்
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில்
திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித்
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப்
பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி
6-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும்
பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த
வைசித்திரியைக் கேட்க
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை
அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர்
எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான்
சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

——————————————-

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே-
அதாவது-
எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று
எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –

குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-11-
என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் –

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று
இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்-

ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று
கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் –

மாய வாமனனே -7-8-1–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –
உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு
அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே

———————————————–

2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்
புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி-
அதாவது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து –
பின்னை நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று –
அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை
தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை –

புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும்
ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும்
பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –
(நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1-ஸ்ரீ வைகுந்தம் அர்த்தம் இங்கு –
சூரணை-105-கோசல கோகுல சராசரங்கள்-செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் என்னகே கண்டோம் –
அதில் நற்பாலுக்கு -பால் -நல்ல குணம் -நல்ல பண்பு -ஸ்வ பாவம் -ஈட்டில்– பன்னீராயிரப்படி தான் ஸ்ரீ வைகுண்டம் )

பாதமகலகில்லா தம்மை-
அதாவது-
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-

——————————————-

3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு-
அதாவது-
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று
தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு-

நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு
அதாவது-
நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் –
விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் –
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும்
கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் –
கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கும் அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து
விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில்
ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு
நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு –

(பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் சக்தனாய் இருக்கிறவன் விலக்காது ஒழிந்தால் அப்படிச் சொல்லலாம் அன்றோ-ஸ்ரீ வசன பூஷணம்-370-
தரு துயரம் -குலசேகர பெருமாள் -நீ கொடுக்கும் துயரம்– தடாயேல் -போக்கா விட்டால் –ப்ராப்த அபிராப்த விவேகம்
அறிந்து அருளிச் செய்வது போலே –
நானும் பரதந்த்ரன் கர்மமும் பரதந்த்ரன்
நீயோ பலப்ரதன் ஸ்வதந்த்ரன்-
துக்கத்தை விளைவிப்பான் ஒருவன் போக்குவான் மற்று ஒருவனோ -கிடாம்பி ஆச்சான் –
மம மாயா துரத்தயா மாம் ஏவ -வெளிக்கொண்டு வருபவனும் அவனே -அந்தரங்கர் பிராப்தி அறிந்து சொல்வார்களே –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் -கலியன் -பந்த அனுசந்தானம் -நினைத்து- )

————————————————

4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-
(திரு விருத்தத்தில்–62-
(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது-என்று கொள்ள முடியாது -முகில் வண்ணன் என்ற பதம் உள்ளதே –
8-1-ஸங்க்ரஹ பாசுரம்-சயன திருக்கோலம் இதில் தான் -7-2-கூட இல்லையே )-
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )
அதாவது-
கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-
அதாவது–
இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–7-2-1-
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –7-2-4-
சிந்திக்கும் திசைக்கும் -7-2-5–இத்யாதிப் படியே
திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —
அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –
ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –
ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா
மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே
(காமம் வளர இந்த பத்து விகாரங்களை வருமே)
அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை-
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே
பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –

திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –7-2-1-
என் செய்திட்டாய் –7-2-3-
என் சிந்தித்தாய் –7-2-4
என் செய்கேன் திரு மகட்கு -7-2-8–என்று
அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து-

அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –
கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற
அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே
அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை
என்று யோஜிக்கவுமாம்–

———————————————

5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
தேற்ற ஒண்ணாதபடி தோற்று-
அதாவது-
அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -7-3-9–என்றும் –
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்-7-3-5–என்று
பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு
பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)-

ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன்
விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –( 7-4-)
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன்-7-4-11- -என்று
தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்
படி பண்ணின பல தானமானது –
(ஆழி எழ சங்கும் எழ சாரம்-சரித்திரங்களை அனுசந்தித்து பலம் பெற பல தானம்-பாகவதர்கள் உடன் ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் )

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1-என்று
அவதார பிரயுக்த சௌலப்யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –
தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய -இவனை ஒழிய –
மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ -இப்படி சுலபமான இவ் விஷயத்தை
சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)

———————————————-

6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –
அதாவது
பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ–7-6-1-என்று தொடங்கி
தனியேன் தனி யாளாவோ -7-6-1-– என்று
ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக்
கூப்பிடும் படி -முன்புத்தை – உண்ணிலாவியில் ( 7-1-)கூப்பீடே மீளவும் தலை எடுத்து-

சூழவும் பகை முகம் செய்ய-
அதாவது
சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -7-7-1-என்றும் –
இணைக் கூற்றம்கொலோ அறியேன் -7-7-1–என்றும் –
கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே-7-7-8- -என்று
முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் –
பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய-
(திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி
முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார்
தாமரை வாசத் தாடாகம் போல் வருவானை முன்பே அனுபவித்தவர்-இப்பொழுது இணைக் கூற்றம் கொலோ-என்கிறார் )

எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க-
அதாவது
விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்-
இப்படி எடுப்பும்- (7-4-/7-5-) சாய்ப்பும் (7-6/7-7-) ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-
(கிலேசம் தலை சாய்ந்தும் தலை எடுப்பும் -எனவே விஜயங்களைக் காட்ட கிலேசம் தலை சாய்ந்து என்கிறார் )

உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க-
அதாவது
உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே -அதிகாரி தோஷம் – இன்றிக்கே இருக்க –
பாசங்கள் நீக்கி 7-8-5-என்று தொடங்கி
மாயங்கள் செய்து வைத்தி-7-8-5- -என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு
அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி –
என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)
( மாயா வாமனனே மது சூதா நீ அருளாய் என்றும் -இவை என்ன மயக்குகளே என்று எல்லாம் கேட்டாரே
அடியாக வைக்க வில்லை -தனது நிர்ஹேதுக சங்கல்பம் அடியாக பாடுவிக்க அன்றோ வைத்துள்ளான் )

—————————————

7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-
(ஐச்சமாக விருத்தி பாட பேதம்)
அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்துக் கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே-
தன் இச்சையாலே இருத்தி –
(தஸ்ய தாவதேவ சிரம் -அவனுக்கு அதுவரையில் தான் -கர்மம் தொலைத்ததும் இங்கு இருக்க முடியாதே –
ஆழ்வாருக்கு பாசங்கள் நீக்கிய பின்பும் -சங்கல்பம் -ஐச்யம்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் -விதி -பகவத் கிருபை இச்சை -என்றபடி )

உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய
அதாவது
உறப் பல இன் கவி -7-9-9–என்கிறபடியே-(சாலப் பெரியவன் -பெருமைக்கு உற கவி என்றுமாம் )
தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் –
பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே-
அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க –
தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –
என் சொல்லி நிற்பானோ–7-9-1-என்றும் ,
எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -7-9-7–என்றும் ,
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வனோ –7-9-8-
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9–என்று
அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –
அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –
சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை-
நான் ஒருவனே யுடையேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –
உதவிக் கைம்மாறு -7-9-10-என்று தொடங்கி –
எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -7-9-10–என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக
ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே –
உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –

(சாதன பல உபகாரம் கைம்மாறு இன்றி –சூரணை -218–இது தானே ஏழாம் பத்தின் சாரம்
கலங்கி மயங்கி மீண்டும் -8-1-சமர்ப்பித்து கலங்குவார்
பொதுவாக பாடுவித்துக் கொண்டது -7-9-வரை –
பிரதியுபகாரமாக தொடர்ந்து செய்வது -7-10- முதல் இறுதி வரை
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் ஆண்டாள் போலே )

———————————————–

8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே
பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-
அதாவது-
செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –
பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள்
ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் எழ உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து -7-10-1–என்று
ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –
நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்–7-10-10-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –
பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –

திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –
திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் —7-10-11-
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -7-10-10–என்று
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –
ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –
ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –
எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –

(பிரணவ சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீள் நகரிலே –சூரணை -171-
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கி -10-6-2-திவ்ய தேசம் ப்ராவண்யம் ஒழி –
ஸ்வாமி கைப்பிடித்து விண்ணுலகம் கூட்டிப் போகப் போவோம் -என்பார் -நிராங்குச ஸ்வ தந்த்ரன் முடிவு )

———————————————

9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு
அதாவது
கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு

நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .
அதாவது –
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை –7-10-6-
வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-7-10-7–என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர்-7-10-6- -என்று
நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் –
இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று –
பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் –
பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் –
இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.

( ப்ராப்யம் -அவதி -திவ்ய தேசம் ததீய விஷயம் அவனுடையது
ப்ராபகம் -அவதி -அவன்
பெருமாளே கடகன்-ப்ராப்யம் நீள் நகரம் -அத்தைப் பெற்றுக் கொடுப்பவன் அவன் தானே –
அதற்காக உஷா அநிருத்தன் இருவரையும் சேர்த்து வைத்தது த்ருஷ்டாந்தம்
நம்மாழ்வார் வாணன் சரித்திரம் சொல்ல நாயனார் அந்தப்பாட்டை எடுத்து மா முனிகள் வியாக்யானம்
ஈஸ்வர க்ருஷி பலம் -நாம் அனுபவிப்போம் )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: