ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-
பெரியாழ்வார் திருமொழி –
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கிய அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய
அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையாலே சப்பாணி –1-6-8-
மின்னிடச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை யடைத்தார்க்கு ஒர் கோல் கொண்டு வா -2-6-8-
தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னளங்காரர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-9-
வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-
நந்தன் முதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பரந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே –3-9-11-
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்று இருந்தானை அங்குத்தைக் கண்டாருளர் –4-1-3-
தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-
——-
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்—-திருப்பாவை 13
———————-
நாச்சியார் திருமொழி
சீதை வாயமுதமுண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று — –2-10-
——————————-
பெருமாள் திருமொழி –
தோடுலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து -2-2-
ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்தத்தும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி —-2-3-
மன்னு புகழ் பதிகம் —கண புரத்தென் கரு மணியே –இராகவனே தாலேலோ -8
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரையலைக்கும் கண புரத்து என் கருமணியே -8-7-
தயரதன் தன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –கண புரத்து என் கரு மணியே -8-9-
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன் -8-11-
——————————————————
திருச் சந்த விருத்தம் –
கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய் ஞாலம் எழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தவிர நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே –31-
மின்னிறத்த எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன்நிறத் தொரின் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-
கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தன தனக்கு உதவவந்திராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ –81-
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்த முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே –92-
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம்மவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –104-
கறுத்து எதிர்ந்த கால நேமி காளனோடு கூட அன்று –வில்லும் வாளும் ஏந்தினாய் –
-குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –106-
காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுந்திரன் மா சினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –107-
———————–
பெரிய திருமொழி
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கனை ஒன்றினால் மடிய விலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடுடன் துணித்த பெம்மான் தன்னை -2-10-5-
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய விடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-
ஆநிரை மேய்த்து அன்று கடலை அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிறை மேகம்
கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-2-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே -5-1-3–
வெற்பால் மாரி பழுதாகி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில்லி ராமனிடம் –புள்ளம் பூதம் குடித்தான் -5-1-4-
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவில் நின்றான்
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே -6-10-5-
பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணர்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி
முன் கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8-6-6-
சூரிமையிலாய பேய்முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மையில்லாத தாடகை மாள நினைத்தவர்
மனம் கொண்ட கோயில் –திருமாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-4-
குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-7-
புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள் எரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ -10-9-1-
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
—————————–
திருவாய் மொழி –
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா -1-5-6-
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே -2-5-7-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஓசித்தாய்-4-3-1-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -6-10-5-
—————————
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானை போர்க்கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்ந்தனவும்
கார்க்கோடு பற்றியான கை–முதல் திருவந்தாதி -27-
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்–இரண்டாம் திருவந்தாதி -15-
——————————————————————————————————————–
ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வாமன அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-
பெரியாழ்வார் திருமொழி –
சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள் –1-4-8-
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்னென்று தானம் விலக்கிய சுக்கிரன்
கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச்சோ –1-8-7-
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ –1-8-8-
வருக வருக வருக விங்கே வாமன நம்பி வருக விங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பி வருக விங்கே -2-9-2-
மா வலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூ வடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாம் அடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றும் –2-10-7-
தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை யுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில் –திருவெள்ளியங்குடி யதுவே -4-10-1-
——————
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும் –நாச்சியார் -12-9-
—————
பெரிய திருமொழி
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்
தூய அரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயானிரப்ப-1-5-5-
வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8-5-
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை -படு மத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்
பாரிடத்தை எயிறுகீற விடந்தானை -வளை மருப்பின் எனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை —
எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலை சயனத்தே -2-5-6-
ஆங்கு மா வலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் –திருவயிந்த்ரபுரமே -3-1-5-
ஏனாகி யுலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய் பெருமானை —
ஆனாயனானானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-
திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-
துள்ளா வருமான வீழ வாளி துரந்தான் இரந்தான் மா வலி மண் -6-7-3-
விடம் தானுடைய வரவும் வெருவச் செருவில் முனை நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
கிடந்தான் வையம் கேழலகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-2-
மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழு உலகும் ஈரடியாகப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-5-
உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஓளி விசும்பில் ஓரடி வைத்து ஓர் அடிக்கும் எய்தாது
மண் என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-8-
———————————-
திருவாய் மொழி
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் -3-3-8-
கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே -3-8-9-
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா வென்று வென்று கூவிக் கூவி நெஞ்சு உருகிக் கண் பனி சோர நின்றால்-4-7-3-
——————–
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை ஓசித்து
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால் மா வலியை
மாணி யாய்க் கொண்டிலையே மண் –இரண்டாம் திருவந்தாதி -89-
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-
——————————————————
ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ நரசிம்ஹ அவதாரங்கள் -ஒரே பாசுரத்தில்-
பெரியாழ்வார் திருமொழி –
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்ததுண்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் –1-2-5-
கோளரியின் இன்னுருவம் கொண்ட அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூறுகிறாள்
குடை வாய் மீளவவன் மகளை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வர காள நன்மேகமவை
கல்லோடு கால் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1-5-2-
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குரலும் அமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –1-5-11-
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு
இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல வெம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த வெங்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் –2-7-7-
முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க -3-6-5-
கொம்பினார் பொழில் வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதில் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே –4-4-9-
தேவுடை மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனலரங்கமே —4-9-9-
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே –5-1-9-
—
பெரிய திருமொழி
மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துரவோன்
உன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நிதி மடுத்து -1-4-8-
தங்காததோர் ஆளறியாட் அவுணன் தன்னை வீட முனிந்தவனால் –சமரில் பங்காக முனைவரோடு அன்பளவிப்
பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-4-
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய்விடைகள் ஏழு அடர்த்துப்
பொன்னம் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி யுக யுகிர் வேலாண்ட நின்மலன்–காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-4-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்த அரி
பரி கீறிய அப்பன் வந்துறை கோயில் -வண் புருடோத்தமமே-4-2-7-
திரிசகடம் தளர்ந்து உதிர உதைத்தவனைத் தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப்
பொன்னாகத்தானை நக்க அரியுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் -5-9-5-
அரியைப் பரி கீறிய அப்பனை –கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-7-
பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத் தோன்றல் வாள் அரக்கன் கெடத்தோன்றிய நஞ்சினை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-8-
மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் —
கண்ணபுரத்துறை அம்மானே -8-10-8-
வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று
ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் ஆப்புண்டு இருந்தவனே–10-6-3-
உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே -10-6-4-
———————–
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா
மங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு இருந்த பூம் கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்–முதல்திருவந்தாதி -23-
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
மேவி அரியுருவமாகி இரணியானதாகம் தெரி யுகிரால் கீண்டான் சினம் –மூன்றாம் திருவந்தாதி -42-
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம்
பின்னைக்காய் முற்றல் மூரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய்
மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –மூன்றாம் திருவந்தாதி -49-
——————————————————
பல / தசாவதார பாசுரங்கள் –
தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-
அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-
ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-
—————————–
திருவாய் மொழி –
ஆனானானாயன் மீனோடு ஏனமும் தானானான் எண்ணில் தானாய சங்கே -1-8-8-
ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் மூவாத தனி முதலாய் மூ உலகும் காவலோன்
மாவாகிய யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கோடு சக்கரம் வில்
ஒண்மையுடைய யுலகை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து
உலகில் வண்மையுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மையுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே -3-10-1-
மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –