ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –222–

(த்வய உத்தர அர்த்தம் முதல் மூன்றால் -பூர்வ அர்த்தம் அடுத்த மென்றால் புருஷார்த்தம் –
முதல் மூன்றால் -ஹிதம் அடுத்த மூன்று பாத்தாள் -நாலாம் பத்து நியந்த்ருத்வம்
தாய் மகள் தோழி-மூன்றுமே உண்டு நான்காம் பத்தில் -பாலனாய் -மண்ணை இருந்து துழாவி -தீர்ப்பாரை யாம் இனி -இவை –
ஜீவ பர ஸ்வரூப மூன்றிலும் இதில் உண்டே -ஒன்றும் தேவும் பர ஸ்வரூபம் -ஏறாளும் -ஜீவாத்மா ஸ்வரூபம் -ஒரு நாயகமாய் விரோதி ஸ்வரூபம்
ஆழ்வார் திருக்குருகை- பொலிந்து நின்ற -பரே சப்தம் அருளிச் செய்கிறார் இதில்
ராமானுஜர் சமர்ப்பித்த ஒரு நாயகம் பாசுரம்

முதல் பதிகமும் -எட்டாம் பதிகமும் வைராக்யம் -விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் இதில்
ஒரு நாயகமாய் -ஐஸ்வர்ய கைவல்யம் விட -ஹித உபதேசம் –
இந்த உபதேசம் இவருக்கு பகவத் ப்ராவண்யம் வளர –முடியானே போலே -நடக்க முடியாததை –
ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை–பாலனாய் -தண்ணம் துழாய் ஆசைப்பட்டு —
மண் அளந்த தாளாளா வரை எடுத்த தோளாளா -தாளும் தோளும் காட்டினால் போதும் -திருமங்கை ஆழ்வார்–இவர் அந்த யுகத்துடன் சேவை
தேச கால விப்ரக்ருஷ்டம் என்று அறியாமல் –பாலனைப் போலே -மாலுமால் -தாய் பாசுரம் -அவனும் அப்படியே அருளிச் செய்ய –
பூசும் சாந்து என் நெஞ்சமே -அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே–ஸந்தோஷம் உன்மத்தம் -சற்றே நெகிழ நிற்க
தன்னிலை போய் -சம்பந்த சத்ருச பதார்த்தங்கள் -வெண்ணெய் காள மேகம் போல்வன –மண்ணை இருந்து துழாவி 4-4-தாய் பாசுரம் –
இவர் சத்தை பெற வைகுண்ட இருப்பை காட்ட -மங்களா சாசனம் -விடாயை வளர்க்கவும் தீர்க்கவும் கிருஷிகன் அவன் தானே –
இனி யார் நிகர் –சூழ் விசும்பு பின் இல்லாமல் போனதே -பட்டர்
தீர்ப்பாரை -அடுத்து -வெறி விலக்கு-தோழி பதிகம் -மோர் உள்ளதனையும் சோறோயோ–
சங்கதி ரேவ சங்கதி-அவன் அவருக்கு கொடுக்கும் அனுபவம் யார் அறிவார் –
மோகமே தேவலை உணர்த்தி படுத்தும் பாடு -அடுத்த பதிகம் -ஓலம் இட்டார் –நாராயணா என்று என்று
கோல மேனி காண வாராய் -கூவியும் கொள்ளாய்–
மந்திரங்களில் சுலபம் திரு மந்த்ரம் அத்யந்த சுலபம் -நாமம் -மூன்று எழுத்து உடைய பேரால் -கோவிந்தா –
திரு நாமம் வைபவம் தானே புடவை சுரந்தது
சதுரா சதுராக்ஷரி-ராமானுஜர் சாரதமம் –
அடுத்து ஏறாளும் -மகள் பாசுரம்–ஆத்ம ஆத்மீய வைராக்கிடம் -அவன் உபேக்ஷித்த எதுவும் வேண்டாம்
ந தேகம் ந பிராணன் ந ஸூ கம் –ராக்ஷஸே மத்யே -நஹி மே ஜீவிதா நஹி பூஷண –
சம்சார வெறுப்பால் –நண்ணாதார் முறுவலிப்ப –கொடு உலகம் காட்டேல்-லோக யாத்ரா வைராக்யம் -4-9-
சம்சாரிகளை திருத்த கூரத்தாழ்வான் -உபதேசிக்கிறார் என்பர் –
தவளை சர்ப்பம் வாயில் அகப்பட்டு கத்துகிறதே -ரக்ஷகர் இருக்கிறார் என்று அது அறிந்து தானே கத்துகிறது –
பரே சப்தம் காட்ட –ஒன்றும் தேவும் 4-10-அர்ச்சாவதார பரத்வம் -விஷயாந்தர ஆசை தேவதாந்த்ரத்தில் பரத்வ புத்தி தவிர்க்க -உபதேசம் –
புருஷார்த்த பல அந்ய ருசி தவிர்ப்பதே இதன் ப்ரமேயம் )

நாலாம் பத்தில் –

கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,
ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் –
சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்-
ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –
சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் –

ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று –
அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –
இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –
அந்த பிரணயித்வத்திலே தோற்று –

விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி –
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –(4-4-)
அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி
அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –(4-5-)
இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –

ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் –
(அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்கள் -4-1-ஒன்றும் தேவும் / தேவதாந்த்ர வைராக்யம் -4-6-/
ஆத்ம ஆத்மீய வைராக்யம் -4-8-/மூன்றையும் சேர்த்து அருளிச் செய்கிறார் )
நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் –
ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு –
பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன்
கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு –(4-10-)
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –
அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால்
கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –

இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –
தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து –
தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –
அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று –
பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே –
அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து
பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-

—————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின
சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்
2-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே
காதல் மையல் ஏறிய பித்தாய்
3-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது
தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச
ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை
ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன்
என்ன உடையரானவர்
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ
அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும்
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற
நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும்
நிஹீநதையையும்
6-பேச நின்ற தேவாத ஞான சக்தி
சாபேஷத்வாதிகளையும்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி
மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர்
8-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை
ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் —

————————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
மருகலில் ஈசனை –4-1-10-
ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –

ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக –
(நியந்த்ருத்வம் உடன் கூடிய வியாபகத்வம் நாலாம் பத்தில் -கீழ் பத்தில் சர்வ விஷய வியாப்தி –
ராஜா போலே நியமனம் -ஆகாசம் போலே வியாப்தி -உண்டே இவனுக்கு )
வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி -தன் ஆக்ஜை நடத்துகிற
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன்

ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு 4-2–திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )
பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று
அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி
சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும்
ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை –
தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி
பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-4-2-6–என்று
பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு
உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து

—————

2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்)
போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே(-4-3)- காதல் மையல் ஏறிய பித்தாய்(-4-4-)தீரக
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – 4-3-1-என்று தொடங்கி –
ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால்
வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே –4-3-4-
என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை
கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய்
இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள்
எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி –

அவ்வவோ காலங்களில்
தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே –
வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க
(மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-6-என்னும்படி பித்தேறி –

———————————————

3-(சீலமில்லாச் சிறியேனேலும்-4-7–பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது
தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே-4-7-1–என்று
உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்-
என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –

(நண்ணாதார் முறுவலிப்ப-4-9-சாரம்)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -4-9-10-என்று
நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில்
உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி –
கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே –
அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு
இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க-
(4-5-கால உபாதி கழிந்ததால் முன்னும் பின்னும் திருவாய் மொழி பதிகங்கள் இருக்குமே )

(வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் ,
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-என்று
அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய
திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற
அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
(இதுவே -இந்த ருசியே புருஷார்த்த பிராப்தி )
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக –

தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு
தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –
உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,
வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும்
ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும்
சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும்
உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்

———————————————————-

(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி-
ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன
பிரதாரம் வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் –
குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் 4-1-9–என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே
மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –
இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் –
ஆதி சப்த்தாலே –
துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-

——————————————————–

(தீர்ப்பாரை 4-6–சாரம் )
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு
இழைத்தாடும் நிஹீநதையையும்
த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ
த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி
அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7-
அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3-
கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற
சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு –
நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற
சூத்திர தேவதைகளுக்கு
களன் இளைத்து-4-6-4- -என்று
அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு –
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று
தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்

—————————————————-

(ஒன்றும் தேவும்-4-10–சாரம் )
6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோத பரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந
காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம
தச்மச் சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்
தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே –
பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ளப் போகாமையாலே –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -4-10-4–என்று வேதத்தில் பர சம்சா பரமான
வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி –
முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –
தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற
அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–
ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்

—————————————————-

7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி
இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் ,
விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன
யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே –
எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே –
லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று –
கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல –
இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-
தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம்
அல்லாமையாலே -கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற –
ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே –
ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா
நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே
அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –

ஓடிக் கண்டீர்
ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி
வழி ஏறிக் கண்டீர் -4-10-7–என்று ,
கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது –
கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு -அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை
திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர
மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்

———————————————————

8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3-
இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –
இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –

அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6-
உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –
அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் –
அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –
( நாட்டினான் தெய்வம் எங்கும் அருளால் காட்டினான் திருவரங்கம் நல்லதோர் -அருள் தன்னால்–திருமாலை )

ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே –
நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே
இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து

விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .
அதாவது –
பிரயோஜனாந்தர-4-1–தேவதாந்திர-4-6- -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் –4-10-
விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே
பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: