திரு வேங்கட மா மலை …அரவின் அணையான் -3
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-
அரவின் அணையான் தான் திரு வேம்கடத்தான் என்று ஆழ்வார்கள் அனுபவித்த படி –
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-
வேங்கட மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதி பிரான் -3
உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-
கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –
பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-
திருவோணத் திரு விழாவில் காந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்
திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்
திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-/நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா -5–4–1-/
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் ஏன் அமுது அன்றோ – அமலனாதி -10-
நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் -11-8-/ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-11-10-/
விரையார் பொழில் வேங்கடவன் -நிமலன் நின்மலன் -நீதி வானவன் -நீள் மதிள் அரங்கத்தம்மான் -அமலனாதி -1-
மந்தி பாய் வட வேங்கட மா மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-அமலனாதி –3-
பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-2 —
வெருவதாள் வாய் வேறுவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் –என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-1-/
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்-9-/
சேலுகளும் வயல்புடை சூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த -10-/
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை
வருவண்டார் கொந்தணைந்த பொழில் கோவில் உலகளப்பான் நிமிர்த்த அந்தணனை
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-7-
துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-
வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி–தாமரைக் கண்ணனுக்கு அன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே -7-3-4- /
உம்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து அரியை –தீம் கரும்பினை தேனை
நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே -5-
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகரில் முனிவனை–
கனை கழல் காணும் கொலோ கயல் கண் எம் காரிகையே -9-9-2-/
பொழில் வேங்கட வேதியனை நணுகும் கொல் என் நன்னுதலே -9-9-9-
—————————–
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-
உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-
உலகமுண்டா பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-
—————————————————-
என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரன் -திருவாய்மொழி -2-7-11-
—————————————————-
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் -இரண்டாம் திருவந்தாதி -28-
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே -46
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் மாநகரம் மா மாட வேளுக்கை
மண்ணகத்த தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தென் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –மூன்றாம் திருவந்தாதி -62-
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply