ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –219–

நான்காம் பிரகரணம்-

சூரணை-219-

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண –

(உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10– )

அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ( ஐயம் திரிபு மறதி) ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –
அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –

அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –

(த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும்
மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

தத் த்யாக பிரகாரத்தையும்
நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

தத் பஜன பிரகாரத்தையும்
பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-
அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

பஜன ஆலம்பமான மந்தரத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10–உபதேசித்து –
அங்கு இருப்பது நாமம் -மட்டுமே –
மா முனிகள் மந்த்ரம் -அதே பலன் கிட்டும் என்பதால் -)

பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –

(சௌலப்யம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -எளியவனைச் சொல்லி –
சரணம் -பஜனீயத்வம் -பின்பு அஹம் -கேட்ட ஒருவனும் மறந்தான் அங்கு
இங்கு பரத்வம் சொல்லி-பஜனீயத்வம்- பின்பு ஸுவ்லப்யம் –

அபராத சஹத்வம் –
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

சீலவத்தை –
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

ஸ்வ ஆராததை –
பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

ஆஸ்ரயண ரஸ்யத்தை –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆர்ஜவம் –
ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

சாத்ம்ய போக பரதத்வம் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
என் அருகலிலானே–1-9-2-ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
என் ஓக்கலையானே –1-9-4-
என் நெஞ்சி னுளானே–1-9-5-எனது உச்சி யுளானே–1-9-10-

பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-
மார்க்கங்களுக்குள் சாம்யம் இங்கு -அதிகாரிகளுக்குள் சாம்யம் த்வார த்ரயத்தால் –

ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு -)

அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
(சகல பலப்ரதன் விஷ்ணு- வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் )

ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று (வணக்குடை தவ நெறி நின்று )
தேவதாந்த்ரங்கள் பக்கல் பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்தி கணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,
ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -1-7-2-என்றும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -1-7-2–என்றும் ,
அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-
(கார்க்கி -அக்ஷரம் -ஆத்மா பொதுவாக அநேக இடங்களில் -இல்லது உள்ளதும் அல்லது அவன் உரு –
மாறும் பிரகிருதி போலவும் மாறாத ஆத்மா போல அல்லவே அவனது
பிரதானம் பிரகிருதி ஷரம்–லயம் இறுதியில் பிரக்ருதியில் லயம் -அழியாததால் அதையும் அக்ஷரம் இங்கு-
ப்ருஹதாரண்யம் அக்ஷராத் பர-அத்தைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா –
அக்ஷராத் பரதகா பர -அதிலும் உயர்ந்த பரமாத்மா -பரதா பரன்-இத்தையே பரபரன் ஆழ்வார் -அவை முழுதுண்ட பரபரன் –
ஷர பக்த ஜீவன் என்றும் சில இடங்களில் -அக்ஷர முக்த நித்ய ஜீவன் -த்வாவிமவ் புருஷ லோக கீதையில் -இந்த அர்த்தம் )

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –
உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று
ஸ்வ கேவல கிருபையாலே –
ஞான அனுதய – அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை
இவருக்கு வாசனையோடு போக்கி-
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –
இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –
பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய் காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் ,
நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்றும்-
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –
எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையர் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –

நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –
என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய ( கருமங்கள் )நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –
(அஹம் த்வா -என்று அவனைப் போல் இல்லாமல் நீயும் நானும் ஆழ்வார் )
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள்
ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி
திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –

திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் –
ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் –
அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
(த்யாஜ்ய – தோஷ – பரித்யாக க்ரமத்தை
உபாதேய – குண – சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து )
அதாவது
வீடு மின் முற்றத்திலே –1-2-
-வீடு மின் முற்றவும் -1-2-1-என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் 1-2-2–என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து 1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்

வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறை பற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்

-பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
( குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் ஞால நாதன் )

-புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஓர் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலவானாய் –

அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1-என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்

அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-9-11-என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து-
(ஆழியால் இரவியை மறைத்து ஜயத்ரதனை கொல்வித்ததும் -போல்வன -அவன் நேர்மை ஆர்ஜவம் செவ்வியனாக
-அவன் தலை அங்கே போய் விழ மர்மத்தையும் சொல்லிக் கொடுத்து -தன்னை அமைத்துக் கொள்வதும் உதாரணம் -)

போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1-என்று தொடங்கி –
உச்சி உளானே -1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து
(திரு முடி சேவையும் ஆழ்வார் திரு நகரியிலே இன்றும் சேவை உண்டே )

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் –1-10-2- என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்

உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –
(கழித்து தொழுமின் -அவனைத் தொழுதால் -துர்லபம் என்பதால் மீண்டும் -பஜனத்தால்-
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே
தரும் அவ்வரும் பயனாய திரு மகளார் கேள்வன் –
உத்யோகத்தே–அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே போலே )

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று
அதாவது
பிணக்கற 1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா –-ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: