ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –224–

ஆறு நாயகி பதிகங்கள் –
முதல் இரண்டும் மகள் -ஐந்தாம் பதிகம் தோழி -ஆறாம் பதிகம் -தாய்-ஏழாவது தாய் -எட்டாவது மகள் பதிகம் –
த்வய பூர்வ வாக்கியம் -உலகம் உண்ட பெருவாயா-பதிகம் –
முதல் மூன்று பத்தும் உத்தர வாக்ய கைங்கர்ய பிரார்த்தனை –ஒழிவில் காலம் –
இரண்டுமே திருவேங்கடத்தான் இடம்
இதுவே பலித்த சரணாகதி–ஸ்ரீ பிராட்டி முன்னிட்டுக் கொண்ட படியால் -த்வயம் படியே இங்கு –

சரண்யத்வம்–உபாயத்வம் கல் வெட்டு ஆக்குவது போலே -திரு மலை-கல்லும் வெற்பு -என்றாலே திருமலை
சமம் ஸ்தானம் வேறே எதுவும் இல்லையே –
தத்வ வேதனம் மறப்பற்று பெற்றார் முதல் பத்தில்
பக்தி தலை சேர நிஷ்கர்க்ஷித்தார் -இரண்டாம் பத்தில்
மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து முன்றாம் பத்தில்
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்தமை அடுத்த நான்காம் பத்தில்
விரக்தி பல -ராகம் கழிய மிக்கு பக்தி வளர்ந்தத்தை பார்த்தோம்
முதல் நான்கு பரத்வம்–பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வம் காட்டி
ஐந்தாம் பத்து ஸுலப்யம்
அவனே சரண்யன்
காருணிகத்தவம்-ஐந்தாம் பத்தில்
பிரேம பல உபாயத்தே புகுந்து பிரபத்தி செய்கிறார் இதில் -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தார் அன்றோ –

(கால் நடை தளர்ந்து கால் நடைகளின் காலில் விழுந்து தூது-6-1- -திரு வண் வண்டூர் -பம்பா நதி
வடக்கு கரையில் உள்ள ஸ்ரீ ராமனுக்கு தூது இது -ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள்-
வந்து மேயும் குருகினங்காள் -திருத்தி அனைவரையும் ஆக்கியதால் இவைகள் தாமே வந்து
ஞான பலமான சாபல்ய காரியத்தால் தூது -வந்தான் –
வரும் வரை கால தாமதம் பொறுக்க மாட்டாமல் -வந்த இடத்திலும் முடிந்து போகும் படி –மாசறு சோதி 5-3-மடல் கீழே
இதில் பிரணய ரோஷம் 6-2-தாம் அழிந்தால் அவனும் முடிவான் அன்றோ –
இல்லாத பொழுது வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்கலாம் -முடிய பிராப்தி இல்லையே –
முகம் திருப்பி ஆத்ம ஸ்வரூபம் போகும் -அன்றோ –
வெல்லும் வ்ருத்த விபூதி யோகத்தை -6-3-காட்டி சேர்த்துக் கொள்ள பிரசங்கிகம்
5-19-/ 6-4-/ சம்பந்தம் -திடமாக கல்யாண குணங்களை அனுபவிக்க பிறந்தவாறும் பிரார்த்தித்து -அத்தை அனுபவித்தார் அன்றோ
தர்ம வீர்ய ஞானத்தால் அனைத்தையும் பெற்ற ராம அனுபவம் போலே இவருக்கு கிருஷ்ண அனுபவம்
மின்னிடை மடவார் –இறுதியில் -ஆய்ச்சியால் -குரவை ஆய்ச்சியர் அடுத்து –6-2-உடன் இப்படியும் சம்பந்தம் –
நம்மாழ்வார் வைபவம் சொல்லும் 6-5-கீழ் எல்லாம் அவன் வைபவம் ஆச்சார்யர்கள் ஈடுபட்டு இருப்பார்களே –
ஸுலப்யம் சொல்லி -பரத்வம் இங்கு என்றும் பரத்வம் சொல்லி ஸுலப்யம் -1-1-/ -1-3-என்றும்
தோழி இவள் பிரபாவம் தாய் இடம் சொல்வது -லஷ்மணன் பிரபாவம் குகன் பரதனுக்கு சொன்னானே –
தோழியும் மயங்க -ஒவ் ஒன்றாக இளந்தத்தை தாய் சொல்கிறாள் அடுத்து -4-8-எறாளும் இவள் விட்டதை சொன்னது
அங்கு தன்னடையே போனது இங்கு -6-6-
நாமங்களை சொல்ல இவளுக்கு தரிப்பு வந்து திருக்கோளூருக்கு -திண்ணம் இள மான் புகுமூர்-தாய் பாசுரம் -இதுவும் –
பெண்ணையே இழந்தது இதில் மாலுக்கு பெண்ணிடம் உள்ளவை போனமை
பெண் இருக்க அதில் பாட பெண்ணும் சென்ற பின் இது
உள்ளே போக முடியாமல் சோலையில் நின்று தூது -மகள் -பொன்னுலகு ஆளீரோ-பரத்வத்யத்தில் தூது -6-8-
எங்கு சென்றாகிலும் கண்டு -அந்தர்யாமியிலும் உண்டே இதில் –
வைகல் -தூது -6-1-முதல் பதிகம் –
ஆழ்வார் கஷ்டம் கண்டு தளர்ந்து பக்ஷிகள் இருக்க நீராகிக் கேட்டவர்கள்
நெஞ்சு அழிய மாலுக்கு அங்கு இருப்பு கொள்ளாதபடி
ஜெகதாகாரத்வம் -நீராய் -6-9-கொடியேன் பால் வாராய் –நம்மாழ்வார் சிறைப்பட திருவாய் மொழி நமக்கு கிடைத்தது –
சீதை சிறைப்பட ஸ்ரீ ராமாயணம் –
கல்யாண குணங்கள் -ஆஸ்ரய ஸுகர்ய-ஆஸ்ரய கார்ய ஆபாத -பூர்த்தி -திருவேங்கடத்தில் -6-10- )

ஆறாம் பத்தால்-

தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் –
பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம் தமக்கு தம் திரு அடிகளையே –
நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க –

அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் –
தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து –( 6-1-)
வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை-(6-2-) அவன் பரிகரிக்க –( 6-3-)

அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும் பலித்தவாறே –
பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி –
ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே
பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு –

(குண அனுபவம் -6-4-பலித்து அனுபவித்தார் பிரபத்தி 6-10–விட்டது-தாய் உறவு- தன்னிடம் உள்ள சங்கு இத்யாதி —
உண்ணும் சோறு இத்யாதிகளை விட்டதை மூன்றும் -சர்வ வித பரித்யாகம் மூன்றிலும்
பிதாரம் மாதரம்–ரத்நாதி-சர்வ தர்மான் சர்வ காமான் -பவிஷ்யத் புராணம் -கத்ய த்ரயத்திலும் உண்டே
விட்டதை எல்லாம் பற்றும் கண்ணனாக -எல்லாம் கண்ணன் –
ஆர்த்தி உடன் தூது -பரம ஆர்த்தி –காதில் விழும்படி கூப்பிட்டது
லோக விக்ராந்தன் சரணம் -புராண வசனம் -உலகு அளந்தவன்
அவனது பிரதிநிதியே திருவேங்கடத்தான் )

விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து -பரம ஆர்த்தியோடே தமக்கு
உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –

பத்துடை அடியவரிலே 1-3–தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் -(பரிபக்குவம் )பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார் .
(பக்தி பண்ணுவது ப்ராப்ய ருசி அடியாகவே -சாதனமாகப் பண்ண மாட்டாரே –
சோகம் அதிகாரம் -சோக நிவ்ருத்தி பலம் -சோகம் வந்தவர்களுக்கு தானே பரிபக்குவ நிலை உண்டாகும் –
அவர்களுக்குத் தா உபதேசம் பண்ண வேண்டும் -)

—————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய்
அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும்
கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல்வெட்டாக்குகிற சரண்யன்
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள்
அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும்
அநந்ய கதித்வம் உடைய தமக்கு
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு
ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு
ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம்
உபாயத்தாலே அழிய
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க
பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
5-சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக்
கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க
நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று
ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று
பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை
யாவையும் ஒன்றே ஆக்கி
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ
முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
8-திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய்
அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல் கொள் திசை வையம்
விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
9-இணைத் தாமரைகள் காண இமையோரும்
வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே
கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
10-பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன
சாத்ய உபாய ஸ்ரவண
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று
ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே
காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

—————————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல் வெட்டாக்குகிற சரண்யன்-
அதாவது

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று
ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும்
ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –

திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று
திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்-

வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-
தன்னுடைய கிருபையாலே –

சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் –
சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் –
(நத்யஜேயம் -மித்ரா பாவேந -கடற்கரை வார்த்தை தானே –
நம்மாழ்வாரை ரக்ஷிக்கா விட்டால் கடல் ஓசை போலே வீண் தானே )

சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே
அதாவது
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்)
சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் –
(கழுத்துக்கு மேலே ஆகாமல் -வாய் வார்த்தை- உள்ளத்தில் நினைக்காமல் என்றபடி )

வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் -முதல் திருவந்தாதி-26-என்றும் —
போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் –
கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற
வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித அவிசேஷ அசேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –
(அநலோசித -ஆலோசனை பண்ண வேண்டாத படி )

————————————————

2-அஜ்ஞ்ஞான அசக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு-
அதாவது

அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி
ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –
(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது
அவனைத்தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று
ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –
உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-
பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –

(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்
என் நான் செய்கேன் -5-8-3–என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று
ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –
சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –
மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில் ஈடுபட்டு –
உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –
இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –
உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –
எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –(புணராய் –வினைச்சொல் அவன் இடம் -என்னிடம் வினைகளே உள்ளன )
முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –

மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி-
கீழ் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –
( மெய்யமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் பேர் அமர் காதலுக்கும் மேம்பட்ட காதல் அன்றோ இது
பர வசப்படுதல்- பக்தி- காதலின் முற்றிய நிலை ஆக நான்கு காரணங்களால் அநந்ய கதித்வம்- )
அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –
களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி
அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –
பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

———————————————–

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்
அதாவது

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி
தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –

கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11-என்றும் சொல்லுகிறபடி-
விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ
உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய்-

திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து
அதாவது
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு
வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -6-1-10-என்னுமதளவாக
பெற்று அன்றி தரியாத அதி மாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-
ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –
ததேக ரஷத்யத்வ வ்யவசாய சகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –
உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய யோகத்தாலே
ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான
யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –

விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய
அதாவது
இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான
பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –
போகு நம்பீ –6-2-1-
கழக மேறேல் நம்பீ -6-2-5–என்று
உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று –
சிற்றில் இழைப்பது –
சிறு சோறு அடுவதாக -அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –
அழித்தாய் உன் திருவடியாலே -6-2-9–என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை
தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய
வைலஷண்யத்தாலே – குலைக்க -(உபாயத்தாலே அழித்து-அவன் செயல் –திருவடியால் அவன் அழித்து )-
அவனோடு பொருந்தி –

—————————————————–

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே
அதாவது
பிறந்தவாற்றிலே -5-10-அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –
தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –5-10-1–என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -5-10-3–என்றும் –
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -5-10-4–என்றும் –
ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற -5-10-10–என்னும்படி
அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்-

குரவை ஆய்ச்சியரிலே–6-4-
என்ன குறை எனக்கு-6-4-1–என்று தொடங்கி –
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர்–6-4-10- -என்று
ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி அனுபவிக்கப் பெற்ற
எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே –

சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று-புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின-
அதாவது
இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே –
சித்த உபாய வர்ணம் சக்ருதேவ -(ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் )-என்கிறபடியே –
பிராப்த்திகாகவும் ஒரு கால் பண்ண வேண்டும் என்று பார்த்து புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
(விட்டு விட்டு பண்ணுவதால் அங்கம் ஆகாது -இது அதிகாரி ஸ்வரூபம் -பிரகாரமாகும்
அந்ய ருசி ஒழிவது நாலாம் பத்திலே பார்த்தோம் -இத்தை முக்கியமாகக் கொண்டு ஆறாம் பத்திலும்
மூன்று திருவாய் மொழி இருப்பதால் இந்த ஸ்லோக விளக்கம் இங்கு அருளிச் செய்கிறார் -)

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன்
ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச
சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம்
ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி
அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராணமாக சொல்லப் பட்ட –
பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –

புராண வித்தகர் -( வித்தமர் -)ஆகையாலே -பௌ ராணிகரான ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் –
இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான
சரண வரணத்தை பண்ணுகையாலும் –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —

இங்கன் அன்றிக்கே –
இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் –
அது தான் புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் .

சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை
அதாவது
ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் –
பிதரம் மாதரம்-என்று தொடங்கி –
சாஷரான்-என்னும் அளவாக -சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –
வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின
சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய ஆபாசங்களையும் -பிராபக ஆபாசங்களையும் –
(ஆபாசம் -போலி என்றவாறு -முத்து சிப்பி -வெள்ளி இல்லையே -அதைப் போலே தோன்றுமே -)
இதில்-சர்வ தர்மாம்ச்ச -கீழ் –
(போக்கிய பாக த்வரை தெளிந்த என் சிந்தைக்கு முன்னிலை மூன்றும் பிரகடனம் சொல்வது போலே சர்வ தரமாம்ஸ்ச கீழ் இங்கு )

உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –
இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ளவற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு -ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும்
உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –
அவ்வளவு இன்றிக்கே –
இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே – ஸூவயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —

ஸ்திரீயும் சஹா தர்ம சாரிணியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –
புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான
பாப விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் –
தம்முடைய வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-
இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –
உபாயாந்தர சக காரிகளுமாய் –
பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே – உபேய பூதருமாய் இருப்பார்கள் –

தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தையே பிரவர்த்திப்பிக்கையாலே – உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்-

குருக்கள் ஆகிறார்கள்- உபயாந்தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –
உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்-

ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை
அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே-

க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –
மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும்-

மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே
சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –
அதில் சர்வ தர்மாம்ச்ச என்று
கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –
சர்வ காமாம்ச்ச –
ஐகிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது
சாஷரான்-
அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –

ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –
உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள் உடைய
மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை
சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்கள் என்கிறது –
அதவா –
சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள் ஆகையாலே –
அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –

கை வலிந்து -இத்யாதிக்கு
அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் –
உபாய விரோதிகள் சர்வத்தையும் – விஷயமாக உடைத்து ஆகையாலே –
கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது
த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –
அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது
ஆக இப்படி இருந்துள்ள

————————————————

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாது அகன்றும்-
அதாவது

(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –
துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே
ப்ராப்யாந்தரம் ப்ரபாகாந்தரம் -இவை -கீழ் சொன்னவை ப்ராப்ய ஆபாசம் ப்ராபக ஆபாசம் -என்றும்
பரம ப்ராப்யம் பிராப்பகங்களைப் பற்ற அவையும் ஆபாசகங்கள் -என்று இரண்டு நிர்வாகங்கள்
6-5-வலிந்து விட்டது தாயை விட்டது -6-6–கை கழிந்து போனவை -6-7–இருக்கும் பொழுதே போனவை உண்ணும் சோறு –
இது எல்லாம் கிடக்க இனிப்போய்-மூன்றையும் சொன்னபடி –
இது தான் கை வலிந்து கை கழிந்து -இத்யாதி -இது எல்லாம் கிடக்க போய்-சர்வம் -வீடு முன் முற்றவும் –
ச பிரகாரமாக இவை விட்டு -சர்வ தர்ம பரித்யாகம் இவை
ஸக்ருத் கரணீயம் 6-10- )

நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –
இழந்தது சங்கே -6-6-1-என்றும் –
இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-
எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-
இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று
சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு –
உறங்குவான் கைப் பண்டம் போலே –
பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போகக் கண்டும் –
சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே
இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்து அகன்று போயும் –

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்-
அதாவது-
இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –6-8-1-
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-6-8-2-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ–6-8-3-என்று
தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-
( இவர் பொன்னுலகு சொல்லி அடுத்து அடிசில் -பழன மீன் கவர்ந்து -நேராக திருமங்கை ஆழ்வார் )

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு-
அதாவது-
என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று
உனக்கு அசலாம்படி விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும்
நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே –
விஷயங்களைக் (விஷயாந்தரங்களைக் ) காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும் சொல்லுகையாலே –
அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

————————————————————

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி-
அதாவது-
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –
( தந்தை தாய் தேவ பிரான் -மாத்ரு தேவ கீழே பார்த்தோம் -இங்கு தேவபிரானே தந்தை தாய் )

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –

வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –

பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-
லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை
சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –

இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமாக நினைத்து

———————————————-

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே-
அதாவது-
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3–என்றும் ,
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -6-9-6–என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -6-9-9–என்றும் –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ –6-10-5–என்றும்
ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –
பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –
சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –
திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக்
காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகுபோல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –
சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ –
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே
என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –
விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே !
மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே -உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

——————————————

8-திரி விக்ரமனாய் குறள் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன்-
அதாவது-
கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –
உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே -வாத்சல்யமும் –
அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே -சௌலப்யமும் –
தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –
விபோ -என்கையாலே -ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –
த்ரி விக்கிரம உபதானத்திலே -ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –
உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –
( இதே குணங்கள் அகலகில்லேன் பாசுரத்தில் உண்டே -திருவிக்ரமன் திருவேங்கடத்தான் என்று
சரண் அடைகிறார் என்று காட்ட இவற்றைச் சாதிக்கிறார் )

தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-
மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-
அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-
சர்வேஸ்வரனாய்-
ஆஸ்ரித வத்சலனான தான் –
திரு விக்கிரம உபாதானம் பண்ணுகைக்காக பெரு விலையனான அழகை-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு
மகாபலி யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து –
தான் சொன்ன படியே அவன் செய்யும் படி விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி
வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்-

கண் முகப்பே அகல் கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
அதாவது-
காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று
நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று –
லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –
அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-
வையம் அளந்த மணாளன் –6-6-1-
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-
ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று
விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –
தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி -எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

————————————-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு-
அதாவது-
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு–6-10-6-என்று -இத்யாதி படியே
திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும்
உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும்
அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை-3-3-8-என்று
திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –
அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –
திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான
திரு மலையிலே கண்டு –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்-

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
நிகரில் புகழாய்-என்று தொடங்கி-
திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்களை
அடைவே அனுசந்தித்துக் கொண்டு –

புகல் ஓன்று இல்லா -என்றும்
அடியேன் -என்றும்
தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக
உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –
அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

———————————————

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-
அதாவது-
(சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால்
பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு
பக்தி பிரபாவம் சொல்ல -சாதனா பக்தி என்று பிரமித்து துஸ்ஸகம்–ஸ்வரூப விரோதம் என்று சோகித்தவர்களுக்கு – )-
பத்துடை அடியவரிலே –1-3-
பிணக்கற அறு வகை சமயமமும்-1-3-5- -என்கிற பாட்டிலே –
வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –
வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித்
தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –

அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி
அத்தாலே
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-
என்னான் செய்கேன் –5-8-3-
என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-
(துஸ்ஸகம்–ஸ்வரூப விரோதம் -இரண்டுக்கும் இரண்டு பாசுரங்கள்
சோகத்தால் நாம் சஜாதிவெயர் ஆழ்வார் உடன் )

—————————————-

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை
உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் .
அதாவது –
திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-6-3-9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –6-3-10-
என்கிற தம்முடைய உக்தியாலும் –
(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு )

அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –6-10-10-
என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் –

தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: