ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் –

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன் ..

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – வள்ளல்
திரு வாளன் சீர்க் கலியன் கார்க் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வ்யாக்யானம் —

முள்ளிச் செழு மலரோர் இத்யாதி—
சப்தாதி விஷயங்களின் சன்னதியிலே -மனஸ்ஸூ பரிதபியாமல்
பகவத் பிராவண்யத்துக்கு அநு குணமாக –
திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளுவதே என்று
ஆழ்வார் திருவடிகளில் பிரேமம் வுடையாருடைய ஈடுபாடாய் இருக்கிறது-
அன்றிக்கே
ஸ்வ விஸ்லேஷத்தில் சாம்சாரிக விஷயங்களிலே – மனஸ்ஸூ பரி தபியாதபடி
ஸ்வ பிரசாதத்தை பிரசாதியாமல் -தாம் மடல் எடுக்க உபக்ரமித்த பாசுரமான
மடலையே தந்து விட்டார் என்றாகவுமாம்

முள்ளிச் செழு மலரோர் தாரான் –நமக்கு அசாதாரணமாய் அத்விதீயமாய் இருக்கிற –
முள்ளிப் பூவை தாராக உடையவர் என்னுதல் -வகுள தாரான் என்னுமாப் போல
அன்றிக்கே –
மலரோ -என்று பாடமான போது ,
நம் அபேக்ஷிதமான முள்ளிச் செழு மலர் மாலையையோ தருகிலர் என்று ஆகவுமாம் –
மலர் -என்றது மாலைக்கு உப லக்ஷணம் –
எதுக்காக தார் தர வேணும் என்றால் –

முளை மதியம் கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – –-
முளைத்து எழுந்த திங்கள் – விரஹிகளாய் இருப்பார்க்கு தாப ஹேது இறே
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -பெரிய திருமொழி -2-7-3- என்றார் இறே –
இவரும் நாட்டாருக்கும் அப்படியே –
சந்திர காந்த கராயதே என்று சந்தர மண்டலம் காந்த -ஸூர்ய மண்டலமாய் இருக்கை
சீதை பிரிந்த பொழுது அனைத்தும் அழகு அற்றவை ஆனது போல –
முளை மதி அங்கு கொள்ளி என்னுதல் –
முளை மதியம் ஆகிற கொள்ளி என்னுதல் –
அம் கொள்ளி –
அழகிய கொள்ளி என்னுதல் –
இது பஞ்ச விஷயத்துக்கு உப லக்ஷணம்
மல்லிகை கமழ் தென்றல் ஈறுமாலோ
வண் குறிஞ்சி இசை தவிருமாலோ- என்றும் –
வாடை தண் வாடை வெவ் வாடையாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ -என்றும் — இறே
விஸ்லேஷத்தில் விஷயங்களின் பாதக துவாரங்கள் இருப்பது –
அது தான் விஷய அநு குணமாய் இருப்பது
ஆகையால் குளிர்ந்த சந்திரனை கொள்ளி போல கண்டு என் ஹ்ருதயம் பரிதபியாதே -ஆழ்வார் பண்ணின உபகாரமே —

வள்ளல் திரு வாளன் சீர்க் கலியன் –-வள்ளல் -பரம உதாரர் ..
திரு வாளன் –
பகவத் பிரத்யா சத்தி ஆகிற ஐஸ்வர்யத்தை உடையவர் ..
வள்ளல் திரு வாளன் –
இவன் ஒவ்தார்யம் பண்ணுகைக்கு உடலான ஐஸ்வர்யம் ..
சீர்க் கலியன் –
பகவத் பக்த்தாதி குணங்களை உடையவர் ..
கார் கலியை வெட்டி –
கலிகன்றி ஆகையாலே -அஞ்ஞானவஹமான கலியைக் கடிந்து ..கலி தோஷம் இறே காம பரவசர் ஆகிறது ..
அப்படி அப்ராப்த விஷயங்களில் , காமம் வராதபடி ..
மருவாளன் தந்தான் மடல் –
திருக் கையிலே மருவி இருக்கிற வாளை உடையவர் ..
பகவத் காமத்துக்கு அநு குணமான திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளினார் ..
மருவாளன் –
பகவத் அனுபவத்தில் உண்டான போக்யதை வடிவில் தொடை கொள்ளலாம் படியானவர் ..
இவள் அம் தண் துழாய் கமழ்தல்.
மரு -பரிமளம் .
மருவு -மருவுதலாய் ..எம்பெருமானை கிட்டுகையை ஸ்வபாவமாக உடையவர் என்றுமாம் ..
அன்றிக்கே
சேதனரைக் கிட்டி ஆளுகிறவர் என்றுமாம் .

ஆகையால் -சேதனரை -தம் படி ஆக்க வேண்டி மடலை உபகரித்து அருளினார் –
மாலையைத் தாராதே மடலை தந்து விட்டார் என்றாகவுமாம் ..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: