அருளிச் செயல்களில் பிராட்டி / பெருமாள் திருக்கண்கள் விசேஷணங்கள்-ஸ்ரீ ஸூக்திகள் —

முதலாயிரம் –

பெரியாழ்வார் திருமொழி –

செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும் -1-3-9-

மைத்தடம் கண்ணி யசோதை தன மகனுக்கு -1-5-10-

அம் கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல்லோர்கள் தாம் வந்து முறைப்பட்ட -2-10-10-

மையார்கண் மடவாய்ச்சியார் -3-1-4-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதி இசை பாடிக் குனித்து -3-4-7-

அம்மைத் தடம் கண் மடவாய்ச்சியரும்-3-5-3-

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் -3-6-6-

கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து –3-6-10-

செழும் கயல் கண்ணும் –இம்மகளைப் பெற்ற தாயார் இனித் தரியார் -3-8-5-

ஒண் நிறத்தத் தாமரைச் செங்கண் உலகு அளந்தான் என் மகனை -3-9 -9-

சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க்கண் மடமானே -3-10-2-

மானமரும் மென்னொக்கி வைதேவீ விண்ணப்பம் -3-10-5-

செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் நம்மன்னை நரகம் புகாள்–4-6-8-

————————–

திருப்பாவை –

ஏரார்ந்த கண்ணி யசோதை —1-

போதரிக்கண்ணினாய் -13-

பங்கயக்கண்ணானை -14-

மைத்தடம் கண்ணினாய் -19-

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ -22-

செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று –30

————————————————–

பெருமாள் திருமொழி

அரங்கத்துரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும் ஓளி மதி சேர் திரு முகமும்
கண்டுகொண்டு என்னுள்ளம் மிக வென்று கொலோ உருகு நாளே -1-6-

ஆராத மனக்களிப்போடு அழுத்த கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-7-

மெய்யடியார்கள் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -2-1-

ஒல்லை நாணும் கடைவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு -6-2–

கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து –6-3

கண்ணுற்று அவளை நீ கண்ணாலிட்டுக் கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் -6-5-

நீ உகக்கும் மயிரை ஒண் கண்ணினாரும் அல்லோம் -6-7-

அம்புயத்தடம் கண்ணினன் தாலோ -7-1-

தண்ணம் தாமரைக் கண்ணனே கண்ணா -7–6-

அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -7–8-

வெவ்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை-9-2-

வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி -10-3-

——————————————————

திருச்சந்த விருத்தம் –

விடத்தவாய் ஓர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல் விடுத்து -20-

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
மற்றுமுள்ள வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத -87-

பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தனக்கு பங்கயக் கண்ண-105-

————————————————–

திருமாலை —

மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்துவேனை போதரே என்று
சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -16-

தாமரைக் கண் என்னம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி அரும்புதிருமாலோ-18-

தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப்
பவள வாயும் ஆயசீர் முடியும் தேசம் அடியரோர்க்கு அகலலாமே -20-

———————-

கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையே –திருப்பள்ளி எழுச்சி -11-

—————————

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப் பிரான் அரங்கத் தமலன் முகத்து
காரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே –அமலனாதி பிரான் -8-

அண்டர் கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றிணைக்க காணாவே -10-

—————————

தேவபிரானுடை கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் — கண்ணி நுண் சிறுத்தாம்பு -3-

கண்டுகொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பற்றி அருளினான் -7-

———————————————

பெரிய திருமொழி –

தாமரைக்கண்ணினன்-1-8-1-/எழுதிய தாமரை அன்ன கண்ணும் -2-8-7-/பல இடங்களிலும் உண்டே /

பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவை -2-3-8-

இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -2-5-8-

குவளை யம் கண்ணி கொல்லி யம் பாவை -2-7-1-

பொரு கயல் கண் -2-7-9-பரகால நாயகி

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்க்கு ஆரமுதமானான் -2-10-4-

தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்-2-10-6-

அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் -3–3–7-

கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் -3-4-9-

வேல் நெடும் கண் ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகுண்ட காளை-3-9–7-

வாள் நெடும் கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா -3-10-6-

வாள் நெடும் கண்ணீர் மல்கும் வளையும் சோரும் -5-5-3 / நீல மலர்க் கண் மடவாள் -5-5-10-பரகால நாயகி திருத்தாயார் –

மாழை மான் மட நோக்கி யுன் தோழி -5-8-1-

பைங்கண் யுருவாய் வெருவ நோக்கி -6-6-4-

அம்பன்ன அசோதை தன் சிங்கம் -6-8-5-

நெல்லில் குவளை கண் காட்ட -7-5-10-

வடித்தடம் கண் மலரவளோ வரையாகத்துள் இருப்பாள் என்கின்றாளால் -8-1–5-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர்-9-6-3-

பங்கய மா மலர்க்கண் பரனை எம் பரஞ்சுடரை -9-9-4-

மாழை மான் மட நோக்கியை விட்டு –10-2-7-

மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப-10-2-8-

அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறம் –10-8-10-

மானமரு மென்னோக்கி வைதேவியின் துணையா -11-5-1-

——————————————–

கண்ணிணையும் அரவிந்தம் –திரு நெடும் தாண்டகம் -21-

——————————–

வண் தாமரை நெடும் கண் மாயவனை -மூன்றாம் திருவந்தாதி –84 —

வண் தாமரை நெடும் கண் தேன் அமரும் பூ மேல் திரு -100-

——————————–

எரி கான்ற இவையா வெரி வட்டக் கண்கள் –நான்முகன் -21-

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத்தானத்தின் பதி -73-

—————————

திருவிருத்தம் –

செழு நீர்த் தடுத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண் அழு நீர் துளும்ப அலமருகின்றன -2-

பனிப்பியல் சோரும் தடம் கண்ணி-5-

வெண் முத்தரும்பி வண் பூங்குவளை மடமான் விழிக்கின்றமா யிதழே-9-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர் -15-

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே -18

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான் -23-

ஒரோ குடங்கைக் கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும்-24-

நீலத்தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து –எம்பிரான் கண்ணின் கோலங்களே –39-

வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென்கால் கமலத்தடம் போல் பொலிந்தன –எம்பிரான் தடம் கண்களே -42-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -45-

புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வள்ளி ஒன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன–57-

அழறலர் தாமரைகே கண்ணன் -58-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ கண்ணன் திருமால் திரு முகம் -63-

பிரானார் திருவடிக்கீழ் உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை யுண்கின்றவே-65-

காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு –தூவியும் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே -67-

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே யுதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த வெம்பெருமான் கண்கள் -82-

————————————–

தாமரைக்காடு மலர்க்கண்ணொடு–திருவாசிரியம் -5-

———————————-

வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து சீரார் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் –சிறிய திரு மடல் —

கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ–சிறிய திருமடல்

போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்–சிறிய திருமடல்

—————————————-

கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின் மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்று –பெரிய திருமடல்

கரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணி வரை மேல் பூத்தது போல் –பெரிய திருமடல்

————————————————–

திருவாய் மொழி –

செந்தாமரைக் கண்ணன் /தண் தாமரைக் கண்ணன்/ பெரும் தண் தாமரைக் கண்ணன்/ செந்தாமரைத் தடம் கண் /
கமலக் கண்ணன் / தகும் கோலத் தாமரைக் கண்ணன்/ பைந்தாமரைக் கண்ணன் / கமலத் தடம் பெரும் கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / செய்ய தாமரைக் கண்ணன் /அணி கொள் செந்தாமரைக் கண்
பங்கயக்கண்ணன் /மலர்க் கண்ணன் / செய்ய கண் / கோலச் செந்தாமரைக் கண்ணன் –பல இடங்களில் –

கமலக் கண்ணன் என் கண்ணினுளானே -1-9-8-/ கமலக் கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பான் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண் நுதலானோடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே -1-9-9-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் –ஒவ்வா–3-1-2-

பாவு சீர்க் கண்ணன்–3-4-2-

மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்-4-5-2-

செஞ்சுடர்த் தாமரைக் கண் –5-4-9-

குவளை ஒண் கண் -2-4-2-/

கேழில் ஒண் கண் -2-4-10-/

குவளைத் தடம் கண் -4-6-5-/

குவளை ஒண் மலர்க் கண்-6-5-1–
நெடுங்கண் இளமான் -6-7-10 /

கரும் கண்ணி -திருமேனி மைப்பு ஏறி -கரும் தடம் கண்ணி-6-5-8- -பராங்குச நாயகி -கை தொழுத —
இருந்து அரவிந்தலோசன என்று நைந்து -திருமா மகளும் தாமும் சேர்த்தி சேவித்த கண் அன்றோ –

கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை -6-4-2-

ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் ஆழி யம் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன் -7-7-1-

கள் அவிழ் தாமரைக் கண் -7-8-4-

கண்கள் சிவந்து பெரியவாய் -8-8-1-

மணித் தடம் தாமரைக் காடுகள் போல் திரு மார்பு வாய் கண் கை-8-9-1-

அல்லிக் கமலக் கண்ணன் -8-10-11-

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள் -9-4-1-

அல்லி யம் தாமரைக் கண்ணன் -9-9-1-

தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -9-9-9-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: