அருளிச் செயல்களில் ஷட் ரசங்கள் —

அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அடி போற்றி -திறல்  போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-

அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

———————————————
பெரியாழ்வார் திருமொழி –
நம்முடை நாயகனே —
நான் மறையின் பொருளே —
நாபியில் நல் கமல நான் முகனுக்கு ஒருகால் தம்மனை யானவனே –
தரணி தல முழுதும் தாரையின்னுலகும் தடவிய தன்புறமும் விம்ம வளர்ந்தவனே –
வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே –
ஆயர்கள் போரேறே -1-5-3-
——————————————
சகடமுருள –
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே –
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் –
கரு நிற –
என் கன்றே –
தேனுகனும் முரனும் திண் திரள் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும் ஆனை-
ஆயர்கள் போரேறே –1-5-4-
————————————-
உன் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண் எல்லாம் கண்டேன்
மனத்துள்ளே அஞ்சி மது ஸூதனனே என்று அறிந்தேன்
கண்ணா
என் கார் முகிலே
கடல் வண்ணா
காவலனே –2-3-6-
——————————————-
பெரிய திருமொழி —

ஊரான்
குடந்தை உத்தமன்
ஒரு கால் இருகால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான்
வற்றா வரு புனல் சூழ் பேரான்
பேர் ஆயிரமுடையான்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் –1-5-4-
————————–
கொங்கு அலர்ந்த மலர்க குருந்தம் ஒசித்த கோவலன்
எம்பிரான்
சங்கு தடம் கடல் துயில் கொண்ட
தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம்
பொங்கு நீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சே –1-8 -1-
—————————————
நின்ற மா மருது இற்று வீழ நடந்த
நின்மலன்
நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத்தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதானிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-3-
—————————————–
சோத்த நம்பிஎன்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி
செங்கண் நம்பி
ஆகிலும் தேவர்க்கு எல்லாம் மூத்த நம்பி
முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி
எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-
—————————————————
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்து உரைத்த புனிதன்
பூவை வண்ணன்
அண்ணல் புண்ணியன்
விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-3-8-
——————————————
வேதத்தை
வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை
நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை
அமுதை என்னை யாளுடை யப்பனை–திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-2-
————————————-
அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழி வயலே
அண்டமுறு முழ ஒலியும்
வண்டினங்கள் ஒலியும்
அருமறையின் ஒலியும்
வார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறு மலை கடலின் ஒலி திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் -3-10-5-
——————————————-
சந்தமாய்ச்
சமயமாகிச்
சமய ஐம்பூதமாகி
அந்தமாய்
ஆதியாகி
அருமறையவையுமாய் —
நாங்கை கந்தமார் காவளந்தண் பாடியாய்-களை கண் நீயே -4-6-9-
——————————————–
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே
மருவினிய மைந்தா
அந்தணாலி மாலே
சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே
நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் –இந்தளூராய் -அடியேற்கு இறையும் இரங்காயே –4-9-2-
————————————————
தீ எம்பெருமான்
நீர் எம்பெருமான்
திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான்
தந்தை தந்தை யாவீர்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –4-9-5-
——————————–
மாயவனே
மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன்
பெண்ணாளன்
மண்ணாலான
விண்ணோர் தங்கள் அறவாளன்-என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே–5-5-8-
——————————————
கைம்மான மழ களிற்றைக்
கடல் கிடந்த கருமணியை
மைம்மான மரதகத்தை
மறையுரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்று இனியானைப்
பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னகரத்தே –5-6-1-
———————————-
தாராளன்
தண்ணரங்க வாளன்
பூ மேல் தணியாளன்
முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன்
பின்னைக்கு மணாளன் பெருமை கேட்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-
———————————
கிடந்த நம்பி
குடந்தை மேவிக்
கேழலாய் யுலகை கிடந்த நம்பி
எங்கள் நம்பி
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி
கடியார் இலங்கை உலகை யீரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-1-
——————————————–
திருவுக்கும் திருவாகிய செல்வா
தெய்வத்துக்கு அரசே
செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே
உலகுண்டவொருவா
திரு மார்பா –ஒருவர்க்கு ஆற்றி உய்யும் வகை யன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து —
ஒழியாது அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்ற வம்மானே -7-7-1-
——————————————
கரு மா முகிலுருவா
கனலுருவா
புனலுருவா
பெருமாள் வரையுருவா
பிறவுருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சயனத்து அருமா கடல் அமுதே உனதடியே சரணாமே -7-9-9-
————————————————-
பெரும் புறக்கடலை
அடல் ஏற்றினைப்
பெண்ணை
யாணை
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை
முத்தின் திரள் கோவையைப்
பத்தராவியை
நித்திலத் தொத்தினை
அரும்பினை
அலரை
அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக்
கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-
—————————————-
கைம்மான மதயானை இடர் தீர்த்த கரு முகிலை
கைம்மான மணியை
அணி கொள் மரகதத்தை
எம்மானை எம்பிரானை
ஈசனை
என் மனத்து அம்மானை அடியேன் அடைந்து உந்து போனேனே –8-9-1-
—————————–
மிக்கானை
மறையாய் விரிந்த விளக்கை
என்னுள் புக்கானைப்
புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக்
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -8-9-4-
——————————————-
வலம்புரி யாழியானை
வரையார் திறல் தோளன் தன்னை
புலம் பூரி நூலவனைப்
பொழில் வேங்கட வேதியனை
சிலம்பியலாறுடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நானுக்கும் கொல் என் நன்னுதலே -9-9-9-
—————————————–
வெள்ளியான் கரியான்
மணி நிற வண்ணன்
விண்ணவர் தமக்கு இறை
எமக்கு ஒள்ளியான்
உயர்ந்தான்
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்–திருக் கோட்டியூரானே -9-10-3-
——————————
வங்க மா கடல் வண்ணன்
மா மணி வண்ணன்
விண்ணவர் கோன்
மது மலர்த் தொங்கல் நீண் முடியான்
நெடியான்
படி கடந்தான் –திருக் கோட்டியூரானே -9-10-5-
———————————-
பொன்னை
மா மணியை
அணி யார்ந்ததோர் மின்னை
வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை யாளுடைய ஈசனை
எம்பிரான் தன்னை –யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
———————————–
பத்தராவியைப்
பால் மதியை
அணித் தொத்தை-மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை
மணியை
மணி மாணிக்க வித்தினை –சென்று விண்ணகர் காண்டுமே -10-1-8-
—————————–

திருக் குறுந்தாண்டகம்

நிதியினைப்
பவளத்தூணை
நெறிமையால் நினைய வல்லார் கதியினைக்
கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை
மாலை
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த நிதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –1-
——————————————
காற்றினைப் புனலைத் தீயைக்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை
இமயமேய எழில் மணித் திரளை
இன்ப ஆற்றினை
அமுதம் தன்னை
அவுணன் ஆருயிரை யுண்ட கூற்றினை -குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே –2-
——————————————————-
மூவரில் முதல்வனாய் ஒருவனை
யுலகம் கொண்ட கோவினைக்
குடந்தை மேய குரு மணித் திரளை
இன்பப் பாவினைப்
பச்சைத் தேனைப்
பைம் பொன்னை
அமரர் சென்னிப் பூவினை புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே -6-
——————————–
இம்மையை
மறுமை தன்னை
எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை
விரிந்த சோலை வியன் திருவரங்க மேய செம்மையைக்
கருமை தன்னைத்
திருமலை ஒருமையானை -தன்மையை நினைவார் என் தன தலை மீசை மன்னுவாரே -7-
——————————

நெடும் தாண்டகம்

மின்னுருவாய் முன்னுருவில்
வேத நான்காய்
விளக்கு ஒளியாய்
முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய்
முன்னுருவில் பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் -பிறப்பதற்கே எண்ணாது

எண்ணும் பொன்னுருவாய்
மணி யுருவில் பூதம் ஐந்தாய்
புனலுருவாய்
அனலருவில் திகழும் சோதி
தன்னுருவாய்
என்னுருவில் நின்ற வெந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே– 1-
———————————————
நீரகத்தாய்
நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய்
நிறைந்த கச்சி யூரகத்தாய்
ஒண் துறை நீர் வெக்கா உள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்

உலகமேத்தும் காரகத்தாய்
கார் வானத்துள்ளாய்
கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
பெறாது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே–8-

——————————–

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய்
மதிட்கச்சி யூராய்
பேராய்
கொங்கத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய்
பாற்கடலாய்
பாரின் மேலாய் பனி வரையில் உச்சியாய்
பவள வண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே யுழி தருகேனே–9-
——————————————–

பொன்னானாய்
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்
இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் என்னானாய் என்னலல்லால் என்னறிவேன் ஏழையேனே
உலகமேத்தும் தென்னானாய்
வடவானாய்
குட பாலானாய்
குண பால மதயானாய்
இமையோர்க்கு என்றும் முன்னானாய்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
முதலானாயே -10-
—————————————————-

கல் எடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி யூரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்த்து மல்லரை என்று அட்டாய் என்றும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்றும் சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே –13-
———————————————

திருவாய்மொழி-

வினையேன் வினை தீர் மருந்தானாய்
விண்ணோர் தலைவா
கேசவா
மாமை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே
மாதவா
சினையெய் தலையை மாறாமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாயினைய பெயரினாய் -என்று னைவன் அடியேனே–1-5-6-

—————————————-

மாயோன் தீய வளவாளைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடைப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்
வானோர் தனித் தலைவன்
மலராள் மைந்தன்
எவ்வுயிர்க்கும் தாயோன்
தம்மான்
என்னம்மான் -அம்மா மூர்த்தியைச் சார்ந்தே -1-5-9-
———————————–
சூழல் பழ வல்லான்
தொல்லை யம் காலத்துலகை கேழல் ஒன்றாகி கிடந்த கேசவன்
என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஓசித்தான்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே-1-9-2-
—————————————–

நம்பியைத்
தென் குறுங்குடி நின்ற
அச்செம் பொனே திகழும்
திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியம் சோதியை
எம்பிரானை -என் சொல்லி மறப்பேனோ -1-10-9-
——————————-
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே
பவித்ரனே
கன்னலே
யமுதே
கார் முகிலே
என் கண்ணா -நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே -2-3-7-
—————————————–

வைகுந்தா
மணி வண்ணனே
என் பொல்லாத் திருக் குறளா
என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாய
வானேறே
செய்குந்தா
வரும் தீமை யுண்ணாடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -2-6-1-
—————————————–
எந்தாய்
தண் திருவேங்கடத்துள் நின்றாய்
இலங்கை செற்றாய்
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாயமுதே
உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா
வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-
———————————–
நாரணன்
முழு ஏழு உலகுக்கும் நாதன்
வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்
எந்தை
சீரணங்கமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்
என் மாதவனே –2-7-2-
————————————
பற்பநாபன்
உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
என்னமுதம்
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன்
விசும்போர் பிரான்
எந்தை
தாமோதரனே–2-7-11-
————————————————–
பங்கயக் கண்ணன் என்கோ
பவளச் செவ்வாயன் என்கோ
அங்கதிரடியன் என்கோ
அஞ்சன வண்ணன் என்கோ
செங்கதிர் முடியின் என்கோ
திரு மறு மார்வன் என்கோ
சங்கு சக்கரத்தன் என்கோ
சாதி மாணிக்கத்தையே -3-4-3-
——————————————-
வானவர் ஆதி என்கோ
வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ
வானவர் முற்றும் என்கோ
ஊனமில் செல்வம் என்கோ
ஊனமில் சுவர்க்கம் என்கோ
ஊனமில் மோக்கம் என்கோ
ஓளி மணி வண்ணனையே -3-4-7-
———————————————–
மூவராகிய மூர்த்தியை
முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவமுள்ளன நீக்குவானைத்
தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவதேவனைத்
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனைப்
பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ –3-6-2-
—————————————-
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப்
பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை
மணி வண்ணனைக்
குடக் கூத்தனை
அரவமேறி யலை கடல் அமரும் துயில் கொண்ட வண்ணலை –
இரவு நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ -3-6-3-
———————————————
உடையார்ந்த வாடையன்
கண்டிகையன்
உடை நாணினன்
பொன் முடியன்
மற்றும் பல்கலன்
நடையாவுடைத் திரு நாரணன் -தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே -3-7-4-
————————————
ஏக மூர்த்தி
இரு மூர்த்தி
மூன்று மூர்த்தி
பல மூர்த்தியாகி
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே -உன் ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி யல்லால் மாய்த்ததே -4-3-3-
———————————————-
அரி
என் அம் பொற் சுடரே
செங்கண் கரு முகிலே
எரியே
பவளக்குன்றே
நால் தோள் எந்தாய் யுனதருளே-பிரியா வடிமை என்னைக் கொண்டாய்
குடந்தைத் திருமாலே தறியேன் இனி யூன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-5-8-7-
———————————————-
என்னப்பன்
எனக்காயிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன்
மணியப்பன்
முத்தப்பன்
என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த வப்பன்
தன் ஒப்பார் இல்லப்பன் தந்தான் தனதாள் நிழலே -6-3-9-
——————————————–
உலகமுண்ட பெரு வாயா
உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஓளி மூர்த்தி
நெடியாய்
அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்தெம்பெருமானே
குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
——————————————
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா
கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும்
என் தீர்த்தனே என்னும்
கோலா மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே -7-2-7-
——————————————
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே யானால் சிறந்த நின் தன்மை
யது விது வுது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே
நெய்யின் சுவையே
கடலினுள் அமுதமே
அமுதில் பிறந்த இன் சுவையே
சுவையது பயனே
பின்னை தோள் மணந்த பேராயா -8-1-7-
—————————————–
பெரிய வப்பனைப்
பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை
முனிவர்க்கு உரிய வப்பனை
யமரர் யப்பனை
உலகுக்கோர் தனியப்பன் தன்னை –8-1-11-
—————————————
மாலரி
கேசவன்
நாரணன்
சி மாதவன்
கோவிந்தன்
வைகுந்தன் –என்று என்று ஓலமிட்டு வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-
—————————–
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன்
சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -8-8-1-
——————————
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பானாகித்
தன்னைத்தானே துதித்து
எனக்குத் தேனே
பாலே
கன்னலே
அமுதே
திருமாலிருஞ்சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே -10-7-2-
——————————————–
முனியே
நான்முகன்
முக்கண்ணப்பா
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண்
கரு மாணிக்கமே
என் கள்வா
தனியேன் ஆர் உயிரே
என் தலைமிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-
———————————————

முதல் திருவந்தாதி –

இடந்தது பூமி
எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன்னஞ்ச
கிடந்ததுவும் நீரோத மா கடலே
நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –1-
—————————————-
சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையா மணி விளக்காம்
பூம் பட்டாம்
புல்கும் அணையாம்–திருமாற்கு அரவு -53-
————————–
இரண்டாம் அந்தாதி –

மனத்துள்ளான்
வேங்கடத்தான்
மா கடலான்
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான்
எனப்பலரும் தேவாதி தேவன் எனப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –28-
————————————-
பயின்றது அரங்கம்
திருக்கோட்டி
பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே
பன்னாள் பயின்றது அணி திகழும் சோலை
அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் — 46-
——————————
அத்தியூரான்
புள்ளையூர்வான்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்
முத்தீ மறையாவான்
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான்
எங்கள் பிரான் –96-
————————————
எங்கள் பெருமான்
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால்
திரு மார்பா
பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
கூட மூக்கில் கோயிலாகக் கொண்டு -97-
———————————————
மாலே
நெடியோனே
கண்ணனே
விண்ணவர்க்கு மேலா
வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விழாவின் காய் குன்றினால் வீழ்த்தவனே –என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -100-
————————————–

மூன்றாம் திருவந்தாதி –

நன்கோதும் நால் வேதத்துள்ளான்
நறவிரியும் பொங்கோத அறிவிப் புனல் வண்ணன்
சங்கோதப் பாற்கடலான்
பாம்பணையின் மேலான்
பயின்றுரைப்பார் நூல் கடலான்
நுண்ணறிவினான் — 11-
————————————
சேர்ந்த திருமால் கடல்
குடந்தை
வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை
நிறை விசும்பும்
வாய்ந்த மறை
பாடகம்
அனந்தன்
வண் துழாய்க் கண்ணி இறை பாடியாய விவை -30-
——————————
பாற்கடலும்
வேங்கடமும்
பாம்பும்
பனி விசும்பும்
நூல் கடலும்
நுண்ணூல தாமரை மேல் பாற்பட்டு இருந்தார் மனமும்
இடமாகக் கொண்டான் குருந்து யோசித்த கோபாலகன் -32-
————————————
கைய கனல் ஆழி
கார்க்கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்
வெஞ்சுடர் வாள் செய்ய படை
பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயர் அவர்க்கு –36-
——————————————
விண்ணகரம்
வெக்கா
விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை
மண்ணகத்த தென் குடந்தை
தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு -62-
——————————————-

நான்முகன் திருவந்தாதி

நாகத்தணைக் குடந்தை
வெக்கா
திருவெவ்வுள்
நாகத்தனை யரங்கம்
பேர்
அன்பில்
நாகத்தணைப் பாற்கடல் கிடைக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான் -36-
——————————————
அன்பாவாய்
ஆரமுதமாவாய்
அடியேனுக்கு இன்பாவாய்
எல்லாமும் நீ யாவாய்
பொன் பாவை கேள்வா
கிளர் ஓளி என் கேசவனே-கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள் -59-
—————————————–

திருவிருத்தம்

தீவினைக்கு அரு நஞ்சை
நல்வினைக்கு இன்னமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
அன்று உலகு யீரடியால் தாவின வேற்றை
எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே –89-
————————-

பெரிய திருவந்தாதி –

பாருண்டான்
பாருமிழ்ந்தான்
பாரிடந்தான்
பாராளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால்
பாரிடம் ஆவானும் தானானால் ஆரிடமே மற்றொருவருக்கு ஆவான் புகாவால் அவை –42-

————————————–

சிறிய திருமடல்

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது
மாற்று யாராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது
அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டும் உமிழ்ந்து ஆராத தன்மையான்
ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –ஆராத வெண்ணெய் விழுங்கி —

———————————————
சீரார் திருவேங்கடமே
திருக் கோவலூரே
மதிட் கச்சி யூரகமே
பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே
வெக்காவே
போராலி
தண் கால்
நறையூர்
திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம்
கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர்
விண்ணகரம்
சீரார் கணபுரம்
சேரை
திருவழுந்தூர்
காரார் குடந்தை
கடிகை
கடல் மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை
நீர்மலை
சீராரும் மாலிருஞ்சோலை
திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி
வடமதுரை ஊராய வெல்லாம் ஒழியாமே-
—————————————-

பெரிய திருமடல் –

தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியில் செம்பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய இன்னமுதை
எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை
வெள்ளறையுள் கல்லறை மேல் பொன்னை
மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை
வல்லவாழ்ப் பின்னை மணாளனைப்
பேரில் பிறப்பிலியை
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை
இடவெந்தை ஈசனை
மன்னும் கடல் மல்லை மாயவனை
வானவர் தம் சென்னி மணிச் சுடரைத்
தண் கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத தத்துவத்தை
முத்தினை
அன்னத்தை
மீனை
அரியை
அருமறையை
முன் இவ்வுலகுண்ட மூர்த்தியை
கோவலூர் மன்னும் இடை கழி எம்மாயவனை
பேய் அலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை
அள்ளல் வாய் அன்னம் இறை தேர் அழுந்தூர் எழுஞ்சுடரை
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை
மாலிருஞ்சோலை மணாளனை
கொன்னவிலும் ஆழிப் படையணி
கோட்டியூர் அன்னவுருவின் அரியை
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை
இந்தளூர் அந்தணனை
மன்னு மதிட் கச்சி வேளுக்கை ஆளரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை
வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை
ஊரகத்துள் அன்னவனை
பட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை
வானவர் தம் முன்னவனை
மூழிக் களத்து விளக்கினை
அன்னவனை
ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை
நீர் மலை மேல் மன்னு நான்கும் ஆனவனை
புல்லாணித் தென்னன் தமிழை
வடமொழியை
நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை
நான் வணங்கும் கண்ணனைக்
கண்ணபுரத்தானை
தென்னரையூர் மன்னு மணி மாடாக கோயில் மணாளனை
கன்னவில் தோள் காளையை கண்டு ஆங்கு கை தொழுது
————————————–

இராமானுச நூற்றந்தாதி

தவம் தரும்
செல்வம்
தகவும் தரும்
சலியாப் பிறவிப் பயன்தரும்
தீ வினை பாற்றித்தரும்
பரந்தாமம் எண்ணும் திவம் தரும் –தீதில் ராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே -94-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: