ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –221–

சூர்ணிகை -221..

மூன்றாம் பத்தால்-
தத் த்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் -தைத்ரியம்-என்கிறபடியே –
கார்ய பூத சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத்கத தோஷை ரசம் அஸ்ப்ருஷ்டனாக இருக்கையாலே
சர்வ வியாபனான சர்வேஸ்வரன்
கீழில் பத்தில் –
இவர் உபாய அனுகுணமாக நிஷ்கர்ஷித்த மோஷத்துக்கு பலமான
ஸ்வ விக்ரக அனுபவத்தை இவரைப் பண்ணுவிக்க –
இவர் அனுபவித்து தரித்து -அவ் அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தால்
-சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தை உடையராய்
-தம் அபிநிவேச அனுகுணமாக -அவன் காட்டிக் கொடுத்த
அவனுடைய சர்வாத்ம பாவத்தைப் பேசி -அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பை உடையராய்
-அந்த பிரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
பாகவத சேஷத்வத்தில் -எல்லை அளவும் சென்று –
அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான -பகவத் வைலஷண்ய அனுசந்தானத்தாலே –
ஒன்றின் வ்ருத்தியை ஓன்று ஆசைப் படும் படி -சேதன சமாதியை அடைந்த –
கரண க்ராமமும் தாமும் தனி தனியே அனுபவிக்கும் வேண்டும் பெரு விடாயை உடையராய் –
இதர ஸ்தோத்ரத்துக்கு அனர்ஹா கரணராய்-அவ்வளவும் அன்றிக்கே –
பகவத் ஸ்தோத்தரத்துக்கு அர்ஹா கரணருமாய்
பகவத் அனுபவத்துக்கு தமக்கு ஒரு பிரதி கதி தொடக்க மானவையும் அற்று
நிரதிசய ஆனந்த யுக்தரானவர் –
புண்டரீ காஷனாய் -ஸூரி சேவ்யனானவனை நம்மால் ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
சம்சாரிகள் அஞ்சி கை வாங்காமல் -மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி –
கீழ் இரண்டு பத்தாலும் உபதேசித்த -அவதார சௌலப்யம் –
பரத்வ ஸ்தாநீயமாம் படி அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசித்து –
அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிக்கும் அவனை ஒழிய
இதர ஸ்தோத்ரத்திலே தாழ இழிகை நிஷ் பிரயோஜனம் -ஆன பின்பு நீங்கள் –
சகல பல பிரதனுமாய் -சாம்யா பத்தி பிரதனுமான – அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை
செய்யுங்கோள் என்று நிஹீன வ்ருத்தியான இதர சேவையை நிவர்ப்பித்து –
தம்முடைய விருத்தியான வாசிக கைங்கர்யத்தில் மூட்டுகிறார் என்கிறார் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று
தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை
தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும்
2-நீ தந்த மா மாயப் புணர்வினை
பிறப்பு அழுந்தி அலமருகின்றேன்
வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து
தலைப் பெய்வன் என்று கழித்து
புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக
கண்டு கொள் என்னும்
3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில்
அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து
4-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி
எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து
தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு
சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி
உகள தம் அடியார் என்ன உடன்
கூடும் சாத்யம் வளர
5-பை கொள் பாம்பு போலே
இந்திரிய வ்ருத்தி நியம மற
பாடவந்த கவி அன்றிக்கே
படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்
-6 -குறை முட்டுப் பரி விடர் துயர்
துன்பம் அல்லல் துக்கம் தளர்வு
கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
செய்ய தாமரைக் கண்ணன்
அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
எளிவரும் இணைவனாம் என்றவை
பரத்வமாம் படி
7-அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி
வழியைத் தருமவன் நிற்க இழிய
கருதுவது என்னாவது வேண்டிற்று
எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும்
கவி சொல்ல வம்மின் என்று
8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி
ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன்-
அதாவது
முழுதுமாய் முழுதி யன்றாய்–3-1-8-என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் -3-2-4–என்றும் ,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -3-2-7–என்றும் ,
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் –3-10-10-
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் உணர்வின் மூர்த்தி-3-4-10- -என்றும்
தேச கால வஸ்துக்களால் பர்ச்சேதிக்க ஒண்ணாதபடி கார்யபூத சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து –
அநஸ்நன் அந்யோ அபிசாக சீதி-(இவற்றில் வேறான பர ப்ரஹ்மம் கர்மபலன்களை அனுபவிக்காமல்
அதிகமாகப் பிரகாசிக்கிறான் )கடோபநிஷத் -என்கிறபடியே
தத்கத தோஷை ரச அஸ்ம்ப்ருஷ்டனாய் இருக்கையாலே வியாபகனான சர்வேஸ்வரன்

தீர்ந்த அடியார்களைத் தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் –
அதாவது
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல-3-5-11 -என்று
பிராப்ய பிராககங்கள் இரண்டும் தானேயாக ஆஸ்ரயித்த ஆஸ்ரிதரை –
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்
தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -3-10-10–என்று
ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி ரஷித்து ஆரப்த சரீர அவசானத்திலே –
அர்ச்சிராதி மார்க்கத்தில் -தேச விசேஷத்தில் கொண்டு போய் –
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து -பாத உபதானத்தோபாதி –
தன் திருவடிகளின் கீழ் இட்டுக் கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒவ்தார்யத்துக்கும்

2-நீ தந்த மா மாயப் புணர்வினைப் பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து
எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வன் –3-2-1-
பல்மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் –3-2-2-
பொல்லா ஆக்கையின் புணர்வினை –3-2-3-
வினை யியல் பிறப்பு அழுந்தி –3-2-7-
கொடுவினை தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்து அலமருகின்றேன்-3-2-9- என்று
சிருஷ்டி காலத்தில் உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை நான் பெறப் பெறாதே –
நான் அதன் வழியே போய் அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டு -குண த்ரய பேதத்தால் -பலவகைப் பட்டு –
துரத்யயையான பிரகிருதி கார்யமான தேவாதி தேஹங்களில் அவஹாகித்து –
ஹேயமான சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற கர்மம் அடியாக மீண்டும்
பாபத்திலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்ம பரம்பரைகளில் அழுந்தி –
என்னால் அடி அறுக்கவும் அடி காண ஒண்ணாதே –புகுர வழியும் தெரியும் ஒழிய –
புறப்பட வழி தெரியாத -பாபம் ஆகிற மிடைந்த தூற்றிலே அகப்பட்டு நின்று –
உன்னை பிராபிக்கைக்கு ஈடான வழி காணாதே -கூப்பிட்டு அலமாவா நின்றேன் –

வினைகளை வேரற பாய்ந்து –
தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து -3-2-2–என்று –
அநாதியாய் -அபரிச்சேதமாய் -ஸ்வ யத்னம் நிவர்த்யம் அல்லாதபடி -அதி பிரபலமான
பாபங்களினுடைய அனுபந்தங்களை மறு கிளை வாராமல் வேரற்று போம் படி ஊசி
வேரோடே அறுத்து பொகட்டு –
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –3-2-1-
எங்கு வந்து அனுகிற்பன் –3-2-5-
எங்கு இனி தலைப் பெய்வன் -3-2-9–என்று
நான் உன்னை கிட்டுவதற்கு நாள் அறுதி இட்டு தரவேணும் –
நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் –
இனிக் கிட்டுகை என்ற பொருள் உண்டோ -என்று சரீர சம்பந்தத்துக்கு நொந்து –
அதிலுண்டான அருசியோடே – காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் 3-9-8–என்று
பகவத் குண அனுபவத்தோடு -கால ஷேபத்தைப் பண்ணி -சரீரத்தை விட்டு –
அவன் திருவடி களின் கீழ் புக வேணும் என்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும் –
சத்ருசமாக கண்டு கொள் என்னும் இப்படியான இருவர் படிக்கும் தகுதியாக –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே-3-9-9- -என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற

3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
ஊனமில் மோக்கம் என்கோ-3-4-7- -என்று பிரகாரமான ஆத்ம அனுபவ மாத்ரத்தில்
அன்றிக்கே -ப்ரகாரி அளவும் செல்ல அனுபவிக்கையாலே -குறைவில்லததாய் –
ஸ்வரூப அனுரூபமாக -கீழில் பத்தில்-அறுதி இட்ட -பரம புருஷார்த்த லஷண மோஷத்துக்கு
பலம் -பகவத் அனுபவ கைங்கர்யங்கள் ஆகையாலே –
முடிச் சோதி -3-1–என்கிற திரு வாய் மொழியிலே அவன் வடி வழகையும் ஆபரண சேர்தியையும் அனுபவித்து –
அவை பரிசேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே -இது கரண சங்கோச நிபந்தனம் என்று நினைத்து –
இவர் படுகிற கிலேசத்தை – விஷய வைலஷண்ய நிபந்தனம் -என்று அறிவித்து -ஈஸ்வரன் நிவ்ருத்தமாக –
அவ் அனுபவத்தாலே –
நிலை பெற்றது என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே -என்று நித்ய வஸ்து சத்தை பெற்று
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சத்தாகார்யமும் பலிக்க வேண்டுகையாலே –

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்று –
தேச கால அவஸ்தா பிரகாரங்களை இட்டு -அவச்சேதியாபடி –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களும்
செய்ய வேண்டும் படியான அபிநிவேசத்தாலே –
சர்வ ஆத்ம பாவத்தை (நான்காம் பத்தின் பொருள் சர்வ வியாபகத்வம் ) புகழ்ந்து
தம்முடைய பாரிப்புக்கு ஈடாக தம்மை அடிமை கொள்ளும் படி கோலி –
அவன் காட்டிக் கொடுத்த -சர்வாத்ம பாவத்தை –
புகழில் நல் ஒருவனிலே –
பூதங்கள் பௌதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் -ரசவத் பதார்த்தங்கள் –
காநாதி சப்தராசிகள் -மோஷாதி புருஷார்த்தங்கள் -ஜகத் பிரதானரான -பிரம ருத்ராதிகள் –
இவற்றுக்கு அடைய காரணமான பிரகிருதி புருஷர்கள் –
இவற்றை அடைய விபூதியாக உடையவனாய் –
இவற்றுக்கு அந்தராத்மாதயா வியாபித்து -தத்கத தோஷ -ரச அஸ்ம்ஸ்ப்ருஷ்டனாய்-
இருக்கிற படியைப் பேசி அவ் அனுபவத்தால் பிரீதராய்-

4-சொல்லிப் பாடி ஏத்தி பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்துதடு குட்டக் கும்பிடு
நட்டமிட்டுசிரிக்க குழைந்து நையும் ப்ரீதி உகள எம்மானைச் சொல்லிப் பாடி –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
முனிவின்றி ஏத்தி –
பேர் பல சொல்லிப் பிதற்றி –
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –
ஏத்தி குனிப்பார்
தடு குட்டமாய்
கும்பிடு நட்டமிட்டு ஆடி –
உலோகர் சிரிக்க நின்றாடி –
நெஞ்சம் குலைந்து நையாதே
என்று வாசிக காயிக மானச வியாபாரங்களாலே களிக்கும் படி –
அந்த ப்ரீதி தலை மண்டி இட்டு செல்ல –

(அடுத்த செய்ய தாமரைக்கண்ணன் -திருவாய் மொழியும் பர உபதேசம் என்பதால் இதன் பொருளையும்
சொன்னால் விரோதம் திருவாயமொழியின் பொருளுடன் மேலே அருளிச் செய்வார் –
ஆகையால் பயிலும் சுடர் ஒளி -தாத்பர்யம் இங்கே )

தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர
இப்படி உண்டான ப்ரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியோங்களே –
என்று ததீய சேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்கள் -நமக்கு உத்தேச்யர் என்னும் படி –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
கீழ் பத்தில் பிரார்த்தித்த சாத்தியம் -அவர்களோடு கூடி அவனை அனுபவிக்கும் அளவு அன்றிக்கே –
அவன் அடியார் உடைய சேஷத்தின் எல்லை அளவும் செல்ல வளர —

5-பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற
பை கொள் பாம்பேறி உறை பரனே -என்று (முடியானே -எட்டாம் திருவாயமொழியின் தாத்பர்யம் )
அவனுடைய சர்வாதிகத்வ பிரகாசமான படுக்கையாய் இருக்கும் –
திரு அனந்தாழ்வான் -சஷுஸ் ஸ்ரவா -என்கிறபடியே –
ஒரு கரணத்தாலே கர்ணாந்தர விருத்தியும் கொள்ளுமா போலே –
நெஞ்சம் நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்றும் ,
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும் ,
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை-என்றும் ,
கண்களால் காண வரும் கொல் -இத்யாதிகளாலே –
வாக் பாணி சஷூர் விருத்திகளை -ஆசைப் படும்படி ஆகையாலே –
இந்திரிய விருத்தி நியமமின்றிக்கே -அவனை அனுபவிக்க
வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்-

பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் (சொன்னால் விரோதம் -திருவாய் மொழி தாத்பர்யம் )
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –என்றும்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு –என்றும்
-அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத் -என்கிற உபநிஷத்தின் படி கவி பாடுமவருமாய்

-6 -குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
(சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் )
தேச விஷயத்தில் போய் அனுபவிக்க பெற்றிலேன் என்கிற குறை இல்லை –
இவ் அனுபவத்துக்கு எனக்கு ஒரு பிரதிஹதி இல்லை –
-அவன் விஷயத்தில் ஆன பின்பு -ஏக தேசமும் என் மனசில் துக்கம் இல்லை –
வகுத்த சேஷி என்று பற்றுகையாலே எனக்கு ஒரு துக்கம் இல்லை –
ருசி முன்னாக தேச விசேஷ பிராப்தி பண்ணுகிற எனக்கு -வைதிக புத்ரர்களைப் போலே –
மீளில் செய்வது என் என்கிற துக்கம் இல்லை –
இங்கே அவன் குணங்களை நெருங்கே புஜித்த எனக்கு -பூர்ண அனுபவம்
பண்ணலாம் தேசத்தில் போகப் பெற்றிலேன் என்கிற துக்கம் இல்லை –
இது அவனுடைய லீலா விபூதி என்று அறிந்த எனக்கு -இனி லீலா விபூத் அன்வயமாகிற துக்கம் இல்லை –
ஸ்வ சங்கல்ப்பத்தாலே -சிருஷ்டியாதிகளை பண்ணவல்ல ஆசர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை ..
அகடி தகடனா சமர்த்தனானவனை பற்றின எனக்கு ஒரு தளர்ச்சி இல்லை –
விமுக தசையில் வியாப்தி யாலும் -அபிமுக தசையில் அவதாரத்தாலும் –
ரஷிக்கும் அவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை -என்றபடி –
சன்மம் பல பலவில் -பத்துப் பாட்டாலும் அடைவே-(குறைவிலனே –முட்டிலனே –பரிவிலனே -இடரிலனே-
துயரிலனே -துன்பமிலனே -அல்லலிலனே -துக்கமிலனே-தளர்விலனே -கேடிலனே-என்று ) தாம் பேசும்படி –

நிரஸ்த சமஸ்த கிலேசராய் -அம்ருதரான முக்தர் -பகவத் அனுபவத்தாலே ஆனந்திக்குமா போலே –
அவ் ஆனந்த சாகர மக்நரானவர் –
செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
செய்ய தாமரை கண்ணனாய் -என்று தொடங்கி –
எஞ்சலில் அமரர் குல முதல் மூவர் தம் உள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்து உள்ளீர்கள்-என்று –
புண்டரீகாஷத்வாதி பரத்வ சிஹ்னங்களை உடையனாவன் – ஞான சங்கோச
ரஹீதரான நித்ய ஸூரிகள் திரளுக்கு நிர்வாஹன் அன்றோ –
சம்சாரிகளான நம்மால் அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்சாதபடி
எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி
எளிவரும் இயல்வினன்-
இணைவனாம் எப்பொருட்கும் -என்று
பத்துடை அடியவரிலும் -அணைவது அரவணை -மேலிலும்
வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி

7-அவனாகும் சௌலப்ய காஷ்டையைக் காட்டி
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -என்று
மனசால் யாதொன்றை திரு மேனியாக கோலினி கோள்-அபரிசேத்ய மஹிமனான
சர்வேஸ்வரன் அத்தையே தனக்கே அசாதாரமான விக்கிரகமாக விரும்பும் என்று –
யேய தாமாம் பிரபத்யந்தே தாம்ஸததைவ பஜாம் யஹம் –ஸ்ரீ கீதை -4-11 -என்றும்
அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74–என்கிற
அர்ச்சாவதார சௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி
வழியை தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது-
ஒழிவு ஓன்று இல்லாத -என்று தொடங்கி –
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே -என்று
யாவதாத்மபாவி பகவத் அனுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும் படியான
அர்ச்சிராதி மார்க்கமும் தருகிறவன் -தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ –
என்று அவசர பிரதீஷனாய் நிற்க -அவனை விட்டு புறம்பே கவிபாடுகைக்கு விஷயம்
தேடித் போய் -ஒரு சொல்லுக்கு பாத்தம் போராத-சூத்ர மனுஷ்யரைக் கவி பாடி முன்பு
நின்ற நிலையிலும் காட்டில் தாழ இழிய நினைக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு ?
அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள்

வேண்டிற்று எல்லாம் தரும் –
சகல பல ப்ரதோஹி விஷ்ணு -என்கிறபடியே
சர்வ அபேஷிதங்களையும் தரும்
-தன்னாகவே கொள்ளும்
பரம் சாம்யம் உபைதி -என்கிறபடி –
தன்னோடு சாம்யா பத்தியை கொடுக்கும் .
கவி சொல்ல வம்மின் என்று
இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை —
இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களை பாழே போக்காதே -வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி –
இவ் விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோள் என்று –

8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
வழியை தரும் நாங்கள் வானவர் ஈசன் நிற்க -என்றும் ,
தன்னாகவே கொண்டு -என்றும்
சொல்லுகையாலே -இவ் விஷயத்தை கவி பாடினால் சித்திப்பது பகவத் அனுபவ
பரம சாம்யா பத்தி யாதிகள் என்று -முக்த ஐஸ் வர்யமான பேற்றை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..
அதாவது –
இப்படி தம்முடைய உபதேசத்தாலே –
சேவா ஸ்வ விருத்தி ராக்யயாதா -என்று
நிஹீநதரர் ஆகையாலே -ஸ்வ விருத்தியாக சொல்லப் பட்ட அப்ப்ராப்த விஷய சேவையை மாற்றி –
சாயாவா சத்வமனுகச்சேத் –
சா கிமர்த்தம் ந சேவ்யதே – விஹகேஸ்வர சம்ஹிதை -என்று
இவ் விஷயத்தை சேவிப்பான் என்றும் -எத்தைப் பற்ற இவ் விஷயம் சேவிக்கப் படாது
ஒழிகிறது என்றும் -விதிக்கும் படி ப்ராப்தமான இவ் விஷயத்திலே –
புகழு நல் ஒருவனில் -படியே தம்முடைய வாசிக விருத்தியிலே மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் என்கை-

(ஆக -மூன்றாம் பத்தில் -சர்வ வியாபகத்வம் -வெளியிட்டு அருளி
அவன் வண்மைக்கும் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்துக்கும் அனுரூபமான மோக்ஷத்தைக் காட்டிக் கொடுக்க
அதன் பலமாக ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் ஒருவாறு பெற்றமையையும்
அதனால் பெற்ற ப்ரீதி உள்ளடங்காமல் தலைமண்டியிட்டுச் சென்றமையையும்
அவன் அளவோடு நில்லாமல் அடியார் அடியார் அடியார்கள் அளவும் செல்ல வளர்ந்தமையையும்
மீண்டும் பகவத் அனுபவத்தில் விடாயைப் பெற்றமையையும்
அவனை ஸ்தோத்ரம் பண்ணி நிரதிசய ஆனந்தம் பெற்றமையையும்
பரோபதேசம் செய்தமையும் அருளிச் செய்கிறார்-என்றவாறு )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: