ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –99/100–

சூரணை -99-

இனி மேல் இவருடைய இந்த பக்தி தான் கர்ம ஞான சாத்யையாய் –
பகவத் பிராப்தி சாதன பூதையாய் இருக்கும் உபாசகர் பக்தியிலும் –
பிரபன்னர் பகவான் பக்கல் அர்த்தித்து பெறும் கைங்கர்ய உபகரண – பக்தியிலும்
(பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குணங்களை அனுபவிக்க ப்ரீதி வந்து அதனால் கைங்கர்யம் –
ஸாத்ய பக்தி -அவனால் பெற்றது -ருசி வளர)
வ்யாவிருத்தை என்னும் இடம் அறிவிக்கைக்காக –
பிரதமம் சாதன பக்தி வேஷத்தை தர்சிப்பிகிறார் இதில் –

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து
2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்
3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு
4-ஊன் வாடப் பொருப்பிடைத் தான் வருந்தி ( காய கிலேசம் )
5-துன்ப வினைகளை விடுத்து-( ஞான யோக ஆரம்ப வினைகளை -விரோதி பாபங்களை போக்கி )
6-விவேக சமாதிகள் வளர-( சாதன சப்தகம் )
7-எட்டு நீக்கி ( பஞ்ச கிலேசங்கள் -தாப த்ரயங்கள் நீக்கி )
8-எட்டும் இட்டு (அஷ்டாக்ஷரம் -அஷ்ட வித பூக்கள்- எண் பகர் பூவும் கொணர்ந்து )
9-எட்டினாய பேதப் பூவில் சாந்தோடு (சாஷ்டாங்க பிரமாணம் -மனஸ் அஹங்காரம் புத்தி -தலை -கைகள் கால்கள் )
10-தேவ கார்யம் செய்து-(திருவாராதனம்)
11-உள்ளம் தூயராய்
12-வாரி புன் புல வகத்தினுள் இளைப்பினை அடையவே விளக்கினைக் கண்டு (ஆத்ம சாஷாத்காரம் )
13-யோக நீதி நண்ணி
அறம் திகழும் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும் அரும் பெறும் சுடரை
கண்கள் சிவந்ததிற்படியே மனவுட்கொண்டு (பக்தி யோகம் செய்ய செய்ய தர்சன சமானாகார பரமாத்மா சாஷாத்காரம் )
14-நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய்
கனவில் மிக்க தர்சன சமமாய்
ஆகத்து புல்கு மத்யர்த்த பிரியமாய் வைகும்
சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத
அநந்ய பிரயோஜனமாய்
வேதன உபாசன சேவ அத்யானாதிகள் என்று சொல்லும் அது
சாத்திய ( கர்ம ஞானங்களால் சாத்தியமான ) சாதன பக்தி யாக சாஸ்திர சித்தம்-

(க்யாத குலங்களில் -புகழ் நிறைந்த மேல் குலங்களில் / விளக்கினை -இங்கு ஆத்மாவை /
அரும் பெரும் சுடர் -இங்கு பரமாத்மாவை-
உள்ளம் தூயராய் –முடிய கர்மத்தைச் சொல்லி -யோக நீதி நண்ணி -முடிய ஞானத்தைச் சொல்லுகிறது )

1-ஜென்மாந்தர சஹஸ்ர நல் தவங்களாலே -அதாவது –
ஜென்மாந்தர சஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி :
நராணாம் ஷீண பாபானாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –ஸ்ம்ருதி –என்றும்
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எல்லாம்–திருச்சந்த –75 -என்றும்
சொல்லுகிற படியே ஜென்மாந்திர சஹஸ்ரங்களிலே த்ரிவித பரித்யாக
பூர்வமாக –பகவத் சமாராதன ரூபேண அனுஷ்டிதங்களான சத்கர்மங்களாலே –

க்யாத குலங்களில் பிறந்து –
அதாவது
ஸூசினாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே-அதவா
யோகிநாமேவ குலே மஹதி தீமதாம்-ஸ்ரீ கீதை -6-41–
(-யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தில் நின்றும்-பிரஷ்ட- நழுவினவன்
பரிசுத்தர்களும் ஸ்ரீ மான்களுமானவர்களுடைய குலத்தில் பிறக்கிறான் –
அன்றிக்கே யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஞானிகளுமானவர்களுடைய பெரிய குலத்தில் பிறக்கிறான் ) என்றும்
ஜெனித்வாஹம் வம்சே மஹதி ஜகதி க்யாத யசசாம் சுசினாம்
யுக்தாநாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்—ஸ்தோத்ர ரத்னம் -61–
( நான் உலகில் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும் பரிசுத்தர்களும் யோகம் செய்து கொண்டு இருப்பவர்களும்
குணமயமான பிரகிருதி ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்திலே பிறந்து )
என்றும் சொல்லுகிறபடி -தத்வ வித்துகளாய் -பரம யோகிகள் என்று ஜகத் பிரசித்தம் ஆனவர்கள் உடைய குலங்களில் பிறந்து –

2-எழுதி வாசித்து தத்வஜ்ஞராய் –
அதாவது –
தெரித்து எழுதி வாசித்து கேட்டும் -நான்முகன் -63-என்கிறபடியே
பகவத் விஷயத்தை அனுசந்தித்து தத் விஷயமான சப்தங்களை லிகிப்பது வாசிப்பது பிறர் சொல்ல கேட்பதாய் கொண்டு
இந்த சாஸ்திர அப்யாச முகேன பிறந்த தத்வ ஞானமுடையராய் –

3-குளித்து ஓதி உரு எண்ணும் அந்தி ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு –
அதாவது –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -திருமாலை -25-என்கிறபடியே -உபாசன அங்கமான -நித்ய கர்ம அனுஷ்டான
உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்யர்த்தமான ஸ்நானத்தை பண்ணி –
ஓதி உரு எண்ணும் அந்தி–முதல் திருவந்தாதி -33- -என்றும் –
ஐ வேள்வி —பெரிய திருமொழி -3-8-4-என்றும்
அறு தொழில் அந்தணர் –திரு எழு கூற்று இருக்கை -என்றும் -சொல்லுகிற
சந்த்யாவந்தன காயத்ரி ஜபம் என்ன –
தேய யஜ்ஞம் -பித்ரு யஜ்ஞம் -பூத யஜ்ஞம் -மனுஷ்ய யஜ்ஞம் -ப்ரஹ்ம யஜ்ஞம் -ஆகிய
பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்ன
அத்யயன –அத்யாபன -யஜன -யாஜன -தான -பிரதிக்ரகங்கள் -ஆகிய ஷட் கர்மங்கள் என்ன-
இப்படி இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூரணராய்-

4-ஊன் வாட பொருப்பிடை தாம் வருந்தி –
அதாவது
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு -பெரிய திருமொழி -3-2-1-என்றும்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும்–மூன்றாம் திருவந்தாதி -78–என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து -உடலம் தாம் வருந்தி—பெரிய திருமடல் -12-என்றும்
சொல்லுகிற படி நித்ய கர்மாதிகளை அவிகலமாக அனுஷ்டிக்கையாலே
தபசர்ய யோக்யதை பிறந்தவாறே -காய சோஷன அர்த்தமாக -அசநத்தை குறைத்து –
பிராண தாரணத்துக்கு தக்க அளவாக்கி -உஷ்ண காலத்திலேயே பர்வதாக்ரத்திலும் –
பஞ்ச அக்னியில் மத்தியிலும் நின்றும் -சீத காலங்களில் அகாக்யமான தடாகங்களில் மூழ்கிக் கிடந்தும் –
ஜீர்ண பர்ண பல அசநராயும் –இப்படி தபச் சர்யையாலே சரீரத்தை சோஷிப்பித்து ( வாடச் செய்து )–

5-துன்ப வினைகளை விடுத்து –
அதாவது –
கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே மேவு துன்ப வினைகளை விடுத்து -திருவாய் -3-2-8-என்கிற படியே
தில தைலாதிவத்-( எள்ளில் எண்ணெய் போன்று-ஆதி -தாரு வன்னிவத் -அரணிக்கட்டைக்குள் நெருப்பு போலே )
ஆத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற
துக்க ஹேதுவான பாபங்களை -தர்மேன பாப மபநுததி-தைத்ரியம் –
( நாள்தோறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களை போக்குகிறான் ) -என்கிற படியே போக்கி –

6-விவேக சமாதிகள் வளர –
விவேகாதிகள் -சமாதிகள் -வளர –
அதாவது –
இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..
( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )

இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காய சுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் )
என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள
அன்னத்தால் உண்டான காய சுத்தி -(காயம் -அந்தக்கரணம் -மனஸ் )
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் /பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )
ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில்
ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது )
என்றும் சொல்லுகிற இடங்களிலும் -சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..

விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..
யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் —
காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –

அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி-
இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )

கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் – சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே
பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –

கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே –
சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –( தன் நலம் அற்று பிறர் துன்பம் பொறாமை )
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல்
அன்றிக்கே
நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .அது இல்லாமை- அநபிதியை

அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –
சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —
அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –
அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–
அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி
தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய
அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –
அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது என்றபடி )

இனி–சமாதிகளில் – -அதாவது –
சமம் ஆவது அந்த கரண நியமனம் –
தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்
சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்
தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் –
என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..
ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-
( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும்
சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே ,
உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..
மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

7-எட்டு நீக்கி-
அதாவது
ஈனமாய எட்டும் நீக்கி –திருச்சந்த -114–என்று
ஞான சங்கோசதயா ஆத்மாவுக்கு குறையான அவித்யாதிகள் ஐந்தும் ,
( அவித்யை -செருக்கு -இராகம் -த்வேஷம் அபிநிவேசம் )
சரீர சம்பந்த பிரயுக்தமான தாப த்ரயங்களும் ஆகிற எட்டையும் போக்கி ..

துன்ப வினைகளை விடுத்து -அதாவது –
கீழேயும் கர்ம விமோசனம் சொல்லிற்றே என்னில் – அங்கு சொல்லிற்று ஞான உத்பத்தி விரோத
பிராசீன கர்ம மாதரம் ஆகையால் விரோதம் இல்லை –
அன்றிக்கே
ஆத்மாவுக்கு பொல்லாங்கை பண்ணுவதான
காம குரோத லோப மோஹ மத மாத்சர்ய அஞ்ஞான அசூயை ஆகிய எட்டையும் போக்கி என்னவாம்-
காமம் ஆவது-அர்தித்த பதார்த்தம் அனுபவித்து அல்லாது நிற்க ஒண்ணா தசை –
குரோதமாவது -அதின் கார்யமாய் அர்தித்த பதார்த்த அலாபத்தில் சந்நிஹிதர் பக்கல் பிறக்கும் சீற்றம் ..
லோபம் ஆவது -சந்நிஹிதர் பதார்த்தத்தில் அதி பிராவண்யம் ..
மோஹம் ஆவது கர்தவ்ய அகர்தவ்யங்களை விவேகிக்க மாட்டாது ஒழிகை .
மதம் ஆவது அர்தாதி லாபத்தில் வரும் களிப்பு-
மாத்சர்யம் ஆவது-பர சமிர்தியை பொறாமையை அனுஷ்டான பர்யந்தமாக நடத்துகை ..
(அஸூயை -குணத்தை குற்றமாக கொள்ளுவது வாத்சல்யத்துக்கு எதிர்ச் சொல்)
அஞ்ஞானம் ஆவது -இவற்றால் மேல் வரும் அநர்த்தம் நிரூபியாமை ..
அசூயை ஆவது -குணங்களில் தோஷத்தை ஆவிஷ்கரிக்கை ..
ஏவம் பூதங்களான இவற்றைப் போக்கி என்ற படி –

8-எட்டும் இட்டு-
அதாவது –
இன மலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும் –
கந்த மா மலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -3-5-6-என்றும் -சொல்லுகிற படி
ஓர் ஒரு அஷரங்கள் பரிமளோத்தரமான புஷ்பம் போலே அவனுக்கு போக்யமாம் படி இருக்கையாலே ,
அஷ்ட வித புஷ்பம் சமர்பிப்பாரை போலே திரு மந்த்ரத்தை அனுசந்தித்து ,
அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே–திருச்சந்த –77 -என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள்
வல்லர் வானம் ஆளவே –திருச்சந்த –78-என்றும் சொல்லக் கடவதிறே
அன்றிக்கே –
அஹிம்சா பிரதமம் புஷ்பம் ,புஷ்பம் இந்திரிய நிக்ரக -சர்வ பூத தயா புஷ்பம் ,
ஷமா புஷ்பம் விசேஷத-ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் -புஷ்பம் தவைவச
சத்யம் அஷ்ட வித புஷ்பம் விஷ்ணோ பிரதீகரம் பவேத் -என்கிற படியே
அஹிம்சாத் அஷ்ட வித புஷ்பங்களையும் இட்டுமாம் —

கீழே விவேக சமாதிகள்
என்றதில் அந்தர் பூதங்களானவை இதிலும் வந்ததாகிலும் ஈஸ்வரனுக்கு
இவற்றை போக்யத்வேன அனுசந்தித்து அனுஷ்டிக்கையைச் சொல்கிறது
ஆகையாலே விரோதமில்லை –ஆகையிலே இவற்றை புஷ்ப சமர்பணமாக சொல்கிறது —
(ஞான யோகத்துக்கு மனஸ் ஸூத்திக்காக அங்கே சொன்னது )

9-எட்டினாய பேத பூவில் சந்தொடு தேவ கார்யம் செய்து –
அதாவது –
எட்டினாய பேதமோடு இறைஞ்சி -திருச்சந்த -77-என்கிற படியே
மநோ புத்ய அபிமாநேன சஹன்யச்ய தராதலே
கூர்ம வச்சதுர : பாதான் சிரஸ் தத் ரைவ பஞ்சமம் -என்கிற படியே ,
பக்நாபிமானனாய் விழுகையும் , மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனே விஷயம் ஆகையும் ,
பாத த்வயங்களும் ,கர த்வயங்களும் ,சிரசும் பூமியிலே பொருந்துகுகை யாகிற
அஷ்டாங்க பிரமாணத்தைப் பண்ணி ,
பூவில் புகையும் விளக்கும் சாந்தும் நீரும் மலிந்து –திருவாய் -5-2-9-என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல வாய்ந்து கொண்டு –திருவாய் -10-2-10-என்கிற படியே
புஷ்பாங்கராதிகளான-( அங்கராதிகள் -சந்தனம் ) சாமராதந உபகரணங்களைப் பல சங்க கர்துவங்களாகிற-துராலும் ,
மயிரும் ,புழுவும் படாத படி ஆராய்ந்து மிகவும் சம்பாதித்து கொண்டு ,

10-தேவ கார்யம் செய்து–பெரியாழ்வார் -4-4-1 -என்கிற படியே பகவத் சமாராதனத்தை செய்து –

11-உள்ளம் தூயராய் –
அதாவது –
ஒன்றி நின்று நல் தவம் செய்து ,ஊழி ஊழி தோறு எல்லாம் நின்று ,
நின்றவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்—திருச்சந்த -75-என்கிற படியே ,
நித்ய கர்ம அனுஷ்டானம் தொடங்கி,பகவத் ஆராதன பர்யந்தமாக பண்ணும் ,
த்ரிவித பரித்யாக பூர்வகமான கர்ம அனுஷ்டானத்தாலும் ,பகவத் குண அனுசந்தாதாலும் –
காஷயே கர்மபி :பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
( கர்மங்களைச் செய்வதனால் பாபம் அழிந்த அளவில் பின்னர் ஞானம் தோன்றுகிறது )-என்கிற படி
ஜ்ஞான யோகார்ஹமாம்படி ம்ருதீத கஷாயர் ஆகையாலே ,பரிசுத்த அந்த கரணராய்-

12-வாரிப் புன்புல வகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினை கண்டு –
அதாவது
பிரகீர்னே விஷயாரண்யே பிரதாவந்தம் பிரமாதிகம் ,
ஜஞாநான்குசேன க்ருஹ்நீயாத் வஸ்ய இத்திரிய தந்தினம் –
( பரந்து இருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டு இருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான
இந்த்ரியங்களாகிற யானையை த்யாஜ்ய உபாதேய ஞானம் ஆகிற அங்குசத்தால் வசப்படுத்த வேண்டும் ) என்று
விஸ்தீரணமான விஷய அடவியிலே ஓடா நிற்ப்பதாய் ,அகப்பட்டாரை கொல்லுமதான இந்திரியமாகிற யானையை ,
த்யாஜ்யோ உபாதேய விவேக ஞானம் ஆகிற அங்குசத்தால் ,வஸ்யமாகப் பண்ணுவான் என்கிற படியே –
வாரிச் சுருக்கி மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -முதல் திருவந்தாதி -47–என்று
மதித்த யானைகளை தண்ணீரிலே செறுப்பிக்குமா போலே ,இந்திரியங்கள் ஆகிற
மத ஹஸ்திகளை விஷய அனுபவம் ஆகிற போகத்தை குலைத்து -அவ்வவளவும் அன்றிக்கே –
விஷயங்கள் நடமாடும் இடத்தில் போகாதே -பிரத்யக் வஸ்து விஷயமாகை ஆகிற செவ்வியிலே நிறுத்தி என்றும் –

புன்புல வழி அடைத்து ,அரக்கு இலச்சினை செய்து ,நன் புல வழி திறந்து ,ஞான நல் சுடர் கொளீ இ-திருச்சந்த -76- -என்று
அல்ப அஸ்த்ராதித்வ தோஷ துஷ்டமான சூத்திர விஷயங்களை பற்றிப் போகிற இந்திரிய மார்க்கத்தை நிரோதித்து ,
அவற்றினுடைய சூத்திர அனுசந்தத்தாலே ,வாசனா அனுவர்தியும் அறும் படி ,அத்தை உறைப்பித்து ,
விலஷண விஷயத்தில் இந்திரிய மார்க்கத்தைப் பிரகாசிப்பித்து நன்றான ஞான பிரபையும் மிகவும் உண்டாக்கி என்றும் –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து –திரு எழு கூற்று இருக்கை -என்று
ஸ்ரோத்ராதி இந்திரியங்கள் ,சப்தாதி விஷயங்களில் போகாமே
உள்ளே அடக்கி என்றும் சொல்லுகிற படியே -நிக்ருஹிதேந்திரிய க்ராமராய்-( க்ராமம் கூட்டம் )

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளைப்பில் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே–திருக்குறும் தாண்டகம் -18–என்கிற
பாட்டில் சொல்லுகிற அடைவிலே –
அவித்யா அஸ்மித ரக த்வேஷா அபிநிவாச பஞ்ச கிலேச–யோக சூத்ரம் –
( அறியாமை செருக்கு ஆசை த்வேஷம் அபிமானம் -என்னும் இவை ஐந்து கிலேசங்கள் ) -என்று சொல்லுகிற
கிலேசங்களின் சஞ்சாரத்தைத் தவிர்த்து ,
நாத்யுச்சரிதம் ..நாதிநீசம்–ஸ்ரீ கீதை –6-11–இத்யாதிகளில் சொல்லுகிற படியே ஓர் ஆசனத்தே இருந்து ,
சம்ப்ரேஷ்ய நாசிகாக்ரம் ஸ்வம் திசச்சா நவ லோகயன்-ஸ்ரீ கீதை -6-13- என்னும் படியே ,
நாசாக்ரன்யச்த-( நாச அக்ர ந்யஸ்த ) லோசனராய் ,ஓர் அளவில் நில்லாத இந்திரியங்களை பிரத்யக்கு ஆக்கி ,
த்யேயமான பகவத் விஷயத்தில் சிநேகத்தை வைத்து ,விடாமல் அனுசந்தித்து ,
சுடர் விட்டு தோன்றுகிற ஞானத்தாலே ,ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை ,
சாஸ்த்ரோத்ரா பிரகாரத்தாலே சாஷாத் கரித்து ,
சத் கர்ம அனுஷ்டானத்திலே ஷீண பாபனாய்
நிர்மல அந்த கரணனானவனுக்கு பகவத் சாஷாத் கரத்துக்கு உறுப்பாக விளையும்
யோக ஜன்ய ஞானம் தான் பிரதமம் ஆத்ம ஸ்வரூபத்தை தர்சித்து கொண்டிறே மேல் போவது ..

விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் –
பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது ..
யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

( ஆறு தடவை மாம் நமஸ்குரு -பக்தர் ஸ்வரூபம் யாதாத்ம்யம் ஏழாவது அத்யாயம் -அடுத்து பல ஸ்தான பெருமை –
அடுத்து தனது மஹாத்ம்யம் -சொல்லி ஒன்பதாவது அத்யாயம் கடைசியில் இந்த ஸ்லோகம் –
ஸூவ தர்ம -கர்ம -ஞான -வைராக்ய -ஸாத்ய பக்தி -பெயரே -சாதனா பக்தியே கீதையில் –
கர்ம ஞானங்களால் கிடைத்த பக்தி என்றபடி -சேதன பிரத்யங்களால் பெற்ற பக்தி)

13-யோக நீதி நண்ணி-
அதாவது –
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள்–திருச்சந்த -63- என்கிற படி
(அந்தர்யாமியில் ஆழ்ந்த திருமழிசைப் பிரான் )யோகம் ஆகிற உபாயத்தாலே கிட்டி ,

அறம் திகழ் மறையோர் மனம் தன்னுள் அமர்ந்து உறையும்
அரும் பெரும் சுடரை ,கண்கள் சிவந்ததில்-படியே மன உள் கொண்டு –
அதாவது
மறம் திகழும் மனம் ஒழித்து ,,வஞ்சம் மாற்றி ,வன் புலன்கள் அடக்கி ,
இடர்பார துன்பம் துறந்து ,இரு முப்பொழுது ஏத்தி ,எல்லை இல்லா
தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் தம் கதியை–பெருமாள் திருமொழி -1-7-என்று
கொலையும் சினமும் கொடுமையாகிய மறத்தால் விளங்கா நின்றுள்ள மனசை வாசனையோடு போக்கி ,
பொய்யை தவிர்ந்து ,வன் புல சேக்களை பட்டி புகாமே கட்டி ,மிக்க துக்கத்தை விளைப்பதான –
பாரமாய பழ வினையை பற்று அறுத்து – ஸ்லாக்கியமாய் இருந்துள்ள -ஆதி நடு அந்தி -ஆகிய மூன்று பொழுதிலும் ஏத்தி
( இருமை பெருமை-ஸ்லாக்கியமாய்- -இரு முப்பொழுது-இரண்டும் மூன்றும் ஐந்தும் – -பஞ்சகால பராயணர்கள் என்றுமாம்),
அளவிறந்த பழைய மரியாதையிலே ,சிலவரால் கலக்க ஒண்ணாத படி ..
நிலை நின்ற வைஷ்ணவர்களான ,ஆந்ரு சம்ச்யோஜ்வல சித்தருக்கு
( ஆந்ரு சம்சயம்- பரம தர்மம்-அறம்-திகழும் உஜ்ஜ்வலம் -கிருபை கொழுந்து விட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் )
பரம ப்ராப்யன் ஆனவன் என்றும் –

மறையோர் மனம் தன்னுள்-
அதாவது –
மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை—பெரிய திருமொழி -7-3-7-என்று
பிராமணர் ஹிருதயங்களை தனக்கு வாசஸ் ஸ்தானமாய் உடையனாய் இருக்கும் -அமரர்கள் அதிபதியை -என்றும் ,
மா தவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை—பெரிய திருமொழி -2-1-1-என்றும் ,
மகா தபஸை உடையராய் இருக்கும் மனுஷ்யர்களுடைய ஹிருதயங்களில் ,
அநந்ய பிரயோஜனனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகின்ற ஸ்வாமி என்றும் -சொல்லுகிற படி ,
பரி சுத்த அந்த கரணரான பரம யோகிகள் ஹிருதயங்களிலே ,-

அரும் பெரும் சுடரை –
அதாவது
ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினைச் சேரும் நெஞ்சினர்–பெருமாள் திருமொழி -2-7-என்னும் படி ,
ஆபரணாத் அலங்குருதனாய் அத்யுஜ்வலமான விக்ரகத்தோடே எழுந்து அருளி இருக்கும் சர்வேஸ்வரனை —

கண்கள் சிவத்தில் படியே –
அதாவது –
கண்கள் சிவந்து–திருவாய் -8-8-1- -என்கிற பாட்டில் சொல்லுகிற படி
அவயவ சோபை–ஆபரண சோபை –ஆயுத சோபை களோடு
காள மேக நிபஸ்யமாய் இருந்துள்ள திவ்ய விக்ரஹத்துடனே–
மன உள் கொண்டு-
கற்றவர் தம் தம் மன உள் கொண்டு – பெரிய திருமொழி -7-3-1–என்று
அறிவு உடையரான யோகிகள் ஆனவர்கள் தம் தம் ஹிருதயங்களில் கொண்டு என்ற படி ..
ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி –

14-நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய் –
அதாவது
நிரந்தரம் நினைப்பதாக–திருச்சந்த -101- -என்றும் ,
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்-பெரிய திருமொழி -3-5-4-என்றும் சொல்லுகிற படியே
அந்த த்யானதுக்கு விச்சேதமும் விஸ்மிருதியும் அற்று –

துடக்கறா மனத்தராய் –
அதாவது –
சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய் -திருச்சந்த -78–என்று சர்வ காலமும்
விஷயாந்தரங்களால் அபஹ்ருதம் ஆகாத பிரேமத்தை உடையார் ஆகையாலே ,
தத் சம்ச்லேஷ வியோகைக சுக துக்காராம் படி -சத்வ சுத்தவ் த்ருவா ஸ்ம்ருதி -சாந்தோக்யம் —
( அந்தக்கரணம் தூய்மை அடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகும் )-என்கிற படி ,
த்யேய வஸ்துவில் துடக்கறாமல் த்ருவ அனு ஸ்ம்ருதியாய் –

கனவில் மிக்க தர்சன சமமாய்-
அதாவது –
கனவில் மிக கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81- -என்று இந்திரியங்களால் கலக்க
ஒண்ணாதபடி மானச ஜ்ஞானத்தாலே ,அழகிதாக கண்டேன் என்னலாம் படி
ஸா ச ஸ்ம்ருதிர் தர்சன சமானகார – ஸ்ரீ பாஷ்யம் -லகு சித்தாந்தம் –
( அந்த நினைவு தானும் கண்ணால் நேரே காண்பது போலே இருப்பது ஓன்று )என்கிற படி
அது தான் பிரத்யஷ சாமானகாரமாய் (தர்சன சமானாகார சாஷாத்காரம் -கையால் அணைக்க முடியாதே )..

ஆகத்து புல்கும் அத்யந்த பிரியமாய்-
அதாவது –
அப்படி தர்சனம் ஆனது தான் –
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு-திருவாய் -10-4-6-என்றும் ,
ஆகத்து அணைப்பார் அணைவரே -முதல் திருவந்தாதி -32-என்றும் ,
எல்லையில் அந்நலம் புல்கு–திருவாய் -1-2-4 -என்றும்
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்—முதல் திருவந்தாதி -50-என்னும் படி ,
அங்கனா பரிஷ்வங்கம் போலே -பிரியோ ஹி ஞானின அத்யர்தமஹம் -ஸ்ரீ கீதை -7-17–என்கிற
ஸ்மிர்தவ்ய விஷய சாரத்தாலே ,தானும் அத்யர்த்த பிரியமாய் —
(பக்திக்கு விஷயமான அவனைப் போலே பக்தியும் அத்யர்த்த ப்ரீதியாய் இருக்குமே )

வைகும் சிறப்பு விட்டு குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய் –
அதாவது –
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் ,மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53-
என்று உன்னுடைய கல்யாண குணங்களிலே விச்சேதம் இன்றியே செல்லுகிற சிந்தையிலும்
காட்டிலும் இனிதோ நீ அவருக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும் பரம பதம் என்றும் –

சிறப்பு விட்டு-
அதாவது –
உலகு படைத்து இத்யாதி–அமுத வெள்ளத்ததானாம் சிறப்பு விட்டு –ஒரு பொருட்கு அசைவோர் அசைக
நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியீர் குறிப்பு–-திருவாசிரியம் -2-என்று
பரத்வ ஸுலப்யாதிகளாலே பரிபூர்ணனான சர்வேஸ்வரன் நிரதிசய போக்யமான திரு அடிகளை அனுபவிக்கையில் உண்டான
அபிநிவேசத்தில் -த்ரவீபூதமாய் ,ஓர் அவயவியாக காண ஒண்ணாத படி மங்கின ஆத்ம வஸ்துவிலே ,
அந்த ஆதாரம் அடியாக பிறந்த விலஷணமான சங்க காமத்ய அவஸ்தைகளை உடைய பக்தியால் விளைகிற
நிரதிசய ரசத்திலே உளனாகையாகிற லாபத்தை விட்டு -சூத்திர புருஷார்தங்களுக்கு கிலேசப் படுவார் அங்கனே கிலேசப் படுக்க –
ஸ்லாக்கியமான ஐஸ்வர்யம் ,–அதில் விலஷணமான ஆத்ம அனுபவம் –அவ்வளவு
இன்றிக்கே பர விலஷணமான மோஷம் -இவற்றைப் பெருமளவு ஆனாலும் ,(எம்மா வீடு பெறினும் வேண்டேன் என்பரே)
சார அசார விவேக ஜ்ஞர்களுடைய ஹிருதயத்தில் அவற்றை ஸ்வீகரிக்கவும் நினைவு உண்டோ என்றும் —

குற்றேவல் என்னாத அநந்ய பிரயோஜனமாய்
உனது பாலே போர் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் பிறப்பின்மை பெற்று
அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு–பெரிய திருவந்தாதி -58-என்று
உன்னுடைய ஸ்மர்யமான தசையே தொடங்கி இனிதான குணங்களிலே பழுத்து ஒழிந்தேன் –பின்பு
ஒருகால் பிறவாமை பெற்று ,திரு அடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணுகை அன்று எனக்கு வேண்டுவது ..
பிறந்த ஞானத்துக்கு மறப்பின்மை எனக்கு வேண்டும் தனமானம் -என்றும் சொல்லுகிற படி
இவ் அனுசந்தானத்தாலே ,தேச விசேஷத்தில் அனுபவத்தையும் உபேஷிக்கும் படி தானே
பரம பிரயோஜனமாய் ரசிக்கையாலே ,அநந்ய பிரயோஜனமாய் ..

வேதன உபாசன சேவா த்யானாதிகள் என்று சொல்லும் அது
சாத்திய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம்-அதாவது
வேதனம் என்றும் , உபாசனம் என்றும் ,சேவை என்றும் ,த்யானம் என்றும் ,
ஏவமாதி சொற்களால் சொல்லப் படுகிற பக்தியானது –
உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய –ஆத்மசித்தி
( கர்மம் ஞானம் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக்கரணத்தை யுடையவனுக்கு )-என்கிற படியே ,
கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது ஓன்று ஆகையாலே -சேதன சாத்தியமாய் –
பகவத் பிரசாதந உபாயதயா – தத் பிராப்தி சாதனமான பக்தியாக ச உப ப்ரும்ஹண வேதாந்த சாஸ்த்ரத்தில்
( இதிகாச புராணங்களுடன் கூடிய வேத சாஸ்திரத்தில் ) சொல்லப் பட்டது என்கை-

——————————

சூரணை-100-

இப்படி உபாசன ரூபமாய் -உபாயமுமாயும் -இருந்துள்ள இது போல் அன்றிக்கே ,
உபேய பூத கைங்கர்ய உபகரணமாக பிரபன்னர் பகவான் பக்கல் அபேஷித்து பெரும்
பக்தி விசேஷத்தை ( யாவதாத்மபாவி – அங்கும் வேண்டுமே ) பிரதி பாதிக்கிறார் மேல் –

ஸ்வீக்ருத சித்த சாதனர்
இத்தை சாத்தியமாக
இரக்க
பிராப்திக்கு முன்னே
சித்திக்கும்-

(இவர்கள் சித்த சாதனர்- ஸாத்ய சாதனர் இல்லையே -பிரபன்னர்
கீழே பார்த்தது ஸாத்ய சாதனம்-ஸூய பிரயத்தனம் இல்லாதவர் –
சித்த வஸ்துவான பெருமானை -சாதனமாக கொண்டு ஸ்வீ கரிப்பவர்கள் –
இத்தை -பக்தியை –
அர்ச்சிராதி கதி -மார்க்கத்துக்கு நடுவில் -தர்சன சமானஹாரா சாஷாத்காரம் கிட்டும் )

அதாவது
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும் ,
த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் பிரபத்யே–கத்யத்ரயம் – -என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்வீகரிக்க பட்ட சித்த சாதனத்தை உடையவர்கள்..
இத்தை –
அதாவது –
இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே ,
பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி ,
பகவத் பக்திம் அபீ பிரயச்சமே -ஸ்தோத்ர ரத்னம் -54-என்றும் ,
ஸ்தான த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ-சரணாகதி கத்யம் -என்றும் ,
( ஸ்லோக த்ர்ய ஸ்தான த்ரய பக்தியை பிரார்த்தாரே)
பரபக்தி ,பரஞான ,பரம பக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ–சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிற படி
பகவான் பக்கலிலே அர்த்திக்க
இமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபம் விஸ்ருஜ்ய ததா நீ மேவ-சரணாகதி கத்யம் –இத்யாதியிலே சொல்லுகிற படி –
சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் என்கை –

(ஸ்தூல சரீரம் ஜன்மாந்தரம் தோறும் உண்டே –ஸூஷ்ம சரீரம் கல்பாதியில் தோன்றி கல்பாந்தம் வரை –
கர்மங்கள் வாசனா ருசி -அநாதி காலம் உண்டே
ஸூஷ்ம சரீரம் இது பஞ்ச பூத ஸூஷ்ம மனஸ் புத்தி அஹங்காரம் இவற்றால் ஆனது )

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: