ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –223–

ஸ்ரீ திராவிட சுருதி தர்சகாய நம -ஆராவமுதன் —
ஐந்து பதிகம் நாயிகா பாவம் இதில் -தோழி பாசுரம் இல்லை -தாய் பாசுரம் ஓன்று மகள் பாசுரம் நான்கு
மூன்று மகள் பதிகம்–5-2-/5-3-/5-4- சேர்ந்தால் போலே -பின்பு அநுகாரம் தாய் பதிகம் 5-5-
நோற்ற நாலும் இதில் -உபாய ஸ்வரூபம்
பாண்டிய நாட்டு திவ்ய தேசம் சரணாகதி நோற்ற நோன்பு -5-7-
சோழ நாட்டு திவ்ய தேசம் சரணாகதி ஆராவமுதே -5-8-
மலையாள நாட்டு திவ்ய தேச சரணாகதி மானேய் நோக்கி-5-9- தலை மகளாகவே இதில் –
விபவத்தில் சரணாகதி பிறந்தவாறும் -5-10- தரித்து நின்று குண அனுபவத்துக்காக இதில் சரணாகதி –
கலியும் கெடும் -கண்டு கொண்மின்–ராமானுஜ திவாகரன் –
பொலிக பொலிக பொலிக –
பெண்ணாக சரணாகதி -5-9-

தத்வ வேதனம் மறப்பற்று-முதல்
முக்தி ப்ராப்யம் பக்தி தலை சேர நிஷ்கர்ஷம் அடுத்து
வ்ருத்தி செய்ய அர்த்தித்து -கைங்கர்யம்
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-இங்கே வந்துள்ளோம் –
இதில் விரக்தி பல ராகம் கழிய மிக்கு -ராகம் பக்தி -இதில் பக்திக்கே சிறப்பு
பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் 5-3-/-5-4-/-5-5-மூன்றிலும் உண்டே
உபாய ஸ்வரூபம் சரணாகதி இருந்தாலும் பக்திக்கு பிரதானம் இதில் –
பிரபத்தி அடுத்த பத்துக்கே வைத்துள்ளார் –
பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வம் சொல்லி
இதில் காருணிகத்தவம் சொல்லி –

ஐஞ்சாம் பத்தால்-

கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும்
தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து –
விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்
கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்க்திக்கு பலமான
ஸ்வ விஷய பக்தியை
பரம்பரயா அபி விருத்தமாக்கி –
அந்த பக்தியையும்
பாகவத சமாகத்தையும்
உடையரான இவர்-
(இரண்டையும் உடைய இவர் -இவர் திருத்த காண வந்த பாகவதர்கள்-5-2-
சம்சார விஷ வ்ருக்ஷம்-கேசவ பக்தி -பக்த பக்தி -அமிருத பழங்கள் இரண்டும் வாய்த்ததே ஆழ்வாருக்கு இதில் )

தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் –
காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிக்களுமான சித்தர்களையும் கண்டு
மங்களா சாசனம் பண்ணி –
திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் –
பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு
( அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-இங்கு -பெரியாழ்வார் வாழாட்பட்டு உள்ளீரேல் -என்ன மாற்றம்)

பிராப்ய த்வரைக்கு அடியான
பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-
(தாயார் -உபாயாந்தரம் தவிர்க்க ஹிதம் சொல்ல -ப்ராப்ய த்வரை-மிக்கு அவர்களையும் திருத்தி –
ப்ராப்ய த்வரைக்கு அடியும் பக்தியே என்று என் கண்ணினால் நோக்கி கண்ணீர் உபதேசம் உண்டே
5-6-அநுகாரம்–உபதேச முத்திரை -அவன் கிஞ்சித் இருக்கு என்று திரு உள்ளம் கொள்ளக்கூடாதே என்று
ஆகிஞ்சன்யம் முன்னிட்டு -5-7-நோற்ற நோன்பிலேன் –
கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்–உபாய நிஷ்டர் -நமஸ் அர்த்தம் கை வந்தவர் -தாய்மார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-காணுதல் நோக்குதல் தானே -ப்ராப்ய த்வரை என்று அறிந்து நோக்கி காணுதல் )

——————————————————–

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும்
தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும்
அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப்
பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு
யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது
நீராய் மெலிய ஊடு புக்கு வளர
3-விஷ வ்ருஷ பலங்கள் கை கூடினவர்
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த
தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத
அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம்
கொண்ட வர்களை மேவித் தொழுது
உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை
தேவதைகளாக நிறுதினவனை
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி
பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

———————————————————-

1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்

ஆவா என்று அருள் செய்து -5-1-9–என்றும்
ஐயோ ஐயோ என்று என் பக்கல் கிருபையை பண்ணி என்றும்
தானே இன்னருள் செய்து –5-1-10-என்றும்-
தானே தன் பேறாக இன்னருள் செய்யும் என்றும்

(இன்னம் கார் வண்ணனே -எத்தனை அவதாரம் செய்தாலும் காருணிகத்தவம் மிக்கவன் அன்றோ
பரம காருணிகத்தவம் -அல்லேன் என்று அகல்வாரையும் சேர்த்துக் கொள்ளும் கருணை
நாடும் ஊரும் திருத்தும் படி ஆக்கி அருளிய கேவல கிருபை -விதி வாய்கின்றதே –
யாராலும் தடுக்க முடியாதே காப்பார் யார்
அந்த வைபவம் உணர்ந்து மகிழ்வாகப் பாடும் பதிகம் தானே கையார் சக்கரத்து திருவாய் மொழி-5-1-)

கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று
தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும்
வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி –

எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர் -5-1-7–என்று
கையும் திரு ஆழியுமான அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு –
அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே !
நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த
உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-

அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள்
ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய
பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன்
(கையார் சக்கரம் -சாரம் )
(கர்மாதீனமாக விட்டு வைக்காமல் கிருபாதீனமாக இரு கரையும் -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
இவர்கள் ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் அழிக்கிறார் –
கருணை வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவே மணத் தூணைப் பற்றி நின்று மாயோனை சேவிக்கிறோம் )

பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
பொய்யே கைம்மை சொல்லி –என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே -5-1-3–என்று
மெய் கலவாத பெரும் பொய்யைச் சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து –
ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே –
உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று
தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு-
சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யம உக்தமான மனசை தவிர்ந்து என்று
அவற்றை இவர் தவிரும்படி –

முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்

என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –
இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை
ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்தித்தாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ
என்று இவர் தாமே பேசும் படி பண்ணின
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே
அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு
பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது .–

————————————————————-

2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர

(5-2-இப்போது விட்டு –காதல் வளர்ந்ததையும் அநுகாராத்தையும் சொல்லி
பின்பு பார்க்க வந்தவர்களுக்கு மங்களா சாசனம் )
பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரிச்சேத்யமாய் பொருந்தி –
பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று
நெஞ்சை முடிக்கும்படியாய் –
கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –
வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரணத்வாத் அத்புத கர்மங்களை
நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் –

உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -5-7-1-என்று அவனை ஒழிய ஒரு ஷணமும்
தரித்து இருக்க மாட்டாது படியாய் –
(ஆகிஞ்சன்யமும் க்ஷணம் காலம் தரியாமையும் உள்ள பதிகம் )
ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -5-8-1–என்று
விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவண்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் –
ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –
வைகலும் வினையேன் மெலிய -5-9-1-என்று
அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -5-10-1–என்று
பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக-
(மெலிவிலும் சேமம் கொள் கிருபை -இந்த திருவல்ல வாழ் திவ்ய தேச குணமே இந்த பத்துக்கும் சாரம் )

————————————————————

3-விஷ வ்ருஷ பலங்கள் கை கூடினவர்
இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –
சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம -என்று –
சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட
பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-

அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும்
போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
ஒன்றும் தேவிலே –4-10-
மற்றை தெய்வம் நாடுதீர் –
பாடி யாடி பரவிச் சென்மின்கள் –
தெய்வம் மற்று இல்லை –
நாயகன் அவனே –
ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –
ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –
மற்றைத் தெய்வம் விளம்புதீர் –
உளம் கொள் ஞானத்து வைம்மின் –
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –

தேவதாந்தர அவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் –
பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும்
தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –

ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே
அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு –
வைகுந்தன் பூதங்களேயாய் –5-2-5-
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் –5-2-4-
தேவர்கள் தாமும் புகுந்து -என்னும்படி –

லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் –
த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் –
நேமிப் பிரான் தமர் போந்தார் 5-2-6–என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –

கண்டோம் கண்டோம்-5-2-2- -என்று
கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு –
பொலிக பொலிக -5-2-1–என்று
அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச -என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –
ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ -யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் –
கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய்
உள்ளோரை –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்–5-2-5–என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )

———————————————–

4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் -5-2-6–என்றும்
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -5-2-3–என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி —
அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் –
பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே
பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் –
தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –
( தேச தோஷத்துக்கும் – கால தோஷத்துக்கும் -இரண்டையும் போக்க இரண்டு பாசுரங்கள் )

இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன-5-2-3- -என்கிறபடியே –
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து
பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள்-5-2-8-/ 5-2-9- -என்று
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் –

அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான
அளவிலி களாகில்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-5-2-7–என்று
அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் –
யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில்
அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை-
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-5-2-8- -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே –
உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை

——————————————–

5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி —
மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன
ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை–5-2-10–என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள்
கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி
விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .
அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான
கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து-

விஷ்ணு பக்தி பரராக்கி
விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே –
அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி
பகவத் பக்தி பரராக திருத்தி

கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்
பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்
அதாவது –
திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி –
கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -5-2-2–என்னும்படி-
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் –
உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை
பொடியும் படி யானவர்களுடைய -உபாயத்வ அத்யாவச்ய ஞ்ஞானாத்தின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே -என்றும் ,
மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே
சித்தாஞ்சனம் போலே கூடார்தத்ததை பிரகாசிப்பதாய்-
பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-

(உபாய அத்யாவசாயத்தில் இருந்த தாய்மார் போல்வார் -முன்பே திருந்தி இருந்தவர் -இவனே ப்ராப்யம் என்று துடிக்க –
அது உபாய கோடியில் இல்லை -ப்ராப்ய த்வரையே -என்று அறியும்படி பக்தி அஞ்சனம் இடுகிறார் என்றவாறு )

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: