ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை 16–

சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூகஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
-ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: