ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –63 /64 /65 /66 /67 /68 /69 /70—

சூரணை -63-

ஆக தர்ம வீர்யேத்யாதி-சூரணை-58– தொடங்கி இது வரை
இப் பிரபந்த வக்த்ரு வைலஷண்யம் பிரதி பாதித்து -இனி
இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்-

ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,
கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,
திரு மால் அவன் கவி என்றே ,
வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
உரிய சொல் வாய்த்த இது
வேதாதிகளில் ,
பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்
போலே அருளிசெயல் சாரம்-

அதாவது —
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருசை : கரவாண்யஹம்—பாலகாண்டம் -2-42-
( ஸ்ரீ ராமாயணம் காவ்யம் முழுவதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன் )என்று
ஸ்ரீ ராம கதையை சொல்லுவதாக ஸ்ரீ ராமாயணம் என்று உபக்ரமித்து
கங்கா சம்பவ ,ஸூப்ரஹ்மண்ய உத்பத்தி புஷ்பக வர்ண ரூப கதைகளை
பரக்கப் பேசுகையாலே ,அசத் கீர்த்தனம் பண்ணி , வாக் அசுத்தி வந்தது இறே
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ..

நாராயண கதாமிமாம்–பாரதம் ஆதிபர்வம் -என்கிற படி ,நாராயண கதை என்று உபக்ரமித்து ,
சம்பவ பர்வதத்திலே காங்கேயரான ஸ்ரீ பீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக
அநேகருடைய உத்பத்தி பிரகாரங்களை ,விஸ்தரேண பிரதி பாதிக்கை யாலும் ,
-பூசல் பட்டோலை -என்னும் படி பாரத யுத்த பிரகாராதிகளையே பரக்க நின்று
வர்ணித்த படியாலும் ,அசத்கீர்தனத்திலே மிகவும் பரந்து ,அ சுத்த வாக்கை ,
அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் ,வாசம் ஸௌரி கதா லாப கங்க யைவ புநீமஹே–ஸ்ரீ ஹரிவம்சம் -என்று –
( பொருள் அல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினைக்
கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீரால் தூய்மை ஆக்குகிறேன் ) -என்று
அசத் கீர்தனமாகிற காட்டிலே ,அலைந்து புழுதி படைத்த வாக்கை ,பகவத்
கதா லாபமாகிற கங்கையிலே ,சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் இறே
ஸ்ரீ வேத வியாச பகவான் .

(காங்கேயன் -பீஷ்மர் சுப்ரமணியன் இருவரையும் குறிக்கும் –
ஸ்ரீ ராமாயணம் சுப்பிரமணிய உத்பத்தியையும் மஹா பாரதம் பீஷ்மர் உத்பத்தியையும் குறிக்கும் -)

ஸ்ரீ வால்மீகி பகவான் இப்படி அனுதபித்து ,வாக் சுத்தி பண்ணிற்று இலன் ஆகிலும் ,
இந்த நியாயம் அவனுக்கும் ஒக்கும் என்று ,நினைத்து இறே இவர் கூட்டி எடுத்தது ..

ஆக இப்படி உபக்ரமித்ததர்க்குச் சேராத படி அசத் கீர்த்தனம் பண்ணி ,வாக்கை அசுத்தை ஆக்கி
அதுக்கு சுத்தி பண்ண வேண்டாதபடி ,-திரு மாலவன் கவி யாது கற்றேன் -திருவிருத்தம் –48-என்று
ஸ்ரீய பதி என்று அடியிலே வாயோலை இட்ட பிரகாரத்திலே ,
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூதன் அடி மேல் –திருவாய் -6-8-11-என்கிற படியே ,
அந்ய பரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாத படி சப்தங்களைத் தெரிந்து எடுத்து ,
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி திருவாய் -4–5-6-என்கிற படியே விஷயத்துக்கு தகுதியான சொல்லாலே
சொல்லப் பட்டதாய் ,-வாய்த்த வாயிரம்-திருவாய் -2-2-11-என்று வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கு வாய்த்த இப் பிரபந்தம்
வேதேஷு பௌருஷம் ஸூக்தம்
தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்
பாரதே பகவத் கீதா
புராணேஷூ ச வைஷ்ணவம்–
( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் –
மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் )
என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,
தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-

இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே ,
ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் ,பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே ,
பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று
இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

ஆவைக் கல் ஆவை எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை சகட்டை பகட்டை பொருதிய கோயிலில் வாழ்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்து மாலை-111-

கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை -எருதுவை
சகட்டை -சகடாசுரன்
பகட்டை -குவலயாபீடம் யானையையும்
பொருதிய கோயிலில் வாழ் -கொன்று வென்ற திருவரங்கம்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே —
ஆவைக் -உண்மையான பசுவையும்
கல் ஆவை-கல்லினால் செய்யப்பட பசுவையும்
எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த -ஒப்பு என்று கூறி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே –
திருநாம வைபவத்தால் அந்ய சேஷத்வம் கழிந்ததே-

—————————————————————

சூரணை -64-

இனி மேல் இப்படி அருளிச் செயலில் சாரமான இதன் ப்ரமாண்ய அதிசயத்தை
பிரகாசிப்பைகாக ,ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர்
அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,பிரதி பாதியா நின்று கொண்டு ,
ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )
(வலம் -பலம் -பிரபலம் என்றவாறு )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
(பூர்வ மீமாம்சை -கர்மகாண்ட விசாரம் -அபூர்வத்தை ஒத்துக் கொண்டு ஜைமினி -12-அத்தியாயங்கள் –
உத்தர மீமாம்சை –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -4-அத்தியாயங்கள்
கர்ம விசாரம் பண்ணிய பின்பு – அதனாலே ப்ரஹ்ம விசாரம் –அத அதக– முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா
அதாதோ கர்ம ஜிஜ்ஜாசா-பரமத -ஆதி என்றது -அந்நிய பரத்வங்களாலே-இரண்டாலும் – பரிஹரியாமல்-
கர்மம் செய்வதை சொன்னது இவை இரண்டாலும் )
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார்-
ஜீவனைக்காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது என்று காட்டவே )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-
ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் –
(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை -நிந்திக்கும் பொருளைக் காட்டிலும்
வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–—————————————————–
சூரணை -65-

இப்படி இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தவர்
யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் .-

பாஷ்யகாரர்
இது கொண்டு
சூத்திர வாக்யங்கள்
ஒருங்க விடுவர்-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் பண்ணி அருளும் பொழுது
ஸூத்திர வாக்யங்களில் சந்நிதிக்தங்களான அர்த்தங்கள் எல்லாம்
இப் பிரபந்தத்தில் ,ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்க
விட்டு அருளுவர் என்கை-

( சரீராத்மா பாவம் -கடக ஸ்ருதி -கொண்டு பேத ஸ்ருதிகளையும் அபேத ஸ்ருதிகளையும் ஒருங்க விட்டார் அன்றோ
சாமானாதிகரண்யம்-பின்ன பிரவ்ருத்தி -ப்ரஹ்மத்துக்கு விசேஷணம் அனைத்தும்
உபாதானத்வமும் சொல்லி நிர்விகாரத்வமும் நிரூபணம்
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -ஞானாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் -த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -உரு உள்ளது – விலக்ஷணம்- வேறுபட்டு இருக்கும் -யானே நீ என் உடைமையும் நீயே –
ஒற்றுமையும் வேற்றுமையும் ஒருங்கே போகுமே
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
நீராய் –சிவனாய் அயனானாய் –
சரீராத்மா பாவம் மட்டும் இல்லக்கை பிரகார பிரகாரி பாவமும் உண்டே -பரன் திறம் அன்றி மற்று இல்லை
மாறன் விளங்கிய சீர் செந்தமிழ் ஆரணமே -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -பராங்குச பாத பக்தம் )

——————————————————————————————————————————————

சூரணை -66-

அவர் தாம் அருளிச் செய்து அருளுகைக்கு மூலம் எது என்னும்
அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..

அதுக்கு மூலம்
விதயச்ச என்கிற
பரமாச்சார்ய
வசனம்-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் அப்படி செய்து அருளுகைக்கு அடி
விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மனோ னுசாரின–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -20–
(த்வதீயர் -பாகவதர்கள் -பக்தர்கள் -வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள்
தேவரீரைச் சரணமாகப் பற்றி இருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அனுசரித்தவைகளாக ஆகின்றன )என்று
இதம் குரு -இதம் மகார்ஷீ-(ஆரணம் -( இதனைச் செய்க இதனைச் செய்யற்க ) -என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருக்கும் த்வதீயருடைய
ஐஸ் வர்யாதிகளால் கலக்க ஒண்ணாத படி கம்பீரமான
மனசை பின் செல்லும் என்று -இந்த ஸ்ரீ ஆழ்வார் போல்வார் நினைவை
சாஸ்திரங்கள் தான் பின் செல்லுமதாக பரம ஆசார்யரான
ஸ்ரீ ஆளவந்தார் அருளி செய்த வசனம் என்கை-

————————————————————————————————————————

சூரணை -67-

இப்படி அபியுக்தர்கள் ஆனவர்கள் இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள்
நிர்ணயிக்கும் படி ,சகல வேத உப ப்ருஹ்மணங்களிலும் அதி பிரபலமாய் ,
இவ்வளவும் அன்றிக்கே கீழ் சொன்ன படியே ,திராவிட வேதமாக கொண்டு ,
வேத சமமாய் இருக்கிற ஆப்த தமமான இப் பிரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக
இவர் வேறே சில விஷயங்களை எடுப்பான் என் என்கிற சங்கையிலே ,அருளிச் செய்கிறார் ..

ஆப்திக்கு
இவர் சுருதி
மார்கண்டேயன் பார்த்தன்
என்கிற இவை
வியாச மநு பிரமவாதிகளை
வேதம் சொல்லுமா போலே-

அதாவது –
இதில் சொல்லுகிற அர்த்தங்கள் ஆப்த்திக்கு உறுப்பாக இவர் –
சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7-என்றும்
மார்கண்டேயனும் கரியே –திருவாய் -5–2-7-என்றும்
பார்த்தன் தெளிந்து ஒழிந்த–திருவாய் -2-8-6- -என்றும்
ஸ்ருதியையும் ,மார்கண்டேனயனையும் ,பார்த்தனையும் சொல்லுகிறவை –

பரம ஆப்தமான வேதம் –
ச ஹோவாச வியாச :பாராசர்ய –ஆரணம் -(பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாசர் சொன்னார் )என்றும்
யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -யஜுர்வேதம் (எது ஒன்றினை மனுவானவர் சொன்னாரோ அது மருந்து )என்றும்
ப்ரஹ்ம வாதினோ வதந்தி-யஜுர்வேதம் (ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் ) -என்றும்
ஆப்திக்கு உறுப்பாக வ்யாசனையும்,மநுவையும் ,ப்ரஹ்ம வாதிகளையும்
சொல்லுகிறாப் போல் என்கை ..
ஆன பின்பு ,அது தாழ்வு அல்ல –ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்று கருத்து ..

————————————————————-————————————————————-

சூரணை -68-

ஆனால் இத்தை உபப்ருஹ்மணமாக சொன்ன பஷத்தில் ,வேத வ்யாக்யையாமது ஒழிய
வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும்
த்ராவிடீம் பிரம சம்ஹிதாம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –6-என்றும்
திராவிட வேத ஸூக்தை–ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –16-என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம்
இதுக்கு கூடுமோ என்ன அருளி செய்கிறார் ..

பாரத கீதைகளின்
வேத உபநிஷ்த்த்வம் போலே
இதுவும்
வ்யாக்க்யை யானாலும்
வேத ரஹஸ்யமாம்-

(பாரதத்தின் வேதத்வம் போலேயும்
கீதையின் உபநிஷத்த்வம் போலேயும் -பாரதம் பஞ்சம வேதம் -கீதோபநிஷத் –
ரஹஸ்யமாம் -உபநிஷத் ஆகும் -சாந்தோக்யம் என்றவாறு )

இத்தால் கீழே வேத சாம்யம் சொன்ன இடத்தில் சொல்ல வேண்டி இருக்க
அநுத்தமாய் கிடந்தவற்றை இங்கே அருளிச் செய்தார் ஆய்த்து
அதாவது –
வேத உபப்ருஹ்மாணமான மகா பாரதமும் ,அதில் சாரமான ஸ்ரீ கீதையும் ,
வேதாந் அத்யாப யாமாச மகாபாரத பஞ்சமான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
( நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து நிலை நிற்கவே -ஸ்ரீ வில்லி பாரதம் )
பகவத் கீதாஸூபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிற படியே ,
வேதமும் உபநிஷத்தும் ஆகிறாப் போலே
இது
வேத வ்யாக்க்யையான உப ப்ருஹ்மணமே ஆனாலும்
வேத ரகஸ்யமாம் என்கை-
வேத ரஹஸ்யம் ஆவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத் ,கீழே
சாந்தோக்ய சமமாகவே சொல்லிற்று –ஆகையால் இந்த பஷத்திலும் ,
இதின் திராவிட வேதத்வ ஹானி வாராது என்று கருத்து .

( பிரபத்தி ஸ்வதந்த்ர அங்க இரண்டு வகை-ஆகாரங்கள் / ஆச்சார்ய அபிமானம் -இது போலவே-
இதுவும் வேத சாம்யமும் வேத உப ப்ராஹ்மணங்களுக்கும் சாம்யம் -ஆகார த்வயம் உண்டு – )

————————————————————–

சூரணை –69-

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது
தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே –
தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—
சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே
த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டு என்கிறார் .

உதாத்தாதி பத க்ரம ஜடா
வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த
ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல்
எழுத்து அசை சீர் பந்தம் அடி
தொடை நிரை நிரை யோசை தளை இனம்
யாப்பு பாத்துறை பண் இசை தாளம்
பத்து நூறாயிரம்
முதலான செய்கோலம்
இதுக்கும் உண்டு-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் )
இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா கனம் பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி
இரண்டு முறை சொல்லுதல்/கனம் மூன்று முறை சொல்லுதல் / பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – )
ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் )
வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் ..
பர்வாதி என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..

பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் )
ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட அவ்யஹாரம் உண்டு இறே ..
கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி ,
அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல் —

எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும் குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –
வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்

அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்
(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )

சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர்
தே மாங்காய் புளி மாங்காய் பூவிளங்காய் கருவிளங்காய் )
வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம்
தே மாங்கனி புளி மாங்கனி பூவிளங்கனி கருவிளங்கனி)
வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )
பொதுச்சீர் பதினாறும் ,
ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-
(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள்
நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )

பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே
பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் ,
மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே
இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்

அடியாவது –
குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –
(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )

தொடையாவது
மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும்
அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் ,
அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக
ஆக நாற்பத்து மூன்று தொடையும் .

(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை
மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –
அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை
முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )

நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை ..(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம்
அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )

ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை
ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )

தளை யாவது
நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை –
ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை -முதலான ஏழு தளையும்

இனமாவது
தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும் ,,

யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )

பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்

துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே
புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –
செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/
வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )

பண் ஆவது –
முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம்
செந்திரி -பியந்தை – இந்தளம் முதலானவை

இசையாவது –ஸ்வர ஸ்தானம்
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )

தாளமாவது
கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச
தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — )
கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ்
கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம்
சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே
கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் ..
ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட -போன்றவை தாள வேறுபாடுகள் –

பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான
அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது –
பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே
நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11-
என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது
சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்

முதலான என்கையாலே
முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய்
நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய்
மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய்
மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது
( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )

முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது
செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால்
குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

———————————————————–

சூரணை -70-

ஆக இதுக்கு கீழ் திவ்ய பிரபந்தத்துக்கு வேத சாம்யமும் ,
தத் உப ப்ருஹ்மண சாம்யமும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்தார் ..
இங்கன் அன்றிக்கே
வேத ஆவிர்ப்பாவ விசேஷமாய் இவ் ஆழ்வாரால்
நிர்மிதமாக பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று ,இதுக்கு இன்னும் ஒரு
யோஜனை பண்ணுகிறார் மேல் .-

அதவா
வேத வேத்ய ந்யாயத்தாலே ,
பரத்வ பர முது வேதம்
வியூஹ வியாப்தி அவதரணங்களில்
ஓதின நீதி
கேட்ட மனு
படு கதைகளாய்
ஆக மூர்த்தியில்
பண்ணின தமிழ் ஆனவாறே
வேதத்தை திராவிடமாகச் செய்தார் என்னும்-

(வேத வேத்ய ந்யாயத்தாலே ,
பரத்வ பர முது வேதம்- வியூஹத்தில் ஓதின நீதியாய் -வியாப்தி யிலே கேட்ட மனுவாய் –
அவதரணங்களிலே படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆயிற்று –
ஆதலால் வேதத்தை திராவிடமாகச் செய்தார்
அப்படி இன்றியும்
வியாப்தி -கரந்த சில இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் பரந்து நிற்றல்
ஓதின நீதி -பாஞ்சராத்ரம்
கேட்ட மனு -மனு தர்ம சாஸ்திரம்
படுகதைகள் -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும்
ஆகமூர்த்தி -அர்ச்சாவதாரம் )-

அதாவது
கீழ் சொன்ன
உபய பிரகாரமும்-வேத சாம்யம் -உப ப்ரஹ்மணம் சாம்யம் – அன்றிக்கே ,
வேத வேதே பரே பும்சி ஜாதே வேத பிராசேத ஸாதா சீத் சாஷாத் ராமயணாத்மநா -பாலகாண்டம் –
(வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும்
பிரசேதஸ்ஸின் புதல்வரான ஸ்ரீ வாலமீகி பகவானிடம் இருந்து ஸ்ரீ ராமாயணமாகப் பிறந்தது ) -என்று
வேத வேத்யனான பரம புருஷன் தசரத புத்ரனே அவதரித்த இடத்தில் ,
அபௌ ருஷேயமான வேதமும் ,
ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் ஸ்ரீ இராமாயண ரூபேண அவதரித்தது என்கிற ந்யாயத்தாலே ,

ஷயந்தமஷ்ய , ரஜஸ ,பராகே-தைத்ரியம் -( இந்த ராக்ஷஸ தாமச குணங்களின் மயமான இப்பிரக்ருதி மண்டலத்தின்
மேலே பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவரான -)
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்–புருஷ ஸூக்தம் –( சூரியனனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்த
பரம புருஷனை நான் அறிவேன் -அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான் )
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயே -யஜுர் வேதம் ( விஷ்ணுவுடைய அந்த உயர்ந்த பரமபதத்தை
நித்ய ஸூரீகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் )
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,சோஸ்நுதே சர்வான் காமான் சக – ப்ரஹ்மணா விபிச்சதா -தைத்ரியம்
( ஹிருதய குகையில் உள்ள இந்த ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாதது
என்று சொல்லப்படும் பரமபதத்தில் அந்த ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் )- இத்யாதிகளாலே
பல விடங்களிலும் ,ஈஸ்வரனுடைய பராவஸ்தையைப் பிரதி பாதிக்கையாலே ,பரத்வத்திலே நோக்காய் ,
-முது வேதம்—திருவாய் -1-6–2-என்கிற படியே
புருஷ புத்தி பிரபவ தோஷம் கந்தம் இல்லாதபடி அநாதித்வேன பழையதாய் இருக்கும் வேதம் ஆனது-

வியூகத்தில் ஓதின நீதியாய் –
அதாவது –
ஷாண் குண்யாத் வாஸூ தேவ பர இதி ச பவான் முக்த போக்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -யுத்த -39-
( தேவரீர் பரவாஸூ திவ்ய மங்கள விக்ரகத்தோடே கூடினவராய் ஆறு குணங்களால் முக்தருக்கு இனியராகா நின்றீர் )
என்கிற படியே ஷாட் குணிய பரி பூர்ணனாய் , முக்த போக்யனாய் இருக்கிற அந்த பரனாவன்
பலாட்யாத் போதாத் சங்கர்ஷணஸ் த்வம் ஹரசி விதனுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத் ,
பிரத்யும்னஸ் சரக்க தர்மவ் நயசி ச பகவன் சக்தி தேஜோ அநிருத்தோ பிப்ராண பாசி தத்வம்
கமயசிச ததா வ்யூஹ்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் யுத்த -39-
(வலிமையோடு கூடின ஞானத்தால் சங்கர்ஷணராகிய நீர் சம்ஹாரத்தைச் செய்கின்றீர் -–சாஸ்திரங்களையும் நன்கு விரிவு படுத்துகின்றீர்–
ப்ரத்யும்னராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் ஸ்ருஷ்ட்டியையும் செய்து தர்மத்தை பரப்புகின்றீர்-
அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு ரஷிக்கவும் செய்து தத்துவத்தையும் பரப்புகின்றீர்-) என்கிற படி
சர்க்காதி நிர்வஹனார்தமாக வியூஹி பவித்த அவஸ்தையில் –

சங்கர்ஷணாதி சத்பாவம் பஜே லோக ஹிதேப்யச கிரமச
பிரளயோத்பத்தி ஸ்த்திபி பிராண்யனுக்ரக பிரயோஜன மதான்யச்ச
சாஸ்த்ர சாஸ்த்தார்த்த தத்பலை தசாஸ் துர்ய ஸூஷூப் த்யாத் யாச்
சதுர் வியூஹேபி லஷயே – ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை
( லோக க்ஷேமார்த்தமாக ஸ்வ இச்சையால் சங்கர்ஷணாதி முதலிய வ்யூஹ நிலைகளை அடைகிறேன் –
முறையாக சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் என்பைகளால் உயிர்களுக்கு அனுக்ரஹம் ஏற்படுகின்றது –
பின்னும் சாஸ்திரம் -சாஸ்திரத்தின் பொருளான தர்மம் – அவற்றாலாய தத்வ ஞானம் முதலிய பயன்களும் இருக்கின்றன –
நான்கு வியூகங்களிலும் துரியம் ஸூஷூப்தி இவை முதலான நிலைகளையும் அறிந்து கோடல் வேண்டும் ) இத்யாதியாலும்

தத்ர ஞான பல த்வந்த் வாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே
ஐஸ் வர்ய வீர்ய சம்பேதாத் ரூபம் பிரத்யும்ன முச்யதே
சக்தி தேஜஸ் சமுத்கர்ஷா தா அநிருத்த தனுர் ஹரே
ஏதே சக்தி மயா வியூஹா குணோன் மேஷ ஸ்வ லஷணா -ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை –
(அந்த வியூகத்தில் ஞானம் பலம் முதலிய குணங்களின் சேர்க்கையால் சங்கர்ஷண திரு உருவம் உண்டாகிறது –
ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யும்னன் திரு மேனி / சக்தி தேஜஸ் மூலம் அநிருத்தன் / இந்த சக்திமயங்களான வியூகங்கள்
குணங்களின் பிரகாசங்களுக்கு இலக்கணங்கள் )இத்யாதியாலும்

அந்த வியூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண பிரதி பாதிக்கைக்காக
பஞ்ச ராத்ரச்ய க்ருஸ்த்னச்ய வக்தா நாராயணா ஸ்வயம்–பாரதம் -(எல்லா பாஞ்ச ராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே )என்கிற படியே
சர்வத்துக்கும் ஆதி வக்தா ஈஸ்வரன் ஆகையாலே
-ஓதினாய் நீதி –இரண்டாம் திருவந்தாதி –48-என்று சொல்லப் பட்ட பாஞ்ச ராத்ரமாய் ஆவிர்பவித்து-

வியாப்தியில் கேட்ட மனுவாய்
அதாவது
இப்படி வியூஹிப்பித்த மாத்ரம் அன்றிக்கே
சர்வ சப்த வாஸ்யனாய்
சர்வ கர்ம சமாராத்யனாய் கொண்டு
சர்வ அந்தர்யாமித்வேன வியாபித்து
நிற்கும் அவஸ்தையில் –

ஆபோ நாரா இதி ப்ராக்தோ ஆபோ வை நர ஸூனவே
தா யதஸ்யாயநம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத –மனு ஸ்ம்ருதி -1-19-
(தண்ணீரானது நரேன் என்ற பரமாத்மாவினிடம் இருந்து தோன்றியது -ஆதலால் நாரம் என்று சொல்லப்படுகிறது –
முன்பு யாது ஒரு காரணத்தால் அந்நீரானது பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்ததோ
அதனால் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் )-இத்யாதியாலும்

பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்–மனு ஸ்ம்ருதி -12–122-
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும்
ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )
ஏநமேக வதந்த்யக்னிம் மருதோன்ய பிரஜாபதீம்
இந்திரமே கேபரே பிராண மபரே ப்ரஹ்ம சாஸ்வதம்–மனு ஸ்ம்ருதி -12-123-
(இவனைச் சிலர் நெருப்பு என்று சொல்கிறார்கள் – வேறு சிலர் மருத்துக்களாவும் சொல்கிறார்கள் -சிலர் பிரமனாகவும் இந்த்ரனாகவும்
மற்றும் பிராணனாகவும் மற்றும் சிலர் நித்தியமான ப்ரஹ்மமாகவும் சொல்கிறார்கள் )
ஏஷ சர்வாணி பூதானி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி
ஜன்ம வ்ருத்தி ஷயைர் நித்யம் சம்சார யதி சக்ரவத்–மனு ஸ்ம்ருதி -12-124 –
(இவன் எல்லா உயிர்களையும் மண் முதலிய ஐந்து ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல் வளர்த்தல் இறத்தல்
என்னும் இவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான் )இத்யாதியாலும்

ச ஆத்மா அங்கான்யன்ய தேவதா-தைத்ரியம் -என்கிற படியே
சர்வ தேவதா சரீரதையா சர்வ கர்ம சாமார்த்யன் –இவன் என்று தோற்றும் படி
பூர்வ பாக உப ப்ரஹ்மணமாய்க் கொண்டு சர்வ அந்தர்யாமிதயா வ்யாப்தியை பிரதி பாதிக்கைக்காக
கேட்ட மனு –நான்முகன்–76–என்கிற படியே
ஆப்தமாய் கேட்கப் பட்ட ,மன்வாதி ஸ்ம்ருதியாய் ஆவீர் பாவித்து-

அவதரணத்தில் படுகதைகளாய்
அதாவது
அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவன் சாது பரித்ராணாதிகளுக்காக ஸ்ரீ ராம ஸ்ரீ கிருக்ஷ்ணாத்ய
அவதாரங்களைப் பண்ணின அவஸ்தையில் தத் அவதார சேஷ்ட்யாதிகளை
பிரதி பாதிக்கைக்காக -படு கதையும் -நான்முகன் -76-என்கிற படியே வ்ருத்த கீர்த்தன ரூபமான-பாடும் கதையாக –
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மகா பாரத இதிகாசங்களாய் ஆவீர் பாவித்து –

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே
அதாவது
அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-
(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் )
என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக –
(நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )

தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே
த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்
தேச கால அதிகாராதிகளிலும்
ஸ்நான போஜனாதிகளிலும்
ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும்
அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும்-பிரமணமான தானும்
சர்வ ஸூலபமாய்
சர்வ அதிகாரமாய்
ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை..

எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாயமொழி )
எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே
இவர் இப்படி அருளிச் செய்தது ..
இது தான்-முது வேதம் தான் பரத்வபரம்-( பண்ணிய தமிழ் ஆக மூர்த்தி பரம் ) -என்கையாலே ஸ்பஷ்டம் இறே ..
வக்த்ரு விசேஷத்தாலே -தெளிந்ததாய் அர்த்த பிரகாசகத்வம் நிறைந்து இருக்குமே இங்கு –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: