ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-2 –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ..

ஸ்ரீ மூல திரு மந்திரத்தின் ருஷி / சந்தஸ் / தேவதைகள் -பெருமை ..

இது தனக்கு அந்தர் யாமியான நாராயணன் ருஷி ..
தேவி காயத்ரி சந்தஸ் ஸூ ..
பரமாத் வான நாராயணன் தேவதை
பிரணவம் பீஜம் ..
ஆய சக்தி .. சுக்ல வர்ணம் ..மோஷத்தில் விநியோகம் .
சிந்தை பிரியாத   ( பெரியாழ்வார் திரு மொழி 2-3-2 ) பரமாத்மா என்கிற படியே  
அந்தர் யாமியும் பர மாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் –
வைப்பும் தங்கள் வாழ்வும் ஆனான் ( பெரிய திரு மொழி 1-3-7 )  என்னும் படி  
பிரம குருவாய் ( பெரியாழ்வார் திருமொழி 5-2-8 )  ஞானத்தைக் கொடுத்து  
உபாய மாய் தனி மா தெய்வ மாய் (திரு வாய் மொழி 8-2-7 ) மோட்ஷத்தைக் கொடுத்து
பிராப்யனுமாய் இருக்கை யாலும் , 
நாராயண பரங்களான வேதங்களும் ,
அதுக்கு பொருள் சொல்லக் கடவ   மந்த்ரைக சரணரான   ருஷிகளும் ,
நா வாயில் வுண்டே என்றும் ( முதல் திரு அந்தாதி -35 )
நா தழும்பு எழ ( பெரிய திருமொழி – பெருமாள் திரு மொழி 2-4 ) 
நல் இருள் அல்லவும் பகலும் (பெரிய திரு மொழி 1-7-5 )
ஓவாதே நமோ நாராயணா (பெரி யாழ்வார் திரு மொழி 5-1-3 )  என்றும்
நாராயண தமரான ( திரு வாய் மொழி 10-9-1 )  வைதிக விதிகளும் தங்கள் நினைவைப் பின் செல்லும் படியான  
ஆழ்வார்களை அடி ஒற்றி   திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும்
நம் ஆச்சார்யர்களும் இத்தையே ஒரு மிடறாக விரும்புகை யாலும்  –

நம்பி நாமம் ( பெரிய திரு மொழி 6-10-10 )  அர்த்த பூர்த்தியை உடைத்தாய் ஆகையாலும் ,
முமுஷு களுக்கு கழிப்பனான ஸூத்ர மந்த்ரங்களிலும் ஓக்க ஓதா நிற்க ,
ஓடித் திரியும் யோகிகளாலே ( திரு வாய் மொழி 8-8-9 )  விரும்பப் பட்டு ,
அர்த்த பூர்த்தியை உடைத்தல்லாத மற்ற மந்த்ரங்களிலும்   ஏற்றத்தை உடைத்தாய் ,
குலம் தரும் (பெரிய திரு மொழி 1-1-9 ) என்கிற படியே
தர்மம் , அர்த்தம் , இஹ லோக பர லோக போகம் , ஆத்ம பரமாத்மா பாகவத அனுபவங்கள் , என்கிற
புருஷார்த்தங்களையும் சாதித்துக் கொடுக்கக் கடவதாய் ,

எட்டினாய பேதமோடு ( திருச் சந்த விருத்தம் -77 )என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று ( திருச் சந்த விருத்தம் -79 ) என்கிற படியே
அல்லாத உபாயங்களுக்கும் துணை செய்யக் கடவதாய் , சித்த உபாயத்தில் இழிவாருக்கு —
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே ( திரு வாய் மொழி 2-3-6 ) என்கிற படியே , ஸ்வரூப ஞானத்துக்கும் ,
தொழில் எனக்கு ( நான் முகன் திரு வந்தாதி -85 )  என்கிற படியே பொழுது போக்குக்கும் ,
மந்திரத்தால் மறவாது (திரு நெடும் தாண்டகம் -4 )  என்கிற படியே இங்கு உற்ற அனுபவத்துக்கும் பரி கரமாய்ப்
பெற்ற தாயினும் ஆயின (பெரிய திரு மொழி 1-1-9 ) செய்யுமதான படியாலே ,
இடறினவன் அம்மே என்னுமா போலே நானும் சொன்னேன் (  பெரிய திருமொழி 6-10-6  ) என்னும் படி சர்வாதி காரமாய் ,
ஓவாது உரைக்கும் உரை ( முதல் திரு வந்தாதி -95 ) என்னும் படி சொல்லி இளைப்பாறலாய் ,
வாயினால் நமோ நாராயண ( பெரிய திரு மொழி 4-5-2 ) என்கிற படியே  
துஞ்சும் போதைக்கு (  பெரிய திருமொழி 1-1-10) மோர் குழம்பு போல இளைப்பாறலாய் ,
செல் கதிக்கு நல் துணையா (பெரிய திருமொழி 1-1-8  )  என்கிற படியே
அர்ச்சி ராதி கதிக்கு பொதி சோறாய்  
நமோ நாராயணா ( திருப் பல்லாண்டு -11 ) என்கிற படியே  
தெளி விசும்பில்   ( திருவாய்மொழி 9-7-5 )  போகத்தையும் வளர்க்கக் கடவதாய் –
தேனாகி பாலாம் திரு மாலான அவன் உள்ளீடு போலே (  முதல் திருவந்தாதி -92)
தேனும் பாலும் அமுது மாய்   திரு மால் திரு நாமு மாய் (பெரிய திருமொழி 6-10-6  )
எப்பொழுதும் தித்திக்கக் கடவதாய்   ( பெரிய திருமொழி 7-4-5 ) 
மற்று எல்லாம் பேசிலும் ( பெரிய திருமொழி 8-10-3 )   என்கிற படியே   அறிய வேண்டும் அவை எல்லாம் உடைத்தாய் ,
எம்பெருமான் ( பெரிய திரு மொழி 2-2-2 ) 
தெய்வத்துக்கு அரசு ( பெரிய திரு மொழி 7-7-1 )  என்னும் படி
கழி பெரும் தெய்வமாய் ( திரு விருத்தம் -20 ) இருக்கிறாப் போல ,
மந்த்ராணாம் மந்த்ர ராஜா   என்கிற படியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய்
பெரும்   தேவன் ( திரு வாய் மொழி 4-6-4  )  பேரான   பெருமையும் உடைத்தாய் இருக்கும் .

பொருள் இல்லாத கடல் ஓசையில் பக்ஷிகள் சொல் மேலாய்
அதில் நாட்டு வழக்கு சொல் மேலாய்
அதில் தொண்டரைப் பாடும் சொல் மேலாய்
அதில் இஷ்ட தேவதைகளை ஏத்தும் சொல் மேலாய்
அதில் வேதார்த்தம் சொல்லுவது மேலாய்
அதில் வேதம் மேலாய்
அதில் வேதாந்தம் மேலாய்
அதில் நாராயண அனுவாகம் மேலாய்
அதில் பகவத் மந்த்ரங்கள் மேலாய்
அதில் மற்றை இரண்டும் கடல் ஓசையோபாதி யாம் படி மேலாய் இருக்கும் ..

வளம் கொள் பேர் இன்பமான பெரிய மந்த்ரம் ( பெரிய திரு மொழி 4-3-9 ) என்றும் –
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படி ( திரு வாய் மொழி 8-10-7 ) என்கிற படியே
தான் அறிந்த உறவாலே எல்லார் பக்கலிலும்   நடக்கிற சௌஹார்த்ததாலே  
பொருள் என்று ( திரு வாய் மொழி 2-10 -11 )  சரீரங்களைக் கொடுத்து  
ஒழிவற நிறைந்து ( திரு வாய் மொழி 3-2-7  ) அந்தர் யாமியாய்   சத்தையை நோக்கி
ஜன்மம் பல பல செய்து ( திருவாய் மொழி 3-10-1 ) கண் காண வந்து ( திரு வாய் மொழி 4-7-2 )
ஆள் பார்த்து ( நான் முகன் திரு வந்தாதி -60 ) அவதரித்து  
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் ( ராமானுஜன் நூற்று அந்தாதி -59 ) வைத்து  
முகம் மாறுகிற சேதனரைச் சேர விட்டுக் கொள்கைக்கு இடம் பார்க்கிற எம்பெருமான் வுடைய  
உய்வதோர் பொருளான ( பெரிய திருமொழி 1-1-1 ) அருளாலே

யாரேனும் ஒருவருக்கு ( ராமானுஜ நூற்று அந்தாதி -41 )
பொய் நின்ற ஞானத்துக்கு ( திரு விருத்தம் – 1 ) அடியான
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ( திரு எழு கூற்று இருக்கை )
உய்யும் வகை உணரும் ( திருவாய் மொழி 5-2-5 ) ஒன்றினில் ஒன்றி ( திரு எழு கூற்று இருக்கை ) 
உணர்வு எனும் பெரும் பதம் நாடி (5-2-5 ) 
அறியாதன அறிவிக்கும் ( திருவாய் மொழி 2-3-2 ) ஞானத் துறையான ( திரு விருத்தம் -93 ) ஆசார்யனைக் கிட்டினால் ,

அவன் செயல் நன்றாக திருத்தி ( கண்ணி நுண் சிறுத் தாம்பு -10 )
பிறர் கேட்பதன் முன் ( பெரிய திருமொழி 2-4-9) என்று தனி இடத்தே   கொண்டு இருந்து  
உள்ளம் கொள் அன்பினோடு (பெரிய திரு மொழி 5-8-9 )
இன் அருள் சுரந்து பாடி நீர் உய்மின் (  பெரிய திருமொழி 1-1-1)  என்று அருளிச்   செய்யும்
இந்த திரு மந்திரத்தின் வுடைய ஏற்றத்தை   அறிந்து பொன்னி ஆத்துக்கு உள் ஈட்டான  
அந்தணர் மாட்டு அந்தி வைத்த ( திரு நெடும் தாண்டகம் -4 )
மந்திரத்தில் பக்தியைப் பண்ணி , இத்தை உபகரித்தவன் பக்கலிலே நீ செய்தன ( திரு வாய் மொழி 2-3-2 ) என்று
க்ருதஜ்ஞனாய் போரும் அவனுக்கு உஜ்ஜீவநம் உண்டாகக் கடவது ..

திரு மந்திரத்தில் அர்த்த பஞ்சக பிரதி   பதனம் ..
எம்பெருமானோடு   இவ் வாத்மாவுக்கு உண்டான   உறவை அறிய ஒட்டாத
விரோதியை ஒரு வழியாலே ,கழித்து பெரும் பேற்றை   இது வெளி இடுகையாலே
முமுஷுக்கு அறிய வேண்டும் அஞ்சு அர்த்தமும் இதுக்குள்ளே உண்டு ..

அர்த்த பஞ்சக பிரதி பாதன பிரகாரம் ..
இதில் ஸ்வரூபம் சொல்லுகிறது -பிரணவம் ../
விரோதியையும் அது கழிக்கைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது -நமஸ் ஸூ /
பர ஸ்வரூபம் சொல்லுகிறது -நாரயண பதம் /
புரு ஷார்த்தம் சொல்லுகிறது -சதுர்த்தி /
பிராப்யமும் விரோதியும் உபாயமும் பலமும் ஆத்மாவுக்கு ஆகையாலே ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு ..

திரு மந்திரத்தின் வாக் யார்தம் ..
சேஷத்வம் போலே ,அவனே உபாயமும் , உபேயமும் என்று இருக்கை ஸ்வரூபம் ஆகையாலும்,
அந்நிய சேஷத்வமும் , ஸ்வ ஸ்வா தந்திரியமும் ,குலைக்கை கைங்கர்யம் போலே பேறு ஆகையாலும் ,
ஸ்வ ஸ்வரூபத்தையும் சொல்லி புரு ஷார்த்ததையும் சொல்லுகிறது என்று வாக் யார்தம் ..

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: